அர்ஜூன் :” என்ன டா இது” ?? மணி 10 தா ஆகுது. “அதுக்குள்ள தூங்கி இருப்பாளா ??
எதுக்கும் ஒருவாட்டி பண்ணா லாம் ன்னு பண்றா..
அபி போன் அடிக்குது.
அபி தூக்க கலக்கத்துல எடுக்குறா..
ஹாலோ!!” யாரு அது இந்நேரம்.. நடுராத்திரியில கால் பண்றீங்க. நான் ரொம்ப பிஸியா தூங்கிட்டு இருக்கேன். நீங்க யாரா இருந்தாலும் ப்ளீஸ் காலையில கால் பண்ணி பேசுங்க”.
அர்ஜூனுக்கு இது கேட்டதும் சிரிப்பு தான் வந்தது.
அர்ஜூன் : “ஓகே மேடம். நீங்க நல்லா தூங்குங்க.. நான் மார்னிங் கால் பண்றேன்”. குட்நைட்
அபி:” சிறப்பு…குட் நைட்ன்னு உலறிட்டே தூங்கிட்டா”..
அர்ஜூன் ஃபோன் ல ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டர் இருக்கு. சோ அபி பேசுனதுலா ரெக்கார்டு ஆகி இருந்தது. அர்ஜூன் திருப்பி திருப்பி அதை கேட்டு சிரிச்சுட்டு இருந்தான்.
காலையில விடிஞ்சதும் அபி தான் கோலம் போடுவா.. கோலம் போட்டுட்டு காஃபி குடிச்சுட்டு போனை எடுத்து பாக்குறா..
அச்சோ அர்ஜூன் கிட்ட பேசுறேன்னு சொன்னேன். ஆனா பேசவே இல்லையே. கால் பண்ணி இருந்தான்னா ன்னு தெரியலையே…
அப்போ தான் பாக்குறா 4 மிஸ்டுகால், 1 கால் ரிசிவ்.
பேசி இருக்கேன்னா..என்ன பேசினேன்னு ஞாபகம் வர மாட்டிக்குதே ன்னு யோசிக்குற. உடனே அவ ரெக்கார்டர்ல போய் செக் பண்றா..
அவ பேசியதை கேட்டு தலையில அடிச்சுக்குறா..
உடனே அர்ஜூன்க்கு கால் பண்றா…
“அர்ஜூன் அப்போ நல்லா தூங்கிட்டு இருந்தான்”.
அசோக்: “டேய்..அண்ணா. அண்ணா”..
அர்ஜூன் : “என்ன டா”??
அசோக் : “அண்ணி போன் பண்றாங்க டா”.
அர்ஜூன் :” உண்மையாவா ?? போனை கொடு டான்னு வாங்குறான்”.
நீ டோர் க்ளோஸ் பண்ணிட்டு போ..
அசோக் : “ஓகே ஓகே என்ஜாய்”.
அர்ஜூன் : “ஹாலோ!!
அபி: “நான் தா அபி பேசுறேன்”.
அர்ஜூன் : “ம்ம் தெரிது..என்ன காலையிலேயே கால் பண்ணிட்டா”.
அபி : “அது நேத்து நீங்க கால் பண்றேன்னு சொன்னீங்க.. நான் எப்படி தூங்குனேன்னு தெரியலை. நிஜமாவே வைட் பண்ணா. நேத்து அங்க இங்கன்னு அலைஞ்சோம் இல்ல.அதா டயர்ல தூங்கிட்டேன்”.
அர்ஜூன்:” ம்ம்.. பரவாயில்ல. நல்லா தூங்கினீயா”??
அபி : “ம்ம் நீங்க”??
அர்ஜூன் : “நான் லேட்டா தாங்க தூங்குனேன்.. உங்ககிட்ட பேச முடியலை இல்ல”..
அபி : “சாரிங்க”..
அர்ஜூன் :” அச்சோ சாரிலா வேண்டா”..
அபி : “அப்பறம் நைட் நா பேசுனதுலா மனசுல வைச்சுக்காதீங்க. அது தூக்கத்துல உலறிட்டா”..
அர்ஜூன் : “அதுதான் ரொம்ப நல்லா இருந்தது”.
அபி : “கிண்டல் பண்றீங்களா”??
அர்ஜூன் : “இல்ல இல்ல !! இப்போ என்ன பண்றீங்க”.
அபி : “இப்போ தான் காஃபி குடிச்சேன்”.
அர்ஜூன் :” இன்னாய்க்கு நீங்க ப்ரீயா”??
அபி ; “ம்ம் ஃப்ரீ தா..அதா காலேஜ் கூட இல்லையே”..
அர்ஜூன் : “ஓகே நாமா மீட் பண்ணாலாமா?? கொஞ்சம் பேசணும்”
அபி: “ம்ம்.. ஓகேங்க”..
அர்ஜூன் :” எங்க வரட்டும்”.
அபி: “வீட்டுக்கு வாங்க”.
அர்ஜூன் :” அங்க எப்படி உங்க அம்மா அப்பா இருப்பாங்க.”
அபி : “அதானால என்ன”??
அர்ஜூன் : “கொஞ்சம் பர்சானால பேசணும். என்னை பத்தி, என் பாஸ்ட் பத்தி, ப்யூசர் பத்தி”.
