ரதி அணிந்திருந்த அரைகுறை ஆடையோடு அவளை பார்த்தால் பார்க்கின்றவர்கள் பார்வை எப்படியிருக்கும் என்று ராம் கூறியதால் ஆடை போட்டு பார்க்கும் அறையில் இருந்த ரதி கோபமானாள்.
அவளின் கோபத்தை உணர்ந்து “சரி நான் எதுவும் பேசல… இப்ப நீயே சொல்லு நான் இப்ப என்ன பண்ணனும்?” என்று ராம் தன்மையாக கேட்க
“நீயே போயி ஏதாவது ஒரு டிரஸ்ஸ எடுத்துக்கிட்டு வந்து தொல…” என்று உள்ளிருந்தே கத்தினாள்.
ஏனோ ராமுக்கு ரதியின் மீது கோபமே வரவில்லை… மாறாக அவளுக்கான அனைத்தையும் செய்யும் எண்ணமே வர “ஓகே… உள்ளையே இரு… டூ மினிட்ஸ்ல வந்துடறேன்…” என்று சென்று ஒரு பார்மல் பேண்ட் முழுக்கை டாப்ஸ் எடுத்துக்கொண்டு வந்து கதவை தட்டினார்.
கதவு தட்டப்பட்டதும் உள்ளிருந்தே “என்ன?” என்று எரிந்து விழாத குறையாக கத்த
ராமும் “உனக்கு டிரஸ் எடுத்து வந்துருக்கேன்… கதவ தொற…” என்று கூற அவளும் கதவை திறந்து கையை மட்டும் வெளியே நீட்டினாள்.
இவரும் துணியை அவளின் கரத்தில் தந்துவிட்டு “நான் இன்னம் வேற பார்த்துட்டு நல்லா இருக்குறத எடுத்துக்கிட்டு வரேன்… நீ கதவ உள்ள லாக் பண்ணிக்க… யார் கதவ திறந்தாலும் டிரஸ் போடாம திறக்காத…” என்றவனை கதவை திறந்தே முறைத்து
“யாரு கதவ தட்டினாலும் டிரஸ் போடாம அப்படியே திறக்க நான் என்ன பைத்தியமா?” என்று கத்த
அவள் முன்பு எடுத்து போன சின்ன ஆடையை போட்டிருப்பதை கண்டே இதையாவது போட்டு இருக்காலே அதுவரைக்கும் சந்தோசம் என்று நிம்மதி மூச்சி விட்டு “ஓஓஓ சாரி… நான் கொஞ்சம் அப்படித்தான் ஓல்ட் டைப்ல… அதான் அப்பைக்கு அப்ப இப்படி பேசிடுவேன்… கோவிச்சிக்காத… நீ நான் தந்த டிரஸ்ச டிரையல் பாரு… நான் வேற எடுத்துட்டு வரேன்…” என்று ஓடாத குறையாக ஓடினார்.
ராம்மை கொஞ்சம் வித்தியாசமாக பார்த்தே “அந்த லேடிங்க தான் ஓல்டுனு சொல்லுதுங்கனா இந்த லூசும் அதையே பிடிச்சிக்கிட்டு நிக்கிது… நாம தான் இத மாத்தனும் போல… டிரஸ பாரு…” என்றே முணு முணுத்துக்கொண்டு கதவை அடைத்தாள்.
ராமும் சென்று அவள் அளவை யோசித்து யோசித்தே சல்வார் சிலவை, காலர் வைத்த டாப்ஸ், முழு கை டாப்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், சேர்ட், பனியன், ஸ்கேர்ட், பட்டியாலா, லெக்கின்ஸ், சார்ட்ஸ், பேண்ட், ஜீன்ஸ் என்று பார்த்ததில் பிடித்த கண்களை கவர்ந்த அத்தனையும் எடுத்து வந்து கதவை தட்ட திறந்தவள் ராம் கரத்தில் இருந்தவைகளை கண்டு கொஞ்சம் அசந்து தான் போனாள்.
