எபிலோக் 🩷

திரையிட்டு விலகாதே! 

அத்தியாயம் -36 (எபிலோக் 🩷)

Hiiii வாசகர்களே ✨ 

அதே போல் ஷ்ரேயா, கல்லூரி மேஜையில் அமர்ந்து “ரோல் நம்பர் 36!!!” என அழைத்து வருகை பதிவு ஏட்டில் பிரசென்ட் என்று குறித்து விட்டு கை ஒப்பும் இட்டு, அதை மூடி எழுந்து வெளியே நடந்தாள்…

யாரும் இல்லாததால் இருண்டு இருந்த அறைக்குள் நுழைந்தாள் நுன்னிடையால், கோட்டை கழற்றி விட்டு வந்து அமர்ந்தாள்… A/C டெம்பெரச்சர் சீர் செய்தவள், மொபைலில் ப்ளூ டூத் ஆன் செய்து, காதில் ஏர் டோப் மாட்டி பாடல் ஓட விட்டு ஒரு 10 நிமிடம் கண்ணை மூடி சிந்தனையில் ஆழ்ந்தாள்.…

“நீா் வழியே மீன்களைப்

போல் என் உறவை நான் இழந்தேன்

நீ இருந்தும் நீ இருந்தும் 

ஒரு துறவை நான் அடைந்தேன்

ஒளி பூக்கும் இருளே

வாழ்வின் பொருளாகி வலி

தீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா…..

மாய நதி இன்று மாா்பில் வழியுதே”

ஷ்ரேயா மான் மிழிகளை திறந்து, அவள் லேப்டாப்பில் இருந்த பாடம் எடுக்க பயன் படுத்திய PPT பக்கத்தை க்ளோஸ் செய்தவள், கூகிள் செயலியை திறந்தாள்… Dreamz novels இணைய தளம் தேடி, அக்ஷர யுத்தம் போட்டி பக்கத்தில் வந்து AY-39 கணக்கில் லாக் இன் செய்து, அவளின் “திரையிட்டு விலகாதே!” என்ற போட்டி கதையின் இறுதி அத்தியாயத்தை பதிவு செய்தாள்!!

இது சிலருக்கு காதல் கதையாக இருக்கலாம்… சிலருக்கு சோக கதையாக இருக்கலாம்… சிலருக்கு மறு எழுச்சி கதையாக இருக்கலாம்… ஆனால், இது தான் என் வாழ்வின் கதை!

The End✨

Thanks for reading மக்களே 🩷 

Save and Post பொத்தானை அழுத்தி விட்டு, 

மாடி கணினியை ஷட் டவுன் செய்து மூடினால்…

வகுப்பை முடித்து கொண்டு, அதே ஸ்டஃப் ரூம் வந்த மற்ற ஒரு பேர் ஆசிரியை இவளை கண்டு புன்னகைத்த படி, வந்து அமர்ந்து அவர்களின் பொருட்களை அள்ளி பையில் வைத்து கொண்டு “போலாமா மேம்?!!” என்றார் ஷ்ரேயா இடம்…

“ஹ்ம்ம்… போலாமே!!” என அவளும் அவளின் சிவப்பு நிற ஐடி கார்டு கழட்டி தனது கை பையில் வைத்து விட்டு, ஸ்கூட்டி சாவியை எடுத்து கொண்டு பார்க்கிங் வந்தாள் அவரோடு. இருவரும் அவரவர் ஸ்கூட்டியில் ஏறி விடை பெற்று, அவரவர் இருப்பிடம் இருக்கும் இடம் நோக்கி வண்டியை செலுத்தி பிரிந்து சென்றனர்…

அவள் ஹேன்ட் பேக்கில் இருந்த அந்த சிவப்பு நிற ஐடி கார்டு தலைப்பு, காற்றில் அசைந்து ஆடியது!! அதில் அச்சாகி இருப்பதை உற்று உற்று அவள் பின்னால் நடந்து வந்த மாணவர்கள் படித்து பார்த்தனர்…

Shreya Ganesh, M.Sc, B.Ed, (NET)

Assistant Professor,  

Department of Biotechnology

ஆம்! இரண்டு ஆண்டு அதே கல்லூரியில் B.Ed பட்டமும் படித்து முடித்தவள், அவள் படித்த அதே கல்லூரியில், இன்று NET தேர்வு எழுதி பாஸ் ஆகி, பேராசிரியர் ஆக வேலைக்கு முதல் நாள் வந்து இருக்கிறாள்!

“தேசமெல்லாம் ஆளுகின்ற

ஒரு படையை நான் அடைந்தேன்

காலம் என்னும் வீரனிடம்

என் கொடியை நான் இழந்தேன்

மணல் ஊரும்

மழையாய் மடி மீது விழவா வா 

அணை மீறும் புனலாய்

மாா் சாய்ந்து அழ வா”

அதே ஸ்கூட்டி எடுத்து கொண்டு, வழக்கம் போல் 200 அடி ரேடியல் சாலையில் பயணித்தவள், அன்று விழுந்து தன் உயிரை தானே மாய்த்து கொள்ள எண்ணிய கீழ்க்கட்டளை ஏரியில் வந்து நின்றாள், ஒரு மெல்லிய புன்னகையோடு…🙂🙃 

நான்கு ஆண்டு அவளின் போராட்டங்கள், அவளை வெகுவாக மாற்றி இருந்தது!! 

