விக்ரம் சொன்ன விஷயங்கள் எதுவுமே மறக்கக் கூடியது இல்லை.
ஏனென்றால் அவள் வாழ்க்கையில் இவ்வளவு ரத்தத்தை பார்த்ததே இல்லை.
அவங்கள பாக்கணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணினா… அந்த விஷயத்துக்கு அப்புறம் அவளுக்கு ஒரு வாரம் உடம்பு சரியில்லை.
தான் கண்ணு முன்னாடியே ஒரு உயிர் போனது அவளால மறக்க முடியல,
அது மட்டும் இல்ல,
அவங்க சொன்ன அந்த கடைசி வார்த்தை… அவன காப்பாற்றுவது உன் பொறுப்புன்னு சொன்னாங்க,
அப்படியே அவள் சொல்லிக்கிட்டு அவள் உடலை உலுக்கி புல்லரித்தாள்.
அங்கேயே உடைஞ்சு அவள் கண்ணீர் விட்டு அழுக ஆரம்பிச்சா…
அந்த அழுகைக்கு பின்னால்…
ஒரு மிகப்பெரிய வலி இருக்கின்றது.
அந்த அழுகைக்கு பின்னால் மிகப்பெரிய பொறுப்பு இருக்கின்றது.
அதை தான் தவற விட்டதாக பல குற்ற உணர்வோடு இருந்தவளுக்கு,
ஏதோ ஒரு விதமான திருப்தி..
அன்று என்ன நடந்தது என்பதை அவள் சொல்ல ஆரம்பித்தாள்.
என் தங்கச்சி உடைய பிரண்டு மூலமா ஒரு வரன் வந்தது.
அவங்க ஹைவேஸ் பக்கமா இருக்கிற ஒரு ரெசார்ட்ல தான் பேசலாம்னு இருந்தாங்க,
எப்போதுமே என்ன இந்த மாதிரி அலங்காரம் பண்ணி வேஷம் போட்டு கூட்டிட்டு போறது என் வீட்டு உடைய வழக்கம். எனக்கு எப்படியாவது கல்யாணம் ஆகணும்ன்றது தான் அவர்களுடைய விருப்பம்.
நானும் அவங்களை எதிர்த்து பேச திறம் இல்லாமல் போயிடுவேன்.
அன்னைக்கு அப்படித்தான் அங்கே போனோம்.
ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.
கொஞ்ச நேரத்துல அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாங்க,
முதல்ல அவங்க பார்த்தது என்னுடைய தங்கச்சி. அவள்தான் பொண்ணு என்று நினைத்துக் கொண்டார்கள்.
ஹலோ… இப்படி கைகுலுக்கிக்கிட்டு எனக்கு பார்த்த மாப்பிள்ளை என் தங்கச்சி கிட்ட பேசிட்டு இருந்தாரு.
எல்லாரும் வாங்க வாங்க…
உட்காருங்க, இப்படி சங்கர் எழுந்திருச்சு அவங்க எல்லாருக்கும் மரியாதை கொடுத்து உட்கார சொன்னாரு.
போய் பொண்ணு பக்கத்துல உக்காருடா,
அம்மாடி நீ இந்த பக்கம் வா… இப்படி சொல்லு என்னை எழுப்பி விட்டாங்க.
நிலா எழுந்திருச்சு அவங்க பக்கமாக வர, ஆனால் பார்க்க வந்த மாப்பிள்ளை அவளுடைய தங்கச்சி பக்கமாக போய் உட்கார்ந்தான்.
அந்த இடத்திலேயே சங்கர் கொஞ்சம் கோபத்தோட ஆனா அந்த மனசுக்குள்ள வச்சுக்கிட்டு வெளிக்காட்டாம,
பொண்ணு இவ தான்..
அது என்னுடைய இரண்டாவது பொண்ணு, அப்படி சொன்ன உடனே அவங்களுடைய முகம் மாற ஆரம்பிச்சது.
அங்கேயும் என்னோட மனசு சுக்கு நூறா உடைந்து போச்சு. என்னால கத்தி அழுகணும்னு ஆசை இருந்தாலும் கூட என்னால அது முடியல.
அமைதியா உட்கார்ந்து இருந்தேன் அவங்க பேசி முடிக்கிற வரைக்கும்…
இந்த பொண்ணா?…
என்னங்க சொல்றீங்க?…
நாங்க உங்க ரெண்டாவது பொண்ணு தானே நினைத்தேன்.
வேகமா அவங்க போனை எடுத்து கீதா உடைய பிரண்டுக்கு போன் பண்ணி பேசினாங்க.
