காதல் இதுதானா ? – காதல் 26

காதலாகும் 26:

விஸ்வேஷ்வரன் அவனளவில் அவன் தெளிவாகத்தான் இருந்தான்.அவள் மனதில் ஏதோ ஒரு குழப்பம் இருக்கிறது. தன்னை நெருங்கவும் முடியாமல்..விலகவும் முடியாமல் தவிக்கிறாள் என்பதை அவன் கண்டு கொண்ட பிறகு அவன் அவளை நாடவில்லை.

அதற்காக அவன் விரக தாபத்தில் வெந்து சாகவில்லை என்று கூறிவிட முடியாது.அவளை நெருங்கினால்தானே அவள் வேண்டும் என்ற மோகம் பெருகும்.. நெருங்காமல் விலகியே இருந்து விட்டால்…? அதுதான் அவனது எண்ணமாக இருந்தது. தனியறையில் தங்குவது அவனுக்கு மிகவும் வசதியாய் போயிற்று.

இவள் சமைக்கும் நேரங்களில் அவன் அந்த அறைக்குச் சென்று குளித்து கிளம்பி வந்து விடுவான். இரவிலும் வேலைப்பளு காரணமாக வர சற்றுத் தாமதமாக..அதுவும் அவனுக்கு வசதியாய் போயிற்று.

ஆனால்..எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில விஷயங்கள் நடந்துதான் விடுகின்றன. மோகம் கொழுந்து விட்டெறிய சிறு நெருப்பு போதுமல்லவா…அந்த சிறு சிறு உரசல்களும் அவ்வப்போது எழுந்து கொண்டுதான் இருந்தன.

‘அவள் இப்பொழுதே வேண்டும்’ வேட்கை மூழத்தான் செய்தது. பற்றியெரியும் வேட்கையை அவன் கற்று வைத்திருந்த யோகாவும்..உடற்பயிற்சியும் உணர்வுகளிலிருந்து மீண்டு வர அவனைப் பழக்கியிருந்தன.

உணர்வுகளை கட்டுப்படுத்தத் தெரியாவிட்டால் அவன் என்ன காவலன்… மிக அழகாக அவன் தன் உணர்வுகளை கையாண்டு கொண்டான்.

தன்னவனது நிலையை உணர்ந்தவளாய் அவளும் அவனை தொல்லை செய்யவில்லை.அன்று உணர்வுகளின் உச்சத்தில் கொண்டு சென்று அவனை தலைகுப்புற தள்ளி விட்டோம் என்பதை உணர்ந்திருந்தவள் மிக மிக கவனமாக இருந்தாள்.

எந்த வகையிலும் அவனது உணர்வுகளைத் தூண்ட முயலவில்லை அவள்.சில சமயங்களில் வேட்கையுடன் தன்னை மேயும் அவனது பார்வையில் அவளுக்குள்ளும் எரிமலைகள் வெடிக்கத்தான் செய்தன.அவளும் சாதாரண உணர்வுகளும் ஆசைகளும் நிறைந்த பெண் தானே …

அனைத்தையும் தூக்கியெறிந்து விட்டு அவன் கையில் தன்னை கொடுத்து விட வேண்டும் என்பது போல் வேகம் எழத்தான் செய்தது.ஆனால்.. இந்த ஆனால் இருக்கிறதே பல விஷயங்களுக்குத் தடையாய் இருப்பது இந்த ஆனால்தான்…!

அவளைப் பொறுத்தவரை அவனாக வாயைத் திறந்து காதலை சொல்லாத வரை அவளால் அவனுடன் கூட முடியாது.அவளாக அவனிடம் சென்று ‘என்னைக் காதலி’ என்று கூறவும் முடியாது.எதில் தெளிவாக இருந்தாளோ என்னவோ இதில் மிக மிகத் தெளிவாக இருந்தாள்.

