என்னை என்ன நினைப்பான்

இவ்வளவு நேரமும் காதலும் காமமும் சேர்ந்து விளையாடி தவித்து போய் ரெஸ்ட் எடுக்குற நேரத்துல அவள் மண்டை குள்ள வந்தது சில விஷயங்கள்…

நான் பண்ணது எவ்வளவு பெரிய தப்பு?… ஒரு பையன் கிட்ட போய் நானே வெட்கமே இல்லாம எந்த உணர்ச்சியும் இல்லாமல் சீ… கேவலமா இருக்கு.

எனக்கு அவமானமா இருக்கு. நான் இப்படி பண்ணி இருக்க கூடாது இப்படி அவள் மனது ஒரு பக்கம் யோசித்தபடி கலங்கிக் கொண்டிருக்க ஆனால்,

சின்ன வயசுல இருந்து ரொம்ப கஷ்டப்பட்ட விக்ரம், முதல் முறையாக ஒரு பரிசத்தை உணர்ந்திருக்கிறான். தன் தாயிடம் கிடைக்காத அரவணைப்பு தன் தாரமும் தன் உலகமும் இருக்கிற ஒரு பொண்ணு கிட்ட இருந்து இன்னைக்கு அவனுக்கு முழுமையாக கிடைச்சிருக்கு ஒரு தாயின் அன்பும் ஒரு தாரத்தின் தவிப்பு நீக்கிய அந்த ஒரு உணர்வும்…

நான் நிம்மதியா இருக்கேன். எதையோ இழந்த எனக்கு இப்போ எல்லாமே கிடைச்ச மாதிரி இருக்கு

அவள் என் பக்கத்துல என்னோட என்கூட இருக்க போறவளா என்னவளா அமைதியா படுத்து இருக்கா,

அவளோட நிம்மதி எனக்கு ரொம்ப முக்கியம். என்னோட வாழ்க்கையில இனிமேல் நான் என்று போய் நாங்களாக மாற போறோம்,

அவளுக்கு என்ன வேணுமோ இந்த உலகத்துல எங்க இருந்தாலும் சரி அதை கொண்டு வந்து அவ கண்ணு முன்னாடி நிப்பாட்டுற அளவுக்கு என்ன அவளை அந்த அளவுக்கு காதலிப்பேன்.

இத்தனை வருஷம் மனசு துன்பத்திலே வாழ்ந்த அந்த பொண்ணுடைய எண்ணத்துல என் கணவன் போல என் காதலன் போல இந்த உலகத்துல யாருமே இல்லன்னு சொல்ல வைப்பேன்.

இப்படியெல்லாம் ஆழ்ந்து சிந்தித்தபடி அவன் நிம்மதியாக தூங்கிட்டு இருக்கான் ஆனா அது புரியாத சொல்லப்போனால் தாழ்வு மனப்பான்மையில் இருக்கிற அவள் பயத்தோடு உச்சியில் இருக்கா,

காலையில அவன் எப்படி என்னோட முகத்துல முழிப்பான். அப்படி ஒரு நிலைமையை நான் கொடுத்திருக்கக் கூடாது.

ஒரு ஆண்மகன் இந்த மாதிரி நடந்துரும்னு விலகிப் போய் ஆனா ஒரு பொண்ணா நான் இப்படி எல்லாம் பண்ணது எவ்வளவு கீழ்த்தனமான ஒரு விஷயம்.

நினைச்சு பார்க்கவே ரொம்ப அருவருப்பா இருக்கு இந்த உலகத்துல எல்லாருக்கும் என்னென்னவோ நடக்குது ஆனா என்னோட வாழ்க்கையில மட்டும் ஏன் இப்படி சங்கடத்துக்குள்ள இறுக்கமா சிறைப்படுத்தின மாதிரியே போயிட்டு இருக்கு.

நான் அவரை ரொம்ப கம்பல் பண்ணி இந்த விஷயத்தை செய்ய சொன்ன மாதிரி இருக்கு. ஐயோ ஐயோ…..

என்று அவளுக்கு கண்ணீர் பயங்கரமாக வந்துட்டு இருக்கு.

