உயிராக வந்த உறவு – அத்தியாயம் 4

அவள் அருகில் இருந்த நாட்கள் அவன் முன் வந்து போனது. தீரன் அவளை அன்போடு அணைத்து அவளுக்கு பிடிக்கும் சின்ன விஷயங்களை ரசித்தவன்.மழை வந்தால் குடை இல்லாமல் நடக்க விரும்புவது, சூடான காபியைவிட டீயை மெதுவாக சிப்படித்துக் குடிப்பது,அவள் வார்த்தைகள் அவனுக்குள் பதிந்து, அவனின் முடிவுகளுக்கே வழிகாட்டிய தருணங்கள் எத்தனையோ. 

அவன் குழம்பிய தருணத்தில் அவள் வார்தைகள் “நீ என்ன நினைக்கிறாயோ அதையே செய், ஆனா மனசை ஏமாத்தாதே,” என்று அவள் சொன்ன அந்த வாக்கியம் இன்னும் அவன் மனத்தில் பதிந்திருந்தது.

இருவரும் கைகோர்த்து நடந்த அந்த மாலைகள் அவன் நினைவுகளில் மெதுவாக மலர்ந்தன. அவள் விரல்கள் அவன் விரல்களுக்குள் சறுக்கிய அந்த நொடி, உலகம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தது போல இருந்தது. பேசாமல் நடந்தாலும், அவன் மனம் நிரம்பி இருந்தது. அவள் தன் தோளில் சாய்ந்தபடி நின்று, “இப்படியே நின்னா காலம் நின்னுடுமா?” என்று சிரித்துக் கேட்டதும், அவன் “நின்னா நல்லாதான் இருக்கும்,” என்று சொன்ன அந்த சின்ன உரையாடல்களுக்குள் கூட, அவர்களின் காதல் ஆழமாகவே பதிந்தது.

அவளைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், தீரன் அவளை ஒரு கனவாக அல்ல,ஒரு வாழ்க்கையாக நினைத்தான். அவன் எதிர்காலம் முழுவதும் அவள் அவனுடன் இருப்பான் என நினைத்தான்.ஆனால் ஒரே ஒரு நாள் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது..

காலை எழுந்ததில் இருந்து காபி குடிக்கும் போதும் தன் மொபைலில் அவளுடன் அனுப்பிய செய்திகள் ஏராளம்..

 இரவு அமைதியிலும், அவன் பெயரை அவள் அழைக்கும் சத்தத்திலும். “நான் உன்னை விட்டு எப்பவும் போக மாட்டேன் அம்மு “ என்று அவன் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்ததும், அவன் நெஞ்சம் வலித்தது. 

அவன் கண்களை மெதுவாகத் திறந்தான். அந்த ஆழமான காதல் இன்னும் அவன் உள்ளத்தில் இருந்தது.அவள் போயிருந்தாலும் அவன் மனம், அவளை இழந்ததை ஏற்க மறுத்துக் கொண்டிருந்தது.

 “நீ இன்னும் என் வாழ்க்கையில் தான் இருக்க,” என்று அவன் மனம் சொன்னது. அந்த நினைவே அவனுக்கு இனிமையும் வலியும் ஒன்றாக தந்தது. காதல் அவனுக்குள் இன்னும் உயிரோடு இருந்தது.அவள் பெயரை சொல்லாமலேயே, அவளை முழுமையாக உணர வைத்த காதல்.

’ஆனால் திருமணம் என்று சொல்லி விட்டுப் போனாலே இப்போது திருமணம் முடியாமல் இருக்கிறாளா,அப்படி இருந்தால் எப்பவோ என்னை தேடி வந்து இருப்பாளே’ என்ற கேள்வி அவன் மனதில் மீண்டும் வந்தது.

மறுபக்கம் எந்த நினைவு தனக்கு வேண்டாம் என்று வந்தாலோ அந்த நினைவு இன்று கண்முன் நிற்பதை பார்த்தவள் கண் கலங்கியவாரே வீட்டுக்கு செல்வதற்கு பேருந்தில் ஏறினாள்.

பேருந்து நகர ஆரம்பித்தது.தாரணி மட்டும் ஜன்னலோர இருக்கையில் தனி ஆளாக அமர்ந்து இருந்தாள். இடம் மாறினாலும் அவள் மனம் இன்னும் அவன் மார்பில் தான் சாய்ந்திருந்தது.

அவனை அவள் இன்னும் காதலிக்கிறாள்.அதை அவள் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.ஆனால் மறுக்கவும் முடியவில்லை.அந்த காதல், அவள் கண்ணீராக விழாமல்

மனசுக்குள் அடங்கிக் கொண்டு

மௌனமாக எரிந்து கொண்டிருந்தது.

