அத்தியாயம் 8

அத்தியாயம் 8

வரிசையாக முத்துப்பற்கள் மின்ன சிரித்துக்கொண்டு , காதில் இருக்கும் ஜிமிக்கி குலுங்கும் வண்ணம் பேசி  கொண்டிருந்த மித்ராவை , கண்களில் ஜொலிக்கும் கோபத்தோடு வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்..!!

தன்னைக் கண்டாலே பயந்து நடுங்கி கொண்டும் அல்லது அருவருப்போடு விலகி செல்லும் மித்ராவின் முக பாவத்தை அவன் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டான்..

அப்படிப்பட்டவளின் முகத்தில் இப்பொழுது எல்லை இல்லாத மகிழ்ச்சி பொங்குவது போலவும் அழகிய சிரிப்பு இதழ்களில் பூத்திருப்பது போலவும் காணப்பட்டது..

தான் காண்பது கனவா? அல்லது நிஜமா ??என்று ஒரு முறை யோசித்துப் பார்த்துவிட்டு, கண்களை இரு முறை சிமிட்டினான்..

பொய்யில்ல நிஜமே தான்..

 அவள் தன் தாயுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாள்.. அதுவும் புன்னகை புரிந்து கொண்டு..

இவளுக்கு இவ்ளோ அழகா சிரிக்க கூட தெரியுமா??

இவ சிரிச்சா இம்புட்டு அழகா இருப்பான்னு இப்பதானே தெரியுது?? கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்?? எப்ப பார்த்தாலும் சிடுமூஞ்சி மாதிரி என்கிட்ட மூஞ்சிய வச்சுக்கிட்டு இருக்கா , இல்லன்னா அழுமூஞ்சி மாதிரி இருக்கா..

இப்படி இருந்தா யாருக்கு தான் பிடிக்கும்??

ஆனா எதுக்காக என்கிட்ட மட்டும் அப்படி நடந்துக்கணும்??

 எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி இருந்தா இவளுடைய இயல்பு இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டு விலகி செல்லலாம்..

 ஆனால்,  இவ என்கிட்ட மட்டும் தான் இப்படி இருக்கா.. அம்மா கிட்ட மட்டும் நல்லா சிரிச்சு பேசுறாளே அது எப்படி ??

அப்ப என்னை பார்த்தா அவளுக்கு எப்படி தெரியுது??

சந்தேகமே வேண்டாம் கண்டிப்பா நீ ஒரு முரட்டு ஆசாமி தான்.. சரியான காட்டுமிராண்டி அதுவும் நேத்து நீ நடந்து கொண்ட முறைக்கு.. நிச்சயமா அவள் உன்னை விரோதி போல தான் பார்ப்பா.. என்று அவனுடைய உள் மனம் அவனுக்கு எடுத்துரைத்தது..!!

சிரித்து கொண்டிருந்த இரு பெண்களும் ஒரு கட்டத்தில் நிமிர்ந்து வாசலை எதார்த்தமாக பார்க்க..

 அங்கே நின்று கொண்டிருந்த தீரனை காணவும் இருவரின் முகத்திலிருந்த புன்னகையும் ரப்பர் வைத்து அழித்தது போல நொடியில் காணாமல் போனது..!!

ஏதோ பேயை கண்டது போல இருவரின் முகமும் அச்சத்தை அப்பி கொண்டது..!!

“ வாப்பா தீரா.. நேத்து நைட்டு வெளியே கிளம்பி போன திரும்ப வீட்டுக்கு வரவே இல்லை ஏதாவது அவசரமா வேலை விஷயமா போயிட்டியா??”

தன் அன்னையின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

எப்படி சொல்லுவான் அவன்??

வேலை விஷயமாகவோ அல்லது மீட்டிங் காரணமாகவோ வெளியே சொல்லவில்லை.. இவள் பார்வையும் நடவடிக்கையும் என்னை சித்திரவதை செய்கிறது அதனால் இங்கே இருக்க முடியாமல் இங்கிருந்து சென்றுவிட்டேன்.. அதுவும் எங்கோ போய் ரூம் எடுத்து தங்கி இரவு முழுக்க மது அருந்திவிட்டு இப்பொழுது தான் வீட்டிற்கு வருகிறேன் என்று எப்படி கூறுவது..??

