அர்ஜூன்: “அப்பறம்” ??
அபி: “அப்பறம் நீங்க தான் சொல்லணும்”.
அர்ஜூன்: “நானா ?? நிறைய சொல்லணும் தா.ஆனா எப்படி ஆரம்பிக்குறதுன்னு தா தெரியலை”.
அபி:” நான் சொன்ன மாதிரியே சொல்லுங்க”..
உங்களுக்கு என்ன பிடிக்கும் சாப்பிட
அர்ஜூன்:” நான் வைஞ் எல்லாமே ரொம்ப பிடிக்கும் 3 வேளையும் கிடைச்சாலும் சாப்பிடுவேன்”.
அபி: ஓ.”அப்பறம் வேற என்ன பிடிக்கும்”.
அர்ஜூன் : “கிரிக்கெட் விளையாடுவேன் நல்லா செஸ்வா நான் சேம்பியன்”,
அபி :” சூப்பர்ங்க”..
அர்ஜூன் : ம்ம்..” அப்பறம் எனக்கு எல்லாம் க்ளீன்னா இருந்தா தா பிடிக்கும்”.
அபி : “ம்ம்”..
அர்ஜூன்: “கலர்ல ப்ளாக் பிடிக்கும்”.
அபி : “எனக்கு சுத்தமா பிடிக்காது”.
அர்ஜூன் : ஏங்க?? “எல்லாருக்கும் பிடிக்கும். நீங்க போட்டா செமயா இருக்கும்”.
அபி: “அடப்போங்க. இதுலா ஒரு கலர்ரா.. எனக்கு பிடிக்காது. இப்போவே சொல்லிட்டேன் நமக்கு கல்யாணம் ஆனா அப்பறம் எப்பயும் எனக்கு ப்ளாக் கலர்ல எதுவும் வாங்கி தரக்கூடாது”.
அர்ஜூன் : “சேரி ஓகே..வாங்கி தரமாட்டேன்.. நானும் இனி யூஸ் பண்ணாலை ஓகே வா”.
அபி இல்ல. “உங்களுக்கு பிடிச்சாதுலா எனக்காக மாத்திக்கா வேண்டா”.
அர்ஜூன் : “பரவால்ல..அது ஒன்னும் அவ்வளவு பிடிக்கும்ன்னுலா இல்ல. அம்மா கூட சொல்லுவாங்க.. இப்ப உனக்கும் பிடிக்கலை. சோ இனி நோ ப்ளாக்”.
அபி சிரிஞ்சுட்டே தேங்க்ஸ் சொல்றா..
அர்ஜூன் : “நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ்.. அப்பறம்”.
அபி: “உங்களுக்கு பொண்ணுங்களா ப்ரண்ஸ் இருக்காங்களா” ??
அர்ஜூன் ஒரு நிமிஷம் முகம் வாடிப்போச்சு…” இருந்தாலும் நார்மலா பதில் சொல்றான்”.
“ம்ம் இருக்காங்க.. நான் காலேஜ் படிக்கும் போது”..
“இப்போ கூட பேசுவோம்.. அப்போ அப்போ”.
அபி : “ம்ம்”..
“எனக்கு தா ஒரு பாய் ப்ரண்ஸ் கூட இல்ல…ப்ச்”…
“அர்ஜூன் சிரிச்சுட்டு அப்படியா?? ஏன் இல்ல”.. “கண்டிப்பா உனக்கு நிறைய ப்ரண்ஸ் இருக்கணும் மே.அதோட எப்படியும் தினமும் யாராவது லவ் லெட்டர் கொண்டு வந்து நீட்டி இருப்பாங்களே”..
அபி:” ஹா. நினைப்பு தான். அப்படிலா எதும் இல்ல. நான் படிச்சாது எல்லாம் கேள்ஸ் காலேஜ் அப்பறம் ஸ்கூலும் அப்படி தா..பஸ் வீட்டுக்கு கிட்டயே வரும்.சோ நோ பாய் ப்ரண்ஸ்”.
அர்ஜூன்: “ரொம்ப சந்தோஷம்”..
அபி : “எதுக்கு”??
அர்ஜூன் : “இதே நீ கோ எஜூகேசன்னா இருந்து இருந்தா கண்டிப்பா யாராவது ப்ரோப்போஸ் பண்ணி இருப்பாங்க. எனக்கு நீ கிடைச்சு இருக்க மாட்டா”..
அபி முகம் வெட்கத்துல சிவக்குது.
அர்ஜூன் : “அச்சோ..வெட்கப்படுறீயா.. ரொம்ப அழகா இருக்க இப்போ”.
