நலம் தானா ஊதாப் பூவே!! -5

“கண்களால் களவாடி கைகளால் உறவாடி மகிழ நினைக்க வில்லை. தூரத்தில் இருந்து உன்னை பார்க்க மட்டும் செய்தாலே போதும் “

…. ஊதாப் பூவின் இதழ்களில் ஒன்று…

பாகம் -5

இன்று அதிக வேலை, வீட்டிற்கு போக வேண்டிய பஸ் 7 மணிக்கு அதை விட்டு விட்டாள் 8 மணி வரை காத்திருக்க வேண்டுமே என்ற அவசரத்தில் வேகமாக லிப்ட் ஏறியவள் கூடவே இன்னொருத்தர் ஏறியதை சரியாக கவனிக்கவில்லை, கிரௌண்ட் புளோர் பட்டனை அழுத்தி விட்டு வாட்சைப் பார்த்தவள், “10 நிமிஷம் முன்னாடி கிளம்பி இருக்கலாம், லேட் ஆகிட்டா இப்போ  என்ன பண்றது ” தனக்குத் தானே புலம்ப

“கிளம்ப வேண்டியதான எதுக்கு லேட்டா கிளம்புனா ” அதிகாரத்தோடு ஒலித்த குரலில் திரும்பிப் பார்த்தாள்.

தன்னை விட அதிக உயரத்தில் வெள்ளை சட்டையில் மயக்கும் கண்களை இவனுக்கு மட்டும் கடவுள் படைத்து விட்டார் போலும், அவன் பார்வையில், அதுவும் லிப்ட்டில்  கொஞ்சம் அருகில் தான் நின்றிருந்தான்.

இவர் இருக்குறது தெரியாம நான் வேற கொஞ்சம் சத்தமா பேசிட்டேனே மாட்டிக்கொண்ட ஆட்டுக்குட்டி போல் முழிப்பதைப் பார்த்தவனுக்கு சிரிப்பு வருவது போல் இருக்க சிரிக்காமல் இருக்க முடியவில்லை  தான் இருந்தும் வர்மா சிரிப்பை வந்த வேகத்தில் அடக்கி, பதில் சொல்லு என்பதாய் பார்க்க,

“வேலை இருந்தது சார் “

“ஓ ” வேறு எதுவும் பேசவில்லை. அவளுக்குத் தான் அவன் பக்கத்தில் நிற்பது ஹெட் மாஸ்டர் முன் நிற்கும் மாணவி போல் இருந்தது. காலையில் வெளியே அழைத்து சென்றது, அவன் பேசிய விதம், அதன் பிறகு அவன் வேலையில் மட்டுமே இருந்தான். இப்பொழுது எதிர்பாராமல் லிஃப்டில்  இருப்பது அவளுக்கு வியர்த்து போனது, இயல்பாக இருக்க முடியவில்லை. அவன் இவளை ஒரு முறை பார்த்ததோடு சரி, அதன் பின் பார்க்கவே இல்லை.

லிப்ட் தரைத்தளம் வந்து விட அவன் வெளியே சென்ற பின் ஆரண்யாவும் வெளியே வந்தவள் பேருந்து நிறுத்துமிடத்திற்கு வர மணி 7.05 ஆகி விட்டது. தலையில் கை வைத்து நின்று விட்டாள். “பஸ் போயிடுச்சு” அவளின் மென்னிதழ்கள் பேசியதை தனது காரின் கண்ணாடி வழியே பார்த்தவன் சென்று விட்டான்.

மழை வரும் மேகம் மை பூசிய இருளால் சூழ்ந்திருக்க, இப்பவோ, அப்பவோ மழைத்துளி மண்ணைத் தொட தயாராகிக் கொண்டிருந்தது போல் இருந்தது. குளிர் காற்று முகத்தில் வந்து மோத, நெற்றியில் சரிந்த முடியினை வெண் பஞ்சு விரல்களால் காதோரம் நகர்த்தி, கெண்டை மீன் விழிகளால் பாதையை உயர்த்திப் பார்த்தவள் தனது கைபேசியில் தெரிந்த ஆட்டோ ஓட்டுநருக்கு அழைத்து பார்க்க அவர் எடுக்கவில்லை.

