திரையிட்டு விலகாதே! -31

திரையிட்டு விலகாதே! 
அத்தியாயம் -31

Hiiii வாசகர்களே ✨

பிராக்டிகல் தேர்வு ஒரு நாள் முழுவதும் நடந்து ஏறியது… எனக்கு ஆண்டு விழா அன்று கல்லூரியில் செக்ரட்டரி டியூட்டி போட்டு விட்டதால் அடுத்து ஒரு வாரம் எனக்கு பிசியாகவே போனது… அப்படியே மார்ச் மாதத்தின் இறுதி வாரமும் வரவே, ஸ்டடி லீவ் அப்போது படிக்காமல் நான் வீட்டை நோக்கி பிரயாணம் பட்டேன்.!!

போன மாதமும் போக வில்லை… அதுவே பெரும் அழுத்தமாக ஆகி போனது என் உள்ளத்தில் அந்த பாரம் அனைத்தும் இறக்கி விட்டு, புத்துணர்ச்சியோடு இறுதி செம்மஸ்டர் தேர்வுகள் தூள் பறக்க விட எனக்கு அது அவசியமாக பட்டது… ஆனால் ஜெஷ்வந்த் நிலையோ, வேப்பங்காய் உண்டது போல் ஆனது!! 😖😵‍💫

அவனுக்கு நான் கிளம்புவதே பிடிக்கவில்லை… போகாதே என்று பல முறை சொல்லி விட்டான்.!! ஆனால் மூன்று மாதம் முன்பாகவே புக் செய்த டிக்கெட், இப்போது எவ்வாறு நான் என்ன சொல்லி வீட்டுக்கு செல்லாமல் இருப்பது..?? ஆகவே அவனை ஒரு வழியாக சமாளித்து, ட்ரெயின் ஏறினேன்..

காலையில், “வீடு வந்து விட்டேன்” என அனுப்பிய குறுஞ் செய்திக்கு பதிலே இல்லை… இதில் என்ன பெரிய தவறு இருக்கிறது?!!! “என் அக்காவும் இப்போ தான் என்னைய விட்டு கெளம்பினா!! நீயும் போற…” என்று சொல்வதையே மீண்டும் மீண்டும் சொன்னான்… “இருக்க போவதே 2 நாள் அதற்கு இவ்வளவு ஆர்பாட்டமா???!!!” என்று கேட்டதற்கு பதில் இல்லை…

ஏனோ தானோ என்று சென்றது அந்த இரண்டு நாட்களும் என் வீட்டில்… பெற்றவர்களோ “ஹாஸ்டலில் இருந்து இருந்து எப்போ பார்த்தாலும் மொபைல் பார்த்துட்டே இருக்க!!” என கடிந்து கொண்டனர், நான் வளர்ந்த குழந்தை ஆன ஜெஷ்வந்த்தை தேற்றி கொண்டு இருப்பதை கண்டவர்கள்… அவனை பற்றி தெரியாது!!

ட்ரைனுக்காக மீண்டும் தாம்பரம் ரயில்வே நிலையத்தில் காத்து இருக்கும் போது தான், இயல்பான பேச்சு வழி மாறி போச்சு… முதலில் ஜெஷ்வந்த், “உங்க வீட்டுல லவ் பண்ணா ஓகே பண்ணுவாங்களா??!!!” என்றான்…

“ஹான்… அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்.!! ஆனா அப்பா எடுத்து சொன்னா அவருக்கு சரின்னு பட்டா ஓகே பண்ணுவாரு!!”

“ஆனா எங்க வீட்டுல அப்படி இல்ல!!!”

“ஏன்!!?”

“ஆமா..!! நீ மொதல்ல வெயிட் குறைக்கணும்… என் பொண்டாட்டி ஒல்லியா அழகா இருந்தா தான் எனக்கு பிடிக்கும்!! மித்தவங்க பார்த்து குறை சொல்லிட்டா அப்புறம் எனக்கு பிடிக்காது!!”

“ஜெஷ்வந்த்!!!!!!”