ஒருவேளை நான் நினைக்கிறது எல்லாம் தப்பா,

அவர் என்னைப் பற்றி அப்படி நினைக்காமல் கூட இருந்திருக்கலாம் என உண்மையிலேயே காதலிச்சு இருக்கலாம். அவரோட கண்ல நான் அதை பார்த்தேன்..

ஆனா அப்படிப்பட்ட மனுஷன் கிட்ட எதுக்கு எனக்கு தாழ்வு மனப்பான்மையாய் இருக்கு?…

ஒருவேளை அவருடைய காசு பணம் அந்த மாதிரியா?… இல்ல அவர விட நான் அழகு ரொம்ப கம்மியா இருக்கேன்னு எனக்கு தோணுதா,

விக்ரம் போல ஒரு நல்ல பையனுக்கு என்ன மாதிரி ஒரு டொக்கு விழுந்த பொண்ணு கிடைக்கக்கூடாது.

அவருடைய தகுதி எங்க என்னுடைய தகுதி என்ன?..

எதுக்குமே ஆகாத குடும்பத்தால துரத்தப்பட்ட ஒரு பொண்ணு. அவருக்கு என் மேல அளவுக்கு அதிகமான இரக்கம்.

அதுக்காக எல்லாம் அவர் என்னை ஏத்துக்கிட்டு வாழனும்னு எந்த அவசியமும் இல்லை. அவருக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை இருக்கு.

ஆனா இன்னொரு பக்கம் மனசு அவனை விட்டு போகக்கூடாது என்ற முழு எண்ணத்தோடு இருக்கு ஒருவேளை நான்தான் பைத்தியக்காரத்தனமாக இந்த மாதிரி யோசிச்சிட்டு இருக்கேன்.

ஒருவேளை அப்படி இல்லாம நான் ஓவர் திங்கிங் பண்ணி பண்ணி இந்த மாதிரி எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன் என்று நினைக்கிறேன் அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு அது எனக்கு நல்லா தெரியும் என்னால விக்ரமம் விட்டு போக முடியாது விக்ரமும் நான் இல்லாம சந்தோஷமா இருக்க மாட்டாரு.

அப்படி இரக்கம் என்றாலும் கூட அவர் எப்படி என்கிட்ட உரிமை எடுத்துப் பேசுவார்?… அதுல இருந்தே தெரிய வேணாமா அது ஒன்னும் இரக்க குணம் கிடையாது என் மேல இருக்கிற அன்பு காதல்..

எனக்கு தெரியாது இன்னைக்கு நடந்த எல்லாமே எங்களுக்குள்ள இருக்கிற ஒரு அண்டர்ஸ்டாண்ட் மூலமாகத்தான் நடந்திருக்கு.

இப்படி அவள் யோசித்துக் கொண்டே அவளுக்கு இருக்கிற சந்தேகத்தை அதே நேரத்தில் இருக்கிற பயத்தையும் போக்குவதற்கு வழி தெரியாம விக்ரம்… விக்ரம்,

நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமா?… இப்படி ஒரு கேள்வியை அவள் கேட்டதுமே அவனும் mmm…

என்று சொன்னான். உங்களுக்கு என் மேல உண்மையிலேயே காதல் இருக்கா?…

இல்ல, நான் கேட்டேன் என்றதுக்காக இந்த விஷயம் நடந்துச்சா நான் நினைக்கிறேன் நான் கேட்டேன் என்றதுக்காகத்தான் இப்படி நீங்க என் கூட நடந்து கொண்டீர்கள் என்று அது சரியா?…

நான் நினைக்கிறது ஒன்னும் தப்பு இல்லையோ?..

இப்படி கேட்கும்போது அவன் வாயிலிருந்து mmm… என்ற  முணங்கள் சத்தம் மட்டுமே கேட்டது.

அவன் ஆம் என்று சொன்னதுமே அவளுக்கு பயம் ஏற்பட்டது அவன் தூக்கத்துல புலம்புகிறான் என்றெல்லாம் அவளுக்கு தெரியல அவளைப் பொறுத்த வரைக்கும் தான் கேட்ட கேள்விக்கு ஒரு பதில் கிடைச்சிருக்கு.

