அத்தியாயம் 7

 

 

அன்று கவிதாவின் அண்ணன் வெங்கட்ராமன் தன் மகள் மதுமதியுடன் கவிதாவின் வீட்டிற்கு வந்திருந்தார். மதுமதி தன் அத்தை வீடாக இருந்தாலும் அடிக்கடி வரமாட்டாள். அவளுடைய அன்னை அவளை யார் வீட்டுக்கும் அனுப்பமாட்டாள் என்பது ஒரு காரணம் என்றால் தன் படிப்பும் ஒரு காரணம்.  மதுமதி மதுவை போல் மயங்கவைக்கும் அழகுதான். ஐந்தரை அடி உயரம், மாநிறமாக இருந்தாலும் கலையான முகம், பெரிய கண்கள், கூறிய மூக்கு, குலோப்ஜாமூன் கன்னங்கள், அளவான உடம்பு நீண்ட கூந்தல் என்று பார்ப்போரை கவர்ந்திழுக்கும் அழகி அவள். 

 

வாங்க அண்ணா, வா மது, எப்படி இருக்கீங்க? இப்பதான் இங்கே வருவதற்கு வழி தெரிஞ்சுதா ? ஜானகி அண்ணி வரலே? என்று கவிதா வரிசையாய் புன்னகை முகத்துடன் வரவேற்க, இப்படி மூச்சு விடாமல் கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்றது? நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம். ஜானகி எங்ககூட தான் வருவதா இருந்தா, திடீரென்று எனக்கு தலை சுத்தலா இருக்கு. நீங்க மட்டும் போயிட்டு வாங்க, நான் அடுத்த தடவை போகும்போது வரேன்னு சொல்லிட்டா. எனக்கும் உங்களெல்லாம் பார்க்கனும்னு ஆசைதான். கடையை விட்டுட்டு  வர முடியலமா. நீ எப்படி இருக்கே? மாப்பிள்ளையும் பசங்களும் எப்படி இருக்காங்க? எங்க வீட்ல யாரையும் காணோம் ? என்று கேட்க, கவிதா அவரு பக்கத்தில இருக்கிற கடைக்கு போய் இருக்கிறார். பசங்க எல்லாம் ஆபீசுக்கு போயிருக்காங்க, வரும் நேரம் தான் என்று பேசிக் கொண்டே இருகும்போதே மாசிலாமணி வந்தார். வெங்கட்ராமனுக்கு மாசிலாமணியை ரொம்ப பிடிக்கும். அவருடைய சாந்தமான குணம், படிச்சி இருந்தாலும் நல்ல வேளையில் இருந்தாலும் தன்னுடைய மனைவியின் அண்ணன் இடத்தில் கொடுக்கும் மதிப்பு, மரியாதைக்கும் என்றும் குறை இருந்ததில்லை. அதனாலேயே தன்னுடைய பெண்ணை அந்த வீட்டில் மருமகளாக ஆகவேண்டும் என்ற ஆசை வெங்கட்ராமனுக்கு உண்டு. மாசிலாமணியை பார்த்ததும் வெங்கட்ராமனும் மதுவும் எழுந்துக் கொள்ள, உடனே மாசிலாமணியும்  உட்காருங்க, எதுக்கு எழுந்திக்கீரங்க, கவிதா அவங்களுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்தியா? என்று கேட்க, இப்போ தாங்க வந்தாங்க, இதோ எடுத்து வரேன் என்று சமையலறை நோக்கி செல்ல மதுவும் அத்தையின் உடனே சென்றாள். கவிதா மதுமதியிடம், என்ன  மது, உன் படிப்பு எல்லாம் முடிஞ்சுதா?  சீக்கிரமா முடிச்சுடுவேன் அத்தை. இப்போ ஒரு மருத்துவமனையில் உளவியலாளராக வேலை பார்க்கிறேன் அத்தை என்று மது கூறியதை கேட்ட கவிதா மருத்துவமனையிலா வேலை பார்க்கிற? அப்போ நீ என்ன டாக்டருக்கா படிச்சே? உங்கிட்ட வரவங்க கிட்ட ஊசி மாத்திரையெல்லாம் கொடுப்பியா? என்று கவிதா கேட்க, அதெல்லாம் இல்ல அத்தை. நீங்க சொல்ற டாக்டர்ஸ் எல்லாம் உடல் நோயை குணப்படுத்துவாங்க. நாங்க மன நோயை குணப்படுத்துவோம் . நாங்க என்கிட்ட வரவங்களுக்கு அவன்கிட்ட ஆறுதலா பேசி அவங்க மனசுல என்ன இருக்குதுனு தெரிஞ்சி, அவங்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையும் அறிவுரையும் சொல்லுவோம் என்று மதுமதி கூறியதும் இதென்ன ஆறுதலா பேசுவதுக்கும் அறிவுரை கூறுவதுக்கும் கூட படிப்பு இருக்குதா? என்று வினவ, ஆமாம் அத்தை. அப்போயெல்லாம் நீங்கள் எல்லோரும் கூட்டு குடும்பமா இருந்தீங்க, பிள்ளைகளுக்கு ஏதாவது கஷ்டம்னா அதை தீர்க்க  பெரியப்பா, சித்தப்பா, மாமா, அத்தை என எல்லாரும் கூடவே இருந்தாங்க, அவங்க பேசி அறிவுரை கூறி பிள்ளைகளை நல்வழிப்படுத்துவாங்க, ஆனா இப்போ இருக்கிற இயந்தரமான வாழ்க்கையில் பெரும்பாலும் எல்லாரும் தனி தனியாக வாழறாங்க. அம்மா, அப்பா ரெண்டு  பேருமே வேலைக்கு போகிறதாலே பிள்ளைகள் தனியாகவே வளர்ராங்க! அவங்களுக்கு அன்பு காட்டவும் அறிவுரை சொல்லவும் பெற்றவர்களால் முடிவதில்லை.

