மௌன ராகம் 24
அத்தியாயம் 24:
லண்டனின்வானம் இன்று தெளிந்த நீல நிறத்தில் இருந்தது. கடந்த காலப் புயல்கள் ஓய்ந்து, ஒரு புதிய வெற்றிக்கானகளம் தயாராகியிருந்தது. கவிவர்ஷனின் கவி டெக் க்ளோபல் நிறுவனம் இன்று உலகமே வியந்து பார்க்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பைவெளியிடப்போகிறது. லண்டனின் புகழ்பெற்ற ‘தி ஷார்ட்’ கட்டிடத்தின்உச்சி அரங்கில், சர்வதேச ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுமியிருந்தனர்.
கவிவர்ஷன்திரைக்குப் பின்னால் நின்றிருந்தான். அவன் அணிந்திருந்த கறுப்புநிற பிளேசர் அவனுக்கு ஒரு மாபெரும் தலைவனுக்கானகம்பீரத்தைத் தந்தது. ஆனால் அவனது கைகள் லேசாக நடுங்கின. அவனது வெற்றிக்குக் காரணமான கவிதைகளை விட, இன்று அவன்சொல்லப்போகும் ‘கோடிங்’ உலகை மாற்றப்போகிறது.
பிரக்யுஅவனது அருகில் வந்து நின்றாள். அவளது கைகளில் ஒரு சிறிய தண்ணீர்பாட்டில் இருந்தது. “கவி… பதற்றமா இருக்கா?” என்று கேட்டபடி அவனது தோளில் கை வைத்தாள்.
கவிவர்ஷன்அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். “பதற்றம் இல்லை பிரக்யு, ஒருவிதமான சிலிர்ப்பு. மூணு வருஷத்துக்கு முன்னாடிஇதே லண்டன் தெருவுல பசியோட நடந்தப்போ, இந்த உலகம் என்னைப்பார்க்காதுன்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கு இந்தஉலகமே நான் என்ன சொல்லப்போறேன்னு காத்திருக்கு. இதெல்லாம் உன்னால தான்,” என்றான்.
பிரக்யுஅவனது சட்டையைச் சரி செய்தபடி, “இதுஉன்னோட உழைப்பு கவி. போய் ஜெயிச்சுட்டுவா!” என்று அனுப்பி வைத்தாள்.
மேடையில்விளக்குகள் அணைக்கப்பட்டன. ஒரு மெல்லிய இசைஒலிக்கத் தொடங்கியது. கவிவர்ஷன் மேடைக்கு வந்ததும் பலத்த கைதட்டல் எழுந்தது.
”அனைவருக்கும் வணக்கம். இன்று நான் உங்களுக்கு ஒருமென்பொருளை அறிமுகப்படுத்தவில்லை. ஒரு மௌனமான மொழியைஅறிமுகப்படுத்தப் போகிறேன். இதற்கு நான் வைத்த பெயர்சைலண்ட் கனெக்கட். இது வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கானது. அவர்கள் இதயத் துடிப்பையும், கண்களின் அசைவையும் வைத்து அவர்களின் எண்ணங்களை மொழியாக மாற்றும் தொழில்நுட்பம் இது,” என்று கவிவர்ஷன் தனது உரையைத் தொடங்கினான்.
அவன்அந்த மென்பொருளைச் செயல்முறை விளக்கமாகக் காட்டியபோது, அரங்கமே வியப்பில் ஆழ்ந்தது. அவன் பேசப்பேச, திரையில்அவனது இதயத்தின் உணர்வுகள் கவிதைகளாக மாறின.
”இந்தத் தொழில்நுட்பத்தைஉருவாக்க எனக்கு உந்துதலாக இருந்தது ஒரு பெண்ணின் மௌனம். நாங்கள் பிரிந்திருந்த அந்த மூன்று ஆண்டுகளில், அவளது மௌனங்கள் தான் எனக்குப் பாடமாகஅமைந்தன. இந்த உலகத்தில் வார்த்தைகள்தேவையற்றவை, உணர்வுகள் தான் உண்மையானவை,” என்று அவன்சொல்லி முடித்தபோது, அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். அதே நேரம், கோயம்புத்தூரில்ஒரு பெரிய திரையில் இந்த நேரடி ஒளிபரப்பைப்பார்த்துக் கொண்டிருந்தனர். சசிதரன், மீனா, மேனகா மற்றும் ரூபன் ஆகியோர் ஒரே அறையில் அமர்ந்திருந்தனர்.
சசிதரனின்கண்கள் கலங்கின. “மீனா… நம்ம பையன் உலகத்தையேதிரும்பிப் பார்க்க வச்சிட்டான் பாரு,” என்றார் பெருமையுடன்.