அபி : “சும்மா கிண்டல் பண்ணாதீங்கன்னு அவன் கையில மெல்ல தட்டுறா”..
அர்ஜூன் அப்போ அவ கையைப் பிடிக்குறான்.
அபி அவனையே என்னன்னு பாக்குறா..
அர்ஜூன் :” எனக்கு ஒரு பாஸ்ட் இருக்கு.. அத பத்தி உன்கிட்ட சொல்லணும்”.
அபி: “லவ்வா”??
அர்ஜூன் : “கிட்டதட்ட அப்படி தா.. அது பத்தி உனக்கு தெரியாணும்..இதனால்லா பின்னாடி நமக்குள்ள பிரச்சினை வரக்கூடாது”.
அபி : “கஷ்டமான எதுவும் இப்போ நீங்க சொல்லவும் வேண்டா..அதை பத்தி நினைக்கவும் வேண்டா.. நான் உங்க பாஸ்ட் இல்ல ப்ரசன்ட்..அண்ட் ப்யூசர் சோ உங்க பாஸ்ட் எப்படி இருந்தாலும் மறந்துடுங்க.. நமக்குள்ள அது பத்தி சண்டை வேண்டா”..
அரஜூன் : “அது இல்ல அபி. ஒரு நிமிஷம் கேளு”.
அபி ஃப்ளீஸ்ங்க.. “பாஸ்ட் பத்தி இப்போ ஓகே ன்னு போனாலும்.. பின்னாடி அது பத்தி என் மைய்டுல எதுவும் தோணாமா இருக்கணும். சோ எனக்கு அது பத்தி தெரிய வேண்டா”..
அர்ஜூன் : “இது சொல்லலாமா பின்னாடி பிரச்சினை வந்தா”..
அபி:” வராது.. ஓகே வா.ன்னு அவன் கை மேல இவ கையை வைச்சு தட்டி கொடுக்குறா”..
அர்ஜூன் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுறான்.
அபி: ம்ம்… “போலாமா” ??
அர்ஜூன் : “ம்ம் போலாம். இன்னைக்கு நைட்டு கிளம்பாறேன்”.
அபி:” சரிங்க.. பாத்து போய்ட்டு வாங்க”.
அர்ஜூன்:” அபி”..
அபி: “சொல்லுங்க”..
அர்ஜூன் : “இந்த ங்க லா வேண்டா.. அர்ஜூன்னு பேரு சொல்லியே கூப்பிடு”.
அபி, ம்ம்.. “ஓகே அர்ஜூன்”.
அர்ஜூன் : ஹே.. டக்குன்னு சொல்லிட்ட
அபி : நான் அப்படி தான்.. ரொம்பவே பாஸ்ட்
அர்ஜூன் : நல்லது தா…
அபி : “அர்ஜூன்!! என் மனசுல இருக்றதை உன்கிட்ட சொல்லட்டுமா ?? நீ ஓகே சொல்வியா”??..
அர்ஜூன் : “ஏய் !! பர்மிஷன் கேட்டுட்டு தா சொல்லுவீயா..எதுனாலும் சொல்லு”.
அபி: “நான் எம்.பி.ஏ படிக்கணும்”..
அர்ஜூன் : “அதுக்கு என்ன ?? பெங்களூர்ல எவ்வளோ காலேஜ் இருக்கு..படி..யாரு வேண்டாம்னு சொன்னா”??
அபி தேங்க்ஸ்.”ஆனா நா இங்கயே எங்க அம்மா வீட்டுல இருந்து படிக்கவா”??
அர்ஜூன் : “அதுக்கு அவன்கிட்ட எந்த பதிலும் இல்லை.. அப்படியே சைலண்ட்டா அபியையே பாத்துட்டு இருக்கான்”.
அபி : “என்ன ஆச்சு”..
அர்ஜூன் : ம்ம்.. “அப்பறம் ?? வேற இன்னும் என்ன”??
அபி :” அப்பறம் நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணணும்னு ஆசைப்பட்டேன்”.
அர்ஜூன் : ம்ம்..
அபி : “நாமா கல்யாணம் ஆனா அப்பறம்”..
அர்ஜூன்: “அப்பறம்”??
அபி : “அது வந்து”…
அர்ஜூன்:” எதுனாலும் சொல்லு”..
அபி : “நான் படிச்சு முடிக்குற வரைக்கும் நமக்குள்ள..எதுவும்…ன்னு இழுக்குறா”…
தொடரும்…
