மௌன ராகம் 15

அத்தியாயம் 15:

​அந்தப்குறுகிய நேரத்தில் சசி தனது நெருங்கியஉறவினர்களை அழைத்திருந்தார். மண்டபமே ஒரு தேவலோகத்தைப் போலக்காட்சியளித்தது. அதிகாலை நான்கு மணி. கோயம்புத்தூரின் இதமானகுளிர்காற்று மல்லிகைப் பூக்களின் வாசனையைச் சுமந்து வந்து மண்டபத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் விநியோகித்துக் கொண்டிருந்தது. நாதஸ்வரத்தின் ‘கல்யாணி’ ராகம் காற்றில் ஒரு தெய்வீகமான அதிர்வைஏற்படுத்திக் கொண்டிருக்க, அக்னி குண்டத்தில் இருந்து எழுந்த புகையும், சந்தனத்தின் மணமும் சேர்ந்து ஒரு ரம்மியமான சூழலைஉருவாக்கியிருந்தது.

​கவிவர்ஷன்மணமேடையில் அமர்ந்திருந்தான். பட்டு வேட்டி, சட்டையில் அவன் ஒரு ராஜகுமாரனைப்போலத் தெரிந்தாலும், அவனது கண்கள் மட்டும் இன்னும் நிலைகொள்ளாமல் நுழைவாயிலையே பார்த்துக் கொண்டிருந்தன. அவன் இதயம் ஒருதபேலாவைப் போல வேகமாகத் துடித்தது. இது பயம் அல்ல; மூன்றுவருடத் தாகம் தீரப்போகும் ஒரு உன்னத தருணத்திற்கானகாத்திருப்பு.

​”மணமகளை அழைத்துவாருங்கள்!”  அர்ச்சகரின்குரல் எதிரொலித்தது.

​மேனகாவும், தோழிகளும் சூழ பிரக்யு மெல்லஅடியெடுத்து வைத்து வந்தாள். அவளது வருகை ஒரு நதி மலையிலிருந்துஇறங்கி வருவதைப் போல அத்தனை நளினமாகஇருந்தது. சிவப்பு நிறக் காஞ்சிபுரம் பட்டுப்புடவையில், உடல் முழுவதும் ஜொலிக்கும்தங்க நகைகளுடன் அவள் ஒரு தேவதையைப்போலக் காட்சியளித்தாள். அவளது கூந்தலில் சூடியிருந்த மல்லிகைச் சரம் அவளது பாதத்தைத்தொட்டுத் தாலாட்டியது.

​அவள்மேடைக்கு அருகில் வந்தபோது, கவிவர்ஷன் மெல்ல எழுந்து நின்றான். இருவரின் கண்களும் ஒரு நொடி சந்தித்தன. அந்த ஒரு நொடியில் ஆயிரம்கவிதைகள் பரிமாறப்பட்டன. பிரக்யுவின் கன்னங்கள் மெல்லச் சிவந்தன. அவள் தலைகுனிந்தபடி அவன்அருகில் வந்து அமர்ந்தாள்.

​சடங்குகள்தொடங்கின. அர்ச்சகர் சொன்னபடி கவிவர்ஷன் பிரக்யுவின் கையைப் பற்றினான். அந்த முதல் தீண்டல்! மூன்று வருடங்களுக்குப் பிறகு அவளது மென்மையான விரல்கள் அவன் கையைப் பற்றிய போது, கவிவர்ஷனின்உடலில் ஒரு மின்னல் பாய்ந்ததுபோல இருந்தது. பிரக்யுவின் கைகள் சற்றே நடுங்கின. கவிவர்ஷன் அவளது விரல்களை இன்னும் அழுத்திப் பிடித்து, “நான் இருக்கிறேன்” என்று சொல்லாமல்சொன்னான்.

​”கவி… உன்கை இப்போ ரொம்பச் சூடா இருக்கு,” என்றுபிரக்யு மெல்ல முணுமுணுத்தாள்.

​கவிவர்ஷன்அவளது காதோரம் குனிந்து, “மூணு வருஷமா எரியுறதணல் இப்போ தான் அணையப் போகுது பிரக்யு. அதான் இந்தச் சூடு,” என்றான் குறும்புத்தனமான குரலில்.

​பிரக்யுவின்முகம் இன்னும் சிவந்தது. அவள் அவனை லேசாகக்கிள்ளினாள். அந்தச் சிறிய சீண்டலில் அவர்களின் பழைய கல்லூரி நாட்கள்மீண்டும் உயிர் பெற்றன.

​”கெட்டி மேளம்… கெட்டி மேளம்!”

