காதல் இதுதானா ? – காதல் 29

காதலாகும் 29:

உலகில் என்ன அக்கிரமங்கள் நடந்தாலும் சரி..நான் என் கடமையை தவறாமல் செய்வேன் என்று சொல்லாமல் சொல்லியபடி கதிரவன் உதயமானான். அன்றைய நாள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயங்கரத்தை வைத்துக் கொண்டு விடிந்தது.

தன் தந்தைக்காக விஸ்வேஸ்வரனை பழிக்குப் பழி வாங்கி விட்டோம் என்ற மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் நுழைந்தான் வேத வர்ஷன்.இரவு முழுவதும் அவன் அலுவலகத்திலேயே தங்கி விட்டான்.

“கண்மணி…”,அழைத்தபடியே உள்ளே நுழைந்தவனை வெறுமையான வீடுதான் வரவேற்றது.

‘தூங்கிட்டு இருக்காளா…?’,எண்ணியபடியே அவன் தங்களது அறைக்குள் நுழைய அவள் அங்கும் இல்லை.

‘எங்கே போயிருப்பாள்…?’,வீடு முழுவதும் அலசியவனுக்குப் பயம் பிடித்துக் கொண்டது.அவளது போனுக்கு அழைக்க வீட்டிலேயே அது ஒலித்து தன் இருப்பை தெரியப்படுத்தியது.

நேற்று இன்னொருவனின் மனைவியை கடத்த சொல்லி அதில் மகிழ்ச்சியடைந்தவனுக்கு இன்று தன் மனைவி காணவில்லை என்றதும் நடுங்க ஆரம்பித்தது.

தொய்ந்து போய் சோபாவில் அமர்ந்தவனின் கையில் ஒரு கடிதம் சிக்கியது.

“நீங்க விதைச்ச வினையை நீங்களே அறுத்துத்தான் ஆகணும்…!நீங்கள் செய்த பாவங்கள் பல ஆயிரம் மடங்கு வீரியத்துடன் திரும்பி வந்து உங்களைத் தாக்கும்.. நான் தாக்க வைப்பேன்…! இவ்வளவு காலம் எந்தப் பொண்ணுங்களை விற்று பணம் சாம்பாதிச்சீங்களோ..இப்போ அந்தப் பொண்ணுங்களோட பொண்ணா உங்க மனைவியும் போய்க்கிட்டு இருக்கிறாள்…!என்ன சொன்னீங்க…கன்னிப் பொண்ணுன்னா அதிக விலையா…?பட்.. உங்களுடைய துரதிருஷ்டம்.. உங்க மனைவி கன்னிப்பொண்ணு இல்லையே…சரி..பார்ப்போம் .. உங்க மனைவியுடைய உடலுக்கு அவன் என்ன விலை பேசறான்னு…”,

“நோ…”,வீறிட்டவன் மடிந்து அமர்ந்து கதற ஆரம்பித்தான்.

எத்தனையோ பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவன்.. இன்று தன் மனைவிக்கும் அதே நிலை வரப் போகிறது என்றவுடன் கதறித் துடித்தான்.இதயம் பிளக்கும் வேதனை..தன் மனைவியின் நிலைக்குத் தானே காரணமாகி விட்டோமே..தன் மீதே ஆத்திரம் பொங்க..அருகிலிருந்த கண்ணாடி டீபாயில் ஓங்கி தன் கையை குத்திக் கொண்டான்.

“அய்யோ..கண்மணி…!என்ன காரியம் டி பண்ணிட்ட…?”, மனமோ இடைவிடாமல் ஓலமிட்டது.

அவ்வளவு காலம் அத்தனை பெண்களும் அனுபவித்த வேதனையை அந்தக் கணம் அவன் உணர்ந்து கொண்டான்.

‘உன் பொண்டாட்டின்னதும் மனசு பதறி துடிக்குதோ..’அவ்வளவு காலம் மறைந்திருந்த மனசாட்சி வெளியே வந்து கேள்விக்கணையை வீசியது.

“எந்த தண்டனைனாலும் எனக்கு கொடுத்திருக்கலாமே.. நீ எதுக்கு டி இப்படி பண்ணின…?”, புலம்பி தவித்து கண்ணீர் விட்டவனுக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது.

உடனே அந்த டீலர் சாஹல் என்பவனுக்கு அழைத்தான்.

