இதழ் – 12
அத்தியாயம் – 12
அருவி ராகவன் கையை பிடித்து இழுத்ததில், பொத்தென அவள் மேல் வந்து விழுந்தான் ராகவன்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக இருவரின் இதழ்களும் முத்தமிட்டு கொண்டன. இருவருக்கும் எப்படி விலகுவது என தெரியவில்லை. மேலும் முன்னேறவும் இருவருக்கும் ஏதோ ஒரு தயக்கம். இப்படியே பத்து நிமிடம் கழிந்தது.
கண்ணம்மா அறை வாசலில் நின்று, “அருவிம்மா, சாப்பிட வாங்க” என்றார்.
அப்பொழுது இருவரும் விலகினார்கள். அவன் முகம் பார்க்க முடியாமல் வேகமாக ஓடிச் சென்றாள் அவள். அமைதியாக இருவரும் சாப்பிட்டு அறைக்கு வந்ததும்…
“அருவி.”
“என்னங்க?”
“நாளைக்கு நம்ம கோயிலுக்கு போகணும். அதனால சீக்கிரம் கிளம்பு” என்றான்.
அவள் கண்விழித்து பார்க்க, அழகாக வேட்டி சட்டை கட்டி, கண்ணாடி முன் நின்று அவள் முன் நின்றிருந்தான் ராகவன்.
அவள் அவனைப் பார்க்க, அவள் பார்வையை தவிர்த்தவன், “ஹும்” என்றான்.
அவன் அந்த சத்தத்தில் தன்னிலை கலைந்தவள், “இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டீங்க?”
“கோவிலுக்கு போகணும்னு நைட்டே சொல்லிருந்தேன்ல. அந்த கோவில் கொஞ்சம் தூரமா இருக்கு” என்றவன் வெளியில் சென்றான்.
குளித்து வந்தவள், பெட்டில் இருந்த அந்த அழகான ஊதா கலர் சேலையைக் கட்டிக்கொண்டு கீழே வர…
கண்ணம்மா தன் கையில் வைத்திருந்த மல்லிகை பூவை அருவியின் தலையில் வைத்து விட்டு, திருஷ்டி கழித்து, “அழகா தேவதை மாதிரி இருக்கீங்க. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. இன்னைக்கு நைட்டு உங்க ரெண்டு பேருக்கும் சுத்தி போடணும்னு சரஸ்வதி அம்மா சொன்னாங்க” என கூற…
“சரி, எங்களுக்கு டைம் ஆச்சு” என்றவன் காரில் ஏறி அமர, காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்தாள் அருவி.
அவன் ஏதோ யோசனையில் காரை ஓட்டிக் கொண்டிருக்க, அவள் காரில் ஓடிய பாட்டை கேட்டுக் கொண்டு ரசித்தவாறு வந்தாள். அப்பொழுது அவள் கையில் இருந்த கண்ணாடி வளையல் ஒலியும், அவள் தலையில் வைத்திருந்த மல்லிகை பூ வாசமும் அவனை ஏதோ செய்ய…
“ராகவா, இது நல்லதே இல்லடா. இவ உன்னை வளைச்சி போட பார்க்கிறா, கொஞ்சம் கவனமா இருந்துக்கோ” என நினைத்துக் கொண்டான்.
அதற்குள் கோவிலும் வர, வெளியில் பூ, பழம், அர்ச்சனைக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் சென்றனர். அது துர்க்கை அம்மன் கோவில். சாமி கும்பிட்டனர்.
“இந்த கோவில் ரொம்ப விசேஷமான கோயில். மனசுல என்ன நெனச்ச வேண்டிக்கிட்டாலும் நடக்கும்” என ஒரு பெண்மணி பேசிக் கொண்டிருக்க…
“என்னங்க!!”
“என்ன?”
“இந்த கோயிலை பற்றி உங்களுக்கு தெரியுமா?”
