தாரணி ஒரு நொடி தயங்க,
“ஹலோ…”மறுபக்கம் இருந்த குரல் மென்மையிலும் அதீத மென்மை.“தாரணி தானே?
நான் அர்ச்சனா பேசுறேன்” என்று சொன்ன அந்த நொடி
அந்த பெயர் கேட்ட நொடியில,
தாரணியின் விரல்கள் இறுக்கின. இதயத்தில் ஒரு பட படப்பு,“என்ன வேணும் உனக்கு?”அவள் குரல் அமைதியா இருந்தாலும், உள்ளுக்குள் எரிமலை கொதித்துக்கொண்டிருக்க,
அர்ச்சனா மெதுவாக சிரித்தாள்.அந்த சிரிப்பு குரலிலேயே தெரியுமாறு
“உன்கிட்ட நேரடியா பேசலாம்னு தான் நினைச்சேன் ஆனா நேர்ல பார்க்க முடியல அதான் கால் பண்ணினேன்” என சொல்ல
“நீ எதுக்கு எனக்கு போன் பண்ணினா?” என தாரணி கேட்க
நீயே தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன், ஆனா உனக்கு தான் தெரியலையே என்று உள்ளொன்று வைத்து வெளியே அர்ச்சனா பேச
“எதை?” என தாரணி கடுமையா கேட்கவும்
“என் கல்யாணம், தீரனோட.”
அந்த வார்த்தைகள் தாரணியின் உள்ளத்தில் மீண்டும் ஒரு ஊசி அல் குத்தியது போல் வலித்தது.ஆனா இப்போ அவள் உடையவில்லை.
அவள் அமைதியா“அதுக்கு எனக்கு ஏன் கால் பண்ண?”என கேட்கவும்
அர்ச்சனா ஒரு நிமிடம் மௌனம் காத்து பிறகு,அவள் முகமூடி முழுமையாக போட்டுக்கொண்ட குரலில் சொல்லத் தொடங்கினால் அதுதான் அவளின் சுய ரூபம்.
“நான் உன்னை காயப்படுத்தணும்னு கால் பண்ணல தாரணி.ஆனா சில விஷயங்கள் நீ தெரிஞ்சுக்கணும் தானே.” இவ்வளவு வருஷம் எங்கேயோ போயிட்ட இப்ப திரும்ப வந்து தொலைஞ்சிட்ட.. அதுக்காக என்னோட தீரன் உன்கிட்ட நான் கொடுக்க முடியுமா என அர்ச்சனா சொல்லவும்
தாரணி சிரித்து கொண்டே “என் வாழ்க்கையில இனிமேல் நான் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் எதுவும் உன்னால இல்ல”என சொல்லவும்
அர்ச்சனாவின் குரல் சற்று மாறியது.
அந்த மென்மை ஒழிந்து,உள்ளே ஒளிந்திருந்த உண்மை சற்று வெளியே வந்தது.“அப்படி இல்ல.
நீ தீரனை விட்டு போனதால தான்…
இப்போ அவன் என் வாழ்க்கையில இருக்கான்.”அந்த வார்த்தை தான் அவள் கால் பண்ணிய உண்மையான காரணம்.
அதற்கு விளக்கம் சொல்லணும் என்றில்லை.
“நீ இழந்ததை நான் பெற்றுக்கிட்டேன்”
அதைச் சொல்லித் தாரணியின் மனசில் சந்தேகத்தையும் வலியையும் விதைக்கவே அந்த அழைப்பு என
தாரணி புரிந்து கொண்டாள்
மெதுவாக கண்களை மூடி,அவள் உள்ளுக்குள் ஒரு தெளிவு வந்தது.
“அர்ச்சனா…ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ.” என்று அவள் சொல்லவும்
அர்ச்சனா சற்று பதற்றமடைந்து அமைதியாக இருக்க,
‘என் வாழ்க்கையில இதுக்கு மேல தீரனுக்கு இடம் இல்ல, நான் ஒன்னும் அவனை உன்கிட்ட இருந்து எடுத்துட்டு போறதுக்கு வரல’ என அவள் சொல்லவும்
அந்த வார்த்தைகள் அர்ச்சனாவின் மனசில் ஒரு சின்ன கீறல் போட,
அவள் மீண்டும் தன் ஆயுதத்தை எடுத்தாள்.ஆனா நீ ஏன் திரும்ப தீரணை பார்க்க வந்த உனக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு தானே குழந்தை கூட இருக்கு,அந்த குழந்தைக்கு அப்பா…”என
அவள் மெதுவாக இழுத்தாள்.
தாரணியின் கை நடுங்கியது.
அந்த ஒரு வாக்கியம்,அவள் வாழ்க்கையின் ரகசியத்தை கிழிக்க முயல,ஆனா அவள் உடனே தன்னை சமாளித்தாள்.
