திரையிட்டு விலகாதே! -30

திரையிட்டு விலகாதே! 

அத்தியாயம் -30 (18+)

Hiiii வாசகர்களே ✨

பிற வகுப்பு மாணவர்கள் எல்லோரும் கிட்ட தட்ட லேப் விட்டு வெளியேறி விட்டார்கள், நான் மட்டும் நங்கூரம் அடித்தார் போல் மொபைலை வெறித்து பார்த்த படி அமர்ந்து இருக்க, ஒரு மேடம் என் அருகில் வந்து தோள் தொட்டு “என்னாச்சு?” என்று அக்கறையாக விசாரித்தார்…

“ஒண்ணு இல்ல மேம்… இந்த மாசம் வீட்டுக்கு போக முடியல அதான் ஒரு மாதிரி இருக்கு!!” 

“விடு அடுத்த மாசம் ஜாலியா ட்ரிப் போயிட்டு வா வீட்டுக்கு போறப்போ… இப்போ மொதல்ல ஹாஸ்டலுக்கு கிளம்பு.!!” என்று எழுப்பி நிற்க வைத்தார்…

பித்து பிடித்தார் போல் நான் தனியாக நடந்து கொண்டே சென்றதில், இது வரை வந்திடாத புது இடத்தில் நிற்பதை அப்போது தான் உணர்ந்தேன்!! எங்கே வந்து உள்ளேன் என்பதே எனக்கு தெரியவில்லை..!!! சூனியம் வைத்தார் போல் நடந்த நான், சுயம் தெளிந்து பார்க்கும் போது, மீனாட்சி பஜார் என்ற பலகை தான் என் கண்ணுக்கு தெரிந்தது!!

ஜெஷ்வந்த் கால் செய்து, என் மொபைல் அதிர்ந்து தான் தான் தெளிந்து அதை பதற்றத்தோடு ஏற்றுக் காதில் வைத்தேன்… “எங்க இருக்க…?” 

“மீனாட்சி பஜார் வாசலில்!!”

“ஹேய் நடந்தா வர!!!?” என்றான் அவன் அதிர்ச்சியோடு, மறு முனையில் நான் மூச்சு இறைக்கும் சத்தம் கேட்டு…

“ஹ்ம்ம்!!”

“சரி அதுக்குள்ள வா…….” என்று அவன் சொல்ல சொல்ல நான் கை பாவை போல் ஒரு கட்டத்தில் நடந்து நடந்து அவன் வீட்டு வாசலில் வந்து நின்றேன்… அவன் கதவை திறந்து விட்டு, அறைக்குள் சென்று விட்டு இருந்தான்.. நான் வந்ததும் சேர் எடுத்து கொடுத்து அமர சொல்ல, அவன் சென்று தண்ணீர் எடுத்து வந்தான்…

அதை வாங்க கூட எனக்கு திராணி இல்லை, கிட்ட தட்ட 3 கிலோ மீட்டர் நடந்தே வந்து உள்ளேன்!! இதற்கு முன் இந்த பக்கம் வந்ததே இல்லை, வழியே தெரியாமல் எவ்வாறு நடந்து பஜார் வாசலுக்கு வந்தேன் என்பதே எனக்கும் இன்னும் புரியவில்லை… ஜெஷ்வந்த் மீண்டும் உரத்த குரலில் அழைக்க, சுயம் வந்து தண்ணீர் வாங்கி பருகினேன்!! 

அவன் எனக்கு எதிரில் சோஃபாவில் அமர்ந்தான்… வீட்டை பற்றி சொல்லி கொண்டே, “இது ரூம் அது கிச்சன் இது தான் பூஜை ரூம்… நீ சாப்பிட்டியா!!? ஏன் நடந்தே வந்த??”

நான் சித்த பிரம்மன் பிடித்தார் போல், சுவற்றை வெறித்து பார்த்து யோசித்த வண்ணம் அப்படியே அமர்ந்து “ம்ம் ம்ம்” என்று சொல்லி கொண்டே மீண்டும் சுயம் இழந்து இருந்தேன்!! 

ஒரு கவரில் கல்யாண பலகாரம் ஆன முறுக்கு அதிரசம் லட்டு எல்லாம் ஒரு கவரில் போட்டு கொண்டு வந்து என்னிடம் கொடுத்தான்… எழுந்து நான் சாமி அறையை ஒரு முறை கண்டேன், சற்று மனம் சலனம் தணிந்தார் போல் உணர்ந்து, அதன் பிறகு தான் அவன் பேசுவதை கவனித்தேன்!!

