இதழ் – 14

ராகவன் பளார் என அருவியின் கன்னத்தில் அறைந்தான். அவன் அடித்ததில் அங்கிருந்த கண்ணம்மா, சுப்பையா, வாட்ச்மேன் மூவரும் அரண்டு போய் நின்றனர்.

“அவங்கவங்க வேலையைப் போய்ப் பாருங்க” என்றான் அருவியைப் பார்த்தபடி.

இப்போது அருவியின் கையைப் பிடித்து தங்கள் அறைக்கு அழைத்து வந்தவன், “காலையில் கண் விழிச்சதும் உன்னைக் காணாம, நீ எங்கே போனயோ? உனக்கு என்ன ஆச்சோனு நான் பதறிப்போய்ட்டேன் தெரியுமா!!” என்றான் கோவமாக.

“தன்னை காணாமல் தவித்திருக்கிறான். தன் மேல் இருந்த பாசத்தால்தான் அவன் தன்னை அடித்திருக்கிறான். தன்னை இவன் இவ்வளவு காதலிக்கிறானா?” என அவனை நினைத்து மேலும் அவன் மேல் காதல் கொண்டாள் அருவி.

“இவ்வளவு காலைல யார்கிட்டயும் சொல்லாம எங்கேடி போன? சொல்லு” என அவன் கேட்டான்.

அவள் கண்களில் கண்ணீருடன் அவனையே பார்த்தாள்.

“அருவி, உன்னைத்தான் கேட்கிறேன். பதில் சொல்லு” என அவள் தோளைத் தொட்டு உலுப்பினான் ராகவன்.

அவன் உலுப்பியதில் சிந்தனை கலைந்தவள், “என்ன? கேட்டிங்க?” எனக் கேட்டாள்.

“எங்கே போனேனு கேட்டேன்” என்றான் கோவத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு.

“அது வந்து… நேத்து நாம கோவிலுக்கு போனோம்ல?”

“ஆமா!”

“அங்க ஒரு வயசான அம்மாவைப் பார்த்தேன். அவங்க பச்சை குத்திட்டு இருந்தாங்க.”

“சரி!” என யோசனையுடன் கேட்டான்.

“அவங்க வீடு இங்க பக்கத்தில்தான் இருக்கு.”

“அதுக்கும் இப்ப நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?” எனக் கேட்டான்.

“நான் காலைல அவங்க வீட்டுக்கு போனேன்.”

“எதுக்கு?” என புரியாமல் கேட்டான்.

“இதுக்காகத்தான்” என்றவள் தன் சேலையை விலக்கி, ஜாக்கெட்டையும் விலக்கினாள்.

அவள் நெஞ்சில் “ராகவன்” என தன் பெயர் பச்சை குத்தியிருந்ததைப் பார்த்து அப்படியே அதிர்ந்து பேச்சற்று நின்றான் ராகவன்.

அவன் பெயரை தன் நெஞ்சில் பச்சை குத்தியிருப்பதைப் பார்த்ததும், “தன்னைக் கட்டிக்கொண்டு அவன் முத்தமிட்டு தன் வலிக்கு மருந்திடுவான்” என ஆசையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சட்டென நினைவுக்கு வந்தவன் வேகமாக அவள் அருகில் வந்து அவள் கன்னத்தில், “பளார்… பளார்” என மாறி மாறி அறைந்தான்.

அவன் அறைந்ததில் ஒரு சுற்று சுற்றி கீழே விழுந்த அருவி, தன் கன்னத்தில் கை வைத்தபடி, “எதற்காக? தன்னை இப்போது அடித்தான்?” என புரியாமல் அவனைப் பார்த்தாள்.

அருவியின் நெஞ்சில் “ராகவன்” என தன் பெயர் பச்சை குத்தியிருந்ததைப் பார்த்தவனுக்கு ஆத்திரம் தலைக்கேறியதால் தான் அவள் கன்னத்தில் அறைந்தான்.

“என்னங்க!!” என்றாள் நடுங்கியபடி.

“உன் மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? நானும் சரி… சின்னப் பொண்ணு, எதுவும் விவரம் தெரியல, பக்குவமா சொல்லிக்கலாம்னு பொறுமையா போனேன்… உன் இஷ்டத்துக்கு என்னென்னமோ பண்ணிக்கிட்டு இருக்க” என்றவன் ஆத்திரத்துடன் அவள் கையைப் பிடித்து தூக்கினான்.

“நான் என்ன பண்ணுனேன்?” என பயந்தபடி கேட்டாள் அருவி.

“என் பேரை எதுக்காக உன் நெஞ்சுல பச்சை குத்துன?”

“இல்லைங்க… அது வந்து… எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். புருஷன் பேரை பொண்டாட்டி பச்சை குத்துறதுல என்ன தப்பு இருக்கு?”

“நான் உன்னை பொண்டாட்டியா ஏத்துக்கவே இல்லையே… அப்புறம் எப்படி நீ என் பெயரை பச்சை குத்துன?” என கண்ணில் வெறியோடு அவளைப் பார்த்துக் கேட்டான்.

“நீங்க என்ன சொல்றீங்க?”

“எனக்கு உன்னைப் பிடிக்காது” என்றான் ராகவன்.

“நீங்க என்ன சொல்றீங்க?” என அருவி அதிர்ந்து கேட்டாள்.

“எனக்கு உன்னைப் பிடிக்கவே பிடிக்காது. இதைச் சொல்றதுக்காகத்தான் நான் நிச்சயதார்த்து அன்னைக்கு உன்னை மாடிக்கு கூப்பிட்டேன். அப்பவும் நீ கேட்காம ஓடிட்ட… சரினு ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு சொல்ல வந்தப்ப என் பேச்சை காதுலயே வாங்காம கொரட்ட விட்டு தூங்கிட்ட…”

அவன் பேசப் பேச அவனது வார்த்தைகளைக் கேட்டு துடித்துக் கொண்டிருந்தாள் அருவி.