“நாட்பேட் ஹேன்ஸம் … செம்ம கலைக்சன் தான்…” என்றே ராமின் கரத்தில் இருந்த ஒரு ஆடையை உருவிக்கொண்டு “டோன்ட் வொரி… முன்ன போட்டு காட்டுனது ஸ்விம்மிங் டிரஸ் தான்… எல்லா இடத்திலும் போட மாட்டேன்… தனியா தான் போடுவேன்… ஓகேவா…” என்று கூறி கதவை அடைக்க
ராமும் நிம்மதியாகவே “அப்பாடா… இப்பையாவது என் நெஞ்சில பால வார்த்தியே… சரி இத எல்லாம் பில் போட சொல்லவா?” என்று கையில் இருந்த ஆடைகளை பார்த்தப்படி கேட்க
“நீதானே என்னோட கார்டியன்… நீயே முடிவ எடு…” என்று கூறிவிட ராமும் எடுத்த ஆடைகள் மட்டுமல்லாமல் இன்னும் பலவற்றை எடுத்து பில் போட்டு கார்ல கொண்டு சென்று வேலை பார்க்கும் ஆட்களை வைக்க சொல்ல ஆடைகள் கார் முழுவதும் நிரம்பியது.
ரதியும் அழகாக கண்ணை உருத்தாதது போல் தொடைக்கு சிறிது கீழ் வரை இருக்கும் கருப்பு நிற மேற்கத்திய கெவுன் அணிந்து வெளியே வந்தாள்… அந்த ஆடை ரதிக்கு அவ்வளவு அழகாக இருந்தது.
“இது ஓகேவா?” என்று ரதி கேட்டுக்கொண்டே அவரின் முன் வந்து நிற்க
ராமும் பெண்ணவளை தலையில் இருந்து கால் வரைக்கும் பார்க்க கழுத்துக்கு கீழ் கொஞ்சம் அதிகமாக பெண்ணவளின் மேனி தெரிவது போலவே தெரிய “ஓகே தான்… இரு வரேன்…” என்றே ஓடியவர் ஒரு வெண்ணிற பிளேசரை எடுத்து வந்து “இத போடு… இன்னும் அழகா இருக்கும்…” என்று கூற
கோட் மாடலில் இருந்த பிளேசரை வாங்கி திருப்பி திருப்பி பார்த்தே “பார்ட்டி போர மாதிரி கிளம்புன என்னைய எதுக்கு இதயெல்லாம் போட்டு ஏதோ பிசினஸ் வுமன் மாதிரி தயார் பண்ற?” என்று கேட்க
“நான் எங்க தயார் பண்ணுனேன்? நீ போட்டு இருக்குற டிரஸ்க்கு தகுந்தத எடுத்து வந்தேன்…” என்றே மனதில் நினைத்துக்கொண்டு “எனக்கு மீட்டிங் இருக்கு… அங்க இந்த மாதிரி டிரஸ் வியர் பண்ணியிருந்தா ஸ்மார்ட்டா இருக்கும்… அதான்…” என்றார்.
விசில் அடித்தே ராமை ஒரு மார்கமாக பார்த்து “அப்போ சார் என்னைய இன்னைக்கு கார்லையே பூட்டி வைக்காம ஆபிஸ்குள்ளையும் கூட்டிக்கிட்டு போற ஐடியாவுல இருக்கீங்க…” என்று கேட்க
“ஹேய்… சாரி… நேத்து நீ சுயநினைவுல இல்ல… அதோட தூங்கிக்கிட்டு இருந்த அதான் கார்லையே பத்திரமா இருப்பன்னு பூட்டிட்டு போனேன்…” என்று ராம் உண்மையான வருத்தத்தில் கூற
ராமின் வருத்தத்தை கண்டுக்கொண்ட ரதியும் கைகளை கட்டிக்கொண்டு “ஓகே ஓகே… முகத்தை தூக்கி வைக்காத… பார்க்க முடியல… நான் ஆபிஸ்குள்ள வரணும்னா இன்னைக்கு ஈவினிங் நீ என்னோட வெளிய வர ஒத்துக்கணும்… சம்மதம்னா சொல்லு வரேன்… இல்லனா நான் வரல…” என்றாள்.