கடுப்பாகிய காரிகை, பொறுத்தது போதும் என்று நடக்கத் தொடங்க, யாரோ தன் பின்னால் வருவது போல் தோன்ற, நடந்து கொண்டிருந்தவள், தன் நடையை நிறுத்தி திரும்பிப் பார்க்க அங்கு யாரும் இல்லை.

இன்னும் சிறிது தூரம் நடந்தவளுக்கு யாரோ பின்னால் நடந்து வரும் சத்தம் கேட்கத் தொடங்க மனதில் பயம் தொற்றிக் கொண்டது. வேகமாக நடக்கத் தொடங்க, அவள் புடவை அவளை வேகமாய் நடக்க விடாமல் தடையாய் இருந்தது.

வேலைக்கு சேர்ந்த பிறகு தான் புடவை தினமும் கட்டுகிறாள்.  நீண்ட தூரம் நடந்து வந்து பழகியதில்லை. நடந்து வரும் அதிகமாய் நெருக்கத்தில் கேட்கவும் பின்னே பார்த்துக் கொண்டே முன்னே இருந்த  கல்லைக் கவனிக்காமல் காலை வைத்து விட லேசாக தூரலும் ஆரம்பித்து மழைத்துளி அவள் காலில் பட்டு வழுக்கி விட காற்றில் கைகளை துழாவியவள் கைக்கு இரும்பு போன்ற உறுதியான ஒன்று தட்டுப்பட அதன் மேல் துணியும் தெரிய கையை அழுத்திப் பிடிக்க முயன்றும் முடியாமல் நழுவி விழச் சென்றவள்  காற்றால் இழுத்து வீசப்பட்டது போன்று கடினமான ஒன்றில் சாய, அடிபட்டு விடுமோ என்ற அச்சத்தில் முகத்தில் கை வைத்து தடுத்தவள் நின்ற பிறகு பயத்தில் மூச்சு வாங்க, நெஞ்சுக் கூடு ஏறி இறங்க, தலையை குலுக்கிப் பார்த்தவள் அதிர்ந்து பின்னே செல்ல முயன்றாள் ஆனால் முடியவில்லை.

வலியவனின் கரத்தில் சிக்குண்டு கிடந்த அவளின் சிற்றிடை அவளை பரிதாபமாக பார்த்தது. முன்னே அவளைப் பார்த்திருந்தவன் அசராத குரலில் “ஆர் யூ ஓகே” அவளுக்கு தான் விஜய் சேதுபதி நயன்தார விடம் “ஆர் யூ ஓகே பேபி” என்று கேட்பது போல் ஒலித்தது. “ஆங்” விழி உயர்த்திய பாவையின் பார்வையை அதே நிலையில் எதிர்கொண்டவன்

“பயமா இருந்தா சொல்லி இருக்கலாமே, வா” அவள் இப்பொழுது இயல்பாய் இல்லை என்பது புரிந்தது அவனுக்கு,

கை பிடித்து கார் அருகே அழைத்து வந்தவன் ஆரண்யாவை அமர சொல்லி விட்டு மறுப் பக்கம் அமர்ந்தான். இருவருமே நனைந்து தான் இருந்தனர். நடுக்கத்தில் இருந்த அவள் கைகளில் துண்டினைக் கொடுத்தவன் “அதான் ஃசேபா இருக்கியே அப்புறம் என்ன, வாயைத் திறந்து பதில் சொல்லு” லேசாக கோவம் எட்டிப் பார்த்தது அவன் குரலில்