“ஹேய் ஆமா நான் உண்மைய தான் சொல்றேன்… அப்புறம் என் அக்கா ஓகே சொல்லணும்..!!! அப்புறமா என் அம்மா ஓகே சொல்லணும்.!!

இப்போதைக்கு அக்கா பிரச்னை இல்ல… மாமா ஃப்ரெண்ட்லி ஆக தான் பேசுறாரு, அவரை வெச்சு பேசுனா ஈசியா ஓகே பண்ணிடலாம்… அம்மா தான் டவுட் ஆக இருக்கு!! ஆனா அவங்களுக்கு உன்னய அன்னிக்கு பார்த்த உடனே ரொம்ப புடிச்சு போச்சாம்… ஆனா நா கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லுவாங்களான்னு தெரியல!!!”

“இப்போ என்ன உனக்கு பிரேக் அப் பண்ணனுமா என் கூட!!!!!?” 🤨🙄

“ஹேய் கோப படாத குட்டி மா…”

“நீ மூடிட்டு வை டா பு***!!!” என கடுப்போடு ட்ரெயின் வரவும் ஏறி உள்ளே அமர்ந்து கொண்டேன்… சற்று நேரத்தில் பெட்ஷீட் விரித்து படுத்து கொள்ள, ட்ரெயின் புறப்பட்டது!! அதிகாலை 4:30 மணிக்கு மதுரை ஜங்ஷனில் நிற்க, இறங்கி இருளில் எனக்கு ஒரு வகை பிடித்தார் போல் தனிமையில் நடந்தே நாய்கள் நோக்க ஹாஸ்டல் உள்ளே சென்று கேட்டை சாற்றினேன்!!

7 மணி வரை உனக்கு விட்டு குளித்து, அருகில் உள்ள கோவிலுக்கு போய் பின்னர் மொபைலை ஏர் பிளேன் மோட் மாற்றி போட்டு விட்டு அமர்ந்து பித்து பிடித்தார் போல் படிக்க ஆரம்பித்தேன்!! எனக்கு அனைத்தையும் எழுதினால் தான் நன்றாக நினைவில் நின்று தேர்வில் ஞாபகம் வைத்து எழுத முடியும்… ஆகவே இருக்கும் ஒவ்வொரு பேப்பர் தேர்வுக்கு உள்ள ஐந்து பாடங்களையும் முழுவதுமாக நோட்ஸ் குறிப்புகள் எழுத துவங்கினேன்..!!

எந்த அளவு என்றால், சித்திர குப்தன் என்று என் ரூம் மேட் அக்கா கலாய்க்கும் அளவு!! அங்கு இங்கு நகர மாட்டேன்… படிப்பு என்று வந்து விட்டால், என்னை நானே ஏமாற்றி கொள்ள மாட்டேன்!! ஒரு நிமிடம் கூட மொபைலை தொட மாட்டேன்… ஐந்து நிமிடம் என எடுத்து, அரை மணி நேரம் வீண் செய்ய மாட்டேன்…

அது தான் என்னுடைய பலம்!! 
ஆனால் இம்முறை கவன சிதறல் ஆக மொபைல் இல்லை, மாறாக அவன் பேசிய வார்த்தைகள் தான் என்னை அணு அணுவாய் குத்தி கிழித்து ரணம் செய்து வதைத்து கொண்டு இருந்தது!! மதியம் உணவு உண்ணும் போது, அழுதே விட்டேன் தனி அறையில் அமர்ந்து…

முதல் சண்டை இதுவல்ல!! 
ஆனால் பேசாமல் என்னால் இருக்க முடிந்தும், அவன் வருந்துவானே என என்னால் பிறர் மனம் நோகும் என்று நொந்து ரணமாகி போய் இருந்த என் மனம் அவனுக்காக பாவம் பார்த்தது!!! ஆயினும் நான் மொபைல் எடுக்கவில்லை…