நான் எங்க முகத்தை தூக்கி வச்சிருக்கேன்? என்றே நினைத்துக்கொண்டு “சரி சரி வா… நேரமாச்சி…” என்று ராம் அந்த கடையை விட்டு வெளியே வர அவரின் பின்னாடியே ரதியும் வந்தாள்.
ராமை கண்டதும் காரை எடுக்க ஓடிய செக்யூரிட்டி காரை ஓட்டிவந்து ராமின் முன் நிறுத்தி கதவை திறந்துவிட ராம் ரதி காரில் ஏறியதும் கார் செல்லும் வரைக்கும் செக்கியூரிட்டி சல்யூட் அடித்தப்படியே இருக்க அதை கண்ட ரதி “ஆமாம்… கார கஸ்டமரே தான பார்க்கிங் போயி பார்க் பண்ணனும்… நமக்கு மட்டும் எப்படி செக்கியூரிட்டி பார்க் பண்ணி எடுத்துக்கிட்டு வந்து தந்து சல்யூட் வேற அடிக்கிறாரு?” என்று வினாவ
ராம் எதுவும் கூறவில்லை… “சார் அப்படியே தேவைனா தான் பேசுவீங்களோ… இல்லாட்டினா அப்படியே வாய மூடிக்கிட்டு தான் வருவீங்களோ?” என்று பேச அதற்கும் அவர் எதுவும் பேசாமல் காரை ஓட்ட ரதியும்
“உம்முனா மூச்சி…” என்று முணு முணுத்துக்கொண்டு பாடலை ஓடவிட்டு அமர்ந்து விட்டாள்.
கார் நேராக சென்று ராமின் அலுவலகம் உள்ள கட்டிடத்தின் முன் நின்றது… ஆர்கே கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி என்று எழுதி இருந்த பெயரை பார்த்தபடியே தான் அவள் உள்ளே சென்றாள்… அப்போதுதான் ஏதோ நினைவு வர சட்டென திரும்பி காரின் பின் சீட்டில் இருந்த பைகளின் மீது எழுதியிருந்த பெயர்களை பார்த்து வாயில் கை வைத்தே
“ஹேய்… அப்போ அந்த ஷாப்பிங் மால் உன்னுதா?” என்று வியப்பை குறைக்காமல் கேட்க ராம் சின்ன புன்னகை மட்டுமே செய்ய அவரின் சோல்டரை அவளின் சோல்டரால் இடித்து “ஆள் பெரிய இடம் தான் போல…” என்றாள்.
காரை நிறுத்திய படியே “சாப்பாடு இல்லாம பட்டினி கிடந்த காலம் எல்லாம் இருக்கு…” என்று காரில் இருந்து இறங்க ரதியும் வேகமாக இறங்கி ராமின் பின் வந்த படியே
“இன்னமும் அந்த கால ஆளுங்க மாதிரியே அப்ப நான் அப்படி இருந்தேன்… அப்போ நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்… அப்ப இப்படி தான் அப்படின்னு சொல்லி சொல்லி நல்லா இருக்கும் போதும் அதே புராணத்தை பாடிக்கிட்டு இருக்காத… பழைய பஞ்சாங்கத்தையே பழைய புராணத்தையே பாடிக்கிட்டு இருக்குற ஆளா இருந்தா… எதுக்கு நீ இவ்வளவு சம்பாதிச்ச? அப்படியே அதுலயே உட்கார்ந்து இருக்கலாம்ல… இவ்வளவு சம்பாதிச்சும் இது அனுபவிக்காம எதுவுமே பண்ணாம வாழ்க்கைய ஓட்டுறதுக்கு பருத்தி மூட்ட குடவுன்லையே இருந்திருக்காலாமே…” என்றதுமே ராமுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
வாய் விட்டு சிரித்தே “ஹ ஹ ஹ… நல்லா பேசுற…” என்று கூறி லிப்ட் பட்டன் அழுத்த ரதியும் “தேங்க்யூ தேங்க்யூ கூடவே பொறந்தது…” என்றதுக்கும் ராமுக்கு சிரிப்பு தான் வந்தது.