நாட்களும் விரைய..அனைத்தும் நல்லபடியாகத்தான் போய் கொண்டிருந்தது..காதல் அந்த சம்பவத்தை நடத்தும் வரை.

அன்று காலை..அவளுக்கு சற்று நேரமாக அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் நேரமாகவே எழுந்து சமையலை முடித்து விட்டு குளிக்க வந்து விட்டாள்.அது தெரியாமல் விஷ்வா அவள் அறையில் இல்லை என்ற நினைப்புடன் குளிக்க வந்தான்.

இவன் அறைக்கதவைத் திறக்கவும் இவள் குளித்து விட்டு வந்து உடைமாற்றிக் கொண்டிருக்கவும் சரியாய் இருந்தது. எப்பொழுதும் போல் ஜீன்ஸ் குர்தி தான் அணிய எடுத்து வைத்திருந்தாள்.ஜீன்ஸை அணிந்திருந்தவள் குர்தி அணிவதற்காக கையில் எடுத்த சமயத்தில்தான் இவன் கதவைத் திறந்தான்.

இப்படியொரு எழில்மிகு கோலம் அவன் சற்றும் எதிர்பார்த்திருந்திருக்கவில்லை.பார்வை வேறு அவளது இளமை அழகிடங்களில் அவனது அனுமதி இன்றியே படர்ந்து மேய ஆரம்பிக்க..மனமோ அன்று நடந்த இனிய சம்பவத்தில் நிலை கொண்டது.

கிட்டத்தட்ட தாம்பத்திய கடலின் முக்கால்வாசியை அன்றே தாண்டியிருந்தார்கள். அவளை நெருக்கமாக உணர்ந்த தருணங்கள்..அவளது மேனியின் மென்மைகளை தனது கரமும் உதடுகளும் உணர்ந்த தருணங்கள் என அனைத்தும் வரிசையாக நினைவுக்கு வர..இவ்வளவு காலம் அவன் கட்டிக் காத்த விரதம் நொடியில் விடைபெற்று பரந்திருந்தது.

அவள் நின்ற கோலம் நாடி நரம்புகளை முறுக்கேற்றி இவ்வளவு காலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த உணர்ச்சிகளைத் தாறுமாறாய் தூண்டி விட..அவனுக்கோ பெரும் இம்சை.

அவனைப் பார்த்தவள் ஒரு கணம் அதிர்ந்து கையிலிருந்த குர்தியை தன் மார்போடு மறைத்துக் கொள்ள..அது எவ்வளவுதான் மறைக்குமாம்..?அவன் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான்.

இத்தனையும் ஒரு நொடியில் நடந்ததுதான்.அடுத்த கணமே தன்னை சுதாரித்துக் கொண்டவன், “ஸாரி..”,என்றபடி வெளியேறப் போக,

இவள் பேசாமல் அமைதியாகவாவது இருந்திருக்கலாம். அதை விட்டு விட்டு,”இட்ஸ் ஓகே ஏ.சி.பி சார்.. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்குது…!ஐ நோ யூ ஆர் அ ஜென்டில்மேன்…!”,கூறிக் கொண்டிருந்தவள் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குர்தியை அணிந்து கொண்டாள்.

இந்த வார்த்தைகளும் அவளது இந்த செய்கையும் அவனுக்குள் வெறியையே கிளப்பி விட்டு விட்டது.

எப்பொழுது அவளருகில் வந்தான்.. எப்பொழுது அவளை அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் சாய்த்தான்.. எப்பொழுது அவளது செவ்விதழ்களை ஆக்கிரமித்தான் என்று இருவருக்குமே தெரியவில்லை.

அவ்வளவு வேகம்..மோகம்.. தாபம்…!வந்த வேகத்தில் இதழ்களைக் கவ்வியவன் முரட்டுத்தனமாக முத்தமிட..அவனது வேகத்தைத் தாங்க முடியாமல் அவளது உடல் ட்ரெஸ்ஸிங் டேபிளின் மீது சாய்ந்தது.