ஜன்னல் ஓர இருக்கையில் உட்கார்ந்தபடி வெளியே ஓடும் நகரத்தைப் பார்த்தாள்.ஒவ்வொரு மின்கம்பமும் அவனுடன் நடந்த ஒரு மாலையை நினைவூட்டியது.கைகோர்த்து நடந்த அந்த சாலைகள்,பேசாமல் இருந்தாலும் புரிந்துகொண்ட அந்த நொடிகள்.அவள் மார்பில் இன்னும் உயிரோடு இருந்தன.

ஒரு காலத்தில் அவள் தலையை அவன் மார்பில் சாய்த்துக்கொண்டு அந்த இதயத் துடிப்பு அவளுக்கு உலகின் பாதுகாப்பாக இருந்தது.

“இங்க சாய்ந்தா எல்லா பயமும் போயிடும்,”என அவன் சொன்னது இன்றும் அவள் காதில் ஒலித்தது.

இப்போது அவள் தனக்குத்தானே ஒரு வட்டம் போட்டு அதற்குள் வாழ்கிறாள்.காதலிக்கக் கூடாதென்று அல்ல,அந்த காதல் தன் குழந்தையின் வாழ்க்கையை சிதைக்கக் கூடாதென்று.

தன் சுயமரியாதையை மீண்டும் அவன் முன் அடகு வைக்கக் கூடாதென்று.

பேருந்து ஒரு மேட்டில் ஏறி இறங்கி மெதுவாக குலுங்கியது.அவள் தன்னைச் சுதாரித்துக்கொண்டாள்.மார்பில் சாயும் பழக்கம் மனசுக்குள் மட்டும் மிஞ்சியது.உடல் நேராக உட்கார்ந்திருந்தாலும் இதயம் மட்டும் அவனை நோக்கி சாய்ந்துகொண்டே வந்தது.

“நான் இன்னும் உன்னை காதலிக்கிறேன்,”என்று அவள் சொல்லவில்லை.அவள் வாழ்வதே அந்த காதலை மறைத்து கொள்ளத்தான்.அந்த அடக்கப்பட்ட காதல் தான்

அவளுக்கு வலி…அதே காதல் தான் ஒரு காலத்தில் அவளுக்கு வலிமையாக இருந்தது..பேருந்து நகர்ந்துகொண்டிருந்தது.தாரணியும் நகர்ந்தாள்.ஆனால் அவன் நினைவு அவள் மார்பிலிருந்து ஒரு அங்குலம் கூட நகரவில்லை.

கொஞ்ச நேரத்தில் அவளின் மொபைல் ஒலிக்க,அதை எடுத்து பார்த்தவுடன் நிஷா தான் என பார்த்து போனை எடுத்தும் ரித்விக் முழிச்சான என அவள் கேட்கவும் 

நான் தான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன் இல்லடி,அவன பத்தி கவலையை விடு.ஆமா இன்டர்வியூ போனியே என்ன ஆச்சு? ஜாப் கன்ஃபார்ம் ஆயிடுமா என அவள் கேட்கவும்

 இல்லை எனக்கு எந்த வேலையும் வேண்டாம் என அவளின் பதிலை கேட்ட தோழிக்கு அவள் குரலில் ஏதோ மாற்றத்தை உணர்ந்து “என்ன ஆச்சு டி?”என்று அவள் மீண்டும் கேட்க 

எல்லாத்தையும் வந்து சொல்றேன் என்று சொன்னபடி இணைப்பை துண்டித்தாள்.தீரன், தாரணி இருவருக்கும் தெரியும்.காதல் இறந்துவிடவில்லை.அது சத்தமில்லாமல், காயங்களுக்குள் புதைந்து,இன்றும் இருவரின் மனத்திலும் உயிரோடு தான் இருந்தது.

தீரன் தாரணியை இன்னும் காதலித்தான்.அதை அவன் மறைக்க முயன்றான்.கடினமான வார்த்தைகளால்,

அதிகாரத்தின் பின்னால் ஒளியும் அகம்பாவத்தால்.அவள் தன்னை விட்டு சென்ற நாளின் நினைவுஅவனின் காதலை வெறுப்பாக மாற்றிவிட்டது.தாரணியும் தீரனை இன்னும் பார்த்தால் தன் வாழ்க்கையே உடைந்து விடும் என்பதால்,அந்த காதலை அவள் தள்ளி வைத்தாள்.அவனை நினைக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அவள் மனம் ஒரு கேள்வி கேட்டது. “நீ என் காதலன் அல்ல, என் காயம்?”

அவர்கள் பேசும் போது காதல் தான் முதலில் கண்களில் தெரிந்தது.அடுத்த நொடியில் அந்த காதலை மறைத்து விட்டு வெறுப்பு வெளியே வந்தது.