என் கையை பிடித்து ஹாலில் இருந்த கண்ணாடி முன்பாக நிற்க வைத்து, என்னை பின் இருந்து அனைத்து கொண்டான்… என் தோளில் அவன் தாடி குத்தி குறு குறுக்கும் அளவு அழுந்த அவன் தாடையை பதித்து அனைத்து நின்றான்.!! எனக்கு மீண்டும் மூச்சு இறைக்க ஆரம்பித்தது, “ஐ லவ் யூ டி பொண்டாட்டி!!” என்று கழுத்தில் முகம் புதைத்த படி கூறினான்…

இருவரும் அப்படியே கண்ணாடி மாட்டி இருந்த சுவற்றிலேயே சாய்ந்து அமர்ந்து கொண்டோம்… அவனே தான் பேச தொடர்ந்தான், “அம்மாச்சி வீட்டுல போய் கொஞ்சம் முன்னாடி தான் சாப்பிட்டு வந்தேன்!! புலி குழம்பு வச்சு இருந்தாங்க… நீ என்ன சாப்பிட்ட?!!”

“இட்லி சாம்பார்!” என்று சொல்லும் போது என் மடியில் சாய்ந்து படுத்து கொண்டான்… இதமாக இருப்பது அவன் முகத்திலேயே தெரிந்தது!! என் அண்ணனுக்கு செய்த பழக்க தோஷத்தில், அவன் சிகையை தன் இச்சையாக கோதி விட, அவன் கிட்ட தட்ட ஒரு குழந்தை போல் உறங்க கண்கள் சொக்கி போனான்!

“லஞ்ச் கா?” 

“ஆமா.!! இன்னிக்கு ஹாஸ்டலில் எனக்கு பிடிக்காத குழம்பு அதான், ரெண்டு வேலைக்கும் இட்லி தான்..”

“ஹேய் நீ ஏண்டி இவ்வளோ லூசா டிரஸ் போடுற?? பார்க்க குண்டா தெரியுற… கொஞ்சம் கூட நீ வெயிட் குறைச்சா நீ இன்னும் அழகா இருப்ப!!” என்று கையை உயர்த்தி என் கன்னம் கிள்ளி சொன்னான்… 

“சரி உன்னய பார்க்க தான் வந்தேன்… நான் கிளம்புறேன்!!” என்று சொல்லி நான் அவனை மடியில் இருந்து எழுந்து கொள்ளும் படி உந்த… அவனும் மெல்ல எழுந்து கொண்டான், அவனால் அந்த கட்டு போட்டு இருக்கும் காலுடன் தரையில் இருந்து எழுந்து கொள்ள முடியாமல் திணறினான்… கை பிடித்து தூக்கி விட, மீண்டும் கண்ணாடி முன்பாகவே நின்று இதழ் முத்தம் இட்டு விலகினான்…

“தேங்க்ஸ் ஷ்ரேயா என்னைய பாக்குறதுக்காக இவ்வளோ தூரம் வந்து இருக்க… இரு நான் ஆட்டோ போடுறேன்!” என்று மொபைல் எடுத்து புக்கிங் செய்தான்… வாசலில் வந்து நின்ற ஓட்டுநர் இடம், பணத்தையும் முன்பே செலுத்தி விட்டு என்னை ஏற்றி விட்டு வழி அனுப்பி வைத்தான்… ஹாஸ்டல் சென்று பையை கழட்டி போட்டு, பொத்தென மெத்தையில் விழுந்த நான் இரவு 7 மணிக்கு தான் எழுந்தேன்!!

15 நாட்கள் கடந்து இருந்த நிலையில், கால் சரியாக கட்டு கழட்டி விட்ட பின் முதல் வேலையாக பைக்கை சர்வீஸ் விட்டு, எடுத்து கொண்டு என்னை காண தான் வந்தான்… ஒரு சனி கிழமை என்பதால் புதிதாய் கட்டி இருந்த, பாலத்தில் ஒரு ரவுண்டு சுற்றி விட்டு வீடியோ போட்டோ எல்லாம் எடுத்து கொஞ்ச நேரம் அங்கேயே காற்று வாங்கிய படி, அந்த ஆள் ஆர்வம் அற்ற சாலையின் அழகில் நான் மெய் மறந்து ரசித்து கொண்டு நின்றேன்…

அங்கு இருந்து நேரம் ஆகிறது என்று கிளம்பி, கார்னிவல் ரெஸ்டாரன்ட்டில் நிறுத்தி இரவு உணவு உண்டோம்!! அது ராமதான் மாதம், ஆகையால் வேக வேகமாக உண்டோம் அது ரெஸ்டாரன்ட் மூடும் நேரம் என்பதால்… ஆளுக்கு ஒரு பிரைட் ரைஸ் வாங்க, அவன் சிக்கன் 65 வாங்கி கொண்டதும் பில் 400 ரூபாய் வந்து விட்டது!!

போன் லெஸ் அப்படி தான் விலை அதிகமாக இருக்கும்! என்று இயல்பாக சொல்லி கடந்து விட்டார் சர்வர் அங்கில்… பிறகு கை கழுவி கொண்டு, என் ஆசை படி அவன் பைக் ஓடு நின்று சில புகை படங்கள் எடுக்க சொன்னேன்… அது நக்கு வெகு நாள் ஆசை ஆகும்!! இதற்கு மேல் விட்டால், எப்போது சந்திப்போம் என்றே தெரியாது ஆகையால்… அது போக அவன் எனக்கு தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுத்தான், நான் ஹாஸ்டலில் தண்ணீர் இல்லை என்று சொல்லியதை ஞாபகம் வைத்து!!