இதையெல்லாம் கூட சொல்லிவிடலாம் போல.. ஆனால் தான் செய்த இன்னொரு செயலை எப்படி சொல்லுவது..?? என்று எண்ணினான் அவன்.

” என்னப்பா பார்க்க ரொம்ப சோர்வா தெரியுறியே குளிச்சிட்டு வந்து சாப்பிடு வா”, என்று அழைத்தார்.

” கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் மா”, என்றவன் மித்ராவை ஆழமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மாடி ஏறினான்.

அவன் அங்கிருந்து செல்லும் வரை அவளுக்கு மூச்சே இல்லை..

 அவன்  அகன்ற பிறகு தான் அவளின் மூச்சு சீராக வெளி வந்தது..

அதன் பிறகு தான் நிம்மதியாக உண்ண தொடங்கினாள்..

மாடிக்கு வந்த தீரனின் மனதில் கோபம் கொளுந்து விட்டு எரிந்தது..!!

தன்னுடைய கடை கண் பார்வைக்காக எத்தனை கன்னிகள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. இந்த தீரனின் பார்வை தன் மீது படாதா?? அவனுடைய கை விரல்கள் தன் மேனியை தீண்டாதா?? என்று எத்தனை பெண்கள் ஏங்கி தவிக்கிறார்கள்..

 அப்பேர்ப்பட்ட என்னை பார்த்து அருவருப்பாக பார்ப்பதும், வெறுப்போடு விலகி செல்வதுமாக இருக்கிறாளே இந்த மித்ரா..!!

இவளை என்ன வலுக்கட்டாயமாக இழுத்து வந்து தாலி கட்டி இவளுடன் குடும்பம் நடத்த பார்க்கிறேனா நான், இப்படி விலகி போவதற்கு??

இவளை மட்டும் அன்னைக்கு சந்திக்காமல் இருந்திருந்தால் நான் பாட்டுக்கு நிம்மதியா இருந்திருப்பேன் உதவி என்ற பெயரில் என் எதிரே வந்து நின்று விட்டு இப்பொழுது எனக்கு உபத்திரவம் தான் செய்கிறாள் ச்சே..!! என்று தன் நிலையை எண்ணி நொந்து கொண்டான்.

பார்க்கும் பெண்கள் எல்லாம் தன்னை விரும்ப வேண்டும் தன்னை சுற்றி வரவேண்டும் என்று எண்ணும் ஆண் அல்ல அவன்..

 ஆனால் அவனை சுற்றி சுற்றி வரும் பெண்கள் மத்தியில் இவள் மட்டும் தன்னை வெறுக்கும் போது அவனுக்கு விசித்திரமாக தான் இருந்தது..

தனக்குத்தான் எல்லோரும் அடிபணிவார்கள் தன்னிடம் தான் எல்லோரும் பித்து பிடித்து அலைவார்கள் என்பதை மட்டுமே இத்தனை நாட்களாய் பார்த்திருந்து விட்டு இப்போது புதிதாய் இவளின் விலகல் தன்மையை கண்டதும் அவனுக்கு தான் மனம் பித்து பிடிக்க செய்தது..!!

 எல்லாம் தலைகீழாக மாறிக் கொண்டிருந்தது , கொஞ்சம் கொஞ்சமாக..

ஆசையோடு அவளை அணைக்க நெருங்கும் பொழுது அவளிடமிருந்து வெளிப்படும் அந்த பயப்பார்வையும் அருவருப்பான முகபாவனையும் அவன் கண்முன்னே வந்து போனது..

அதை நினைக்க நினைக்க அவனுக்கு உடல் எல்லாம் தீப்பற்றி எரிவது போல இருந்தது..

 அதுவும் நேற்று இரவு அவள் நடந்து கொண்ட முறையை நினைத்து பார்க்கும்பொழுது அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. 

சண்டை போட்டு திட்டி இருந்தால் மீண்டும் கத்தியிருப்பான்  பதிலுக்கு நான்கு கேள்வி கேட்டு சண்டையிட்டிருப்பான் ஆனால் எதுவும் கூறாமல் கண்ணிலிருந்து கண்ணீர் வழிய அவனை அவள் பார்த்த பார்வை இப்பொழுதும் கூட அவன் நெஞ்சை கூறு போட்டது..!!