இப்படி சொன்னதுமே அவளுக்கு கை காலெல்லாம் நடுநடுங்கி போய்விட்டது தான் பண்ண தப்பு எவ்வளவு பெருசு…

வேணாம் நான் இந்த வீட்ல இருக்க வேண்டாம். இவர் எழுந்து இருக்கிறதுக்கு முன்னாடி நான் சீக்கிரமா இங்க இருந்து போகணும்.

  இப்படி மட்டுமே அவளுடைய மனசு சொல்லிக்கிட்டே இருக்கு அவள் அந்த சந்தேகத்தை துரத்தி அடிக்கணும்னு நினைச்சா ஆனா அந்த சந்தேகம் முழுசா அவள் மனசை ஆட்கொண்டது.

அதுக்கு முக்கியமான காரணம் சின்ன வயசுல இருந்து அவளுக்கு எக்கச்சக்கமான ஏமாற்றங்களும் அளவுக்கு அதிகமான மன வலியும் மட்டுமே நிறைந்த ஒரு வாழ்க்கை இருந்தது தான்.

அம்மா தங்கச்சின்னு பெண்கள் இருக்கிற வீட்டிலேயே அங்கு இருக்கிற இன்னொரு பொண்ண புரிஞ்சுக்க முடியல என்றால் பின்ன அந்த பெண்ணுடைய மனசு எப்படி இருக்கும்.

இப்படியே பல யோசனைகளோடு அவன் அருகிலேயே படுத்திருக்கிறாள்.

ஆனா ரொம்ப அமைதியா இருக்கு அந்த வீடு முழுவதும்… வெளியில மழை இல்லை காற்று இல்லை எந்த ஒரு சத்தமும் இல்லாததுனால அது ரொம்ப நிசப்தமான ஒரு சூழலை உருவாக்குச்சு.

அந்த சூழலை அவளுக்கு எதிரி போல இருந்தது அந்த அமைதி அவளால் தாங்கிக்க முடியல,

இந்த அமைதியை எனக்கு வேண்டாம் என்ற அளவுக்கு அவள் மனசுக்குள்ள ஒரு மிகப்பெரிய போராட்டம் கலவரம் நடந்துகிட்டு இருக்கு.

ஆனா அங்க நிம்மதியா தூங்கிட்டு இருக்கிறவனுக்கு தான் தெரியும் அவன் மனசுக்குள்ள இப்போ இருந்த கலவரங்கள் எல்லாம் அடங்கி அவன் எப்படி நிம்மதியாய் இருக்கிறான் என்று…

அது தெரியாது இந்த முட்டாள் ஒரு பக்கம் மனசு போட்டு குழப்பிக்கிட்டு இருக்கா,

அவன் தூரத்தில் இருந்து பார்த்து ரசித்த ஒரு பொண்ணு,

இப்போ அவள் முழுசா அவன காதலிச்சு இப்ப அவனோட இருக்கிறாள் அவனுக்காக எந்த அளவுக்கு போற அளவுக்கு அவளோட மனசுக்குள்ள ரொம்ப ஆழமாக அவன் இடம் போட்டு தங்கி இருக்கான்.

அவளுக்காகவே… இங்கே எல்லாத்தையும் மாற்றியவன் இப்போ அவள் கூட இருக்கும்போது அதை வாய் விட்டு சொல்ல முடியல ஆனா அவளாக ஒரு நாள் புரிந்துபா அப்படின்னு ரொம்ப சந்தோஷமாக அவளை தன்னோட நெஞ்சில சாய்த்து கொண்டு படுத்திருக்கிறான்.

ஒரு மெல்லிய ஒரு அமைதியான சூழல்..

ஒரு ஆணுக்கு ஒரு பொண்ணு மேல அவ்வளவு சாதாரணமா எல்லா விதமான பீலிங்க்ஸும் வந்துராது.

அப்படி முழுசா வந்துருச்சுன்னா அந்த பொண்ணுக்கு அவன் என்ன வேணாலும் பண்ணுவான்.

ஆனா இவன் எதுவுமே பண்ணல, அவ கூட மட்டும் நின்றான்.