அந்த நிலை அவனுக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்தது போலும்.இரு கரங்களாலும் இடையைப் பற்றித் தூக்கி ட்ரெஸ்ஸிங் டேபிளில் அமர வைத்தவன் முத்தமிடுதலை மட்டும் நிறுத்தவில்லை.

முதலில் திகைத்து விழித்தவள்.. பிறகு வழக்கம் போல் அவனது இதழ் முத்தத்தில் உருகி கரைந்தவளாய் அவளையும் அறியாமல் தட்டுத் தடுமாறி அந்த யுத்தத்தில் பங்கேற்க ஆரம்பிக்க.. அவனுக்கு சொல்லவும் வேண்டுமா…?

சற்று முன் அவள் அணிந்த குர்தாவை அவனது கரங்கள் கழட்டியிருந்தன.வேகம்..  வேகம்..வேகம் மட்டுமே…!முழுதாக..மிக மோசமாக அவளை உணர்ந்து முடித்தவனின் கரங்கள் அவள் மேனியில் பதியாத இடமே இல்லை எனலாம்.

அனைத்தும் நிமிடத்தில் நடந்த செயல்தான்.அவளுக்குள் பேரதிர்ச்சி. ‘என்ன இது…ஹைய்யோ…’,அவள் உணரும் முன்பாகவே அவளை முரட்டுத்தனமாக உணர்ந்து விலகியிருந்தான் அந்தக் கள்வன்.

அவனது செய்கையில் மேனியே குங்குமமாய் சிவந்து விட,”பொறுக்கி…!”,என்று முணுமுணுத்தாள் அவள்.

அவளது காதருகே குனிந்தவன், “பொறுக்கிதான்…!எந்தப் புருஷனும் பொண்டாட்டிக்கிட்ட ஜென்டில்மேன் கிடையாது…!”,கூறியவன் வேகமாக வெளியேறி விட்டான்.

அவனுக்குத் தெரியுமல்லவா…? இதற்கு மேல் ஒரு நொடி அங்கு இருந்தாலும் தன் உணர்வுகள் தன் பேச்சை கேட்காது என்று…!

நடந்த நிகழ்விலிருந்து வெளிவரவே அவளுக்கு நேரம் பிடித்தது. ‘என்ன செய்தான்…?’,கேள்வி கேட்ட மனம் நடந்தவற்றை மீண்டும் ஒலிபரப்பி காட்ட,”ச்சீய்….”, வெளிப்படையாகவே சிணுங்கி கொண்டாள் அவள்.

“உண்மையாலுமே பொறுக்கிதான்…!”, மனம் வேறு சான்றிதழ் வழங்க..அவனால்  கழட்டி கசக்கி எறியப்பட்ட குர்தியை எடுத்தாள். அவனது முரட்டுத்தனத்தைப் போலவே கசங்கி கிடந்தது.

”சரியான முரடன்…”,திட்டிக் கொண்டவள் வேறொரு குர்தியை எடுத்து அணிந்து கொண்டாள்.

தனது அறையிலிருந்த குளியலறையின் ஷவரின் கீழ் நின்றவனுக்கு உணர்வுகள் மட்டும் அடங்க மறுத்தன.இவ்வளவு காலம் எப்படியோ இந்த உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்தான்.ஆனால்.. இப்பொழுது ஏற்பட்ட நெருக்கம்..சில நிமிடங்களே என்றாலும் முழுதாய் மோசமாய் அவளை உணர்ந்து விலகிய தருணம்..அவன் உணர்வுகள் கட்டுக்குள் அடங்க மறுத்தன.

‘இப்பொழுதே அவள் வேண்டும்…!’, வேட்கையில் மனம் புலம்ப..அவன் தவித்துதான் போனான்.