மீனாதன் கைகளைத் துடைத்துக் கொண்டு, வர “அவன் ஜெயிப்பான் சார்… அது எனக்குத் தெரியும். ஆனா அவன் இன்னும்அந்தப் பழைய கவியாவே இருக்கான்பாருங்க, அது தான் எனக்கு ரொம்பச் சந்தோஷம்,” என்றார்.
ரூபன்அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மனதுக்குள் இருந்த எஞ்சியிருந்த சிறு கர்வமும் இப்போதுகரைந்து போனது. “சசிதரன் சார்… உங்க பையன் வெறும்காதலுக்காக மட்டும் இவ்வளவு தூரம் வரல. அவன் இந்தச்சமூகத்துக்கே ஏதோ ஒன்னு செய்யணும்னுநினைச்சிருக்கான். நான் அவனைத் தப்பாஎடை போட்டுட்டேன்,” என்று ரூபன் தனது மனமாற்றத்தை முழுமையாகவெளிப்படுத்தினார்.
லண்டனின்அந்த அரங்கத்தின் ஒரு ஓரத்தில், ஹர்ஷாந்தும்நிலாவும் நின்று கொண்டிருந்தனர்.
”ஹர்ஷாந்த்… கவிஅண்ணா எவ்வளவு பெரிய இடத்துக்குப் போயிட்டாரு பாருங்க. நாமளும் இது மாதிரி ஏதாச்சும்சாதிக்கணும் இல்ல?” என்று கேட்டாள் நிலா.
ஹர்ஷாந்த்அவளது கண்களைப் பார்த்தான். “சாதிக்கலாம் நிலா. ஆனா எனக்கு கவிஅண்ணா அளவுக்குக் கவிதை வராது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் டெக்னாலஜி தான். நான் உனக்காக ஒருஆப் உருவாக்கப்போறேன். அந்த ஆப் மூலமாநீ லண்டன்ல எங்க போனாலும் நான்உன் நிழலா இருப்பேன்,” என்றான்.
நிலாசிரித்தாள். “நிழல் வேண்டாம்பா… நிஜமா என் கூடவே இருந்தாபோதும்,” என்று சொல்லி அவனது கையைப் பிடித்துக் கொண்டாள். அந்த ஒரு நொடியில்அவர்களின் காதலும் அங்கீகரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிமுடிந்து கவிவர்ஷனும் பிரக்யுவும் தங்கியிருந்த ஹோட்டலின் மாடிக்குச் சென்றனர். லண்டன் மாநகரம் அவர்களின் காலுக்குக் கீழே விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்தது.
”கவி… இன்னைக்குநீ பேசின அந்த ஸ்பீச் இருக்கே… அதுல நீ என்னைப்பத்தி சொன்னது எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு,” என்றாள் பிரக்யு அவனது கையைப் பற்றிக்கொண்டு.
கவிவர்ஷன்அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். “அது வெறும் ஸ்பீச்இல்ல பிரக்யு, அது என்னோட சத்தியம். நான் இவ்வளவு தூரம் வந்ததே உனக்காகத்தான். இந்தப் பணம், புகழ் எல்லாம் உன்னோட அந்த ஒற்றைப் புன்னகைக்குஈடாகாது,” என்றான்.
அப்போதுஒரு மெல்லிய மழை தூறத் தொடங்கியது. லண்டனின் குளிர்கால மழை. கவிவர்ஷன் தனதுகோட்டைக் கழற்றி பிரக்யுவிற்குப் போர்த்தினான்.
”பிரக்யு… இனிநாம இந்தியாவுக்குப் போகலாம். அங்க நம்ம பழையவீட்டைப் புதுப்பிக்கலாம். நம்ம அப்பா அம்மாகூடவே இருக்கலாம். லண்டன் எனக்கு நிறையக் கொடுத்துடுச்சு. ஆனா என் வேர்கள்அங்க தான் இருக்கு,” என்றான்கவி.
பிரக்யுபுன்னகைத்தாள். “உன் கூட எங்கவந்தாலும் எனக்குச் சந்தோஷம் தான் கவி. ஆனாஒன்னு… இனி நீ எனக்குக்கவிதைகள் மட்டும் தான் எழுதணும், கோடிங் எழுதக்கூடாது,” என்று செல்லமாக மிரட்டினாள்.
கவிவர்ஷன்சிரித்தான். “நிச்சயமா! இனி ‘மௌனங்களின் ராகம்’ வெறும் கவிதைகளாமட்டும் தான் இருக்கும்,” என்றான்.
அவர்கள் இருவரும் அந்த மழையில் நனைந்தபடி நின்றபோது, அவர்களின் காதல் ஒரு முழுமையான வட்டத்தை அடைந்திருப்பதை அந்த இரவு உணர்த்தியது