எப்படியோ அவனும் தானே படிக்க வேண்டும்?!!! என்னை போல் வெறும் ஐந்து நாள் விடுமுறை இல்லை அவனுக்கு, 15 நாட்கள் விடுமுறை தேர்வு ஆரம்பிக்கும் முன்பாக.!! ஆனால் அவன் படித்த பாடு இல்லை… அவன் அம்மா காலையில் வேலைக்கு கிளம்பியதும், இவன் இந்த பக்கம் பைக்கில் கிளம்பி, நண்பர்களோடு ஊர் சுற்றி கொண்டு, தெருவில் பசங்களோடு கிரிக்கெட் விளையாடி பொழுதை கழித்து இல்லை… இல்லை.. என்னை பொறுத்த வரை வீண் அடித்து வந்தான்!!!

எனக்கு ஐந்து தேர்வுகள்… ஒன்று இரண்டு நாள் இடையில் விடுப்புகளில் விட்டு நடக்க விருந்தது.!! 14 ஆம் தேதி முடிவடையும் நிலை, ஆனால் நான் 18 ஆம் தேதி தான் டிக்கெட் போட்டு கொண்டேன், அவனுக்காக….. ஆனால் எதிர் பாரா விதமாக அவனுக்கு 18 ஆம் தேதி முதல் தேர்வு என்று அட்டவணை வெளி ஆனது!!

இரவாகி இருக்கவும், படிப்பதை நிறுத்தி கொண்டு நான் கீழே சென்று உணவு எடுத்து வந்தேன்!! அன்றோ இடியாப்பம்… உண்டு முடித்த பின்னரும் கூட நான் மொபைலை எடுக்கவே இல்லை!! 
உண்மையில் எடுக்க பிடிக்க வில்லை…!!
மனம் விட்டு போனது போல் ஆனது…

அந்த ஐந்து நாட்களும் ஓடிய நிலையில், எனக்கு இப்போது விடிந்தால் முதல் தேர்வு!! 10 மார்க் கேள்விகள் எல்லாம் எழுதி படிக்கலாம்… ஆனால் ஒரு மார்க் சாய்ஸ் கேள்விகள் எல்லாம் மொபைலில் இருந்து தானே படிக்க வேண்டும் ஆகையால் 10 மணிக்கு அவன் கவனிக்க மாட்டான் என்ற எண்ணத்தில் மொபைல் எடுத்து சுவிட்ச் ON செய்தேன்!!

மறு நிமிடம் எனக்கு அழைப்பு வந்து விட்டது, ஒரு மணி நேரம் பறந்து விடும் என அறிந்து இருந்ததால் நான் அதை ஏற்காமல் வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பி “என்ன?” என்று கேட்டேன்… “பன்னிரண்டு மணிக்கு எனக்கு தூக்கம் வரும் வரை பேசி விட்டு அப்புறமா படி டி பொண்டாட்டி!!” என்று எதுவுமே நடக்காதது போல், வெகு இயல்பாக கொஞ்சி கொஞ்சி 18+ பேச்சுகளை ஆரம்பித்தான்!!

“நீ வழக்கம் போல மொபைல் நோண்டிட்டே தூங்கு.. நா படிக்க போறேன்!!” என்று மீண்டும் ஏர் பிளேன் மோட் போட்டு விட்டு PDF மட்டும் திறந்து படிக்க ஆரம்பித்தேன்… அப்போதே சமாளிப்பதற்குள் மணி 11 ஆகி இருந்தது!! எனக்கு இவனை தேர்வு நேரத்தில் சமாளிக்க வழி தான் தெரியவில்லை… இதே போல் தான் இன்டர்னல் தேர்வுகள் நடக்கும் போதும் செய்து, என்னை அடம் பிடித்து வெளியே இழுத்து சென்றான்!!

இது செம்மஸ்டர்!!! 
புரிந்தும் அவன் சுய இன்பம் தான் முக்கியம் என கருதி இவ்வளவு சுய நலமாக இருக்கிறானோ?!! என்று முதல் முறையாக எனக்கு அவன் மீது சந்தேகம் வந்தது… அவனுக்கு நான் ஒரு தோழி போலவும் தான் இருக்கிறேன்!! உடன் பயிலும் மாணவி கனவில் வந்தாள், என்று அவன் எந்த பயமோ தயக்கமோ இன்றி என்னோடு பகிர்ந்து சிரிக்கும் அளவுக்கு… என் பக்கத்தில் இருந்து அவனுக்கு எந்த குறையும் நான் வைப்பது இல்லை!!

