மௌன ராகம் 17

அத்தியாயம் 17:

​அறையின்ஜன்னல் திரைச்சீலைகளைக் கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்த இளஞ்சூரியனின் கதிர்கள், கவிவர்ஷனின் முகத்தில் ஒரு தங்க நிறக்கோலத்தை வரைந்தன. அவன் மெல்லக் கண்களைத்திறந்தான். அவனது கையில் பிரக்யுவின் மென்மையான விரல்கள் கோர்க்கப்பட்டிருந்தன. தூக்கத்திலும் அவளது முகத்தில் ஒரு நிம்மதியான புன்னகைஇருப்பதை அவன் கவனித்தான். மூன்றுவருடப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இந்த அமைதி அவனுக்குஒரு தெய்வீக அனுபவமாகத் தெரிந்தது.

​அவன்மெல்ல எழுந்தான். அவனது அசைவில் பிரக்யுவும் விழித்துக் கொண்டாள். தூக்கக் கலக்கத்துடன் அவள் அவனைப் பார்த்த போது, அவளது கண்களில் தெரிந்த அந்தத் தேடல் கவிவர்ஷனை மயக்கியது.

​”காலை வணக்கம்பிரக்யு…” என்று குனிந்து அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

​”காலை வணக்கமா? மணி என்ன ஆகுது கவி?” என்று அவள் பதற்றத்துடன் கடிகாரத்தைப்பார்த்தாள்.

​”மணி எட்டுதான் ஆகுது. இன்னைக்கு நாம எங்கேயும் போகப்போறது இல்லை. நாம மட்டும்… இந்தஉலகம் மட்டும் தான்,” என்றான் கவி சிரித்துக் கொண்டே.

​சிறிதுநேரம் கழித்து இருவரும் கீழே வந்தனர். வரவேற்புஅறையில் மேனகா காபியுடன் காத்துக் கொண்டிருந்தார். அவரது முகத்தில் இருந்த அந்தப் பெருமிதம், ஒரு வெற்றிகரமான தாயின்அடையாளமாகத் தெரிந்தது. ரூபன் ஒரு மூலையில் அமர்ந்துசெய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார். ஆனால், இன்று அவரது உடல்மொழியில் அந்தப் பழைய கர்வம் இல்லை. கவிவர்ஷனைக் கண்டதும் அவர் எழுந்து நின்றார்.

​”வா கவி… நல்லாத் தூங்குனியா?”  ரூபனின்குரலில் இப்போது நடுக்கம் இல்லை, ஒருவிதமான மரியாதை இருந்தது.

​”நல்லாத் தூங்குனேன்சார். தேங்க்ஸ்,” என்றான் கவி பண்புடன்.

​”சார்னு கூப்பிடாதேகவி… மாமான்னே கூப்பிடு. நான் செஞ்ச தப்புகளுக்குப்பரிகாரமா, உனக்கும் பிரக்யுவுக்கும் ஒரு பரிசு வச்சிருக்கேன். நீங்க ரெண்டு பேரும் லண்டன்லயே செட்டில் ஆகணும்னு, அங்க  உங்களுக்குவீடு,  கார்எல்லாம் வாங்கிருக்கன் என அதற்கான பத்திரங்களைஅவர் எடுக்க  அவரைஅழுத்தமாய் பார்த்த கவி  என்னசார் நான் காசுக்காக பிரக்யு கல்யாணம் பண்ணல “ஐயோ கவி தப்பாநினைச்சுகாதப்பா’  எனபதறியவர்  “நான்இங்க இருக்கக் காரணம் பிரக்யு மட்டும் தான் மற்றும் படிவீட்டோட மாப்பிளையா இருக்க வரல அதோட எங்கவீட்ல பிரக்யு தங்கி கொள்ள ஏத்த போல நான்எல்லாம் மாத்தனும் சார். அதனால தான் இங்க தங்கிகுறன்என்நான். ரூபனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை  ‘ பிள்ளையார்பிடிக்கப்போய’ அது குரங்கய் மாறியகதையாய் போனது அவர் நிலை 

என்னசொல்வதென்று தெரியாது தடுமாறியவர் மேனகாவைப்ப் பார்க்க அவளோ சமையலயைக்குள் நுழைந்துகொண்டார். பிரக்யுவோ கைகளைப் பிசைந்தபடி நிற்க “ நீங்க கொஞ்ச நாள் அமைதியா இருக்க ‘வால்பாறை’ எஸ்டேட்டுக்கு போயிட்டு வாங்க. அங்க நம்ம கெஸ்ட்ஹவுஸ் உங்களுக்காகத் தயாரா இருக்கு,” என்றார் ரூபன் தயக்கமாய்.

எதுவும் பேசாது கவி வெளியேற பிரக்யுவிற்கோ அழுகை தான் முட்டிக் கொண்டு வந்தது. தனது வீட்டிற்கு வர ” கண்ணா என வந்தார் மீனா ” சாப்பிட்டியா சாப்பாடு எடுக்கயா ?  என மீனா கேட்க ரூபனின் செயலால் கோபம் எழ எதுவும் பேசுவிடுவேனோஎனும் பயத்திலேயே கிளம்பி  வந்தான் காலை உணவு உண்ணவில்லை .தாய் ஏதும் நினைப்பார் என எண்ணியவன் “இப்பான்மா சாப்பிட்டன் கொஞ்சமா சாப்பாடு எடுங்கம்மா”   என்றான். மீனாவும்  சாப்பாடு எடுக்கச் செல்ல கவியின் அலைபேசி சினுங்கியது.பிரக்யு தான் எடுத்திருந்தாள். அழைப்பை ஏற்காது இருக்கா சிறிது நேரத்தில்  கவிக்கு முன் நிழலாட பிரக்யு தான் நின்றிருந்தாள். அவள எதிர்பார்க்காத கவி அவளை உற்றுப் பார்க் கண்கள் கலங்க நின்றாள். பிரக்யுமா இரு இரு சாப்பாடு எடுக்கன் என்றபஎ அவளுக்கும் உணவுத்தட்டுடன் வந்தார் மீனா. கவியோ சிரப்புகும் படி சைகை செய்ய அவளின் உதடோ கீழ் நோக்கி வளைந்தது…. மீனா வரவே தன்னை சரிப்படுத்தயவள் இயல்பாக இருந்தாள்.

