காதல் இதுதானா ? – காதல் 27

காதலாகும் 27:

நாட்கள் தங்கு தடையின்றி பறந்தன…!

தினம் தினம் புதுப் புது விதமாக கணவன் நடத்திய கட்டிலறை பாடத்தில் மனம் மயங்கித்தான் போனாள் அவள்.அவனுடன் ஈருடல் ஓருயிராய் கூடும் போது ஓடி ஒளிந்து கொள்ளும் சஞ்சலங்கள் அவன் விலகிப் படுத்த உடன் ஓடி வந்து அவள் மனத்திற்குள் புகுந்து விடும்.

‘காதல் இல்லாமல்தான் தன்னுடன் கூடுகிறான்..’ நினைவே அவளுக்கு கசந்தது.அவன் முன்னால் மகிழ்ச்சியாக இருப்பதை போல் நடித்தாலும் மனதிற்குள் பெரும் வேதனை ஒன்று பாறாங்கல்லாய் அழுத்திக் கொண்டிருந்தது.

வாயைத் திறந்து அவன் ‘ஐ லவ் யூ என்று சொல்லியிருக்கவில்லைதான்.ஆனால்,அவனுடைய ஒவ்வொரு செய்கையிலும் நேசம் தெறித்து விழுந்தது.

வீட்டில் இருக்கும் நேரங்களில் ஒருநொடி கூடி அவளைப் பிரியாமல் அடை காத்தான். சமைக்கும் போதும் பின்னிருந்து அவளைக் கட்டிக் கொண்டு பல இனிய சில்மிஷங்களில் அவளை சிவக்க வைத்தான்.டிவி பார்க்கும் போது கூட அவன் அவளை உரசிக் கொண்டுதான் அமர்ந்திருப்பான்.

கட்டிலறையில் சொல்லவே வேண்டியதில்லை. சேவகனாய் மாறி அவன் புரிந்து சேவகத்தில் அவளை ஒரு மகாராணியாய் உணர வைத்தான்.

அன்றும் அப்படித்தான்..காலையில் கண் விழித்தவளை எழுந்து கொள்ள விடாமல் கட்டிக் கொண்டு அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தான்.

“அய்யோ விஷ்வா…! நான் போய் சமைக்கணும்.. விடுங்க…!”தன் நெஞ்சுக்குழியில் முகம் புதைத்துக் கொண்டு செல்லமாய் குறுகுறுப்பு மூட்டிக் கொண்டிருந்தவனின் தலையைப் பிடித்துத் தள்ளி விட்டாள் அவள்.

“ம்ப்ச்… இன்னைக்கு ஒண்ணும் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்…! அவன் தன் வேலையில் கவனமாக,

“நேற்றும் இதையேதான் சொன்னீங்க… தினமும் ஹோட்டல்ல ாப்பிட்டால்.. வயிறு கெட்டு போயிடும்…!”,தன் மேல் ஊர்ந்த அவனது கரங்களைத் தடுப்பதிலேயே அவள் கவனமாக இருந்தாள்.

“நீ என்னை மயக்கி வைச்சுட்ட டி ராட்சசி…! எப்பொழுதும் உன் நினைப்புதான்…”, அவன் புலம்ப அவள் கிளுக்கிச் சிரித்தாள்.

“நீங்க ஒரு போலீஸ்… ஞாபகம் இருக்குதா…?”.

“பட்..உனக்குப் புருஷன்தானே…”,கூறியவன் அவள் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவளுக்குள் படர,

“ஹேய்..ச்சீய்…”அடுத்த சில நிமிடங்களுக்கு அவளது செல்ல சிணுங்கள்தான் ரீங்காரங்களாய் மாறி அந்த அறையில் ஒலித்தது.

கேட்டதை அடைந்து விட்டுத்தான் ஓய்ந்தான் அந்தக் கள்வன்.

“ஆனாலும் விஷ்வா..நீங்க ரொம்ப மோசம்…!”,இன்னும் படுத்திருந்தால் அவன் தன்னை இன்று அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்க வைத்து விடுவான் என்பது உரைக்க அவசர அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.இப்படி இரண்டொரு முறை நடந்தும் இருக்கிறது.