ஆனால் எனக்கு ஏன் குறைகள் மட்டுமே தான் அவன் வைக்கிறான்!!????

முதல் தேர்வு, காலை உணவு உண்டு அரக்க பறக்க கிளம்பி நடந்து போகும் வேளையில் அழைப்பு விடுத்து ஆல் தி பெஸ்ட் சொன்னான்… அதற்கு மேல், “நான் வேணும்னா வந்து விட்டு போகவா??” என்றான் நான் காலேஜ் கேட் அருகில் வந்து விட்டதை அறியாமல்… அதே உண்மையை சொல்லி விட்டு, உள்ளே சென்று நான் தேர்வு அறையை கண்டு பிடித்து சென்று மேஜை இருக்கை எண்ணை சரி பார்த்து கொண்டு, ரிவைஸ் செய்து கொண்டு இருந்தேன்!!

வினா தாள் வந்தது… பெரும்பாலும் தெரிந்த கேள்விகள் தான்!! நாட்களே நொடிகள் போல் கடக்கையில் மூன்று மணி நேரம் மூன்று நிமிடம் போல் கடக்க, தேர்வு எழுதி முடித்து தாளை சமர்பித்து விட்டு பெரும் மூச்சு ஓடு வெளியேறினேன்!! சித்திரை திருவிழா வர போகும் நிலையில் வானம் பெரும் பாலும் மேக மூட்டத்தோடு தான் இருந்தது…

அன்று மாலை வழக்கம் போல் கேசவன் என்னை காண வந்து இருந்தான்… ஆனால் நான் மொபைல் அமர்த்தி போட்டு படுத்து கொண்டு இருந்த நிலையில், கீழ் தளத்தில் இருந்து ஒரு அக்கா அவன் சொல்லி விட்ட பெயரில் தூது வந்து இந்த விஷயத்தை தெரிவித்தார்கள்!! அன்று என்னை மீண்டும் அந்த இருண்ட சாலைக்கு அழைத்து சென்று, அமர்ந்து பேசி விட்டு வந்தோம்…

மார்ச் மாதம் முழுக்க அதே இடத்தில் அமர்ந்து CSK மேட்ச் தினம் அன்று 10 மணி வரை மேட்ச் பார்த்து விட்டு செல்வோம்!! ஆனால் இன்றோ எந்த சந்தோஷமும் இல்லை, ஏன் என்றால் அவனுக்கு முத்தம் இட நான் ஒத்து உழைக்கவில்லை… தெருவில் வழக்கத்துக்கு மாறாக ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்தது என்று மறுத்து விட்டேன்!!

அள்ளி முடிந்த வைத்துக் நைட்டு பைஜாமா உடையில், வேறு தெருவுக்கு அவன் அழைத்து வந்து “இப்போது கிஸ் பண்ணலென்னா நா உன்னய இங்கேயே விட்டு போயிருவேன்!!” என்று மிரட்டல் விடுத்தான்… அன்பாக கேட்டு இருந்தால், நிச்சயம் நான் வழக்கம் போல் அவனுக்காக இறங்கி வந்து இருப்பேன்!! ஆனால் இவன் மிரட்டவும், “நிஜமாகவே விட்டு போனாலும் கூட வளைந்து மட்டும் போக கூடாது!!” என்ற தீர்மானத்துடன் “முடியாது!!!” என பிடித்த பிடிவாதத்தில் நின்றேன்…

இப்போது ஜெஷ்வந்த் ஷ்ரேயாவை அந்த புது ஆள் அரவமற்ற தெருவில் தனியாக இரவில் விட்டு சென்று விடுவானா? 
என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨

Thanks for reading மக்களே 🩷 
 

❤️ Loading reactions...
3 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page