 

உடனே கௌரி சொன்னா தப்பா நினைச்சிட மாட்டேனேனா ஒன்னு கேட்கவா? சொல்லுங்க அத்தை! பைத்தியகாரங்களுக்கு வைத்தியம் பாக்கிற டாக்டர்னு சொல்லுவாங்களே அந்த படிப்பு தானே படிச்சி இருக்கே? உடனே மதுமதி அவங்களை எல்லாம் பைத்தியக்காரங்க சொல்லக்கூடாது அத்தை. மனமுறிவு உள்ளவங்க. எந்த விஷயத்தையும் யாருகிட்டேயும் பகிராம மனசுக்குள்ளேயே போட்டுக்கிட்டு மனசு உடைந்து தான் எங்கே இருக்கிறோம், என்ன செய்கிறோம், என்ன சாப்பிடுகிறோம் என்று கூற தெரியாத குழந்தை போன்றவர்கள் அத்தை. 

 

எங்ககிட்ட மணமுறிவு காரணமா கணவன் மனைவி வருவாங்க, பிள்ளைகள் சரியாக படிக்கிறதில்ல, எல்லாத்தையும் மறந்துறான், பேசவே பயப்படுகிறான், அல்லது பிள்ளைகள் ரொம்பவும் சுட்டித்தனம் பன்ணறது என்று பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வருவாங்க, உறவுகளால் மனஅழுத்தம், தற்கொலை எண்ணம் போன்ற பல வகையான  மனசிதைவு உள்ளவங்களை கூட்டிட்டு வருவாங்க, நாங்க அவர்களுடைய மன குழப்பத்தை நீக்கி அவர்களோடு இரண்டு மூன்று முறை பேசி அவர்கள் மனதை தெளியவைத்து அவர்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிகையும், உற்சாகத்தையும் கொடுப்போம். என்னிடத்தில் ஒரு மாதத்தில் ஐந்து ஜோடி டிவோர்ஸ் வேண்டும் என்று வந்தால் நான் பேசி இரண்டு ஜோடியாவது சேர்த்து வைப்பேன் அத்தை என்று மதுமதி கூறியதும் கவிதா அவள் முகவாயை ஆசையாய் பிடித்து என் கண்ணு! எவ்வளவு நல்ல விஷயங்கள் எல்லாம் செய்யறே!  நான் அதிகமா படிக்கலைம்மா, அதனாலே எனக்கு இதப்பத்தி எல்லாம் தெரியாது. நான் தப்பா பேசி இருந்தா என்னை மன்னிச்சுடும்மா, என்று கவிதா கூற, பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க. நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை அத்தை. ஆனா இப்ப நீ பேசியதை பார்த்து என் பிள்ளை விக்னேஷுக்கு ஏற்ற பொண்ணு நீ மட்டும் தாம்மா. அது ஏனோ அவனுக்கு  சின்ன வயசிலிருந்தே கௌரியை பிடிக்காதும்மா.  நான் கௌரி மேலே தான் அதிகமா அன்பு செலுத்திறேன்னு என் மேலையும் கோபம். நான் இரண்டு பேரையும் ஒண்ணா தான் பார்த்தேன். எது வாங்கி கொடுத்தாலும் இரண்டு பேருக்கும் ஒண்ணா தான் வாங்கி கொடுப்பேன். அப்படி இருந்தும் எது கேட்டாலும் நீ அவனுக்குதான் முதல வாங்கி கொடுக்கிறே, அவன் மேல தான் உனக்கு பாசம் அதிகம்னு இப்போ வரைக்கும் சொல்றம்மா. ஆன இப்போவெல்லாம் அதிகமா சண்டை எல்லாம் போடறதில்லை. ஆனா தம்பிகிட்ட சகஜமா பேசுறதுல்லாம் இல்லை. என்கிட்டயே கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுவான், சில நேரம் அதுகூட இல்லை. அமைதியா அறைக்கு போயிடுவான்.

  