“சாஹல்…!கண்டெய்னர்ல வர்ற அனைத்துப் பெண்களும் சேஃப்பா எனக்கு வேணும்…!யார்கிட்டேயும் டீல் பேசிடாதே…”,

“பொண்ணுங்களை நான் பணம் கொடுத்து வாங்கிட்டேன் வர்ஷா ஜி…!அத்தனை பேரும் எனக்குத்தான் சொந்தம்…இந்தப் பொண்ணுங்களை நம்பி நான் பல டீலை முடிச்சு வைச்சிருக்கிறேன்…!”அந்த சாஹல் என்பவனோ மறுத்தான்.

“ஏய்.. நீ கொடுத்த பணத்தை விட ரெண்டு மடங்கு அதிகமா தர்றேன்…!ஒரு பொண்ணு மேலே கூட சின்னக் கீறல் விழக் கூடாது…அண்டர்ஸ்டான்ட்…?”, ரௌத்திரமாய் கர்ஜித்தான்.

“இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வர்ஷா ஜி…!ஆனால், ஒரே ஒரு சிக்கல்.. இப்போதான் நம்ம மோஹித் சர்மா இங்கே வந்தாரு..நீங்க அனுப்பினதுல ஒரு பொண்ணை ரொம்பவும் பிடிச்சுப் போய் உடனே இருபது கோடி கொடுத்து வாங்கிட்டுப் போயிட்டாரு…!”,அவன் கூற கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு தலையில் இடி விழுந்த உணர்வு.

“யா..யாரு…?”,அவன் உயிர் அவன் கையில் இல்லை.

“பெயர் எல்லாம் தெரியலை ஜி…பொதுவா நான் பேரெல்லாம் கேட்டுக்க மாட்டேன்..வழக்கமா எல்லா பெண்களும் அழுது புலம்புவாங்க…!ஆனால்,அந்தப் பெண் மட்டும் அழுத்தமா அமைதியா இருந்தாள்…!”,வேத வர்ஷனின் இதயம் கிடுகிடுத்தது.

“சாஹல்..அந்தப் பொண்ணு எனக்கு வேணும்…!மோஹித் சர்மாகிட்ட …”,

“அவரு காட்டுல இருக்கிற சிங்கம் மாதிரி…! நம்மளால அவர்கிட்ட எல்லாம் பேச முடியாது ஜி..!நீங்க அந்தப் பெண்ணோட விலையை கழிச்சிட்டு பணம் கொடுங்க..நோ ப்ராப்ளம்..மத்த பொண்ணுங்க எல்லாம் சேஃப்பா இருப்பாங்க..!”,சாஹல் போனைத் துண்டித்து விட.. வேத வர்ஷனின் மனம் அடித்துக் கொண்டது.

‘அது உன் கண்மணிதான்…!’,மனம் கூவ,

இன்னொரு மனமோ,’கட்டின பொண்டாட்டிக்கு விலை பேசியிருக்கியே டா…’காறித் துப்பியது.

அந்த மோஹித் ஷர்மாவை பற்றி இவனும் அறிவான். காவல் துறையினரின் உதவி இல்லாமல் தன்னால் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது என்பது உரைக்க..அவன் அடுத்து ஓடியது விஸ்வேஷ்வரனிடம் தான்.

“மயக்க மருந்தினுடைய வீரியத்துனால்தான் சுயநினைவு இல்லாம இருக்காங்க…இன்னும் கொஞ்ச நேரத்துல கண் விழிச்சிடுவாங்க..!”,யாழ்வியை பரிசோதித்த மருத்துவர் கூறியிருக்க..விஷ்வா அவளை விட்டு அகலவில்லை.

‘அந்த லெட்டரை கொடுத்தது யாரு… ? வேத வர்ஷனுடைய இல்லீகல் பிசினெஸ் என்ன..?’, அவன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நிறைய இருந்தன.இருந்தாலும் தன் மனைவி கண் விழிக்காமல் தன்னால் எந்த வேலையிலும் ஈடுபட முடியாது என்பது உரைக்க அவன் அங்கேயே அமர்ந்து விட்டான்.

அவனது தவிப்பை போக்குவது போல் காலையில்தான் கண் விழித்தாள் அவனது மனையாட்டி.

மயக்க மருந்தின் வீரியம் இன்னும் உடலில் மிச்சமிருக்க தலை பாரமாய் கனத்தது.