விடிய விடிய கட்டிலறை யுத்தத்தை நடத்தி விட்டு அதிகாலையில் கண் அயர்பவளை பார்க்கும் போது அவனுக்குப் பாவமாகத்தான் இருக்கும்.அந்தப் பாவம் அனைத்தும் காலையில் அவள் எழுந்து குளிக்க செல்லும் போது அவனிடம் விடைபெற்று பறந்து விடும்.எழ விடாமல் கட்டிக் கொண்டு அழிச்சாட்டியம் செய்பவன் தான் கேட்பவற்றை அவள் கொடுக்கும் வரை விட மாட்டான்.

வேறு வழியில்லாமல் அவள்தான் அவன் கேட்பதை வாரி வழங்குவாள்.வலிமையான ஆணவனால் குளித்துத் தயாராகி அலுவலகத்திற்கு கிளம்பி விட முடியும்.பெண்ணவளின் மேனிதான் அதற்கு ஒத்துழைக்காது.சுக அயர்வில் களைத்து போனவளாய் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு உறங்கி விடுவாள்.

களைத்துப் போய் உறங்குபவளின் நெற்றியில் சிறு சிரிப்புடன் இதழ் பதித்து விட்டு அவன் கிளம்பி விடுவான்.

விட்டால் இன்றும் விடுப்பு எடுக்க வேண்டியதுதுதான் அவசர அவசரமாக எழுந்தவள் அவன் தன்னைப் பார்த்த கள்ளப் பார்வையில் தன் நிலை உணர்ந்தவளாய் போர்வையை எடுத்து மூடி மறைத்தாள்.

“ஹா..ஹா…!”,ஒற்றைக் கையை தலைக்கு கொடுத்து ஒரு பக்கமாய் சாய்ந்து படுத்திருந்தவன் ஆர்பாட்டமாய் சிரிக்க.. அவளுக்கோ நாணம்.

“உங்களால..எவ்வளவு லேட் ஆகிடுச்சு பாருங்க…”அவள் மணியை சுட்டிக்காட்ட,

அப்பொழுதுதான் அதை கவனித்தவன் போல பதறினான் அவன்.

“அச்சச்சோ…எனக்கும் லேட் ஆகிடுச்சே…இப்போ என்ன பண்றது…?”.

அவனது கள்ளத்தனத்தை உணராதவளாய் “அந்த ரூம்ல போய் குளிங்க…!நானும் ரெடியாகறேன்…இன்னைக்கு ஒண்ணும் ஹோட்டல்ல சாப்பிடுக்க வேண்டியதுதான்…”,உரைத்தபடி அவள் எழ..அவனோ இரு கைகளிலும் அவளை அள்ளிக் கொண்டான்.

“விஷ்வா….?”,

“ரெண்டு பேருக்கும் லேட் ஆகிடுச்சு… சேர்ந்தே குளிச்சிடலாம்…!”,அள்ளிக் கொண்டு குளியலறைக்குள் ஓடியவன் அவளை பேசவே விடவில்லை.

‘சரியான திருடன்…’,அவன் பண்ணும் அலும்பலை நினைத்து அவள் மனம் சிணுங்கிக் கொண்டது.

எப்படியோ குளித்து முடித்து அவனிடமிருந்து தப்பித்து வெளியே வந்தவளின் முகம் மட்டுமல்ல மேனியே குங்குமமாய் சிவந்திருந்தது.

உடை மாற்றிக் கொண்டிருந்தவளின் மனதில் அவளது நாயகனின் ஊர்வலமே.அவனது அழிச்சாட்டியங்கள் அனைத்தும் கணவன் மனைவிக்குள் நடக்கும் காதல் களியாட்டங்கள்தான்… ‘இதையெல்லாம் இவன் காதலோடு சொன்னால்…’நினைக்காமல் இருக்க முடியவில்லை. பெருமூச்சொன்று எழுந்தது.

அவ்வப்போது மனதைக் குடையும் இந்த விஷயத்தை அவளால் அவ்வளவு சீக்கிரம் ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை.