உடனே கௌரி, இரண்டாவது குழந்தை பிறந்தா , முதல் குழந்தை தன்னுடைய பெற்றோர் தன்னை விட இப்ப பிறந்த குழந்தையிடம் தான் அதிகமா அன்பு செலுத்துகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அந்த குழந்தையின் மேல் பொறாமை எண்ணம் கொள்வது சகஜம் தான் அத்தை. இதை sibling rivalry னு சொல்லுவோம். பெரும்பாலும் அக்குழந்தைகள் தன்னுடைய நண்பர்கள், சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்ப மாறிவிடுவார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகள் அவ்வளவு சீக்கிரமாக மாறமாட்டார்கள். அதை தன் மனதிலேயே வளர்த்துக் கொண்டு வருவார். அது குழந்தைத்தனமான குணம் தான் அத்தை. நம் விக்னேஷ் அத்தானும் அப்படித்தான். நாம எல்லோரும் சேர்ந்து அவரை சீக்கிரமாகவே மாத்திடலாம். கவலைப்படாதீங்க. கவிதா, அவன் அப்படி இருப்பதற்கு நானும் ஒரு காரணம் தாம்மா. கௌரிக்கு இரண்டு வயது இருக்கும்போது  நிமோனியா காய்ச்சல் வந்துச்சு. டாக்டர் அவனை பக்கத்திலே இருந்து நல்லா பாத்துக்கணும் சொல்லிட்டாரு. சாப்பாடு எல்லாம் பாத்துக் கொடுக்கணும் சொன்னாரு. கௌரிக்கு காய்ச்சல் வந்ததாலே எங்கே விக்னேஷுக்கும் வந்திடுமோனு பயந்து அவனை என் பக்கமே சேக்கமாட்டேன். பக்கத்துக்கு வீட்லே ஒரு பாட்டி இருந்தாங்க. பெரும்பாலும் அவங்க வீட்டில விட்டுருவேன். அது முடிஞ்சு ஐந்து வயசில கௌரிக்கு அம்மை போட்டுடிச்சி. அப்போ விக்னேஷுஸை கொஞ்ச நாள் உங்க வீட்ல விட்டுட்டேன். அதனாலேயே அவனுடைய சின்ன வயசில் அவனருகில் இருந்து அவனை பாத்துக்க முடியாம போச்சு. அதுக்கப்புறம் நான் பேச போனா என்கிட்டேயிருந்து விலக ஆரம்பிச்சிட்டான். நான் எவ்வளவும் சொல்லியும் அவன் கேக்கலே. என்னதான் அவன்கிட்ட நான் அன்பா நடந்துக்கிட்டாலும் என்கிட்ட அவன் ஒட்டாமலே போய்ட்டான். இவருக்கும் ஆபிஸில் வேலை அதிகம். அடிக்கடி வேலை மாறுதலாகி வேற ஊர்க்கு சென்று வருவாரு.அதனாலே அவராலேயும் அவனை கவனிக்க முடியல. இப்படி அவன் மாற்றத்திற்கு நாங்க தான் காரணம்னு நினைக்கும் போது எனக்கு மனசு கஷ்டமாக இருக்கு என்று கண் கலங்கி கூற, அத்தை அழாதீங்க, உங்க சூழ்நிலை அப்படி இருந்தப்போ நீங்க என்ன செய்வீங்க? நான் சின்ன வயசில் இருந்தே அத்தானை பார்க்கிறேன், அவரு ஒன்னும் அத்தனை முசுடு இல்லை அத்தை. நீங்க வேணாம் பாருங்க,  எங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு அவரை கலகலப்பா மாத்திடுவேன் என்று மதுமதி கூற, என் ராசாத்தி, நீ கண்டிப்பா அவனை புரிச்சிகிட்டு அவனை நல்லா பாத்துப்பேனு எனக்கு நம்பிக்கை இருக்கு. 