எப்படியோ கிளம்பி கீழே வந்தவனுக்கு வேறு குர்தியில் அவளைக் கண்டதும் மீண்டும் அதே நினைவுகள்.

“ஏன்..குர்தியை மாத்திட்ட…?”,என்று வேறு கேட்டு வைத்தான்.

அவனுக்கு பரிமாறியபடியே அவனைப் பார்த்து முறைத்தவள், “ஏன்னு உங்களுக்குத் தெரியாதா…?”,கோபம் போல் காட்டினாலும் குரல் என்னவோ குழைந்துதான் வந்தது.

‘உஃப்’ உதட்டைக் குவித்து மூச்சு விட்டவன்,”என்னால சாப்பிட முடியும்ன்னு எனக்குத் தோணல டி…!நான் கிளம்பறேன்…!”,உரைத்தவன் விடுவிடுவென்று வெளியேறி விட்டான்.

அவன் நிலைமை அவளுக்கும் புரிந்தது.கிட்டத்தட்ட அவளும் அதே நிலையில்தானே இருக்கிறாள். ஒரு பெருமூச்சுடன் சாப்பாடை மூடி வைத்தவள் அலுவலகத்திற்கு கிளம்பி விட்டாள்.

அந்த நிலை அவனுக்கு அலுவலகத்திலும் தொடர்ந்தது.எதிலுமே கவனம் செலுத்த முடியவில்லை.அவளால் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட உணர்வுகள் அவள் மட்டுமே வேண்டும் என்று அடம் பிடித்தன.

அவனுக்கே அவன் மேல் கோபமாக வந்தது. கேவலம் ஒரு உணர்வுகளை அடக்க முடியாவிட்டால் தான் என்ன மனிதன் என்ற கோபம் வேறு…!முயன்று கேஸில் கவனம் செலுத்தியவனால்..ம்ஹீம்.. சத்தியமாய் முடியவில்லை.

நேரம் விரைந்து மாலையும் வந்தது.

நிமிடத்திற்கு நிமிடம் தாபத்தையும் மீறி ஆத்திரம் பொங்கியது. ‘ச்சே..நான் என்ன அவ்வளவு பலவீனமானவனா…?’,

உணர்வுகளை கட்டுப்படுத்தும் நிலையை எல்லாம் அவன் எப்பொழுதோ தாண்டியிருந்தான்.வெடித்து சிதறும் நிலை தான்.

இதற்கு மேல் முடியாது.. மணி ஆறாக அவன் வீட்டிற்கு கிளம்பி விட்டான்.

குளிர்ந்த நீராவது தன் தாபத்தைத் தணிக்கும் என்றெண்ணினானோ என்னவோ..ஷவரின் அடியில் வெகு நேரம் நின்றான்.எப்படி அடங்கும்…? விழிகளை மூடினாலே அவன் உணர்ந்த அவளது மென்மைகள்தான் தோன்றி இம்சித்தது.

குளித்து வெளியே வந்தவன்..கையில்லாத பனியனும் ஷார்ட்சும் அணிந்து கொண்டு பால்கனிக்குச் சென்றான்.

யாழ்வி இன்னும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.

பால்கனியில் கிக் பாக்சிங் செட் ஒன்று இருந்தது.கையுறையை அணிந்தவன் மனதில் இருந்த அழுத்தம் முழுவதையும் அந்த மணல் மூட்டையின் மேல் காட்டினான்.

அவள் மேல் பொங்கும் மோகம்..அதை தணிக்க முடியாத நிலை.. உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத ஆத்திரம் என அனைத்தும் வெடித்து சிதற கண் மூடித் தனமாக தனது வேகத்தைக் காட்டினான்.

யாழ்வியும் வீடு திரும்ப..கதவு திறந்திருப்பதை பார்த்து விட்டு, ‘வந்துவிட்டார் போல..’ எண்ணியபடியே மேலே விரைந்தாள்.