கவி தனது அறைக்குள் நுழைய மீனாவோடு இருந்தவள் சிறிது நேரத்தில் கவியின்அறைக்குள் நுழைந்தவள் “கவி சாரி அப்பா…… எனஅவள் இழுக்க “அவர் மாறிட்டார் பிரக்யுஅவருக்கு குற்ற உணணர்வு அத எப்படி வெளிக்காட்டுறனுதெரியாம தான் அப்படி எல்லாம்பண்றாறு  ரெடியாகுவால்பாறைக்கு போகலாம் என்றவன் பிரக்யுவையும் அழைத்துக் கொண்டு  மீனாவிடம்விடைபெற்றுப் வெளியே வர

 

அப்போதுஹர்ஷாந்த் தனது போனுடன் உள்ளேஓடி வந்தான். அவனது முகம் பிரகாசமாக இருந்தது. “அண்ணா! ஒரு குட் நியூஸ். நாம அந்த தனபாலோட கேஸைமுடிச்சுட்டோம். இனி அவரால நமக்குஎந்தத் தொந்தரவும் இல்லை. அப்புறம்… இன்னொரு விஷயம்,” என்று இழுத்தான்.

​”என்னடா?” என்றுகவி கேட்டான்.

​”அது… பிரக்யுஅண்ணியோட தோழி நிலா இருக்காங்கல்ல… அவங்க என்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டாங்க. அவங்க படிப்புக்காக லண்டன் போகணுமாம். நாம ஸ்காலர்ஷிப் டிரஸ்ட்மூலமா அவங்களுக்கு உதவி பண்ணலாமா?” என்றுவினவினான்.

​கவிவர்ஷன்ஹர்ஷாந்தின் கண்களைக் கூர்ந்து பார்த்தான். அதில் தெரிந்த ஒரு மெல்லிய வெட்கம்கவிக்கு எல்லாவற்றையும் புரிய வைத்தது. “ஓ… நிலாவுக்காகவா? கண்டிப்பாபண்ணலாம் ஹர்ஷாந்த். ஆனா நீ அவங்களுக்குஹெல்ப் பண்றது படிப்புக்காகத் தானா? இல்ல வேற ஏதும்இருக்கா?” என்று கிண்டல் செய்தான்.

​பிரக்யுவும்சிரித்துக் கொண்டே, “ஹர்ஷாந்த்… நிலா ரொம்ப நல்லபொண்ணு. அவளை நீ பத்திரமாப்பார்த்துக்கோ,” என்றாள். ஹர்ஷாந்த் முகம் சிவக்க அங்கிருந்து நழுவினான். ஒரு புதிய காதல்கதை அங்கே அரும்பத் தொடங்கியிருந்தது.

மதிய உணவிற்கு வந்த சசியிடம் கவி பிரக்யு வந்ததை சொல்லிக் கொண்டிருந்தார் மீனா.மீனாவிற்கும்காலையில் மகனையும் மருமகளையும் கண்டதில் அளப் பெரிய சந்தோசம்

மதியம்இரண்டு மணி. கவிவர்ஷனும் பிரக்யுவும்வால்பாறைக்குப் புறப்படத் தயாரானார்கள். காரில் ஏறும் முன், கவிவர்ஷன் தனது தந்தை சசிதரனைஅணைத்துக் கொண்டான். “அப்பா… நான் போயிட்டு வர்றேன். அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க,” என்றான்.

​”நீ சந்தோஷமாஇருப்பா கவி. உன் கவிதைகள்இப்போ நிஜமாகிடுச்சு. அதைக் கொண்டாடு,” என்று சசிதரன் வழியனுப்பி வைத்தார்.

​கார்மேற்குத் தொடர்ச்சி மலையின் வளைவுகளில் ஏறத் தொடங்கியது. ஜன்னல்வழியாக வந்த மலைக்காற்று குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருந்தது. பிரக்யு கவிவர்ஷனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

​”கவி… இந்தமூணு வருஷத்துல நாம எவ்வளவோ இழந்துட்டோம். ஆனா இப்போ கிடைக்கிற இந்தச் சந்தோஷம் அந்த வலிகள் எல்லாத்தையும்மறக்க வைக்குது,” என்றாள்.

​”இழப்புகள் தான்பிரக்யு ஒரு கவிதையை அழகாக்கும். நாம இழந்தது வெறும் நேரத்தைத்தான், ஆனா சம்பாதிச்சது ஒருஅழியாத காதலை,” என்று சொல்லி அவளது கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

​மலைச்சாலையின்ஓரங்களில் தெரிந்த தேயிலைத் தோட்டங்கள், பசுமைப் போர்வை போர்த்தியது போலக் காட்சியளித்தன. மேகங்கள் மலையைத் தொட்டுச் செல்வதைப் பார்த்தபோது, அவர்களின் காதலும் அந்த மேகத்தைப் போலஉயரத்தில் பறப்பதாக உணர்ந்தனர்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மௌன ராகம்
2,510 124 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page