 

இவர்கள் பேசிக் கொண்டே இருக்கையில் கௌரியும் விக்னேஷும் ஒருவர் பின் ஒருவராக வீட்டிற்கு வந்தனர். கௌரி வந்ததும் ஹாய் மது! எப்படி இருக்கே? உன்னை பாத்து ரொம்ப நாளாச்சு? நல்லா இருக்கேன் மாமா. உன் படிப்பு எல்லாம் முடிச்சுதா? இன்னும் கொஞ்ச நாள்லே முடிஞ்சிடும். நான் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டேன் என்று சொன்னதும் கௌரி, அப்போ எனக்கு அண்ணியாய் வர தயாராயிட்டே  என்று கூறியதும் மதுமதி வெட்கத்தில் தலை குனிந்தாள். அப்போது அங்கே விக்னேஷ் வர, வெங்கட்ராமனை பார்த்து வாங்க மாமா, என்று மரியாதைக்காக அழைத்துவிட்டு மதுமதியை பார்த்து வெறும் தலையசைக்க, மதுமதியே அவனைப் பார்த்து எப்படி இருக்கீங்க அத்தான்? என்று வினவ,ரொமப நாள் கழித்து மதுமதியின் குரல் கேட்கவும், அவனுக்கு மனதிற்குள் ஏதோ இனம் புரியாத உணர்வு தோன்றியது. சிறுவயதிலிருந்தே இவனுக்கு மதுதான், அதுபோல் மதுவுக்கு விக்னேஷ்தான் என்று கூறி வளர்த்தபோதும் மாமன் மகள் என்ற உணர்வு மட்டுமே இருந்ததை தவிர அவள் மீது காதல் எல்லாம் இல்லை. பெற்றோர் அவளை மணக்க சொல்கிறார்கள் அதனால் அவளை மணந்து கொள்ளலாம் என்ற கடமை உணர்வு தான் இருந்தது. அதனால் அவள் வீட்டுக்கு வரும்போது அவளை பார்த்து  சிறு புன்னகை செய்வதோடு சரி பேசெல்லாம் மாட்டான். அவன் மதுமதியின் வீட்டுக்கு சென்றால் கூட அவள் அம்மா ஜானகியின் கூடவே தான் சுற்றிக்கொண்டிருப்பான். அவளுக்கும் விக்னேஷுசை மிகவும் பிடிக்கும். சிறு வயதில் கொஞ்ச நாட்கள் அவனை பார்த்துக்கொண்டதால் அவனிடத்தில் பாசம் உண்டு. ஆனால் மதுமதிக்கு விக்னேஷுசை ரொம்ப பிடிக்கும். அவன்அவளிடத்தில்  வித்தியாசமாக நடந்துக்க கொள்வதே அவளை கவனிக்க வைத்தது. மேலும் அவன் தன் பொருட்களை அழகாக அடுக்கி வைப்பது, தன்னுடைய அறையை சுத்தமாக வைத்துக்கொள்வது, எல்லோரிடமும் அளவாக பேசுவது, நீட்டாக உடை உடுத்துவது, முக்கியமாக அவன் பெண்களிடம் நாகரிகமாக நடந்துக்கொள்வது. பெண்களின் முகத்தை பார்த்து மரியாதையாக பேசுவது போன்ற குணங்கள் அவளை அவன்பால் ஈர்த்தது என்றே சொல்லலாம். 