​மேளச் சத்தம் விண்ணைத்தொட்டது. கவிவர்ஷன் அந்தப் பொன்னிறத் தாலியைத் கையில் எடுத்தான். அந்தத் தாலியில் அவர்களின் எதிர்காலக் கனவுகள் அனைத்தும் அடங்கியிருந்தன. அவன் பிரக்யுவின் முகத்தைஏறிட்டுப் பார்த்தான். அவளது விழிகளில் கண்ணீர் திரண்டு நின்றதுஅது கடந்த காலத்தின் கசப்புகளைத் துடைக்கும் ஆனந்தக் கண்ணீர்.

​அவன்அவளது கழுத்தில் அந்தப் புனிதமான நாணைக் கட்டினான். முதல் முடிச்சு போடும்போது, “இனி நீ எனக்குமட்டும் தான்” என்று அவன் இதயம் சொன்னது. இரண்டாவது முடிச்சில், “உன் துன்பங்கள் அனைத்தும்இனி என்னுடையது” என்று உறுதி எடுத்தான். மூன்றாவது முடிச்சு இட்டபோது, “நம் காதலுக்கு மரணமேஇல்லை” என்று முற்றுப்புள்ளி வைத்தான்.

​ சசிக்கும்  மீனாவிற்கும்  மனநிறைவாக  இருந்தது. மணமக்களை மனநிறைவாக ஆசிர்வாதம் செய்தனர் உறவினர்களும் அட்சதையைத் தூவி ஆசிர்வதித்தனர். பூக்கள்மழையாகப் பொழிந்து அவர்களின் உடலை நனைத்தன. கவிவர்ஷன்பிரக்யுவின் நெற்றியில் குங்குமத்தை இட்ட போது, அவனது கை விரல்கள் அவளதுபுருவத்தை மென்மையாக வருடின. அந்த ஸ்பரிசத்தில் பிரக்யுஒரு நிமிடம் கண்களை மூடி அந்த சுகத்தைஅனுபவித்தாள்.

​சடங்குகள்முடிந்து, இருவரும் ஒரு சிறிய இடைவேளையில்மணமகளறைக்குச் சென்றனர். அங்கே உறவினர்கள் யாரும் இல்லாத அந்தச் சில நிமிடங்கள் அவர்களுக்குவரப்பிரசாதமாக அமைந்தது.

​கவிவர்ஷன்கதவை மெல்லச் சாத்தினான். பிரக்யு ஜன்னல் ஓரம் நின்று வெளியேதெரிந்த மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கவி மெதுவாக அவள்பின்னால் சென்று, அவளது தோள்களில் கைகளை வைத்தான்.

​பிரக்யுதிடுக்கிட்டுத் திரும்பினாள். “கவி… யாராவது பார்த்திடப் போறாங்க.”

​”பார்க்கட்டுமே! இப்போநீ என் மனைவி. உன்னைத்தொட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு,” என்று சொல்லிவிட்டு, அவளது முகத்தை இரு கைகளாலும் ஏந்திக்கொண்டான்.

​அவளதுநெற்றியில் தனது இதழ்களை மெதுவாகப்பதித்தான். அது ஒரு முத்தம்மட்டுமல்ல; அது ஒரு கவிஞன்தன் கவிதைக்கு இட்ட மகுடம். பிரக்யுஅவனது மார்பில் சாய்ந்து கொண்டாள். அவனது இதயத் துடிப்பு அவளது காதுகளில் ஒரு இசையைப் போலஒலித்தது.

​”கவி… லண்டன்லஎன்னை நினைச்சியா?” என்று அவள் ஏக்கமாகக் கேட்டாள்.

​”ஒவ்வொரு பனித்துளியும்உன் நினைவைச் சுமந்து வந்து என் கன்னத்தைத் தீண்டும் போது, நான் உன் முத்தத்தை உணர வேண்டியிருந்தது. ஆனாஇப்போ… இதோ நிஜமாவே நீஎன் பக்கத்துல இருக்க,” என்று சொல்லி அவளது கைகளைப் பற்றி முத்தமிட்டான்.

​அவளதுமெரூன் நிற மெஹந்தி பூசியகைகள் அவன் வெள்ளை நிறச்சட்டையின் மேல் ஒருஅழகான ஓவியத்தைப் போலத் தெரிந்தன. கவிவர்ஷன் அவளது காதுகளில் இருந்த ஜிமிக்கியை மெல்ல ஆட்டினான்.

​”இந்த ஜிமிக்கிஆடுற அழகைப் பார்க்கவே நான் இன்னும் ஆயிரம்கவிதைகள் எழுதுவேன் பிரக்யு,” என்றான்.