போகும் வழி எங்கும் பேசி கொண்டே சென்றோம், இது தான் கடைசி சந்திப்பு என்ற அளவுக்கு… அது தான் உண்மையும் கூட, எனக்கு பிராக்டிகல் எக்ஸாம், முடிந்து ஒரு நான்கு நாட்களில் செம்மஸ்டர் தேர்வுகள் துவங்க உள்ளன… எனக்கு முடிந்த உடன் நான்கு நாட்களில் அவனுக்கு துவங்குகிறது…

ஆனால் அவன் கேட்டு கொண்டதன் பெயரில், ஏப்ரல் மாதம் ஹாஸ்டல் காலி செய்வதை ஒற்றி வைத்ததோடு, நான் தேர்வுகள் முடிந்தும் நான்கு நாள் கழித்து தான் ட்ரெயின் டிக்கெட் போட்டு இருந்தேன்!! அதற்கே வீட்டில் என்னை ஒரே திட்டு, “தேர்வு முடிந்த ஆண்ட்ரே எல்லாம் மூட்டை கட்டி கிளம்ப முடியாது!!” என சொல்லி சமாளித்து வைத்தேன்… 

அன்றைய மாதம் 14 ஆம் தேதி கிளம்ப உள்ளதாக முடிவாகி இருந்த போதிலும், முழு மாத காசை கட்டி விட்டார் என் அம்மா, என்னை பத்திரமாக வைத்து பார்த்து கொண்ட நன்றி உணர்ச்சியில்… ஆகையால் இருவருக்குமே இப்போது, வீடு திரும்பி செல்ல மனம் இல்லை!! எனினும் நேரம் ஆகிறதே என்று வேறு வழி இன்றி, நான் ஹாஸ்டல் வரவும் இறங்கி கொண்டேன்.…

ஜெஷ்வந்த் என்னை விட்டு கிளம்பவே இல்லை… கையை பிடித்து வைத்து பேசி கொண்டே இருந்தான், “நீ போன அப்புறம் எல்லாரும் என் கிட்ட வந்து உன்னய பத்தி தான் கேட்டுட்டே இருந்தாங்க தெரியுமா??! எல்லார் கிட்டயும் உன்னய பத்தி சொல்லிட்டேன்… ஆனா நம்ம லைவ் பத்தி சொல்லல… என் அக்கா தான் கரெக்ட் ஆக ஃப்ரெண்ட்ன்னா பிரெண்ட் ஆக மட்டும் தான் இருக்கணும்!!! அப்டின்னு எல்லாம் மிரட்டலா சொல்லிட்டு கிளம்புனா…” 

“அதுக்கு நீ என்ன சொன்ன?!”

“சரி சரின்னு கேட்டு கிட்டேன்… அவ தான் என் ஃபர்ஸ்ட் லவ்வையே கண்டு புடிச்சு வீட்டுல மாட்டி விட்டா என்னைய.!! அம்மாச்சி வீட்டு எதிர் வீட்டுல தான் அவங்க வீடு… என் அம்மா நேர அவ அப்பா கிட்டயே போய் பேசிட்டு வந்துட்டாங்க..!! அப்புறம் அவங்க குடும்பமா வீடே காலி பண்ணிட்டு போயிட்டாங்க!! 

அப்படி தான் எனக்கு பிரேக் அப் ஆச்சு…. எவ்வளோ நாள் தனியா அழுது அழுது ரூம்லே வெளிய வராம சாப்பிட கூட இல்லாம இருந்து இருக்கேன் தெரியுமா??!! அப்புறம் தாண்டி எனக்கு உன் லவ் கிடைச்சது!!! இப்போ பாரு நீ எனக்கு எல்லாம் ஆகவும் இருக்க… உன் இவ்வளவு லைவ் கெல்லாம் நான் என்ன திருப்பி தர போறேன்னே தெரியல டி பொண்டாட்டி!!”

“சரி டா!!! நானும் லவ் யூ தான்.!! கிளம்புறேன்……..”

“போகாத டி.. இன்னும் கொஞ்சம் நேரம்!!” என்று குழந்தை போல் சிணுங்கிய படி… “ஹ்ம்ம்.!! மணி 9 ஆச்சு கிளம்பு டா…” என்று நான் வலுக் கட்டாயமாக கையை உருவி கொண்டு அரை மனதோடு ஹாஸ்டல் படி ஏறி உள்ளே நடந்தேன்… போய் வழக்கம் போல் 12 மணி வரை அவனோடு பேசி விட்டு, வருத்தத்தோடு உறங்கினேன்…

அடுத்த முறையில் எங்களது சந்திப்பு “என் 4 ஆண்டு காதலையே கேள்வி குறி ஆக்க போவது!!!!” தெரியாத தெரிவை ஆக நான்..…

அப்படி என்ன ஆக போகிறது..???

என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨ 

Thanks for reading மக்களே 🩷 

 

 

❤️ Loading reactions...
2 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page