 

மதுமதி தன்னை பார்த்து நலம் விசாரிக்கவும், விக்னேஷ் அவளை முழுவதுமாக பார்த்தான். முன்னை விட இப்போ ரொம்ப அழகா இருக்கிறாளே! என்று முதல் முறையாய் அவளை ரசித்தான். நல்லா இருக்கேன் மதி, என்று கூறி புன்சிரிப்போடு தன் அறையை நோக்கி சென்றான். ஆம். எல்லோரும் மது என்றழைக்க, இவன் மட்டும் மதி என்று தான் அழைப்பான். வெகு நாட்கள் கழித்து அவன் முகத்தில் புன்னகையை பார்த்து எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி ததும்பியது.

 

விக்னேஷ், பத்மநாபன் என்ற பழம் தின்று கொட்டை போட்ட வக்கீலிடம் தான் ஜூனியர் ஆக வேலை பார்க்கிறான். அவருக்கு இந்த தொழிலில் ஐம்பது வருடம் அனுபவம் இருந்தது. அவரிடத்தில் வருவதெல்லாம் பெரிய அரசியல்வாதி, பெரிய தொழிலதிபர்கள், நடிகர் நடிகைகள் போன்றவர்களின் வழக்குகள் தான். பண விஷயத்தில் மிகவும் கரார் பேர்வழி. முழு பணம் வராமல் அவர்களுடைய வழக்கை முடித்துக் கொடுக்க மாட்டார். அவரிடத்தில் நான்கு பேர் ஜூனியராக இருக்கிறார்கள். ரவி, ராகவ், ஸ்ரீனிவாசன் மற்றும் விக்னேஷ். பத்மநாபனுக்கு மூன்று பேரைக்காட்டிலும் விக்னேஷிடம் தான் நம்பிக்கை அதிகம். தான் இல்லாதபோது கட்சிக்காரர்கள் பணம் கொண்டு வந்தால் அதை விக்னேஷிடம் தான் கொடுக்க சொல்வார். விக்னேஷ் அதை பத்திரமாக எடுத்து வைத்து பத்மநாபனிடம் கொடுத்து விடுவார். மற்ற ஜூனியருக்கு இதனால் விக்னேஷ் மீது பொறாமைதான். விக்னேஷ் தனக்கு கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்ததால் அவன் மீது குறை ஏதும் கான முடியவில்லை. பத்பநாபனுக்கு விக்னேஷை பற்றி நன்கு தெரியும் ஆதலால் அவன் மீது எதுவும் தப்பாக போட்டுக் கொடுக்கவும் முடியவில்லை. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல விக்னேஷ் மீதும் பெரும் பழி வந்து சேர்ந்தது.   

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண்மணியே காதலில் கரைந்திட வா
807 10 4
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page