ஒரு நிம்மதியான தூக்கத்திலிருந்து பயந்து எழுந்திருச்சு உட்கார்ந்தான்.
ஏன்னா பக்கத்துல இருந்த அவனோட காதலி அங்க காணோம்.
நிலா நிலான்னு வீடு முழுவதும் சத்தம் போட்டு கூப்பிட்டாலும் கூட அவள் இருக்கேன் என்ற பதில் சொல்லாமல் இருந்ததும் அவன் பதறிப் போய் விட்டான்.
வேகமா எழுந்திருச்சு வீடு முழுவதும் தெரியும் நான் பின்பக்க தோட்டம் அங்கு எங்கன்னு தேடி பார்த்து கிறுக்கு புடிச்சவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,
அப்போதான் அவனுக்கு ஞாபகம் வந்தது அவள் ஏதோ தூங்கிட்டு இருக்கும்போது பேசிக்கிட்டே இருந்தாலே…
நான் அதை சரியா கவனிக்க கூட இல்ல ஆனா நானும் பதில் சொன்ன மாதிரி இருக்கு.
நைட்டு நான் முழிச்சு பார்க்கும்போது அவள் கண்ணில் கொஞ்சம் கூட தூக்கமே இல்லை,. அட முட்டாள்..
அதை கவனிக்கவே இல்லையா?…
இப்படி அவனை அவனே திட்டிக்கிட்டு இப்ப வேகமா அவளை தேடிட்டு போனான். அவள் எங்க இருப்பான் என்று அவனுக்கு ஒரு அளவுக்கு தெரியும் எப்படியும் தன்னுடைய வீட்டுக்கு போய் அவங்க கிட்ட பேசுறதுக்கு முயற்சி பண்ணுவான்னு நேரா அங்க போய் பார்க்க,
அங்கே ஏதோ ரொம்ப அழுதபடி நின்னுட்டு இருந்தா அதை பார்த்ததும் அவன் மனசு நொறுங்கி போயிடுச்சு அவள் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக்கூடாது நினைச்ச அவன் கண்ணு முன்னாடியே அவள் கண்ணீரோடு நின்னுட்டு இருந்தா அதை பார்த்ததுமே அவன் வேகமா அவளின் தோள்பட்டையை பிடித்துக் கொண்டு அங்கிருந்து அவளை அழைத்து வர,
உண்மையிலேயே அவளுக்கு ரொம்ப பூரிப்பாக இருந்துச்சு. எல்லா கைகளுமே அவளை வேண்டாம் என்று ஒதுக்கிய அந்த நேரத்துல அவனுடைய கைகள் மட்டும் அவளை தன்னுடைய உள்ளங்கைகளுக்குள்ள வச்சு தாங்குற மாதிரி இருந்துச்சு.
அதைப்போல இத்தனை வருஷமா தன்னுடைய தங்கச்சி தன்னை ரொம்ப கேவலமாக நடத்தி இருக்கா ஆனா அவ முன்னாடியே இப்போ ரொம்ப கெத்தாக தனக்குன்னு ஒருத்தன் இருக்கான் பாரு இந்த உலகத்தில் ரொம்ப அழகானவன்னு சொல்லாம அவளுக்குள் இருந்த பெருமிதம் இருக்கே…
அது சொல்றதுக்கு வார்த்தையே இல்லை. இப்போ அவள் தலை நிமிர்ந்து ரொம்ப சந்தோஷமாக அவனோடு நடக்க ஆரம்பிச்சா,
இரு ஒரு நிமிஷம் ஆட்டோ பிடிக்கிறேன் என்று சொல்லிட்டு அவன் ஒரு ஆட்டோவை வர வைத்து அவளை பத்திரமாக ஏத்திக்கிட்டு அங்கிருந்து கிளம்ப,
என்ன ஆச்சு திடீர்னு?…
அம்மாவை பாக்கணும் போல தோணுச்சா என்ன?.. சொல்லியிருந்த நானே கூட்டிட்டு வந்து இருப்பேன். சரி காலையில டிபன் இங்கேயே சாப்பிட்டு போயிடலாம் இப்படி சொல்லி அவன் வேற எதுவுமே கேக்கல ஆனா அவனுக்கு ஏதோ ஒன்னு புரிஞ்சு இருக்குன்னு மட்டும் அவளுக்கு தெரிஞ்சது.