சிரமப்பட்டு விழிகளைத் திறந்தவளுக்கு நேற்று ஸ்கூட்டியில் வந்து கொண்டிருக்கும் போது தான் கடத்தப்பட்டது நினைவிற்கு வர..அவளது உடல் அப்பொழுதும் நடுங்கியது.

விழிகளைத் துளாவியவளின் கண்களில் தன் கணவன் வந்து விழவும்தான் மூச்சே வந்தது.

“வி.. விஷ்வா…!”,

“பேபி…கண் முழிச்சிட்டியா…?ஆர் யூ ஓகே…?”,அவனது கரம் மென்மையாய் அவள் தலையை வருடி விட்டது.

“ம்…!ஆனால்..என்ன நடந்துச்சு விஷ்வா… நேற்று யாரோ என்னைக் கடத்துனாங்க…”,குழப்பத்துடன் அவள் வினவ,

“எல்லாம் வீட்டுக்குப் போய் சொல்றேன்..இப்போ நீ ஸ்டெரிய்ன் பண்ணிக்காதே…!நவ் யூ ஆர் சேஃப்…!”,குனிந்து அவள் நெற்றியில் முத்தம் பதித்தான்.

அவனது விழிகள் கலங்கி இருந்தனவோ..அவளுக்கு அப்படிதான் தெரிந்தது.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியே சலசலப்பு கேட்டது.

“நான் அவரை பார்க்கணும்.. ப்ளீஸ்…”,வெளியே இருந்து குரல் கேட்க,

“நீ ரெஸ்ட் எடு…!”, உரைத்தவன் வெளியே வந்தான்.

தலை கலைந்து விழிகள் சிவந்து உன்மத்தம் பிடித்தவன் போல் நின்றிருந்தான் வேத வர்ஷன்.

அவனைக் கண்டதும் விஷ்வாவிற்கு ஆத்திரம் பெருக,”பொறுக்கி நாயே…”,சீறலுடன் வந்து அவன் சட்டைக் காலரை பற்றியிருந்தான்.

மாறி மாறி கன்னத்தில் குத்த விஷ்வாவின் ஆத்திரம் மட்டும் அடங்க மறுத்தது. உதடு கிழிந்து இரத்தம் வந்த போதிலும் வேத வர்ஷன் அவனைத் தடுக்கவில்லை.

‘தனக்கு இந்த அடி தேவைதான்’ எனபது போல் அனைத்தையும் ஏற்றுக்கொண்டான்.

“எவ்வளவு தைரியம் இருந்தால்..என் பொண்டாட்டி மேல கை வைப்ப…?உன்னை நான் சும்மா விட போறது இல்லை டா…”,சரமாரியாய் தாக்கியவனை துரையும் அங்கிருந்த மற்ற காவல் துறை அதிகாரிகளும் வந்துதான் தடுத்தனர்.

“நீ என்னைக் கொன்று போட்டால் கூட நான் அதை சந்தோஷமாய் ஏத்துக்கிறேன்…!ஆனால்,அதுக்கு முன்னாடி என் மனைவியை காப்பாற்று…”,கட கடவென்று நடந்த அனைத்தையும் கூற கேட்டுக் கொண்டிருந்தவர்களிடையே கனத்த மௌனம் நிலவியது.

‘இந்த அயோக்கியக்காரனுக்கு இப்படியொரு உத்தமியா…?’அனைவரின் மனதிலும் இந்தக் கேள்விதான் எழுந்தது.

“ப்ளீஸ் விஷ்வா…!உன்னைத்தான் நம்பி வந்திருக்கிறேன்…!”,தான் ஆண்மகன் என்பதையும் மறந்தவனாய் அவன் காலடியில் மண்டியிட்டு விட்டான் வேத வர்ஷன்.

அவனது நிலையை விஷ்வாவால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. சற்று நேரத்திற்கு முன்பு வரை அந்த வேதனையை அனுபவித்தவன் அல்லவா அவன்…?அந்தப் பெண்ணை நினைத்து அவனுக்குள் பிரமிப்பு எழுந்தது.

“உனக்காக இல்லை..காவல்துறை அதிகாரியா நான் என் கடமையை செய்வேன்…!”,விறைப்பாய் உரைத்தவன் அதன் பிறகு தாமதிக்கவில்லை.

இங்கு தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அங்கு ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவனாய் வேகமாய் செயல்பட்டான்.