“சாரி, எனக்கு இந்த கோயிலை பற்றி எதுவும் தெரியாது. நான் கோயிலுக்கு வந்ததில்லை.”
“அப்போ, இன்னைக்கு எப்படி?” என அவள் கேட்க…
“அம்மா அழைச்சிட்டு போக சொன்னாங்க. அதுக்காகத்தான் வந்தேன்.”
“அப்போ நீங்களா கூட்டிட்டு வரலையா?”
“எனக்கு சாமி மேல எந்த நம்பிக்கையும் கிடையாது. போலாமா?” என்றான்.
“சரிங்க” என அவன் பின்னால் சென்றாள் அருவி.
அவர்கள் எதிரில் வந்த நான்கு ஐந்து பேரில், “டேய் மச்சான், இங்க பாருடா. கோவில் சிலையே நடந்து வர மாதிரி இருக்கு” என்றான் ஒருவன்.
ராகவன் அவர்களை முறைக்க, “வாங்க போலாம்” என அவன் கையை பிடித்து இழுத்து சென்றாள் அருவி.
பாதி தூரம் சென்றதும், “என்னங்க!!” என்றாள் மெதுவாக.
“என்ன?”
“நான் பூஜை தட்டை கோவிலிலேயே வச்சுட்டு வந்துட்டேன்” என்றாள் தயங்கியபடி.
“இதக்கூட உன்னால ஞாபகமா எடுத்துட்டு வர முடியாதா!!” என்றான் சற்று கோபமாக.
“இல்லங்க, அது வந்து…” என அவள் ஏதோ கூற வர…
“நீ இங்கே இரு. நான் போய் எடுத்துட்டு வாரேன்.”
“இல்லைங்க, நானும் வரேன்.”
“எதுக்கு? மறுபடியும் எதையாவது மறந்து வச்சிட்டு வரதுக்கா? நான் போய் எடுத்துட்டு வரேன், நீ இங்கயே இரு.”
“சரிங்க” என்றாள். அவன் சென்றதும், அங்கிருந்த சேரில் அமர்ந்தாள் அருவி.
அப்போது, “ஹாய், சிலை” என்ற குரல் கேட்டவள் திரும்பி பார்க்க, அவளை கிண்டல் செய்து அந்த நான்கு பேரும் அவளை சுற்றி வளைத்து நின்றிருந்தனர்.
“டேய் மச்சான், இது சாதாரண சிலை இல்லடா. சிரிக்கும் சிலை” என்றான் மற்றவன்.
“இங்க பாருங்கடா, அந்த சிலை தனியா இருக்கு. அவ ஆள காணோம் டா. தனியா இருக்கும் இந்த சிலையை நாம கொஞ்சம் நேரம் வச்சிருக்கலாம் டா.”
அவர்கள் கூறியதை கேட்ட அருவி, “ஒழுங்கா இங்க இருந்து போய்டுங்க” என்றாள்.
“மச்சான், இந்த சிலை பேசுதுடா. அந்த குரலை கேட்கும் போது என் காதில் தேன் பாயுது டா.”
அவள் அவர்களை முறைக்க…
“மச்சான், இந்த சிலை சிவப்பா, சும்மா நச்சுன்னு இருக்குடா. பார்த்தாலே இப்படி போதை ஏறுதே. தொட்டா, ருசிச்சா, கடிச்சா எப்படி இருக்கும்?” என்றவன் அவள் அருகில் வர, அவள் அவனை முறைத்துக்கொண்டு சுற்றி பார்த்தாள்.
அப்போது, “அந்த பொண்ணை ஏன் கிண்டல் பண்றிங்க?” என ஒருவர் கேட்க…
“ஏய்!! உன் வேலையை பார்த்துட்டு போடா. இல்லனா ஒன்னு செய், இவளை கூட்டிட்டு போய் உன் மகளை கூட்டிட்டு வந்து விடு” என்றான்.