நீ அனுப்புன போட்டோல ரெண்டு பொண்ணு இருந்தாங்க அந்த ரெண்டு பொண்ணுமே இங்க வந்து இருக்கு ஆனா நாங்க பார்க்க வந்த பொண்ணு மூத்த பொண்ணு.
நாங்க நினைத்த பொண்ணு ரெண்டாவது பொண்ணு சொல்றாங்களே…
அப்படி என்ன அவங்க என்ன என்னமோ பேசுனாங்க,
அப்போ போன்ல பேசினா பொண்ணு, ஐயோ ஆன்ட்டி,
அவள் என்னோட பிரண்டு. இன்னும் அவள் காலேஜ் படிச்சு கூட முடிக்கல பக்கத்துல இருக்காங்களா அவங்க தான் பொண்ணு.
அவங்க அக்காவுடைய போட்டோ செப்பரேட்டா இல்லைன்னு சொல்லி தான் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்த போட்டோ அனுப்பி வச்சாங்க.
என்ன சொல்ற?…
என்னோட பிரண்டுன்னு சொன்ன ஆனா இப்ப பிரண்டோட அக்கான்னு சொல்ற என்ன நினைச்சுட்டு இருக்கன்னு அங்க சத்தம் போட்டாங்க.
அதுக்கு அந்த பொண்ணு நீங்க எப்படி மாத்தி பார்த்தீங்கன்னு எனக்கு தெரியலையே…
நான் அவங்கள தான் மென்ஷன் பண்ணி சொல்லி இருந்தேன்னு அவள் எவ்வளவு சொல்லும் போது அதுக்கு மாப்பிள்ளைக்காரன் ஃபோனை கொடு அப்படின்னு போன வாங்கி, நீ உன் பிரண்டு என்று சொன்னதுனால தான் உன் ஸ்டேட்டஸ்ல போட்டு இருந்த பொண்ணு தான் நீ எங்களை பார்க்க சொல்லி இருக்க பொண்ணுன்னு நாங்க நினைச்சுட்டோம்.
ஆனா இப்போ எல்லாம் தலைகீழா இருக்கு அந்த பொண்ணு பயங்கர ஸ்டைலா இருக்கு ஆனா உங்க அக்கா அப்படி இல்ல,
இது சரிப்பட்டு வராது.
வேணும்னா ரெண்டாவது பொண்ணு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் இத அவங்க கிட்ட சொல்லு, இப்படியெல்லாம் என் முன்னாடியே எல்லாரும் பேசிக்கிட்டாங்க.
அப்பா கோபப்பட்டு பயங்கரமா திட்டுனாரு… என் தங்கச்சியையும் என்னையும் சேர்த்து,
அப்ப அந்த குடும்பம் எங்க அப்பா கிட்ட தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிறதாக பேசுனாங்க ஆனா எங்க அப்பா ஒரே அடியா முடியவே முடியாதுன்னு சொல்லி அவங்களையும் பயங்கரமா திட்டிட்டு எங்கள அங்க இருந்து கூட்டிட்டு வந்துட்டாரு.
ரோட்டிலேயே பெரிய சண்டை. நீயும் உன் தங்கச்சி மாதிரி மேக்கப் போட்டுட்டு வர வேண்டியதுதானே… ஏன் எங்களுடைய மானத்தை வாங்குகிறாய் அப்படியெல்லாம் சொல்லி என்னை கேவலப்படுத்தினார்கள்.
அவர்களுடைய ஆசைக்காகத்தான் நான் அந்த மாதிரி மாறாம இருந்தேன் கடைசியில் அதுவே அவங்களுக்கு பிரச்சனையா இருந்துச்சு.
அப்போ தான் நீங்க சொன்ன அந்த இளநீர் கடைக்கு கிட்ட என்ன விட்டுட்டு போயிட்டாங்க.
கார்ல இருந்து சில பேர் என்ன கூர்ந்து கவனித்ததையும் நான் பார்த்தேன்.
அந்த அவமானம் எனக்கு புதுசு இல்லையே….
உங்க கார் மெல்ல மெல்ல ஸ்லோவா தான் போச்சு அதை நான் ரொம்ப நேரமா பார்த்துட்டு தான் நின்னுட்டு இருந்தேன்.
அழுதுகிட்டு நான் நடந்துட்டேன்.
அப்போ பின்னாடி வந்த ஒரு லாரி நீங்க ஓரமா நின்னுட்டு இருக்கும்போது என் பக்கத்துல வந்து நின்னுச்சு இப்படி அந்த கார் தான் டா..
அடிச்சு தூக்கு டா ன்னு அந்த லாரி குள்ள இருந்த இரண்டு பேர் பேசிக்கிட்டாங்க.
அதை பார்த்ததுமே, எனக்கு உசுரே இல்லை,
இதை எப்படி நான் யார்கிட்ட என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல பக்கத்துல யாருமே இல்ல.