“ஓ கே  ஓகே தான் சார்” கை நடுக்கம் இப்பொழுது உதடுகளுக்கு பரவிக் கொண்டது. நனைந்த பன்னீர் ரோஜா இதழ்கள் நடுக்கத்தில் அசைய, அவனின் விழிகள் ஒரு நொடி அதில் பட்டுத் திரும்ப, அவனுக்கு ஏனோ இப்பொழுது எரிச்சலாக தான் இருந்தது அவள் ஏற்கனவே பயத்தில் இருப்பதால் எதுவும் சொல்ல முடியவில்லை முதலில் இவளை வீட்டில் சேர்க்க வேண்டும் எதற்கு எடுத்தாலும் பயம், அழுகை “இரிடேட்டிங்”  அவன் உதடுகள் உச்சரித்தது.

மெல்ல இருக்கையில் சாய்ந்து கொண்டவள் வெளியே பார்த்தாள். அவனோ பெரு மூச்சை விட்டு வண்டியை எடுத்தான். அவளுக்கு அவனின் எரிச்சலும் வார்த்தையும் தெளிவாக புரிந்தது. அழுகை வரும் போல் இருக்க, அதற்கும் இன்னும் எரிச்சல் வருமோ என்று அஞ்சியவள் வெளியே வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள் இவர்களை நனைக்க வந்த மழை அதன் வேலையை முடித்து விட்டு சென்று விட்டது சிறிது தூரத்தில் மழை வந்த அடையாளமே இல்லை இந்த இடத்தில் மழை வரவில்லை போலிருக்கே, பனியை அள்ளி வீசினார் போல் சில்லென்று வீசிய குளிர் காற்றில் சாலை ஓர சுக்கு காபி விற்கும் சைக்கிளைப் பார்த்தும் அவள் முகத்தில் உற்சாகம் கையை எடுத்து கன்னத்தில் வைத்துக்கொண்டு ஒரக்கண்ணில் வர்மாவைப் பார்த்தாள்.

அவனும் அதே நேரம் திரும்ப உடனே திரும்பிக் கொண்டாள். “தப்பிச்சிட்டேன் முருகா இன்னைக்கு காப்பாத்தி வீட்டுல சேர்த்திடு செவ்வாய் கிழமை கோவிலுக்கு வந்து அர்ச்சனை பண்றேன் முருகா”

கார் நின்று விட்டது பார்த்து வீடு வந்துடுச்சா என்று வெளியே எட்டிப் பார்க்க, சுக்கு காபி சைக்கிள் இருந்தது. ‘நம்ம வீட்டு முன்னாடி எப்படி இந்த சுக்கு காபி, அங்க இருந்தவரு  இங்க எப்படி “

“இறங்கி வரியா இல்லை அங்க எடுத்துட்டு வரட்டுமா” அவள் பதில் சொல்லும் முன் காபி அவள் முன்னே எடுத்து வந்து நீட்ட, அதன் வாசனையும், சூடும் அவளின் குளிருக்கு தேவைப்பட, அவன் கையில் இருந்ததை வாங்கியவள் கன்னத்தில் வைத்து அதன் சூட்டினை உணர்ந்து மெல்லிய பரவசத்துடன் ஊதி ஊதி சுக்குப் காபியினை குடித்தவள் வர்மாவை மறந்தே போனாள்.

கோவத்துடன் சுக்கு காபியினைக் குடித்தவன் காசை கொடுத்து விட்டு வேகமாக காரினை ஓட்டி வந்தவன் அவள் வீட்டின் முன் நிறுத்தி, அவள் இறங்கியதும், காரில் இருந்த துணிப் பைகளை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு கோவமாக சென்று விட்டான்.