அபி சரி முதல்ல வீட்டுக்கு வாங்க..” நான் அம்மா அப்பா கிட்ட சொல்லிடுறேன்… அன்னைக்கு போனா பார்க் போலாம்”.
அர்ஜூன் : “ம்ம் இது ஓகே”.
அபி: “அப்போ சீக்கிரம் கிளம்பி வாங்க. ப்ரேக் பாஸ்ட் இங்க தான் உங்களுக்கு”.
அர்ஜூன் :” ஓகேங்க. உடனே வந்துடுறேன்.ன்னு கால் கட்பண்ணிட்டு குளிச்சுட்டு ஐயர்ன் பண்ண சர்ட் எடுத்து போட்டுக்கிட்டு தலை வாரிட்டு கீழே வரான்”.
நளினி :” சாப்பிட்டு போ டா”..
அர்ஜூன் :” மா.நா வெளியே சாப்பிட்டுகிறேன் மா.. முக்கியமான ஒரு இடத்துக்கு போறேன். கால்ல பண்ணாதீங்க.. நானே வந்துடுவேன்”.
நளினி : “வீட்டுக்கு வரதே எப்போதாவது தான்.. அப்பவும் இப்படி பண்ணா என்ன தான் டா பண்றது”.
அர்ஜூன் ;” ப்ளீஸ் மா வந்துடுறேன்…ன்னு காரை எடுக்குறான்”.
அடுத்து ஒரு 1/2 நிமிஷத்துல அபி வீட்டுக்கு போய்டுறான்.
அர்ஜூன் வர விஷயத்தை அபி அப்போவே சொல்லிட்டா சோ அவனுக்கும் சேர்த்து தான் சமைச்சு இருந்தாங்க.
அபி சுடில தான் வந்தா..
அர்ஜூன் வைச்ச கண்ணு வாங்கமா
பாக்குறான்.
அபி : “வாங்க… உட்காருங்க”.
கணபதியும் கௌசல்யா வும் அர்ஜூனை விழுந்து விழுந்து விழுந்து கவனிக்குறாங்க.
எல்லாரும் சாப்பிட்டு முடிக்குறாங்க.
அபி: “பா.. நாங்க கோவிலுக்கு போய்ட்டு வரோம்”.
கணபதி:” போய்ட்டு வாங்க மா”..
அர்ஜூன் அவங்க சொல்லிட்டு கிளம்பாறான்.
ரெண்டு பேரும் முதல்ல கோவிலுக்கு போய்ட்டு பார்க் போறாங்க..அது வரைக்கும் பேசிக்கவே இல்ல ரெண்டு பேரும்.
பார்க்ல ஒரு கல்லு மேல உட்காரு ராங்க்…
அபி : “பேசணும்னு சொன்னீங்க. ஆனா பேசவே மாட்டிக்குறாங்க”.
அர்ஜூன் : “எப்படி ஆரம்பிக்குறதுன்னு தா தெரியலை”.
அபி: ஓ…
அர்ஜூன் : “உனக்கு என்ன பிடிக்கும்”.
அபி :” எனக்கு நிறைய பிடிக்கும். அதுல எது சொல்றது”.
அர்ஜூன்:” எல்லாமே சொல்லு”.
அபி : “எனக்கு கலர்ல சேண்டல் கலர் பிடிக்கும் சாமி ல விநாயகர் பிடிக்கும்”.
எனக்கு மல்லிகை பூ ரொம்ப பிடிக்கும் நல்ல வாசமா இருக்கும்.
டிபன்ல இடியாப்பம் பிடிக்கும். குழந்தைங்களை பிடிக்கும். மழையை பிடிக்கும். நைட்ல மாடில படுத்துக் கிட்டு ஸ்டார்ஸ் பாக்குறது பிடிக்கும்.ஹேல்ப் பண்ண பிடிக்கும் இன்னும் நிறைய.
அர்ஜூன் பிடிக்காதாது.
அபி:” நான் வைஜ், கெட்ட வார்த்தை பேசுறது, ஏமாத்துறது, நான் கொஞ்சம் பொய் சொல்லி இருக்கேன் எங்க அம்மா அப்பா கிட்டஆனா ஏமாத்துனாது இல்ல”.
தம்மு, குடிக்குறது லா பிடிக்காது. “அப்பறம் தாடி வைச்சு இருக்காவங்களை”..
அர்ஜூன் : “அது என்ன தாடியை பிடிக்கலைன்னு சொல்ற”??
அபி: அதுவா?” நான் சின்ன பாப்பா வா இருக்கும் போது எங்க பாட்டி தாடிக்காரன் வந்து பிடிச்சுட்டு போய்ட்டுவான்னு பயமுறுத்தி தான் எனக்கு சாப்பாடு ஊட்டுவாங்க..அதுல இருந்தே எனக்கு தாடி வைச்சு இருக்கவாங்களை பார்த்தா பிடிக்காது”.
அர்ஜூன் : “அப்போ என்னை “??
அபி : “அதா இப்போ எடுத்துதீடங்களே” !!
அர்ஜூன் : “சேவ் பண்ணாலைன்னா ?? நோ சொல்லி இருப்பதானே”??
அபி சிரிச்சுட்டே இல்லன்னு சொல்றா??
அர்ஜூன்: “ஏன்??
அபி : ஏன்னா?? “நீங்க தாடியோட நல்லா தான் இருந்தீங்க”.
அர்ஜூன் : “ஹோ.. தேங்க்ஸ்”..
தொடரும்..