கமிஷனரிடம் பேசி அந்த நாட்டு காவல் துறையினரிடம் விஷயத்தை தெரிவிக்க சொல்லிவிட்டு விஷ்வாவும் வேத வர்ஷனும் கோவா கிளம்பினர்.

இவர்கள் அங்கு சென்று இறங்கிய நேரம்தான் காவல் துறையினர் மோஹித் ஷர்மாவின் இருப்பிடத்தைக் கண்டறிந்திருந்தனர். இவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட இருவரும் அந்த முகவரிக்கு விரைந்தனர்.

போலீஸ் வருவதை அறிந்து அங்கிருந்த ஆட்கள் ஓட பார்க்க..காவல் துறையினர் சுற்றி வளைத்து விட்டனர். வேதாவும் விஷ்வாவும் வீட்டிற்குள் ஓடினர்.

படுக்கையறைக்குள் ஓடிய வேத வர்ஷனின் விழிகளில் உச்சக்கட்ட அதிர்ச்சி.எந்தக் கணவனும் தன் மனைவியை காண கூடாத கோலத்தில் அவன் தன் மனைவியை கண்டான். கற்பழிக்கப்பட்டு வேரறுந்த கொடியாய்..அலங்கோலமாய் கிடந்தவளின் கோலம் அவன் உயிரை உலுக்கியது.

“அய்யோ…”,வீறிட்டு அழுதவனின் சத்தத்தில் அங்கு ஓடிய விஸ்வேஷ்வரனுக்கும் அதிர்ச்சிதான்

வருவதற்குள் நிலைமை கை மீறி போய்விட்டது என்பது புரிந்தது. அவளிருக்கும் நிலைமையை கண்டவன் சட்டென்று வெளியேறி விட்டான்.

“அய்யோ கண்மணி.. உனக்கா இந்த நிலைமை…? நான் ஒரு பாவி..”,தலையில் அடித்துக் கொண்டு கதறியவனை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தாள் அவள்.

“வலிக்குதா…நல்லா வலிக்கட்டும்…!அழு..இன்னும் கத்தி கத்தி கதறி அழு…!எத்தனை பெண்கள் இந்த மாதிரி துடிச்சிருப்பாங்க… என்னை பார்த்து நல்லா அழு…!”,வன்மத்துடன் கூறியவள் மருந்துக்கும் அழவில்லை.

“உன் பொண்டாட்டியோட விலை இருபது கோடி..!ஒருத்தன் இல்ல.. மூணு பேர் மாறி மாறி நாசமாக்குனாங்க…!இதோ என் உடம்பை பாரு..நீ ரசிச்ச உடம்புல எல்லா பக்கமும் காயம்…! நல்லா என்னைப் பார்த்து பார்த்து அழு…!உனக்கு இந்த தண்டனை தேவைதான்… உடலால அடிக்கறதை விட மனசால அடிக்கறதுலதான் வலி அதிகம்… அதனாலதான் கடவுளா பார்த்து உனக்கு இப்படியொரு தண்டனை கொடுத்திருக்கிறாரு…”,அவள் பேச பேச அவன் கதறி அழுதான்.

பிறகு எதையோ நினைத்தவளாய் விரக்தியாய் சிரித்தவள்,”ஒரு வகையில இந்த தண்டனை எனக்கும் தேவைதான்…! இவ்வளவு வருஷமா கூட படுத்த புருஷன் மா பாதகன்.. பல பெண்களுடைய வாழ்க்கையை அழித்த பாவின்னு தெரியாமல் உன் கூட குடும்பம் நடத்தியிருக்கேனே..எனக்கு இது தேவைதான்…!உன்னுடைய ஈன செய்லகளை நான் முதலிலேயே கண்டுபிடிச்சிருந்தேன்னா இந்நேரம் எத்தனையோ பெண்களை காப்பாற்றியிருப்பேன்…! ஒரு வகையில் அந்தப் பெண்களோட சீரழிவுக்கு நானும் காரணமாகிட்டேன்…இந்த தண்டனை எனக்கும் தேவைதான்…!”,

“ஐயோ..இல்லை கண்மணி…!நான்தான் பாவி…இந்த உலகத்துல வாழவே தகுதியில்லாத பாவி நான்தான்…!நீ பரிசுத்தமானவள் டி…!”,கதறியவன் அவளைத் தூக்க,

இடைக்கு கீழிருந்து இரத்தம் பெருகியது.