எப்படியோ..கூடல்களுக்கும்.. செல்ல சில்மிஷங்களுக்கும்.. மனதை அழுத்தும் அவளது எண்ணங்களுக்கும் இடையே நாட்கள் நகர ஆரம்பித்திருந்தன.

அடுப்பில் வெஜ் குருமா கொதித்துக் கொண்டிருந்தது. மல்லித்தழையை தூவி அதை இறக்கி வைத்தவள்..உருண்டை பிடித்து வைத்திருந்த சப்பாத்தி மாவை ஒவ்வொன்றாக தேய்க்க ஆரம்பித்தாள்.

வாசலில் கணவனின் ஜீப் சத்தம் கேட்டது.மணி ஒன்பதாகியிருந்தது. ‘இன்னைக்கு ரொம்பவும் லேட்..’,அவள் நினைத்துக் கொண்டிருக்க அவன் துரையை அனுப்பி விட்டு உள்ளே வரும் அரவம் கேட்டது.

“ஏன் இவ்வளவு லேட்…?”,சமையலறை நிலவில் சாய்ந்து நின்றவனை பார்த்து கேள்வியெழுப்பினாள்.

“கேஸ் விஷயமா வெளியில போக வேண்டியதா இருந்துச்சு…!சரியான வொர்க் ப்ரெஷ்ஷர்… ஸோ டயர்ட் டி…!”,மேலிரண்டு சட்டை பட்டனை கழட்டியவன் இடுப்பில் இருந்த பெல்ட்டையும் கழற்றியபடி அவளருகே வந்து இடையோடு கட்டிக் கொண்டு தோள் வளைவில் முகம் புதைத்தான்.

அவனது முகமே கூறியது..அவனது களைப்பை.

“அவ்ளோதான்..டின்னர் ரெடி பண்ணிட்டேன்…!சாப்பிட்டுட்டு தூங்கலாம்… நீங்க போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க…!”தன்னை அணைத்தவனின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தவள் வாஞ்சையுடன் கூறினாள்.

அவனோ அப்படியே அவளை கட்டிக் கொண்டே நின்றான்.

“விஷ்வா…போங்க..!”,

“பேபி…இன்னைக்கு ஸ்ட்ராங்கா எனக்கு ஒரு காபி வேணும்…! பயங்கர வொர்க் ப்ரெஷ்ஷர் டி..!”,அது அவர்களுக்கான ரகசிய மொழி.

கேட்டபடியே அவனது உதடுகள் அவளது தோள் வளைவில் புதைய அவளுக்குத்தான் ஒருமாதிரி ஆகி விட்டது.

ஏற்கனவே..காதல் இல்லாமல் தன்னுடன் கூடுகிறான் என்ற மன அழுத்தத்தில் இருந்தவளுக்கு..இன்று அவனது மன புழுக்கத்தின் வடிகாலாக தன்னை நாடுகிறான் என்பதும் சேர்ந்து கொள்ள.. ஒரு பக்கம் கோபம் பெருகினாலும் இன்னொரு புறம் அழுகையாகவும் வந்தது.

“பீ ரெடி பேபி..!இன்னைக்கு கண்டிப்பா எனக்கு வேணும்…!”,அவளது கழுத்தில் முத்தம் வைத்தவன் மாடியேறி சென்று விட..

‘வொர்க் ப்ரெஷ்ஷரை தவிர்க்க என்னை நாடறாரா…?’,அவளுக்கு ஏனோ தான் விபச்சாரம் செய்வது போல் தோன்றியது.

மனம் முழுவதும் வலியெடுக்க..கண்களோ கண்ணீரைப் பொழிந்தது.

‘இவ்வளவு நாள் நான் அவரு மேல வைத்திருந்த காதலுக்காக நான் அவருக்கு என்னைக் கொடுத்தேன்…!ஆனால்.. இன்னைக்கு அவருடைய வொர்க் ப்ரெஷ்ஷருக்கு வடிகாலா நான் என்னைத் தர மாட்டேன்…!என்ன நடந்தாலும் சரி.. இன்னைக்கு நான் அலோவ் பண்ண போறதில்லை…!’,மனதில் உறுதியான முடிவு தோன்றியது.