என்ன பார்வை அது?? கருமம் ச்சே..போட்டு பாடாய் படுத்துகிறது நம்மை..??!!

 தன்னுடைய தலைமுடியை அழுத்தமாக கோதி கொண்டவன் ஜன்னல் அருகே சென்று சிகரெட் பிடிக்க தொடங்கினான்..

நேற்று இரவு இதே அறையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நினைவுக்கு வந்தது அவனுக்கு..!!

மித்ராவிடம் தன் ஆசைகளை தீர்த்துக் கொள்ள எண்ணி அவன் அவளிடம் நெருங்க கடைசியில் அவளுடைய கண்ணீர் அவனை தடுத்து நிப்பாட்டி அங்கிருந்து விரட்டி அடித்து விட.. அங்கிருந்து வேகமாக மனம் குழம்பி சென்றவன்.. உடனடியாக உயர்தர ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி மது பாட்டில்களை வரவழைத்து மூக்கு முட்ட குடித்துவிட்டு தன்னுடைய ஏக்கங்களையும் தாபங்களையும் தீர்த்துக் கொள்வதற்காக அதிகபட்ச விலை கொடுத்து அவனுடைய ஆசைக்கு இணங்க சொல்லி ஒரு பெண்ணை  வரவழைத்திருந்தான்..

இதற்கு முன்பும் அவனுடன் அந்தப் பெண் நெருக்கமாக இருந்திருக்கிறாள் தான்.. எப்பொழுதெல்லாம் அவனுக்கு தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் அவளை அழைத்து தன்னுடைய திருவிளையாடல்களை தொடங்குவான்.

நேற்று இரவு கூட அதே போல தான் தன்னுடைய திருவிளையாடல்களை தொடங்கினான்..

தொடங்கத்தான் முடிந்ததே ஒழிய அவனால் அதை நீடிக்க செய்யவும் முடியவில்லை.. முடிவை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்க கூட முடியவில்லை என்று தான் கூற வேண்டும்..!!

ஆம், அந்த பெண்ணுடன் அவனால் இயல்பாக பழையபடி உல்லாசமாக இருக்க முடியவில்லை..

ஒவ்வொரு முறை அந்த பெண்ணை நெருங்கும் பொழுதும் முத்தமிட முயலும் பொழுதும் மித்ராவின் முகமே அவன் கண் முன் வந்தது..!!

அவளுடைய கண்ணீர் தேங்கிய கரு விழிகளும்.. பயத்தில் துடித்த அதரங்களும் நினைவுக்கு வந்து அவனை இம்சித்தது..!!

அடுத்த கணம், தன் மீது கிடக்கும் அந்தப் பெண்ணை தள்ளி விட்டுவிட்டு எழுந்து நின்றான் தீரன்..

” பேபி.. எங்க போற ?? என்ன ஆச்சு??”, என்று பிதற்றிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் குரலை அவன் காது கொடுத்து கூட கேட்கவில்லை..

” ஏய் ஒழுங்கு மரியாதையா நான் சொல்லும்போதே இங்கிருந்து கிளம்பி போயிடு.. இல்லன்னா நடக்கிறதே வேற.. ஒரு நிமிஷம் கூட இனி நீ என் கண் முன்னாடி இருக்க கூடாது அதுக்கு அப்புறம் நீ வேற தீரனை பார்ப்ப..”, என்று அவளை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

இது போல் ஒரு நாளும் நடந்தது இல்லையே..

 தான் நினைத்ததை அடைந்தே தீருவான் தீரன்..

எக்காரணத்தை கொண்டும் முன் வைத்த காலை பின் வைத்தது கிடையாது.. ஒரு விஷயம் வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதை அடைந்தே தீர வேண்டும் அவனுக்கு.. அது தான் தீரன்..!!

அப்படிப்பட்டவன் இன்று தடுமாற்றத்துடன் நடந்து கொள்வதை  பார்க்கும் பொழுது அவனுக்கே சற்று வித்தியாசமாக தென்பட்டது தன்னுடைய நடவடிக்கையை பார்க்கையில்..!!