அவருக்கு பிடிச்ச மாதிரியான சாப்பாடா வாங்கி அவளை சாப்பிட வச்சான் அவன் வெயிட் பண்ணிட்டு இருந்தான் அவள் கிட்ட இருந்து தானாக பதில் வரட்டும் என்று…
சாப்பிட்டு முடித்ததுமே இப்ப மறுபடியும் அவளை வீட்டிற்கு கூட்டிட்டு போனான்.
போட்டது போட்டபடி அப்படியே இருந்தது அவனாகவே எல்லாத்தையும் எடுத்து மடிச்சு வச்சுட்டு இருந்தான் ஆனால் அவள் மட்டும் ஒரு ஓரமாக உட்கார்ந்து இருந்தாள்.
அவள் மனசு மட்டும் ஏதோ ஒரு குழப்பத்திலேயே இருந்துச்சு அவன் கிட்ட பேசவா வேண்டாமா என்ற ஒரு சந்தேகம். நான் எப்படி யோசிச்சேன் ஆனாலும் அப்படி யோசிக்கவே இல்லையே… ஒரு வேலை நானே தப்பா எதுவும் நினைச்சுட்டேனோ?..
இப்படி கேள்வியோடு அவளுக்கு ஒரு பக்கம் கண்ணீரும் பெருக்கெடுத்து ஓடி வர,
அவன் எல்லாத்தையும் எடுத்து வச்சு முடிச்சுட்டு டிரஸ் எல்லாத்தையும் கொண்டு போய் வாஷிங் மெஷின்ல போட்டான். வேற ஏதாவது துவைக்கிறது இருக்கா?… இப்படி கேட்கும் போது அவள் மட்டும் அமைதியாக உட்கார்ந்து இருந்தா,
நிலா..
உன் கிட்ட தான் கேட்கிறேன். என்ன ஆச்சு?… ஏன் இப்படி அமைதியாக உட்கார்ந்து இருக்கிறாய் என்று சொல்லி கேட்கும் போது, அவள் கிட்ட இருந்து எந்த பதிலும் வரல அவன் பக்கத்தில் போய் நிலான்னு அவளோட கைகளை தொட்டதும்,
எங்கிருந்து வந்ததுன்னு தெரியல அடக்கி வைத்திருந்த அழுகை மொத்தமா அவன் முன்னாடி அல்லது அவனோட கைகளை தன் முகத்தோட இருக்கப்போகிறது ஏதோ ஒரு மிகப்பெரிய தப்பு பண்ண மாதிரி கதறி அழுதுட்டு இருந்தா… அவள் அழுகிறதை பார்த்ததுமே,
என்ன ஆச்சு?…
நான் எதாவது தப்பு பண்ணிட்டேனா?… நைட் நீ தூங்காம இருந்தப்போ உன்ன நான் கவனிக்காம விட்டுட்டேன். தூங்கி ரொம்ப நாளாச்சு.
நீ எதை என்கிட்ட பேசின மாதிரி காலையில தான் ஞாபகம் இருந்துச்சு. ஒரு வேலை நீ சொன்னது நான் காதுல வாங்கலன்னு நீ ரொம்ப சங்கடப்படுறியா?… இப்படி எல்லாம் கேட்கும் போது அவள் அதெல்லாம் இல்லை நான் உங்களை சந்தேகப்பட்டுட்டேன்.
எனக்கு பயமா இருந்துச்சு நான் ரொம்ப தாழ்வு மனப்பான்மையில் இருக்கேன் என்னால ஒன்னும் முடியல தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க.
உங்களை விட்டு நான் முழுசா போறதுக்காக தான் இங்கே இருந்து போனேன் நான் என்னோட வீட்டுக்கு தான் நேரா போனேன் ஆனா என்னோட வீட்ல நடந்தது எல்லாமே ரொம்ப கேவலமான விஷயம் மட்டும் தான் என்னை இப்போ வரைக்கும் நாங்க யாருமே நம்பவே இல்ல,
நம்பளன்னு சொல்றதை விட உங்களுக்கு நான் தேவையில்லாதவன் மாதிரி அவங்க நினைச்சுட்டு இருக்காங்க இப்ப கோவிலுக்கு போயிட்டு வந்து அதே வாயால என்ன அவ்வளவு கீழ்த்தரமா பேசுனாங்க.