“ஐயோ இரத்தம்…”,சூடாக தன் கையில் உணர்ந்த இரத்தத்தில் அவன் பிரம்மை பிடித்தவன் போல் நின்று விட்டான்.

அவனை வெறித்தவள், ‘’இரத்தம் இல்லை… உன்னுடைய குழந்தை.. உன்னுடைய உதிரம் டா அது…!”,இப்பொழுதுதான் பெருங்குரலெடுத்து கதறவே ஆரம்பித்தாள்.

“நான் கர்ப்பமா இருந்தேன்…! இதோ இரத்தமா போறது என்னுடைய குழந்தை…! இப்படியொரு ஈன பிறவியோட குழந்தை இந்த உலகத்துல பிறக்க வேண்டாம்ன்னுதான் கடவுள் அழிச்சிட்டாரு…!”,

அவனது கை முழுவதும் அவனது உதிரம்.அவன் செய்த பாவங்களுக்கு இதை விடவா பெரிய தண்டனை கிடைத்து விட போகிறது…?

“இல்ல..நான்தான் சாகணும்…!நீயும் என் குழந்தையும் ஒரு பாவமும் அறியாதவங்க…நீங்க ரெண்டு பேரும் வாழணும்…”,பைத்தியம் பிடித்தவன் போல் புலம்பியவன் அவளை போர்வையை சுற்றி அள்ளிக் கொண்டு வெளியே ஓடினான்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்மணி அனுமதிக்கப்பட்டிருக்க.. வெளியே விஷ்வாவும் வேத வர்ஷனும் காத்திருந்தனர்.

உள்ளிருந்து மருத்துவர் வெளியே வந்தார்.

“இட்ஸ் அ கேங் ரேப்…!அவங்களுடைய இன்னர் பார்ட்ஸ் எல்லாம் பயங்கரமா சேதமடைஞ்சிருக்கு..!கர்ப்பமா வேற இருந்திருக்காங்க…கருவும் கலைஞ்சிடுச்சு…!ஹெவி ப்ளட் லாஸ்…! உயிருக்கு ஆபத்து இல்லை..ஆனால்..நரக வேதனை தான்…!” அந்த மருத்துவர் உரைத்து விட்டு சென்று விட வேத வர்ஷன் இடிந்து போய் அமர்ந்தான்.

எந்த தவறும் செய்யாமல் மொத்த தவறையும் தன் மீது வாங்கிக் கொண்டு உள்ளே படுத்திருக்கும் பெண்ணை கண்ட விஸ்வேஷ்வரனுக்கும் இதயம் கனத்தது.எந்தக் கணவனுக்குமே இதயத்தை பிளக்கும் வேதனையைத் தரக் கூடிய செய்தி இது. வேத வர்ஷனின் நிலை புரிந்தாலும் அவனை தேற்ற அவனுக்கு மனம் வரவில்லை.

‘இந்தப் பெண் மட்டும் காப்பாற்றியிருக்கா விட்டால் இந்நேரம் தன் மனைவி இருக்க வேண்டிய நிலை இது.. ‘நினைவே அவனுக்கு பயங்கரமாய் இருந்தது.

‘எத்தனை பெண்கள் இப்படி நரக வேதனையை அனுபவித்திருப்பார்கள்.. இவனையெல்லாம் சுட்டுத் தள்ளணும்…’,மனம் பொருமிய அதே சமயம் தன் தவறை உணர்ந்து கதறுபவனை பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது.

மகனை தவறான பாதையில் அழைத்து செல்லாமல் நேர்மையான வழியில் நடக்க வைப்பது தந்தையின் கடமை.அப்படி தந்தை தடம் மாறி போனாலும் இழுத்து வந்து நல்வழிப்படுத்துவது மகனின் கடமை. இங்கு இருவருமே அவர்களது கடமையில் இருந்து தவறியிருந்தனர்.

பெண் என்ற நிலையிலிருந்தும்..மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்தும் தன் கடமையை ஆற்றியிருந்தாள் கண்மணி.அவளுக்குத் தெரியும்..தன்னை அடிக்கும் அடிதான் தன்னவனுக்கு வலிக்கும் என்று..அதனால்தான் இப்படியொரு பாதையை தேர்வு செய்தாள்.

சற்று தாமதமானாலும் அவரவர்களுக்கான தண்டனை நிச்சயம் கிடைத்துதான் தீரும்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page