கண்ணிமைக்கும் நேரத்துல அந்த லாரி உங்க கார் அடிச்சு நொறுக்கிட்டு போயிடுச்சு.
நான் பதறி அடிச்சு ஓடி வந்த போ அங்கே இருந்த ஓரத்துல இருந்த அந்த கம்பி மேல தான் உங்களுடைய சித்தி பாதி மேலேயும் பாதி கீழேயும் தொங்கிட்டு இருந்தாங்க.
அப்போதான் நான் வேகமாக வந்து அவர்களை தூக்கினேன் பின்னாடி இருக்கிறவர் மூச்சு பேச்சு இல்லாம இருந்தாரு.
அந்த பக்கம் நான் யாரையும் பார்க்கல அவங்க என் கைய புடிச்சு அழுதாங்க…
நான் என்னோட பேக்ல இருந்த தண்ணீரை எடுத்து வேக வேகமா அவங்களுக்கு கொடுத்தேன்.
என் பையன்…
என் பையன்…
அவனை காப்பாத்து,
அவனுக்கு காப்பாற்றுவது உன்னுடைய பொறுப்பு… அப்படி சொல்லிக்கிட்டு அவங்க என்ன அனுப்பி வச்சாங்க அவங்க அப்படியே விட்டுட்டு போகவும் என்னால முடியல வேகமா அந்த பக்கமாக இருந்த அதாவது உங்கள நான் வந்து பார்த்த போ,
மூச்சு பேச்சு இல்ல,
தண்ணீர் தெளிக்க வந்தேன்.
பக்கத்துல இருக்கிறவங்க தண்ணி கொடுக்க கூடாது. ஆம்புலன்ஸ் வரட்டும்னு பேசிட்டு இருந்தாங்க,
அப்ப நான் மறுபடியும் உயிரோடு இருக்கிற உங்க சித்தி பார்க்கிறதுக்காகவும் இந்த பக்கமா ஓடி வந்தேன்.
என் பையன்..
என் பையன்…
அப்படி மறுபடியும் மறுபடியும் சொல்லும்போது, அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கார் மா என்று நான் திரும்பி சொல்லும்போது அவங்க இருக்கமா என் கைய புடிச்சுகிட்டு அவன காப்பாத்து விட்டு விடாதே அவன் உன் பொறுப்பு…
அப்படின்னு சொல்லிக்கிட்டு அவங்க இறந்துட்டாங்க.
அவங்க இறந்தாலும் கூட, அவர்களுடைய கையை நீ இறுக்கமா பிடிச்சிருந்துச்சு அந்த இருக்கும் இன்னும் நினைச்சாலும் என் கை நடுங்குது.
பயங்கரமான நடக்கும் எனக்குள்ள..
அவங்க சொன்ன அந்த கடைசி வார்த்தை உன் பொறுப்பு…
அது மட்டும் தான் என்னோட காதுல விழுந்துட்டே இருந்துச்சு.
நான் வேகமாக அந்த பக்கமா ஓடி வந்து உங்களை தூக்குனா போ எல்லாரும், செத்துட்டான்ம்மா,
இந்த பக்கமா வா… இப்படி தான் பேசினார்களே தவிர யாரும் மனிதாபிமான அங்கு நடந்துக்கவே இல்லை.
பரவாயில்லை என்று சொல்லி நான் தண்ணீரை எடுத்து தெளிக்க போன நேரத்துல ஆம்புலன்ஸ் வந்தது.
அவசர அவசரமா கார் பின்னாடி இருந்த உங்க அப்பாவ தூக்கினார்கள் அவரை செக் பண்ணப்போ அங்க இறந்துட்டாருன்னு சொல்லிட்டாங்க..
அடுத்து உங்க சித்தி,
கடைசியாக உங்களை,
அவ்வளவுதான் சார் முடிஞ்சிருச்சு உயிரெல்லாம் இல்ல பாத்தாச்சு சார் என்று சுத்தி இருந்தவங்க எல்லாரும் சொன்னாங்க,
நானும் அப்படித்தான் நினைச்சேன் உங்களுக்கு தூக்கம் போது நானும் சேர்ந்து தான் தூக்கினேன் கை உடம்பு எல்லாம் ரத்தம்.
எனக்கு வாயெல்லாம் நடுங்க ஆரம்பிச்சது.
உயிரே போற மாதிரி இருந்துச்சு..
என் கண்ணு முன்னாடி எத்தனை உசுரு போயிடுச்சுன்னு வேதனையில நான் என்ன செய்யனும் தெரியாம இருந்த அப்போ சரியா உங்கள தூக்கி ஸ்ட்ரக்சர்ல கொண்டு போகும்போது உங்க கைய புடிச்சிட்டு தான் வந்தேன் அவங்க உள்ள ஏத்தும் போது என் கையை நீங்க இருக்க புடிச்சீங்க..