“பொறுக்கி, பொறுக்கி” என்றவர், அருவியை பாவமாக பார்த்து சென்றார்.
“டேய்! குட்டி முறைக்குது.”
“நமல்லாம் புதுசா இருக்கிறதால அப்டி இருக்குது டா. இன்னும் கொஞ்ச நேரத்தில் அதை நம்ம வழிக்கு கொண்டு வந்துருவோம்” என ஒருவன் கூற, அவர்கள் பேச்சை கேட்ட அருவி பயந்து நின்றாள்.
அவள் அமைதியாக இருக்க, அவளருகில் வந்தவன், “இங்க பாரு பொண்ணு, அவன் ஒருத்தன். ஆனா நாங்க நாலு பேரு. நீ எங்களை கொஞ்சம் அனுசரிச்சனு வச்சுக்கோ. உன்ன நாங்க வேற இடத்துக்கு கொண்டு போயிடுவோம்.”
“டேய், புரியிற மாதிரி சொல்லுடா” என்ற மற்றவன், “உன்னை நாங்க வேற மாதிரி ஆக்கிடுவோம். உன்னோட அழகுக்கெல்லாம் நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை.”
“எங்க இருக்கீங்க, சீக்கிரம் வாங்க” என மனதில் ராகவனை நினைத்தாள் அருவி.
“நீ எங்க கூட வந்தேன்னு வச்சுக்கோ, உன்னோட மார்க்கெட் வேற லெவல் ஆயிடும். அங்க நீதான் ராணி. உன் கண்ணசைவில் எத்தனை பணக்காரங்க உன் காலடியில் விழுந்து கிடப்பாங்க தெரியுமா!!” என்றவன் கன்னத்தில் “பளார்” என அறைந்தாள் அருவி.
“ஏய்! என்னையே அடிசிட்டயா!!” எனக் கேட்டான் கோவமாக, அடி வாங்கியவன்.
“ஒழுங்கா போயிருங்கடா. உங்களுக்கு நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன். என் கோபத்தை கிளறாதீங்க. அப்புறம் உங்களுக்கு நல்லா இருக்காது” என்றாள் அருவி கோவமாக.
“டேய்! சிலைக்கு கோவம் வருதுடா.”
“ஆமாண்டா, பயமா இருக்குடா” என அவன் கூறியதை கேட்டு மற்றவர்கள் சிரித்தனர்.
“என்னை அடிச்ச உன்னை சும்மா விடமாட்டேன் டி. உன்ன நாங்க அனுபவிச்சிட்டு உயிரோடவாவது விடலாம்னு நெனச்சோம். ஆனா என்னை அடிச்ச உன் உடம்புல கண்டிப்பா உயிர் இருக்காது டி” என்றான் பற்களை கடித்த படி அடி வாங்கியவன்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும் டா, யாரு உடம்புல உயிர் இருக்காதுன்னு” என்றாள்.
“அவன் உன் பக்கத்திலேயே இல்லையே!! அப்புறம் எந்த தைரியத்துலடி நீ இப்படி பேசுற?” என ஒருவன் அவள் கையை பிடிக்க…
“கையை விடுடா! நாயே” என்றவள் சேலையை தன் இடுப்பில் இழுத்து சொருகினாள்.
“டேய் மச்சான், பாருடா குட்டிக்கு தைரியம் எல்லாம் வந்துருச்சுடா.”
“டேய்! அழகான பொண்ணுங்க கோபப்படத்தான் செய்வாங்க!! அவங்க கிட்ட நம்ம தான் இதம் பதமா பேசணும். இப்ப பாருங்க நான் பேசுறேன்” என்றவன், “இங்க பாரு பொண்ணு, ரொம்ப வேணாம். இவங்க மூணு பேரும் கிட்ட கூட நீ போக வேணாம். என்னை மட்டும் நீ அனுசரிச்சுக்கோ, இவனுங்க மூணு பேரையும் நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“டேய், என்னடா சொல்ற எங்களுக்கு?” என மற்றவர்கள் கேட்க…
அவன் அவர்களைப் பார்த்து “இருங்கடா” என கண்ணடித்தான்.