வியர்க்க விறுவிறுக்க மணல் மூட்டையை குத்திக் கொண்டிருந்தவனை கண்டவள் அவனருகே விரைந்தாள்.

“இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க போல…?” அவன் வினவ அவனிடம் பதிலில்லை.

வியர்த்து வழிந்த அவனது தோற்றமே வெகு நேரமாக இந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்திருக்கிறான் என்பதை எடுத்துக் கூற,”போதும் விஷ்வா…!யூ ஆர் ஸ்வெட்டிங்… போதும் நிறுத்துங்க…!”,அவள் கூறியதை அவன் கேட்கவே இல்லை.

“விஷ்வா…”அருகில் சென்று அவனைத் தொட,

”ஏய்ய்..தள்ளிப் போடி…”,என்று சீறியிருந்தான் அவன்.

”என்..என்னாச்சு…?”,கண்கள் சிவக்க கத்தியவனின் கோபத்தில் அரண்டு போனவளாய் பின் வாங்கினாள் அவள்.

மருண்டு விழித்தவளின் பார்வையில் அவனது கோபம் சற்று மட்டுப்பட்டது.

தனது தலையை கோதிக் கொண்டவன் பால்கனி மர கைப்பிடியில் இரு கைகளையும் ஊன்றியவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

”என்னாச்சு விஷ்வா… ஏதாவது பிரச்சனையா…?”,அவனருகே சென்றவள் அவனது கையை பற்றிக் கொண்டாள்.

அவனால் தாங்கவே முடியவில்லை. வெடித்திருந்தான்.

”நீதான்.. நீதான் டி பிரச்சனை…”,

“விஷ்வா….?”,அவள் அதிர்ந்து விழிக்க,

”நான் இப்படி இருந்ததே இல்லை டி…!என்னால வொர்க்ல கான்சென்ட்ரேட் பண்ண முடியல..சாப்பிட முடியல..தூங்க முடியல…! எந்நேரமும் உன் நினைப்புதான்…!நீ வேணும்ங்கிற எண்ணம் என்னைக் கொல்லுது…!சில சமயங்கள்ல எனக்கே என் மேல கோபமா வருது…!’ஒரு உணர்வுகளை அடக்கத் தெரியல.. நீ என்ன மனுஷன்’ன்னு என் மனசாட்சி என்னைக் காறித் துப்புது…! இப்படியே இருந்தால்.. இந்த உணர்வுகள்ல மூழ்கி நான் பைத்தியக்காரனாகிடுவேன் டி..!”,தன் மனதில் இருந்த அழுத்தம் மொத்தத்தையும் இறக்கி வைத்து விட்டான்.

அவள்தான் விக்கித்துப் போய் நின்றிருந்தாள். கணவன் இந்தளவிற்கு துன்பப்படுவான் என்று அவள் எண்ணியிருக்கவிலை.

“வெட்கத்தை விட்டுக் கேட்கிறேன்..எனக்கு நீ வேணும்…! இந்த பெட்ல எனக்கு நீ வேணும்…!உன்னை நான் உணரணும்…ஐ நீட் யூ..ஐ நீட் யூ வெரி பேட்லி…!”,அவன் கேட்டே விட்டான்.

அவள் இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது. மீண்டும் அவள் மனதில் அதே கேள்வி..’எனக்கு நீ வேண்டும்… என்றால்.. இங்கு நீ என்பது நானா..இல்லை என் உடலா…?’,மனம் கேள்வி கேட்க அவள் வாயைத் திறந்து அவனிடமே கேட்டு அதை தெளிவு படுத்தியிருந்திருக்கலாம். அதைச் செய்யாமல் விட்டு மிகப் பெரிய தவறை செய்தாள்.

‘என்ன பதில் சொல்வாய்…?வெட்கத்தை விட்டு அவன் தன் நிலையை உணர்த்தி விட்டான்.. இப்பொழுது நீ என்ன செய்வாய்..?’, மனம் கேள்வி கேட்டது.