சார் உயிர் இருக்கு..
சார் உயிர் இருக்கு…. அவர காப்பாத்துங்க,
சார், எழுந்திருங்க சார் நான் பேசறது கேக்குதா?..
இப்படி அங்கே நின்னு கெஞ்சிகிட்டு இருந்தேன். அப்போதான் அவங்க வேகமா செக் பண்ணி பார்த்தப்போ உயிர் இருக்குன்னு தெரிஞ்சது அவசர அவசரமா உங்கள உள்ள ஏத்திட்டாங்க நானும் உங்க கூடவே தான் ஏறினேன்.
ஆனா அந்த நேரத்துல… ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு அப்படின்னு இந்த விஷயம் போற வழியிலேயே அவங்களுக்கு தெரிஞ்சிருச்சு.
ஆட்டோவை ரிட்டன் எடுத்துக்கிட்டு என்னை தேடி என்னோட அப்பாவும் என் குடும்பமும் வந்துச்சு.
நான் அங்கே ஆம்புலன்ஸில் இருந்ததை பார்த்ததுமே எனக்குத்தான் ஏதோ ஆயிடுச்சுனு நெனச்ச அவங்க பயந்த பக்கத்துல ஓடி வந்தாங்க..
ஆனா அது ஃபுல்லா என்னுடைய ரத்தம் இல்லை,
அப்போதான் எங்க அப்பா என்னை தர தர என்று ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறங்கினார்.
அறிவில்லையா…
வீட்டுக்கு வா…. இந்த சமூக சேவை எல்லாம் போதும் இப்படி சொல்லிக்கிட்டு என் கைய புடிச்சு இழுத்தார்.
இருங்கப்பா அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல… பாத்துட்டு போயிடலாம்னு சொல்லி நான் பேசிட்டு இருக்கும்போது அப்பா என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
வீட்டுக்கு வா னு சொன்னேன்..
ஏற்கனவே உனக்கு கல்யாணம் ஆக மாட்டேங்குது போலீஸ் கேஸ் அலைய போறியா?.. அப்படின்னு சொல்லி தர தர என்று இழுத்துட்டு போனார்.
வீட்டுக்கு போனதுமே, உடம்பு சரியில்லை.
அவ்வளவு ரத்தத்தை பார்த்து, ஒரு உயிர் என் கண்ணு முன்னாடி போனதை பார்த்து அது மட்டும் இல்லாம உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒருவரை விட்டுட்டு வந்த பாவின்னு இத்தனை விஷயமும் சேர்ந்து என்னை படுக்க வச்சது.
ஒரு மாசம்.. உடல் மெலிந்து இருக்கிறத விட இன்னும் மோசமாக போய் அதுக்கப்புறம் தான் சரியாகி வெளியில் வந்தேன்.
உங்கள பத்தி ஹாஸ்பிடல் விசாரிச்சு பார்த்தேன்.
எந்த ஹாஸ்பிடல்னு தெரியாம ஒரு ஹாஸ்பிடல் நியூஸ் பேப்பர் தூக்கிட்டு ஓடினேன்.
யாருமே உங்களுடைய ஒரிஜினல் முகத்த நியூஸ் பேப்பர்ல போடல அந்த ரத்தத்தோடு இருந்த போட்டோ மட்டும் தான் போட்டு இருந்தாங்க,
அடுத்து எங்க அப்பா நான் செய்யுற வேலை எல்லாம் பார்த்து அந்த பேப்பரையும் கிழிச்சு தூக்கி வீசி எறிஞ்சார்.
ஆனா எனக்கு இப்பவும் அந்த கில்ட் என் மனசுக்குள்ள இருக்கு.
நான் அன்னைக்கே அப்படி விட்டு இருக்க கூடாது, ஆனா அந்த விதி தான் உன்னை என்கிட்ட சேர்த்துச் நீ சொல்லும் போது என்னால நம்ப முடியல,
ஆனாலும் எனக்கு நிம்மதியா இருக்கு.
இந்த நிம்மதி இதுவரைக்கும் நான் அனுபவிச்சதே இல்ல, இப்படி சொல்லி அவள் பயங்கரமாக அழும்போது அதை பார்த்த விக்ரம் வேகமா வந்து ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல..
நான் இருக்கேன் இல்ல,
நான் உன்னை தேடி நல்லா வந்திருக்கேன் பாரு… இப்படி சொல்லிக்கிட்டு அவளுடைய கைகளை இறுக்கமாக தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டான்.
இனி என்ன நடந்துச்சுன்னு அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