அவளை சிறு வயதில் அச்சுறுத்திய தனிமையும் இருளும், இப்பொழுது அவளுக்கு நிம்மதியையும் அமைதியையும் நல்குகிறது… தனி பெரும் துணையாக, அவளுக்கே அவளுக்கான இருப்பிடம் வந்தவள், ஜன்னலின் சீலை இழுத்து மூடி உலகின் சலனத்தில் இருந்து திரையிட்டு விலகி கொண்டவள், மெத்தையில் படுத்து ஒரு ஆழ்ந்த நிம்மதியான நித்திரையில் ஆழ்ந்தாள்💤✨

ஆயிழை அவள் ஆசை கொண்டது போல், தடைகளை தாண்டி லட்சியத்தை எட்டி பிடித்து விட்டாள்… இனியும், அவள் போராட்டமான வாழ்வு தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை!!⚡

அவளோடு இந்த வாழ்வின் கதையில் பயணித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள் மக்களே 🩷🩷

Not every closure needs explanation!!

Some requires only acceptance…

ஜெஷ்வந்த் நிலை என்ன ஆனது!!? 

என நீங்கள் கேட்கலாம்…

ஷ்ரேயா இது போல் வீட்டில் மாட்டிக் கொண்ட மறு நாளே, நடந்தவற்றை அவரிடம் தெரிவிக்க அவர்கள் குடும்பமாக தங்கி இருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் வேலை செய்யும் ஆன்டி இடம் மொபைல் வாங்கி, அவனுக்கு அழைப்பு விடுத்தாள்…

அவனின் 10 இலக்கு எண் இவளுக்கு மனப்பாடமாக தெரியும்!! 

“ஹலோ”

“ஹான் ஹலோ!! நான் தான் டா…” என உயிர் போகும் அளவு பயத்துடன், சுற்றி முற்றி பார்த்த படி அவள் பேசினாள்…

“ நான் தான்னா யாரு…?!!!”

“டேய் நான்…….” என்றவள் அப்படியே உறைந்து போனாள், எதிர் முனையில் அவன் பேசுவதை கேட்டபின்…

“ஹேய் இலக்கியா!! நில்லு குட்டி மா…. நானும் வரேன்!!” என அவன் கல்லூரியில் படிக்கும் தோழி கனவில் வந்தாளே, அவளுடன் இவன் வெளியில் இருப்பது அப்பட்டமாக அவர்களை சுற்றிலும் கேட்கும் வாகன சத்தமே சொல்லாமல் சொல்லியது… இன்று ஒன்னும் சனி அல்லது ஞாயிற்று கிழமையோ இல்லை!! கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் பொய் சொல்லி விட்டு, அவளோடு வெளியில் சென்று இருக்கிறான்.…

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் ஷ்ரேயா அப்படியே அழைப்பை துண்டித்து, ஒரு கசப்பான புன்னகையோடு வீட்டிற்கே திரும்பி சென்று விட்டாள் மாடிபடி ஏறி…

எந்த விளக்கமும் இன்றி அவளுக்கு 

புரிந்து போனது!!🙂

“ஒரு கட்டத்தில்

யாருடைய காதலியாக இருக்கணும்னு ஆசை இல்லாம போச்சு.

யாருடைய நெருங்கிய தோழியாக,

யாருடைய முதன்மை மனுஷியா இருக்கணும்னு கூட 

வேண்டாம்னு தோணிச்சு…

அதுக்குக் காரணம்

நான் அக்கறை படுறதை 

நிறுத்திட்டேன் என்பதல்ல…

என்னை “முக்கியமானவளா” 

உணர வைக்க

நான் எப்போதும் இவ்வளவு 

முயற்சி செய்ய வேண்டியதா

என்பதில்தான் நான் சோர்ந்துட்டேன்…

காத்திருந்து இருந்து சோர்ந்தேன்.

நம்பிக்கையோட காத்திருக்க சோர்ந்தேன்.

சில நேரங்களில் மட்டும் 

மதிப்பு கிடைக்கற

அந்த உணர்விலிருந்து 

நான் தளர்ந்துட்டேன்…

அதனால் தான்

நான் என்னையே தேர்ந்தெடுத்தேன்..!!

அமைதியான நாட்களை தேர்ந்தெடுத்தேன்.

குறைந்த எதிர்பார்ப்புகளை தேர்ந்தெடுத்தேன்.…

யாரோ ஒருவரின் வாழ்க்கையில்

இடம் பிடிக்க வற்புறுத்துவதை விட

அமைதியை தேர்ந்தெடுத்தேன்.…

ஆனா இதுல யாரும் 

கவனிக்காத ஒன்று இருக்கு…

அவளோட மனசு சிதறுறப்போ,

அவள் உடைந்து அழறப்போ கூட

“சரி பண்ணிக்கோ 

நாங்களும் இப்படி ஆகும்னு 

எதிர் பார்க்கலை!!” என்று 

இயல்பாக சொல்லும் பெற்றோர்களுக்கு 

கூட புரியவில்லை அவள் மனம் 

கொண்ட போராட்டம்!!

6 முறை பெண் பார்த்தல்…

34 வரன்களோடு பேசுதல்…

அவளோட மனநலத்தை

ஒரு விஷயமா கூட எடுத்துக்காதவர்கள்.

உடம்பு வலிச்சா உடனே 

கவலைப்படும் உலகம்,

மனம் வலிக்கறப்போ

“அதெல்லாம் மனசு தான்”னு தள்ளிவிடும்.

அவளோட அமைதி குலையறதைக் 

கூட யாரும் கவனிக்க மாட்டாங்க…

இப்போ அவளுக்கு

பெரிய காதல் வேண்டாம்.

அதிக கவனம் வேண்டாம்.

வெறும் உண்மை போதும்..!!!

அமைதி போதும்..!!!

கேட்காமலே 

அருகில் இருப்பவர்கள் போதும்…

அதுவே…

இப்போ அவளுக்கு போதுமானது…🖤”

0 expectations 0 hurt ❤️‍🩹

மொத்த வார்த்தைகள் = 38,040💫

Thanks for your journey with shreya🩷✨

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page