ஒருவேளை தொல்லை விட்டுடுச்சு இதுக்கு அப்புறம் நம்மளுக்கு பிரச்சினையே இல்ல இவள் எக்கேடு கெட்டு போய் தொலையட்டும் அப்படின்னு ஏதாவது நினைச்சுட்டாங்களோ என்னவோ எனக்கு ஒன்னும் புரியல நான் இருந்தேன் என்றால் ஏதாவது ஒரு செலவு அவங்களுக்கு வந்துரும்னு பயப்படுவாங்க போல,
என்ன சொல்றது,
அப்படிப்பட்ட உலகத்தில் நான் வந்து பிறந்து இருக்கேன். என்ன எல்லாருமே அப்படித்தான் பாக்குறாங்க ஏதோ ஒரு அருவருப்பான பொருளை என்ன பாத்துட்டு இருக்காங்க அது ஏன் என்று எனக்கு தெரியல,
ஆனா நீங்க மட்டும் ஏன் என்ன எந்த அளவுக்கு தாங்குறீங்கன்னு எனக்கு தெரியவே இல்லை,
பெத்த அம்மாவுக்கு என்ன பிடிக்கல கூட பொறந்த தங்கச்சிக்கும் பிடிக்கல, அப்பாவுடைய பேச்சை மீறாத பொண்ணு நானு என்னையும் அவருக்கு பிடிக்கவே இல்லை அப்ப நான் என்ன செஞ்சா தான் எல்லாருக்கும் என்னை பிடிக்கும்?…
இப்படி கண்ணீரோடு அவள் ஒரு கேள்வி கேட்கும் போது அவள் தலையை நிமிர்த்து கண்களை துடைத்து விட்டான்.
இந்த கண்ணீர் வருவது இதுவே கடைசியாக இருக்கட்டும்… இதுக்கப்புறம் நீங்க இந்த மாதிரி எல்லாம் அழ கூடாது.
அடுத்தவங்க யாரு நம்மள பத்தி பேசுறதுக்கு?… பெத்த அம்மாவை ஒதுக்குகிறார்கள் அப்போ அதுக்கு காரணம் என்னவா இருக்கும் என்று நீ நினைக்கிற?…
அது அவங்களுடைய தப்பு ஒரு கண்ணுல சுண்ணாம்பு ஒரு கண்ணுல விளக்கெண்ணெய் வச்சு பாக்குற உங்களுடைய தப்பு அதுக்கு நீ என்ன பண்ண போற?…
ஏன் புடிக்கல அதுக்கு காரணம் சொல்லு அவங்க முன்னாடி அழுது வடிய போறியா?..
ஒவ்வொருத்தவங்களுடைய குணம் ஒவ்வொரு மாதிரி இருக்கு அதுக்காக நம்ம அவங்களை பார்த்து கஷ்டப்பட்டு இருந்தா அப்புறம் அவங்களுக்கும் நம்மளுக்கு வித்தியாசம் இல்லாமல் போயிடும். நான் சொல்றத முதல்ல கேளு,
நீ எவ்வளவு அழகாக என்கிட்ட கேட்டா தான் உனக்கு தெரியும். நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்னு நினைக்கிறேன்,
எதுக்குடா இவன் சம்பந்தமே இல்லாம நம்ம கிட்ட இந்த அளவுக்கு கிளோஸ் ஆ பழகுறான்னு உனக்கு ஒரு தடவை கேள்வி கேட்கணும்னு தோணவே இல்லையா?….
இல்ல,
எனக்கு அந்த கேள்வி அளவுக்கு அதிகமாக வருது அந்த கேள்விக்கான பதில் தெரியாம தான் எனக்கு ஒரு விதமான பயம் வந்துருச்சு.