வெகுநாட்கள் பிறகு இப்போது தான் வாய்விட்டு சிரிக்கிறார்… இப்போதே இளமை திரும்புதே என்பது போல் ராமுக்கு இருக்க ராமும் “உன்கிட்ட என்னைய பத்தி உன் அப்பா ஏதாவது சொல்லியிருக்கானா?” என்று கேட்க
“சொல்லாத நாளே இல்ல… ஆமாம் உன் கிட்ட என்னைய பத்தி டாடி ஏதாவது சொல்லி இருக்காரா?” என்று ரதி திருப்பி கேள்வி எழுப்ப
பெருசாக எதுவும் சொன்னது இல்லை… மகளின் பெயர கூட சொல்லாத சசிகுமார் மகள் பேசியே காரியத்தை சாதித்துக்கொள்வாள் என்று மட்டும் சொல்லிருக்க அதை அப்படியே சொல்ல ஒருமாதிரி ராமுக்கு இருக்க “ம்… சொல்லியிருக்கான்…” என்று கூற
“அப்பறம் நான் உன்னைய என் டாடி ஏஜ் பர்ஸ்சனா என் டாடி பிரண்ட்டா பார்க்கல… என்னோட பிரண்ட்டா தான் பார்க்குறேன்… அதனால அவர என்முன்னாடி அவர் இவர்னே பேசு…” என்றாள்.
எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசும் ரதியின் இந்த குணமும் ராமுக்கு பிடித்தே இருந்தது… ஆகையால் ராமும் “ஓகேங்க மேடம்… நீங்க சொன்ன அதே போல பண்ணிக்கிறேன்… இனிமே சசிக்குமார் சார அவங்க இவங்க வாங்க போங்கன்னே கூப்பிடுறேன்… போதுமா…” என்று ஓவர் மரியாதையாக கூற
ரதியும் “ஓவரா நடிக்காத… உள்ளுக்குள்ள இவ சொல்றதெல்லாம் நான் கேட்கணுமா? அப்படின்னு நினைச்சுகிட்டு வெளியில அப்படியே கேட்குற மாதிரி நடிக்கிற தானே…” என்று அவள் பொய்யாக முறைத்து கேட்க அவளின் பின்னந்தலையில் செல்லமாக ஒரு தட்டு தட்டியே
“லூசு… நான் ஏன் அப்படி நினைக்க போறேன்? எனக்கும் என்னுடைய அப்பாவை யாராவது வாடா போடான்னு கூப்பிட்டா கோவம் வரும் தான்… ஆனா அவங்க வயசுல இருக்குறவங்க கூப்பிட்டா கோவம் வராது… பட் உனக்கு தான் எனக்கு வயசு ஆகலன்னு சொல்லிட்டியே… இந்த காம்ப்ளிமெண்ட்க்காகவே நான் உன் அப்பாவ அவரு இவருனே சொல்றேன் போதுமா?” என்று காலரை சரி செய்ய ரதிக்கும் சின்ன புன்னகை எட்டி பார்த்தது.
லிப்ட் ஐந்தாவது மாடியில் நிற்க கதவு திறந்ததும் ராமின் பிஏ ஸ்டெல்லா வந்து நின்றாள்.
ஸ்டெல்லா ஐந்தரை அடி உயரம்… பார்க்க அழகாக புடவை அணிந்து முழு ஒப்பனையில் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி நவநாகரி யுவதியாக அழகாக இருந்தாள்.
அவள் அன்றைய வேலைகளை கூற கூற ராம் எப்போதும் போன்ற இறுகிய முகத்துடன் கம்பீரமான நடையுடன் காதில் வாங்கிய படியே அவரின் அறையை நோக்கி சென்றார்.
ரதிக்கோ தனியாக அவளை அப்படியே ராம் விட்டது போல் இருக்க அவளின் முகமே மாறி போனது.
வருவாள் ரதி…