“சரிடா மச்சான், எங்களுக்கு கூட வேண்டாம், நீயே என்ஜாய் பண்ணு” என அவர்கள் மூவரும் தள்ளி நிற்க, அவள் சுற்றி பார்க்க, அங்கிருந்த ஒரு சிலர் இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, வேகமாக ஓட ஆரம்பித்தாள் அருவி.
“டேய், அவ ஓடுறா! வாங்கடா!” அவன் கூறியதும் நான்கு பேரும் சேர்ந்து அவளை துரத்த ஆரம்பித்தனர்.
பூஜை சாமான் கூடையை எடுத்து வந்த ராகவன் பார்க்க, அந்த இடத்தில் அருவி இல்லை.
“இவளை இங்கதான் உட்கார சொல்லிட்டு போனோம். எங்க போனா?” என “அருவி” என கத்தி கொண்டே அங்கும் இங்கும் தேடிப் பார்த்தான். அவளை காணவில்லை.
அங்கிருந்த ஒரு திருமணமான தம்பதியிடம் கேட்க, “நாங்கள் யாரையும் பார்க்கவில்லை” என்றனர்.
சற்று தள்ளி ஓடி சென்று தேடி பார்த்தான், அப்போதும் அவளை காணவில்லை. அப்பொழுது ஒரு வயதானவர் அவன் எதிரில் வர…
“தம்பி, அந்த ஒரு பொண்ண தேடுறீங்களா!!” என கேட்டார் அவர்.
“ஆமா!”
“அந்த பொண்ணு ப்ளூ கலர் சேலை கட்டி இருந்துச்சா?”
“ஆமாங்க, அந்த பொண்ணு.. அந்த பொண்ணு தான்… நீங்க அவளை பார்த்திங்களா? ப்ளீஸ், தயவு செஞ்சு அவ எங்கன்னு சொல்லுங்க” என்றான்.
அவன் கண்ணில் இருந்த தவிப்பை பார்த்தவர், “ஒரு நாலு அஞ்சு பேர் தான் அந்த பொண்ணை துரத்திட்டு போனாங்க” என்றார்.
“எந்த பக்கம்?” என கேட்டான் ராகவன்.
அந்த பக்கம் தான் என அவர் கைகாட்டிய திசையில் சென்று அவன் பார்க்க, அங்கு பாதையில் வளையல் துண்டுகள் உடைந்து கிடைப்பதை பார்த்தவன், அதை கையில் எடுத்து, “அருவி, எங்க இருக்க? உன்னை தனியா விட்டுட்டு போனது என் தப்பு தான், என்னை மன்னிச்சுடு” என்றான்.
மேலும் இரண்டு அடி சென்று பார்க்க, ஒருவன் சட்டை கிடந்தது. அருவிக்கு பெரிய ஆபத்து என நினைத்தவன், துடித்து போனான். அவன் சுற்றி சுற்றி தேடி பார்க்க, புதர்களாக, பூச்செடிகள் நிறைந்த புதர்களாகவே இருந்தது.
“நீ எங்க டி இருக்க?” என புலம்பியவன், இரண்டு புதர்களுக்கு பின்னால் சென்று பார்க்க அங்கு யாரும் இல்லை. மூன்றாவதாக சென்று ஒரு புதரின் பின்னால் பார்க்க, அங்கு அருவி இருந்த கோலத்தை பார்த்து அதிர்ந்து நின்றான் ராகவன்.
♥️அச்சச்சோ !!! அருவிக்கு என்ன ஆச்சுன்னு தெரிலயே, தெரிஞ்சிக்க கண்டிப்பா நாளைக்கி எபி மிஸ் பண்ணாம படிங்க பிரண்ட்ஸ் ❤️