நேத்து நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டேன். நீங்க என்ன ஒரு அருவருப்பான பொண்ணா பாக்கறீங்களா இவள் எல்லாம் ஒரு பொண்ணுன்னு நினைக்கிறீங்களா? நானா உங்ககிட்ட வலிய வந்து நம்மளுக்குள்ள இருக்கிற நெருக்கத்தை அதிகப்படுத்தின மாதிரி தோணுது அப்படின்னா நான் இப்படி ஒரு கேடுகெட்ட ஒரு பொண்ணா இருக்கணும். நீங்க என்ன மாதிரி எல்லாம் நினைச்சிருப்பீங்க?..
அந்த பயம் எனக்குள்ள வந்துச்சு அந்த பயத்தோடு என்னால் உங்களை பேஸ் பண்ண முடியல அது மட்டும் இல்லை, நீங்க என்னை இரக்க குணத்தோட பாக்குற மாதிரி எனக்கு தோணுது.
அதனால தான் நான் உங்களை விட்டு போகணும்னு நினைச்சேன்னு சொல்லும்போது அவன் தலையில் நங்குன்னு ஒரு கொட்டை வச்சான். நான் உன்கிட்ட எப்பவாவது அப்படி சொன்னேனா சொல்ல போனா நான் உன்னிடம் எத்தனை தடவை நெருங்கி வந்தேன்னு உனக்கு தெரியாது பாரு?…
சத்தியமா சொல்லு… நான் உன்கிட்ட எத்தனை தடவை நெருங்கி வந்து இருக்கேன். உன் மேல எத்தனை தடவை உரிமை எடுத்து இருக்கேன் அது உனக்கு புரியவே இல்லையா,
எந்த விருப்பு வெறுப்பு இல்லாம எப்படி ஒரு பொண்ணு மேல எனக்கு இப்படி ஒரு நெருக்கம் வரும் உன்னை எனக்கு பிடிக்காமல் வந்திருக்கும் என்று நினைத்து இருக்கியா?..
என் கண்ண பாக்கும்போது தெரியலையா உன் மேல நான் எந்த அளவுக்கு காதலில் இருக்கிறேன் என்று, ஏன் உனக்கு என்னோட ஏக்கம் புரியவே இல்லை,
சத்தியமா நான் உன்னை காதலிக்கிறேன் உனக்கு புரியலையா இல்ல புரியாத மாதிரி நீ அந்த அளவுக்கு மக்கு மாதிரி நடிக்கிறியா?…
எனக்கு நல்லா புரிஞ்சது ஆனாலும் ஏதோ இந்த பித்து கெட்டவளுடைய மனசுக்குள்ள ஒரு பயம் நீங்க ஹீரோ மாதிரி இருக்கீங்க ஆனா அப்படியா?…
ஒழுங்கான டிரஸ் பண்ண தெரியாது எனக்கு… ஒழுங்கான மேக்கப் சென்ஸ் கிடையாது வயசு பொண்ணு மாதிரி நான் இருக்கேன் தலை நிறைய எண்ணெய் வச்சுக்கிட்டு எழுத்து பிண்ணி போட்டு முகமெல்லாம் எண்ணெய் வடிஞ்சு ரொம்ப கேவலமான ஒரு ஆளா தானே நான் இருக்கேன் ஆனா நீங்க அப்படியா?…
எப்போதும் பயங்கரமான ட்ரெஸ்ஸிங் சில இருக்கீங்க ரொம்ப ஸ்டைலா இருக்கீங்க எத்தனை பொண்ணுன்னாலும் உங்க காலடியில் வந்து விழுகும் அந்த அளவிற்கு ரொம்ப அழகா இருக்கீங்க ஆனா நான் அப்படியா?…
இதெல்லாம் நான் பார்க்கும் போது என் மனசுக்குள்ள அந்த விஷயம் வந்ததுதானே போகும்…
இப்படி எல்லாம் அவள் மனசுக்குள்ள இருக்கிற அனைத்தையும் அவன்கிட்ட வெளிப்படையாக சொன்னதும் தான் அவனுக்கு புரிஞ்சது அவள் ரொம்ப தாழ்வு மனப்பான்மையில் இருக்கா என்று..
இனி என்ன நடந்தது என்பது அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