“காலைல வாங்குனது எல்லாம் எனக்கா ” எதுவுமே சொல்லாம கிளம்பிட்டாரு, இவர் எங்க, எப்போ என்ன பண்ணுவார்னே புரியல “

பைகளை தூக்க முடியாமல் வாசல் வரை  எடுத்து சென்றவள் “வசந்தி அக்கா இங்க வாங்களேன்”

வெளியே வந்தவர் ஆரண்யாவைப் பார்த்து சிரித்து விட, “என்ன கா என்னைப் பார்த்தா சிரிப்பு வருதா உங்களுக்கு”

சிரிப்புடன் அருகே வந்தவர் அவளிடம் இருந்த பைகளை வாங்கிக் கொள்ள, “அக்கா முதல்ல தலை மேல இருக்குறத எடுக்கா”

” என் செல்லத்துக்கிட்ட யாரு இந்த வேலையை பண்ணது” ஆரண்யாவின் தலையில் இருந்த பையினை எடுக்க,

“வேற யாரும் பண்ண மாட்டாங்க ஒருத்தர தவிர” அவனிடம் காட்ட முடியாத கோவத்தையும் முறுக்களையும் வசந்தி அக்காவிடம் காட்ட,

“யாரு” யோசித்தவர் “ஓ அவரா” வீட்டுக்குள் சென்று விட்டார். ஆரண்யா சும்மா விட மாட்டாள் என்பது தெரியும். பைகளை ஷாபாவின் மீது வைத்து விட்டு, சூடாக தோசை செய்ய துவங்க,

பைகளை எடுத்து கொண்டு அறைக்கு சென்றவள் டேபளில் வைத்ததோடு கண்ணாடியில் பார்க்க, அவளை அணைத்தபடி வர்மா நிற்பது பார்த்து “நிஜமாகவே வந்து விட்டாரா “திரும்பி பார்க்க யாரும் இல்லை

“ச்சே ஒரு வேளை என் நினைப்பா” முகத்தை மூடி சிரித்தவள் “ஏன் உங்களுக்கு இவ்ளோ கோவம் வருது, நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருப்பீங்களாமே, ஆனா நான் அதை பார்த்ததே இல்லை. எப்போ சிரிப்பீங்க, உங்க கையால சுக்கு காபி எத்தனை வருஷ கனவு தெரியுமா? தேங்க்ஸ் மாறா”  அறையை விட்டு வெளியே வர சிரிப்பை மறைத்து கோவமாக இருப்பது போல் முகத்தை உற்றென்று வைத்துக்கொண்டு அக்கா கொடுத்த தோசையை அவளின் மாறனின் நினைவுகளோடு  உண்டாள்.

இரவு வேலையை முடித்து விட்டு கொஞ்சம்  தாமதமாக வந்த வர்மாவிடம்

“வர்மா என்ன பா இவ்ளோ லேட்” அம்மா கேட்டதும் நின்றவன் “வேலை மா கவர்மெண்ட் டெண்டர் மா அதான் வேலையும் அதிகம்”

மழையில நனைஞ்சி வந்திருக்க, டிரஸ் மாத்திட்டு வா சூடா சுக்கு காபி போட்டு வைக்கிறேன் சளி பிடிக்க போகுது “

வேகமாக படி ஏறிக் கொண்டிருந்தவன் அம்மாவின் சுக்கு காபி என்ற வார்த்தையில் நின்று விட

“என்ன மா சொன்னீங்க”

“என்ன பா நான் என்ன சொன்னேன்”

“இப்போ ஏதோ சொன்னீங்களே”

“அதுவா சுக்கு காபி, இந்த கிளைமேட்க்கு கோல்டு ஆகாம இருக்கும்”

“நான் சுக்கு காபி குடிச்சிட்டேன் மா, நாளைக்கு செஞ்சு கொடுங்க குடிக்கிறேன். இப்போ சாப்பாடு எடுத்து வைங்க வரேன்”

இரவு படுக்கையில் விழுந்தவன் நினைவில் வந்து விழுந்தாள் ஆரண்யா.

நினைவில் வந்தவள் அவன் இதயத்தில் நுழைவாளா அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page