‘என் மேல இருக்கற காதலால் அவன் இதை கேட்கல..என் உடல் மேல இருக்கிற மோகத்தால நீ வேணும்ன்னு கேட்கிறான்..என்னால் எப்படி என்னைக் கொடுக்க முடியும்…?’,அவள் நிலையில் இருந்து அவள் மனம் புலம்பித் தவித்தது.

‘அவனுக்குத்தானே உன்மேல காதல் இல்லை…ஆனால்..உனக்கு அவன் மேல் கொள்ளைக் காதல் இருக்கிறது அல்லவா…? உயிர் நிறைய நிறைய அவனைக் காதலிக்கிறாய் அல்லவா…?அப்போ..அவன் கேட்பதைக் கொடு..அவனது உணர்வுகளை இதற்கு மேலும் கொல்லாதே..!அவனது உணர்வுகளுக்கு மதிப்பு கொடு…!’, காதல் கொண்ட மனம் எடுத்துரைக்க அவள் தன் தயக்கத்தை விட்டொழித்தாள்.

அதன் பிறகு அவள் சற்றும் தாமதிக்கவில்லை.இறுக கட்டிக் கொண்டாள் தன் மன்னவனை.

அவனுக்கு இது போதாதா…? அள்ளிக் கொண்டான் தன் மார்பில் விழுந்த பொக்கிஷத்தை.

அவளைத் தாங்கிச் சென்று படுக்கையில் கிடத்தியவனின் உணர்வுகள் கரை உடைத்த வெள்ளமாய் அவளை ஆக்கிரமித்தன.அவன் எதையும் மிச்சம் வைக்கவில்லை. மொத்தமாய் அவளைக் கொள்ளையிட்டுக் கொண்டான்.

நெற்றிப்பொட்டில் ஆரம்பித்த இதழ்களின் பயணம் வெண் பிஞ்சுப் பாதங்களில்தான் இளைப்பாறியது.தன்னுடைய ஒவ்வொரு செய்கையிலும் அவன் அவளைக் கொண்டாடினான்.

முதலில் தயங்கியவளும் அவன் கண்களில் தெரிந்த வேட்கையில் தன் வெட்கத்திற்கு சிறிது நேரம் விடுமுறை அளித்தாள்.இவ்வளவு நாட்கள் காத்திருந்ததினாலோ என்னவோ..அவனது வேகம் சற்று அதிகமாகத்தான் இருந்தது.

அவளைத் தீண்டி தீண்டியே அவளது உணர்ச்சிகளையும் தூண்டி விட்டிருந்தான் அந்தக் கள்வன்.அவனது முதுகில் பதிந்த அவளது நகக்கீறல்கள் பெண்ணவளின் நிலையை அப்பட்டமாய் படம் பிடித்துக் காட்ட அவன் ஒரு நொடி நிமிர்ந்து அவள் கண்களைப் பார்த்தான்.

விழிகளை மூடி ஏதோ ஒரு மாய உலகில் சஞ்சரிப்பவளைப் போல் இதழ்களை கடித்து மோன நிலையில் ஆழ்ந்திருந்தாள் அவனது கண்ணாட்டி.

அவன் இதழோரம் ரகசிய சிரிப்பு ஒன்று உருவானது.

அவனிடம் அமைதியை உணர்ந்து அவள் பட்டென்று கண்களைத் திறந்து பார்க்க அந்தக் கள்வனோ அவளையே பார்த்தபடி கண் சிமிட்டினான்.அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

“விஷ்வா…”,வெட்கத்துடன் அவள் அவனை விலக்க பார்க்க..