இருந்த கோபத்தில் இரவெல்லாம் மதுவை மஞ்சம் முழுக்க நிறைத்து வைத்துக் கொண்டு அதை பருகி கொண்டிருந்தான்..

அப்போதாவது தன் கோபம் தனியுமா தூக்கம் வருமா என்று எதிர்பார்த்தான்.. ஆனால் குடிக்க குடிக்க மித்ராவின் நினைவு தான்  அதிகமாக வந்தது அவனுக்கு..

குரங்கை நினைக்காதே என்று சொல்லும் கதை போல..  அவளுடைய நினைப்பே வேண்டாம் என்று மறக்க நினைக்கும் பொழுது தான் அவனுக்கு அவளுடைய நினைவுகள் வந்து வந்து போனது..

பல காலமாக காதலித்த ஒன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை பல வருட பழக்கமும் கிடையாது அவளுக்கும் அவனுக்கும்..

 ஆனால் அவளுடைய கண்களும் இதழ்களும் மாறி மாறி கண் முன் வந்து அவனுக்கு ஆட்டம் காட்டியது..!!

உடனடியாக மித்ரா வேண்டும்.. அவளுடைய அணைப்பில் கிடக்க வேண்டும்.. அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தமிட வேண்டும் என்று அவனுடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் அவனை நெட்டி தள்ளியது தாறுமாறாக..!!

அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்ட ஒரு வழியாக உறங்கி எழுந்தான்..

அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்தவுடன் முதல் வேலையாக அறையை காலி செய்து கொண்டு தன் வீட்டை நோக்கி வந்தான்..

வந்ததும் ஒரு குளியலை போட்டுவிட்டு அலுவலகம் சென்று விடலாம் என்று தான் எண்ணினான்.. ஆனால் வீட்டிற்குள் நுழையும் பொழுதே அவளுடைய சிரிப்பு சத்தமும் பேச்சு சத்தமும் அவன் காதுகளில் விழவும், வீட்டிற்கு யாராவது விருந்தாளி வந்து விட்டார்களா என்று சந்தேகமாகத்தான் வீட்டிற்குள் நுழைந்தான்..

அதிகமாக மித்ராவின் குரலையோ அல்லது அவளின் சிரிப்பொலியையோ அவன் கேட்டதில்லை..

சொல்லப்போனால் கேட்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் கூற வேண்டும்..

அவள் கழுத்தில் அவன் தாலி கட்டிய அடுத்த நிமிடத்தில் இருந்து இதோ நேற்று வரை அவள் முகத்தில் தேங்கியிருந்தது எல்லாம் பயம்.. பயம்.. பயம்.. பயம் மட்டுமே தான்..!!

அப்படி இருக்கும்பொழுது அவளுடைய குரல் எப்படி இருக்கும் அவள் சிரித்தால் எப்படி இருக்கும் என்று அவன் ஒரு நாளும் பார்த்ததும் கிடையாது ஏன் கற்பனை பண்ணி கூட பார்த்தது கிடையாது.. 

இப்பொழுது தன் கண் முன்னே அவள் வரிசை பல் மின்ன சிரிக்கும் அழகை கண்டவுடன் அவனுக்குள் பலவித உணர்ச்சிகள் பொங்கி வழிந்தது..

முத்துப் பற்கள் மின்ன அவள் சிரிக்கும் பொழுது.. அந்த அதரங்களை கடித்து சுவைக்க வேண்டும் என்று தோன்றியது அவன் பாழாய்ப்போன மனதிற்கு..

அது எதுவும் நிறைவேற்ற முடியாமல் போய்விட.. இப்பொழுது அந்த கோபத்தையும் ஜன்னல் கம்பியில்  தன் கைமுஷ்டிகளை கொண்டு காட்டினான் அவன்..!!

கையில் இருந்த சிகரெட் முழுதாக கரையும் முன்பே அறையின் கதவு மெல்ல திறக்கும் சத்தம் கேட்கவும்..

ஒருவேளை அம்மாவாக இருக்குமோ என்று திடுக்கிட்டு போய் திரும்பிப் பார்த்தான்..

ஆனால் அங்கு நின்று கொண்டிருந்தது அகமித்ரா..!!

– தொடரும்..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page