அவனின் வார்த்தைகள் அவளின் மனதை வெட்டின.அவளின் அமைதி.அவனை இன்னும் கோபப்படுத்தியது.

இந்த வெறுப்பு ஒரு நாளில் பிறந்தது அல்ல.நம்பிக்கை உடைந்த அந்த இரவு,புரிதல் தவறிய அந்த வார்த்தைகள்,

தனிமையில் கழித்த நாட்கள் அவை எல்லாம் சேர்ந்து இந்த வெறுப்பை உருவாக்கின.

இருவரும் ஒரே உண்மையைச் சுமந்துகொண்டிருந்தார்கள். “நீ என்னை இப்படிச் செய்தாய்” என்ற நினைவு.

அந்த வெறுப்பு தான் அவர்களை பிரிய வைத்தது.அதே வெறுப்பு தான்

அவர்களை மீண்டும் இணைக்க விடாமல்

தடுத்துக் கொண்டிருந்தது.

காதல் இன்னும் இருக்கிறதா என தெரியவில்லை,ஆனால் வெறுப்புஅதை நிழலாக மாற்றிவிட்டது.ஒளி இருந்தும் இருள் அதிகமாகத் தோன்றியது.அந்த நிலையில் தான் இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள்.

அவர்கள் பிரிந்தது காதல் குறைந்ததனால் அல்ல.இரண்டு பேருக்கும் இடையேயான புரிதல் இல்லாமல் போனதால்..

இப்போது இணைக்க முடியாமல் இருப்பதுகாதல் இல்லாததனால் அல்ல.

காதலை விட வெறுப்பு அதிகமாகஅவர்கள் மனதில் வளர்ந்ததால் தான்.

அவள் மனமோ தான் இப்போது ஒரு தாய் என்ற தீர்மானம் மட்டும் தெளிவாக இருந்தது..

மீண்டும் சிறிது நேரத்தில் அவள் மொபைல் திடீரென்று ஒலித்தது.அந்த ஒலி அவள் மனசைச் சிலிர்க்க வைத்தது.

திரையில் பார்த்தவள் எண் புதிது என்று 

ஒரு நொடி தயங்கினாள்.

எத்தனையோ அழைப்புகள்…

இது எதுக்கு இப்போ? என்று நினைத்தபடியே மனதில் ஒரு தெரியாத பயம் எழுந்தது. காதில் போன் வைத்தாள். 

“தாரணி…” அந்த ஒரு வார்த்தை.அந்த குரல்.உலகம் ஒரே நொடியில் நின்றது போல அவளுக்குத் தோன்றியது.

பேருந்தின் சத்தம், மனிதர்களின் குரல்,எல்லாம் மங்கிப் போனது. அவள்காதில் ஒலித்தது அவன் குரல் மட்டுமே,

மூன்று வருடங்களாக அவள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்ட அந்த குரல்.

“ஹலோ…”என்று சொல்ல முயன்றாள்.

குரல் வெளியே வரவில்லை.நெஞ்சு இறுக்கிக் கொண்டது.மூச்சு திடீரென்று குறைந்தது.கைகள் நடுங்கின.

பேசத் தெரிந்தவள்அந்த நொடி சொற்கள் இல்லாமல் நின்றாள்.

மறுபக்கம் தீரனும் அமைதியாக இருந்தான்.அவளின் மௌனம்

அவனுக்கு எல்லாவற்றையும் சொன்னது.அவளும் அவனைப் போலத்தான்இன்னும் அதே இடத்தில் தான் நின்றிருக்கிறாள் என்று அவன் புரிந்துகொண்டான்.

“போன் கட் பண்ணிடாதே…” என்று அவன் மெதுவாக சொன்னான்.அந்த குரலில் அதிகாரம் இல்லை.கோபமும் இல்லை.ஒரு காலத்தில்

அவள் அழும் போதுஅவளை சமாதானப்படுத்திய அதே குரல் தான்.

தாரணியின் கண்களில் திடீரென்று கண்ணீர் நிரம்ப,பேருந்து ஒரு பள்ளத்தில் இறங்கி ஏற அவள் தன்னைச் சுதாரித்துக்கொண்டாள்.

’இல்ல… இப்போ உடையக்கூடாது’என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டாள்.

“எதுக்கு கால் பண்ணினீங்க?”என்று அவள் கடினமாகக் கேட்க ஆனால் அந்த கடினத்துக்குள் அவள் நடுங்கும் இதயம் மறைந்திருந்தது.

அவள் தொடரும் வேளையில் அவன் விலகினான். இப்போது அவன் தொடர நினைக்கிறான் பாவி மனம் என்ன செய்வதென்று புரியாமல் தத்தளிக்கிறது.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page