அது மட்டும் தான் அவளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்துச்சு. அவளுக்கு தெரியாம எத்தனையோ நாட்கள் ஃபாலோ பண்ணி இருக்கான் ஆனாலும் இப்போ அவ கூடவே இருக்கிறது ஏதோ ஒரு சொர்க்கத்தில் இருக்கிற மாதிரி அவன் மிதந்துட்டு இருக்கான்.

அவன் மனசு எப்போ ஒரு மேகம் போல லேசா மாறிடுச்சு.

ஆனா இங்க அவளுக்கு அப்படி இல்லையே… இந்த கலவர காரி மனசுக்குள்ள எண்ணம் அப்படி கரை புரண்டு ஓடிக்கிட்டு இருக்கு.

அதுவும் நல்ல முறையா?..

இல்ல…. நாளைக்கு காலையில அவருடைய முகத்தை நான் எப்படி பார்ப்பேன் அவரும் என்னுடைய முகத்தை எப்படி பார்ப்பாரு இந்த சங்கடத்தை நான் கொடுத்துட்டேனே… நான் விக்ரம் முன்னாடி ஒரு விலைமாது மாதிரி தானே இருக்கிறேன்.

நான் கெட்டுப் போனது மட்டும் இல்லாம அவர் மனசையும் இப்போ சலன பட வச்சிட்டேனே…

அடைக்கலம் கொடுத்தவர் கிட்ட, நான் அளவுக்கு அதிகமாக அதிகாரம் எடுத்துக்கிட்டேனோ?…

அவளுக்கு திடீர்னு ஒரு எண்ணம்.இங்கிருந்து போயிடலாமா?…

இல்ல… இப்போ வேணாம்.

அந்த எண்ணம் வந்ததும், அவள் மெதுவா அவன் கைகளிலிருந்து விலக முயற்சி பண்ணினா.அதுக்குள்ள அவன் கண் திடீர்னுகண்ணு முழிச்சு பார்த்தான். 

அவன் நிம்மதியா தூங்கி ஒரு தூக்கம் முழுவதும் முடிச்சிட்டான் ஆனா அவள் இப்போ வரைக்கும் தூங்காம கொட்ட கொட்ட முழிச்சி இருப்பதை பார்த்ததும், என்ன செல்லம் தூங்கலையா ?.. இப்படி கேட்டுக்கிட்டே 

அவளை அள்ளி அணைத்து அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.

அவன் கொடுத்த அந்த முத்தம் ஒன்றும் கட்டாயத்தினால் வரவே இல்லைன்னு அவளுக்கு புரியுது ஆனாலும் அந்த பேதையோட மனசு அதை ஏத்துக்கவே மாட்டேங்குது …

அவளை தன் கைகளுக்குள் மறுபடியும் இழுத்து விலகி இருந்தவளை மறுபடியும் தன்னுடைய மார்பில் அணைத்தபடியே மறுபடியும் அவளுடைய உச்சந்தலையில் முத்தமிட்டு ஒரு பெருமூச்சு விட்டான் அது சாதாரண பெருமூச்சு இல்ல அது ஒரு நிம்மதி பெருமூச்சு .

அந்த முத்தத்தில் அவனுடைய பெருமூச்சு ஆழ்ந்த சத்தமாக அவளுடைய காதுகளுக்கு கேட்டது ஆனால் மனதுக்கு கேட்கவில்லை அவன் நிம்மதியாக இருக்கிறான் என்று… ஆனா அவளைப் பொறுத்தவரைக்குமே இப்போ அந்த களங்கப்பட்ட மனச தெரிய வைக்க முடியவில்லை.

. யோசிச்சுகிட்டே படுத்திருக்கா… அவனுடைய இரண்டு கைகளுக்குள்ள அவ்வளவு ஆசையாக அள்ளி எடுத்து அவளை ஒரு குழந்தை மாதிரி படுக்க வச்சிருந்தாலும் கூட அந்த மரமண்டைக்கு புரியல, அவன் உண்மையிலேயே காதலிச்சு அவள் மேல பித்து பிடித்திருக்கிறான் என்று…

இனி என்ன நடக்குதுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page