“என் குழந்தைக்கு அப்பா யாருன்னு
நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்ல” என்று சொல்லி அவள் போனை துண்டித்தாள்.
அந்த நொடியில் தாரணி,’இவளுக்கு எப்படி என்னோட வாழ்க்கையில நடந்தது எல்லாமே தெரியும்.நான் யார்கிட்டயும் எதுவும் சொல்லாம வச்சிருந்தேன் ஆனா இவ ஏதோ கண்டுபிடிச்ச மாதிரி பேசுற’ என்று மனதில் நினைக்க
அர்ச்சனா…கல்லூரி நாட்களில் யாருக்கும் பெருசா தெரியாத ஒரு பெயர். ஏனென்றால் தாரணி, தீரன் இரண்டு பேரும் கல்லூரி படிக்கும் போது அங்கே முதல் வருட ஜூனியர் ஆக வந்து சேர்ந்தவள்.ஆனா அவள் மனசுக்குள் மட்டும் ஒரு பெயர் எப்போதும் முழங்கிக் கொண்டே இருந்தது,அதுதீரன்.
அவன் சீனியர்.அவன் நடக்குற விதம், பேசுற ஸ்டைல், எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்குற அந்த அமைதியான ஆளுமை,அர்ச்சனாவுக்கு அது எல்லாமே காதல் மாதிரி தெரியல…அதுக்கு மேல ஒரு பைத்தியம்.ஆனா தீரனின் வாழ்க்கையில் அவள் இடம் இல்லைன்னு அவளுக்கே நல்லா தெரியும்.ஏன்னா…
அவன் கண்கள் எப்போதும் தேடியது ஒருத்தியை மட்டும் தான்.அவள் தான்
தாரணி.
கல்லூரி வளாகத்தில் அவங்க இருவரும் சேர்ந்து நடக்குறதை அர்ச்சனா எத்தனை முறை பார்த்திருக்கா தெரியுமா?
தீரன் தாரணியின் கைப்பிடிச்சுக்கிட்டு நடக்கும்போது,அவள் சிரிச்சு ஏதோ சொன்னதும் அவன் கண்களில் மின்னுற அந்த ஒளி,அதை பார்த்த ஒவ்வொரு முறையும், அர்ச்சனாவின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமா சிதறிக்கிட்டே போச்சு.“அவளுக்கு என்ன இருக்கு? என்கிட்ட இல்லாதது?”இந்த கேள்வி அவள் மனசுக்குள் ஒரு விஷமாக வளர்ந்தது.
அவளுக்கு தெரியும்.தீரனும் தாரணியும் உயிருக்கு உயிரா காதலிக்கிறாங்கன்னு.
அதனால் அவள் நேரடியா எதுவும் செய்யல.ஆனால் காத்திருந்தாள்.
காத்திருப்பது சில பேருக்கு பொறுமை.
அர்ச்சனாவுக்கு அது சதி.
அந்த நாள் வந்தது.யாரோ சொன்னாங்க,“கல்லூரி முடிந்து கொஞ்ச காலத்தில் தீரனும் தாரிணியும் பிரிஞ்சிட்டாங்க”ன்னு.அந்த வார்த்தை கேட்ட நொடியில, அர்ச்சனாவின் மனசுக்குள் ஒரு பட்டாசு வெடிச்சது.
அவள் அழல.சந்தோஷத்துல துள்ளல.
அவள் செய்தது ஒன்று மட்டும் தான்,
தெளிவான முடிவு எடுக்க துணிந்தாள்.
“இப்போ இல்லன்னா அவன் என் வாழ்க்கையில் எப்போவும் இல்லை.” என்று யோசித்தவள்,தீரனுக்கு அருகில் போக ஆரம்பித்தாள்.மெதுவா,மிக மெதுவாஅவன் வலியை புரிஞ்சுக்கிற மாதிரி பேசி அவன் கோபத்தை அமைதிப்படுத்துற மாதிரி நடந்துக்கிட்டாள்.
“அவள் உங்களை புரிஞ்சுக்கல தீரன்…”
“உங்களோட காதல் ரொம்ப ஆழம்… அவளுக்கு அது தேவை இல்ல,உண்மையான அன்பை இப்படி தவிக்க விட்டு போனவள் உங்களுக்கு தேவை இல்லை தீரன்…”இந்த வார்த்தைகள் எல்லாம் தீரனின் மனசுல நஞ்சா கரைந்தது.அவன் உடைந்திருந்தான்.அந்த உடைப்புக்குள் நுழைய அர்ச்சனா காத்திருந்தாள்.
அவளுக்கு அவனின் காதல் வேண்டாம்.