​பிரக்யுசிரித்தாள். அந்தச் சிரிப்பில் இருந்த சங்கீதம் கவிவர்ஷனை மயக்கியது. “கவிதை அப்புறம் எழுதலாம்… இப்போ எனக்குப் பசிக்குது,” என்று அவள் செல்லமாகச் சொன்னபோது, கவிவர்ஷன் அவளை இன்னும் நெருக்கமாகஅணைத்துக் கொண்டான்.

​அதேசமயம், மண்டபத்தின் வெளியே ஹர்ஸாவோடு அவர்களின் காட்ஸ் தனபாலின்ஆட்களை முறியடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்தச் சத்தம் கூட இந்த இருவரின்காதலுக்கு இடையூறாக இருக்கவில்லை. கவிவர்ஷன் தனது ஒரு கையால்உலகத்தை வெல்லத் தயாராக இருந்தான், மற்றொரு கையால் தன் காதலியைத் தாங்கிப்பிடிக்கத் தயாராக இருந்தான்.

​ஜன்னல்வழியாகப் புகுந்த சூரியனின்  கதிர், பிரக்யுவின் முகத்தில் விழுந்த போது, அவள் நிஜமாகவே ஒருதங்கச் சிலையைப் போல ஜொலித்தாள்.

கதவுதட்டும் சத்தத்தில் இருவரும் விலகி நின்றனர். கவி கதவைத் திறக்கமேனகாவும் மீனாவும் நின்றிருந்தனர்.

“கெஸ்ட் வாராங்க வாங்க  என்றவர்கள் மணவறையை நேக்கிச் சென்றனர். அலங்கரிக்கப்பட்ட இருக்கையில்அமர்ந்தனர் இருவரும். உற்றார் உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் தொழில்துறை நண்பர்கள் என பலர் வருகைதர சற்று பரபரப்புடன் இருந்தது அவ்வேளை. புகைப்படக் கலைஞரும் தன் திறமையை காட்டசுற்றி வளைத்து. புகைப்படம் எடுத்து தள்ளினான். உறவினர்கள் மெல்ல மெல்ல கலைய “வீட்டுக்கு போகணும் விளக்கேற்றனும் என்றார் மீனா. அதன்படி  மணமக்கள்இருவரும் கவி வர்ஷனின் வீட்டிற்கு. புறப்பட்டனர். கவியின் வீடோ நடுத்தர அமைப்பிலான அழகான வீடு. திருமணத்திற்கு வந்த முக்கியமான சிலரும்  மீனா, சசி, ரூபன், மேனகா அனைவரும் மீனாவின் வீட்டிற்கு வந்தனர். கவியும், பிரக்யுவும், ஹர்ஷாவும் மறுகாரில் வந்திறங்கினர். அவ்வீட்டின் முன்பகுதி கண்ணைக் கவரும் தோட்டமும் சீராக பராமரிக்கப்பட்டு அழகாக இருந்தது. வீட்டினுள் அனைவரும் நுழைய வீடோ மிக மிக நேர்த்தியாக அழகாகஇருந்தது. பூஜை அறையில் “பிரக்கியும்மாவிளக்கேற்று” என வத்திப் பெட்டியைமீனா கொடுக்க. பிரக்யுவும் கடவுளை வணங்கி விளக்கேற்றினாள். அங்கும் சில சம்பிரதாயங்கள் முடிய. “மீனாவோ மற்ற சடங்கு” எனமேனகாவிடம் இழுக்க “எல்லாம் வீட்ட ஏற்பாடு பண்ணி இருக்கு” என்றார். மீனாவிற்கோ மனதில் ஒரு வலி. மூன்றுவருடங்களின் வீட்டிற்கு வந்த மகன் தங்கள்வீட்டில்  ஒருநாள் கூட தங்கவில்லையே என  மிகவும்கவலை கொண்டார்.  பக்கவாட்டாகமீனா திரும்ப கவியின் முகத்தில் என்றும் இல்லாத பூரிப்புடனும் சந்தோஷத்துடன். பிரக்யுவிற்கு பழைய ஆல்பத்தை காட்டிக்கொண்டிருந்தான். மகனின் விருப்பத்திற்கே முன்னுரிமை படுத்தியவர். “சரி சம்பந்தி” என்றார்மீனா மனதே இல்லாது  மீண்டும் ரூபனின் வீட்டிற்கு புறப்பட்டனர். திருமணம் முடிந்து விட்டால் போல தாய் மகனின்பாசம் குறைந்திடுமா என்ன.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page