அவனைச் சொல்லியும் குற்றமில்லை.எந்தவொரு மனிதனுக்குமே அவனுடைய மன புழுக்கத்திற்கு வடிகால் தேவைப்படும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தேடிக் கொள்வர். பாட்டு.. புத்தகம்.. நடனம்.. நட்பு என்று ஒவ்வொருவருக்கும் அது மாறும்.

இங்கு விஸ்வேஷ்வரன் தனது உணர்வுகளுக்கு வடிகாலாக தன் மனைவியை நாடினான். அவளது நெருக்கம் அவனுக்கு ஆத்ம திருப்தியைத் தந்தது.இனம் புரியாத ஆனந்தம் அவனது ஒவ்வொரு அணுவிலும் முகிழ்த்தது.எனவேதான் அவன் அவளை நாடினான்.

இருவருக்கும் இடையில் முறையாக காதல் பரிமாறப்பட்டிருந்தால்.. அவளுக்கு இந்த விஷயம் பெரிதாகத் தெரிந்திருக்காது. ஏற்கனவே மன குழப்பத்தில் இருந்தவளுக்கு இன்று அவன் இப்படி கேட்கவும்.. காதல் இல்லாமல் காமத்தை மட்டுமே என்னிடம் எதிர்பார்க்கிறான் என்று கோபம் வந்துவிட்டது.

குளித்து உடைமாற்றி வந்தவன் மனைவியின் முக வாட்டத்தைக் கண்டு கொண்டான்.

குளித்து உடைமாற்றி வந்தவன் மனைவியின் முக வாட்டத்தைக் கண்டு கொண்டான்.

“ஆர் யூ ஓகே…?”,என்று வினாவினான்.

“ம்ம்…”தலையாட்டியவள் அவனுக்குப் பரிமாறிவிட்டு அவளும் சாப்பிட அமர்ந்தாள்.

சப்பாத்தி உள்ளே செல்ல மறுத்தது.எப்படி உள்ளே இறங்குமாம்…அவள்தான் கண்டதையும் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறாளே…?

முயன்று இரண்டு சப்பாத்தியை உள்ளே தள்ளியவள் தண்ணீரை குடித்து விட்டு மேலே அறைக்குச் சென்று விட்டாள்.

‘இவளுக்கு என்ன ஆச்சு…? கிட்சனை கூட க்ளீன் பண்ணல…’,எண்ணியவன் அவனே அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு மேலே வந்தான்.

கட்டிலில் காலை குறுக்கி படுத்திருந்தவளின் முதுகோடு அணைத்தவன் தன்னோடு சேர்த்து இறுக்கினான்.

அவ்வளவுதான்..அவள் வெடித்து விட்டாள்.

“என்னைத் தொடாதீங்க…!”,குரலை உயர்த்தி சீரியவளைக் கண்டவன் அதிர்ந்து விட்டான்.

“யாழ்வி…?”,எட்டி விளக்கை போட்டவன் அவள் முகத்தை ஆராய்ந்தான்.கண்களிலிருந்து கண்ணீர் வழிந்திருந்தது.

“போதும் விஷ்வா…! இதுக்கு மேல என்னால முடியாது…!காதல் இல்லாமல் வெறும் காமத்தோட மட்டும் இந்த பெட்ல உங்க கூட படுக்க என்னால முடியாது…!”அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“நீதான் என்னைக் காதலிக்கிறாயே யாழ்வி…?”,

“ஆமாம்… நான் உங்களைக் காதலிக்கிறேன் தான்…!ஆனால் நீங்க…?என் மனசுல இருக்கிற உங்க மேலான காதலாலதான் நான் உங்களை இவ்வளவு நாட்கள் அனுமதிச்சேன்…!ஆனால் இப்போ.. உங்க வொர்க் ப்ரெஷ்ஷருக்கு வடிகாலா என்னுடைய உடம்பை கேட்கறீங்க…என்னால எப்படி தர முடியும்…?என்னால இதை ஜீரணிக்கவே முடியல விஷ்வா…!”,அவள் கண்களில் இருந்து கண்ணீர் விடாமல் வழிந்தது.

“யாழ்வி…?”,அவனுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சி.