“ம்ஹீம்…இன்னைக்கு நான் விலகறதா இல்லை…”தலையை ஆட்டி மறுத்தவனின் பார்வை அவள் மேனியில் ஒய்யாரமாய் மேய,

அவளுக்கு அப்பொழுதுதான் சுற்றுப்புறமே உரைத்தது.தலைமாட்டில் இருந்த இரவு விளக்கை எட்டி அணைக்க முயல..அவனோ உயர்ந்த அவள் கரங்களைப் பற்றிக் கொண்டான்.

“ம்ப்ச்..என்ன இது…விடுங்க…”,அவளது சிணுங்கலில் மொத்தமாய் அவன் வீழ்ந்துதான் போனான்.

“ம்ஹீம்…”அவன் தலையை ஆட்ட,

“ப்ளீஸ்…”,அவள் முகம் இரத்த நிறம் கொண்டு விட்டது.

அவளது வெட்கத்திற்கு மதிப்பு கொடுத்தவனாய் அவன் எட்டி அந்த இரவு விளக்கை அணைத்து விட்டான்.

சீறிப் பாய்ந்த அவனது ஆண்மையின் மூர்க்கத்தில் அவள் திணறித் தடுமாறிப் போனாள். அவனது வேட்கையில் அவளை பயம் வந்து கவ்விக் கொள்ள..அவனை விலக்கவும் பயம் அவளுக்கு.

அப்பட்டமாய் அவள் முகத்தில் கவிழ்ந்த பயத்தை அவன் கண்டு கொண்டான்.

“ஹே ரிலாக்ஸ் யாழ்வி…!நான் பார்த்துக்கிறேன்…”,காதோரம் சரிந்து கூறியவன் அவளுக்காகத் தன் வேகத்தைக் குறைத்தான்.

அவளின் பயம் உணர்ந்து அவளுடன் கை கோர்த்து மெல்ல மெல்ல அவளைத் தேற்றி தன்னுடன் புது உலகிற்கு அழைத்துச் சென்றான்.அவர்களுக்கே அவர்களுக்கான ரகசிய உலகம் அது.

ஆரம்பத்தில் தடுமாறினாலும் கணவன் கொடுத்த தைரியத்தில் மகிழ்ச்சியாக அந்த உலகிற்குள் அடியெடுத்து வைத்தாள் அந்தக் காரிகை.மெல்ல மெல்ல அவர்களுக்குள் தாம்பத்தியம் அரங்கேறியது.

என்னதான் அவளது நிலையை கருத்தில் கொண்டாலும் அவனால் ஒரு கட்டத்தில் அவனது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மூர்க்கத்தனமாக அவளை ஆக்கிரமித்தவனை காதலோடு அள்ளிக் கொண்டாள் அவள்.

“தேங்க்ஸ் டி..!”,நெற்றிப்பொட்டில் முத்தம் பதித்து அவன் விலகிப் படுக்க,

அவளுக்கோ இவ்வளவு நேரம் இருந்த ஏகாந்த நிலை மாறி மனம் பாரமானது.

‘தேங்க்ஸ்ஸா…எதுக்கு..என்னுடைய உடலை பகிர்ந்துக்கிட்டத்துக்கா… ?’,அவள் மனதில் கேள்வி உதயமானது.

தன்னுடன் கூடி களித்த கணவன் சொல்லுகிறான் ‘தேங்க்ஸ்’ என்று.அவளால் தாங்க முடியவில்லை.

கணவன் மனைவிக்குள் நன்றி வர கூடாதுதான்..ஆனால்,நெற்றிப்பொட்டில் அவன் பதித்த முத்தம் காதல் இல்லாமல் வந்திருக்காது அல்லவா…?

அவள் மனதிற்குள் நடக்கும் போராட்டத்தில் கரைய ஆரம்பிக்க..அவனோ இவ்வளவு காலமாய் தன்னை அழுத்தியிருந்த உணர்வுகளுக்கு விடை கொடுத்தவனாய் அவளைக் கட்டிக் கொண்டு உறங்க ஆரம்பித்திருந்தான்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page