அவளுக்கு அவன் வேண்டும்.அவனுடன் திருமணம் வேண்டும்.அர்ச்சனாவிடம் இல்லாத பணமா?எப்படியாவது தன் அப்பா அலுவகத்தில் அவனுக்கு ஒரு வேலை வாங்கி குடுத்து அருகிலே வைத்து கொண்டாள்.
அவன் வேண்டும் அந்த வார்த்தையை அவள் மனசுல சொல்லிக்கிட்டே இருந்தாள்.“எப்படியாவது… தீரன் என் கணவன் ஆகணும்.”அதுக்காக அவள் எந்த அளவுக்கும் போக தயார். தாரணி திரும்ப வராத மாதிரி பார்த்து கொள்ள வேண்டும் என நினைத்தவள்,தீரனுக்கு வேற வழியே இல்லாத மாதிரி சூழ்நிலை உருவாக்கவும்,அவள் மனசுக்குள் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சதி உருவானது.
இது எல்லாமே தாரணி அறிந்த விஷயம் தான்.இப்போ…அவள் தான் தாரணிக்கு போன் பண்ணினாள்.அவள் தான் உண்மையையும் பொய்யையும் கலந்து விதை போட்டாள்.
மறுபக்கம் அர்ச்சனா நினைத்தாள்,
“தாரணி பயந்துட்டா… அவள் ஓடுவாள்.
தீரன் கோபப்பட்டா… அவன் என் பக்கம் வருவான்.”என்று,
ஆனா அவளுக்கு இன்னும் சில உண்மைகள் தெரியல. தீரன் – தாரணி பற்றி..
இதை எல்லாம் நினைத்து சுவரில் சாய்ந்த தாரணிக்கு மீண்டும் மொபைல் ஒலிக்க “ஹலோ…”
மறுபக்கம் இருந்த குரல் இந்த முறை மென்மையில்லை.அதில் ஒரு வெறுப்பு.
ஒரு அதிகாரம்,ஒரு ஜெயித்தவளின் அகந்தை.
“இன்னொரு விஷயம் உன்கிட்ட சொல்லாம விட்டுட்டேன் தாரணி.” என்று அவள் ஆரம்பிக்க,தாரணி பேசாமல்
அமைதியா கேட்டுக்கொண்டிருந்தாள்.
“நீ எவ்வளவு பெரிய தியாகம் பண்ணினே,எவ்வளவு காதலிச்சேன்னு நினைச்சுக்கிட்டு இன்னும் உன் மனசுல தீரனை வச்சுக்கிட்டிருக்காத.”
அந்த வார்த்தைகள் கேட்டதும் தாரணிக்கு தன் மேல் நெருப்பை வைப்பது மாதிரி இருந்தது.
இங்க பாரு அர்ச்சனா,“தீரன் வாழ்க்கையில இப்போ இல்லை.
இனி எப்போதும் இருக்கவும் மாட்டான்.நான் வந்தது என்னோட வேலைக்காக,வேறு யார்க்கும் இல்ல” என பொறுமையை இழந்த பூமாதேவி போல் பொழிந்தாள்..
மறுபக்கம் அர்ச்சனா,“அவன் இப்போ என் கூடதான் இருக்கான்.என் எதிர்காலத்துல தான் அவன்.அவனோட கனவுகள்,அவனோட பெயர்,அவனோட குடும்பம் எல்லாமே என்னோடது
“அவனோட கடந்த காலம் இறந்துடுச்சு!
நீயும் உன் காதலும் சேர்த்து!” என சொல்லும் போதே அவள் குரல் நடுங்கியது.
அவனை மறுபடியும் குழப்பாத.
அவன் முன்னாடி வராத.
அவன் பெயரை உன் வாழ்க்கையில இருந்து அழிச்சுடு.”என அர்ச்சனா வெடிக்க
தாரணிக்கு அவள் பேச பேச கோபம் வர,“அர்ச்சனா ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோ.”
“தீரன் வாழ்க்கையில நான் இருக்கேனா இல்லையா,அது நீ முடிவு பண்ண வேண்டிய விஷயம் இல்ல நான் தான் முடிவும் பண்ணனும்.”என சொல்ல
அந்த வார்த்தை அர்ச்சனாவை எரிச்சலடைய வைத்தது.“நான் அவன் மனைவி ஆகப்போறேன்!”என அர்ச்சனா கத்த
“அதுவே போதும்!
அப்போ இன்னும் நீ மனைவியாகலையா என்று மனதில் ஒரு கணம் சந்தோஷ பட்டாள்..
அவளும் எதிர்முனையில் இணைப்பை துண்டித்தாள்
இப்போது தாரணி மனதில் ஏதேதோ கேள்விகள் எழுந்தது.