“என் மேல உங்களுக்கு துளிகூட காதல் இல்லை..காதல் இல்லாமல் வெறும் காமத்தோட மட்டும் நீங்க தொடர தொடுகையை.. என் மனசுல இருக்கிற காதலை முன்னிறுத்தி அதை ஏத்துக்கிட்டேன்…!ஆனால்.. உங்களுடைய மன புழுக்கத்திற்கு வடிகாலா என்னைக் கேட்கும் போது என்னால முடியல விஷ்வா…ஏதோ வி..விபச்சாரம் பண்ற மாதிரி உடம்பெல்லாம் கூசுது….”,

“போதும்.. வாயை மூடு டி…!”,கத்தியிருந்தான் அவன்.

அவனால் அவள் பேசியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ‘என்னென்ன பேசுகிறாள்..விபச்சாரம்..அது இது என்று..’தீச்சுட்டார் போல் கட்டிலை விட்டு எழுந்து கொண்டான்.

“என்ன சொன்ன.. உன் மேல எனக்கு காதலில்லையா…? நீ பார்த்தியா…என் மனசுல உன் மேல காதல் இல்லைன்னு நீ பார்த்தியா…சொல்லு டி..?’,ஆத்திரமாய் கத்தினான் அவன்.

அவ்வளவு நேரம் பேசியவள் இப்பொழுது எதுவும் பேச முடியாமல் அமைதி காத்தாள்.

“புல்ஷிட்…. அவனுக்கு ஆத்திரமாய் வந்தது.தலையைக் கோதியபடி அங்கும் இங்கும் நடந்தவனுக்கு கோபம் மட்டும் குறைய மறுத்தது.

“காதல் இல்லாம..காமத்துக்காக உன்கூட இருந்தேனா…?பச்சையா சொல்லணும்ன்னா..என் உடல் அரிப்பைத் தீர்த்துக்கறதுக்காக உன்கூட படுத்தேன்.. இதைத்தானே சொல்ல வர்ற..ஆம் ஐ ரைட்…?”அவன் பார்வை அவளைத் துளைத்தது.

அவளால் பதில் சொல்ல முடியவில்லை.அமைதியாய் தலை குனிந்தாள்.

“என்னை பாரு டி…!”,அவள் அப்பொழுதும் தலை குனிந்தே அமர்ந்திருக்க,”கமான்..புல்ஷிட்..என்னைப் பாரு டி…!”,ஆக்ரோஷமாய் அவன் சீற..அவள் தூக்கி வாரி போட அவனை நோக்கினாள்.

“இல்ல..நான் தெரியாமல்தான் கேட்கிறேன்.. இத்தனை நாட்கள் ஒண்ணா வாழ்ந்தோமே..என்னுடைய ஏதாவது ஒரு செய்கையிலாவது உன்னை காயப்படுத்தற வெறும் காமத்தை மட்டும் பார்த்தியா…?ஐ நோ..நான் ஒத்துக்கிறேன்..என் உணர்வுகளைத் தாங்க முடியாமல்தான் நான் உன்னை நாடினேன்…!ஆனால்..இந்த பெட்ல நாம இருந்ததை கொஞ்சம் யோசிச்சுப் பாரு..ஏதாவது ஒரு செய்கை..ஒரு சின்ன செய்கை காதல் இல்லாமல் வெறும் காமத்துக்காக மட்டும் நடந்துச்சுன்னு உன்னால சொல்ல முடியுமா…? சொல்லு டி…”,அவன் அதட்ட,

அவள் மனம் அவர்கள் இணைந்து வாழ்ந்த காலங்களை எண்ணியது.அவன் கூறியதைப் போல ஒவ்வொரு செய்கையையும் அவன் அவளது கண்களைப் பார்த்துதான் செய்தான். ஒரு சின்ன மறுப்பு அவளிடம் தென்பட்டாலும் அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவன் முன்னேற மாட்டான்.

அவள் வாய்விட்டு எதையுமே அவள் சொல்லியிருக்கவில்லை. அவளது கண்களை பார்த்தே அவன் அனைத்தையும் தெரிந்து கொண்டான்.

அனைத்தும் நினைவிற்கு வர அவள் தலை ‘இல்லை’ என்பதாய் ஆடியது.

“காதல்… உன் பாஷையில காதல்ன்னா என்ன..’ஐ லவ் யூ’ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக்கிறதா…?அதுதான் உன் பாஷையிலே காதல்ன்னா..ஐ லவ் யூ..ஐ லவ் யூ..ஐ லவ் யூ..நான் உன்னைக் காதலிக்கிறேன் போதுமா…?”,எந்த வார்த்தைகளை அவன் வாயிலிருந்து கேட்க வேண்டும் என்று எண்ணினாலோ அதே வார்த்தைகள் அவனிடமிருந்து.

நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள். அவன் கண்களில் தெரியும் காதல் பொய்யல்ல..வெறும் வாய் வார்த்தையல்ல..அவளுக்குப் புரிந்தது.

“அன்னைக்கு இரண்டு நாள் நீ உன் அம்மா வீட்டுக்குப் போனப்போ..உனக்காக தவிச்சேனே அந்த தவிப்பு..இதுதான் காதலான்னா..யெஸ்..நான் உன்னைக் காதலிக்கிறேன்…! பைத்தியக்காரன் மாதிரி இருக்கிற வேலையை விட்டுட்டு உன்னைப் பார்க்கணும்ன்னு உன் ஊருக்கு ஓடி வந்தேனே.. இதுதான் காதலான்னா..யெஸ்..நான் உன்னைக் காதலிக்கிறேன்…இந்த பெட்ல உன்னுடைய ஒவ்வொரு உணர்வையும் உன் கண்ணைப் பார்த்து உணர்ந்துக்கிட்டேனே..அந்த உணர்வு இதுதான் காதலான்னா..யெஸ்..நான் உன்னைக் காதலிக்கிறேன்…!எல்லாத்துக்கும் மேல நீ வேணும்னு இந்த மனசும் உடலும் ஏங்கி நின்னுச்சே..அந்த ஏக்கம் இதுதான்  காதலான்னா.. யெஸ்.. நான் உன்னைக் காதலிக்கிறேன்… காது குளிர கேட்டுக்கோ..நான் உன்னைக் காதலிக்கிறேன்…!”,

சற்று முன் வேதனையில் வந்த கண்ணீர் அவளுக்கு இப்பொழுது ஆனந்தத்தில் வந்தது. தன்னவனும் தன்னைக் காதலித்திருக்கிறான்.. காதலோடுதான் தன்னுடன் கலந்திருக்கிறான் என்பது அவளது மகிழ்ச்சியைத் தந்தது.

“என்னுடைய கண்களும். செய்கையும் உணர்த்தாத காதலையா..நான் சொல்ற அந்த மூணு வார்த்தை உணர்த்திட போகுது…? அன்னைக்கு என்கூட சேர முடியாமல் நீ தவிச்ச தவிப்பை உன் கண்கள்ல பார்த்துட்டு. உனக்கான அவகாசம் கொடுத்து விலகிப் போனேனே டி.மனசுல காதல் இல்லாமலா உன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நான் விலகி இருந்திருப்பேன். ? இதையெல்லாம் நீ யோசிக்கவே மாட்டியா…?” இப்பொழுது அவனிடம் கோபத்தையும் மீறி வலிதான் இருந்தது.

“விஷ்வா..”,

“அப்புறம் என்ன சொன்ன.. வொர்க் ப்ரெஷ்ஷர்ல உன்னை நாடறேனா…?ஆமாம்..என்னுடைய மன புழுக்கத்துக்கு வடிகாலா நான் உன்னை நாடினேன் தான்…!இப்போ அதுல என்ன தப்பு இருக்குதுன்னு நீ இப்படி குதிக்கற…என் பொண்டாட்டிக்கிட்ட தானே கேட்டேன்…எங்கேயோ வெளியில போன மாதிரி மாய்ஞ்சு மாய்ஞ்சு அழற…?”,அவன் செயலுக்கு அவன் நியாயம் கற்பிக்க

“ஓ..வெளியில வேற போவீங்களோ…?”,முறைத்தாள் அவள்.

அந்த நிலையிலும் பொறாமை கொண்டு அவள் முறைத்தது அவனை சற்று சாந்தமாக்கியது.

“பின்ன.. நீ கொடுக்கலைன்னா வெளியிலதான் போவேன்…”உதட்டை மீறிப் பொங்கிய சிரிப்பை கட்டுப்படுத்தியபடி அவன் கூற,

“போய்டுவீங்களோ..என்னை மீறி போய் பாருங்க…!காலை உடைச்சிடுவேன்…”,கண்களில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்தவள் மூக்கை உறிஞ்சியபடி அவனிடம் சண்டைக்குப் போனாள்.

“போடி..ரொம்பவும்தான்…!என்மேல சந்தேகப்பட்டு கேவலமா பேசியவள்தானே நீ…”அவன் முறுக்கி கொண்டான்.

“ஸாரி விஷ்வா…!”, இரு காதுகளையும் பிடித்து அவள் மன்னிப்பு வேண்ட,

“ஒண்ணும் வேண்டாம் போ…!நான் பழையபடி என்னுடைய ரூமுக்கே போறேன்…!”தலையணையை எடுத்துக் கொண்டு வெளியே செல்லப் போனவனின் கைபிடித்து தடுத்தவள் தன்னை நோக்கி இழுத்தாள்.

“மேல கை வைச்ச..மரியாதை கெட்டுடும்…!”,மிரட்டியவனை இழுத்து கட்டிலில் சாய்த்தவள் அவன் மேலேறி அமர்ந்து கொண்டாள்.

“ஸாரி மச்சா…”அவனை நோக்கி குனிந்தவள் விழிகளை சுருக்கி மன்னிப்பு வேண்ட,

“என்ன..மச்சானா…?”,

“ம்..உங்க ரொம்ப நாள் ஆசைதானே இது…அதுதான் நிறைவேத்திட்டேன்…!”, கண்களை சிமிட்டினாள் அவள்.

“எனக்கு ஒண்ணும் வேண்டாம்..போடி…!”,அவளைத் தள்ளி விட முயன்றான் அவன்.

“வேண்டாமா…? நல்லா யோசிச்சு சொல்லுங்க வேண்டாமா…?”,கேட்டவள் அவனது காதோரம் குனிந்து எதையோ முணுமுணுக்க.. அவன் எச்சில் விழுங்கிக் கொண்டான்.

“நல்லா யோசிச்சுக்கோங்க மச்சா..நீங்க ரொம்ப நாளா என்கிட்டே கேட்டது…”,ஆசை வார்த்தை கூறி அவனை மயக்க பார்த்தாள் அவள்.

“வேண்டாம்..போடி…!”, இப்பொழுது அவன் குரல் நலிந்துதான் ஒலித்தது. பார்வையோ குனிந்து அமர்ந்திருந்தவளின் மேல் கண்டபடி பாய..அவனது தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

“வேண்டாம்…?”,கேட்டுக் கொண்டே நெருங்கியவள் அவனது இதழ்களை கவ்விக் கொண்டாள்.

அவனது மறுப்பு எல்லாம் எங்கே சென்று ஒளிந்து கொண்டது என்றுதான் தெரியவில்லை.

அதுநாள் வரை..அவன் நடத்திய பாடத்தை அன்று அவள் ஆசிரியையாய் மாறி அவள் நடத்த ஆரம்பிக்க.. அந்த மாணவனுக்கு கேட்கவும் வேண்டுமா…?

சீண்டி..தீண்டி அவள் எழுப்பி விட்ட உணர்வுகள் அவனை வேறொரு இன்ப உலகத்திற்குள் அழைத்துச் சென்றன. எப்பொழுதும் அவன்தான் அவளை படுத்தி எடுப்பான்.இன்றோ.. மன்னிப்பை வேண்டுகிறேன் என்று இவள் வாரி வாரி வழங்கி அவனை சுகமாய் படுத்தி எடுத்தி விட்டாள்.

மூச்சு வாங்க தன்னருகே சாய்ந்தவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் அவளது கணவன்.

“இதுக்காகவே நீ நிறைய தப்பு செய்யணும் பேபி…!”,போதையுடன் கூறியவனின் குரலில் அப்பட்டமாய் கிறக்கம் வழிந்தோடியது.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page