“வீட்ல நிறைய தடவை உன்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்ல நான் முயற்சி பண்ணினேன். அப்ப எல்லாம் சரியான டைம் கிடைக்கவே இல்லை. ஏதாவது ஒரு இடைஞ்சல் வந்துட்டே இருந்துச்சு. தனியா வந்தா பேச டைம் இருக்கும்னு தான் உன்னை இங்க ஹனிமூனுக்கே கூட்டிட்டு வந்தேன்” எனக் கத்தினான்.

“நீங்க என்னங்க சொல்றீங்க? எனக்கு ஒண்ணும் புரியல… கனவு மாதிரி இருக்கு” என்றாள் தன் தலையைப் பிடித்தபடி.

“கனவில்லை… இது தான் நிஜம்.”

“என் மேல உங்களுக்கு ஏதாவது கோவமா?” என தன் கண்களைத் துடைத்தபடி அருவி கேட்டாள்.

“உன் மேல கோவம் இல்லை… நிறைய ஆத்திரம்தான் இருக்கு. நீ செய்ற சின்ன சின்ன சேட்டையை நான் பொறுத்துக்கிட்டேன். ஆனா எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு எல்லை மீறிப் போய், இப்ப என் பேரை நீ உன் நெஞ்சுல பச்சை குத்திட்டு வந்திருக்க…” என்றவன் அவளருகில் வந்து அப்படியே நின்றான்.

“நீங்க பொய் சொல்றீங்க… நீங்க சொல்றதை நான் நம்ப மாட்டேன்” என்றாள் அழுது கொண்டே.

“நீ இதை நம்பித்தான் ஆகணும்.”

“நீங்க என் மேல ரொம்ப பாசமா இருந்தீங்க… நீங்க என் மேல வச்சிருக்க காதல்…” என்றவள் கன்னத்தில் மீண்டும் “பளார்” என அறைந்தான்.

“காதலா!! உன் மேலயா!!” என நக்கலாகச் சிரித்தான்.

“தயவு செய்து அப்படிச் சிரிக்காதீங்க.”

“ஏன்? கஷ்டமா இருக்கா?”

“ஆமா!” எனத் தலையசைத்தாள்.

“என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டே… அப்போ கஷ்டத்தை அனுபவிச்சு தான் ஆகணும்” என்றான் அவள் தாடையைப் பிடித்து அழுத்தியபடி.

“நான் உங்க கண்ணுல பாத்துருக்கேன்… நீங்க என்னை அடிக்கடி அதிக நேசத்தோட, காதலோட பார்த்தீங்க…”

“அறிவு கெட்டவளே… நான் முறைச்சு பார்த்ததை நீ காதலோட பார்த்தேன்னு சொல்லிட்டு இருக்க… உனக்கு என்ன? மண்டை குழம்பிடுச்சா?” என நக்கலாகக் கேட்டான்.

“இல்லைங்க! நீங்க ரொம்ப நல்லவங்க… நீங்க எனக்கு கடவுளா கொடுத்த வரம்… என் மேல உங்களுக்கு ஏதாவது கோவமா சொல்லுங்க… நான் ஏதாவது தப்பு செஞ்சுட்டேனா? நான் என்னை மாத்திக்கிறேன்… நான் தப்பு பண்ணியிருந்தாலும் என்னை மன்னிச்சிடுங்க… ஆனா என்னை காதலிக்கவே இல்ல அப்படினு மட்டும் சொல்லாதீங்க… உங்கள விட்டுப் போக சொல்லாதீங்க… நான் செத்துப் போயிடுவேன்” என்றாள் அவன் காலைப் பிடித்து கதறி அழுதபடி.

“நீ என் கூட வாழறதும் ஒண்ணு தான்… சாகறதும் ஒண்ணு தான்” எனக் கொடூரமாகச் சிரித்தான்.

“உங்க கால்ல விழுந்து கெஞ்சிக் கேக்குறேங்க…”

மீண்டும் அவள் தலைமுடியைப் பிடித்து தூக்கியவன், “இங்க பாரு… எனக்கு பொண்ணுங்கனாலே பிடிக்காது. அப்புறம் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு கேக்குறியா? எங்க அம்மாக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு… அவங்க பேச்சை நான் கேட்டா தான் அவங்க உயிர் பிழைப்பாங்கனு டாக்டர் சொன்னாங்க… அதுக்காக மட்டும்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். புரிஞ்சுதா? மத்தபடி உன் மேல எனக்கு எந்த காதலும், கன்றாவியும் கிடையாது” என்றான்.

“நீங்க சொல்றதைக் கேட்கும் போது எனக்கு நெஞ்சு வலி வந்துடும் போல இருக்குங்க… தயவு செய்து நான் சொன்னதெல்லாம் போய், நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்னு சொல்லுங்க” என்றவள் அழுதாள்.

அவள் முன் அமர்ந்தவன், “இங்க பாரு… எத்தனை தடவை கேட்டாலும், எப்படிக் கேட்டாலும் என்னோட பதில் இதுதான். நான் உன்னை காதலிக்கல… எனக்கு பொண்ணுங்களைப் பிடிக்காது… உன்னைப் பாக்கவே பிடிக்கல… ஒவ்வொரு தடவை நீ என் பக்கத்துல வரும்போது எனக்கு எவ்வளவு இரிடேட்டா இருந்ததுன்னு உனக்குத் தெரியாது… உன் முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்காது… உன் பேச்சைக் கேட்டாலே எனக்குத் தலைவலி வரும்… ஆறு மாசம் கழிச்சு டைவர்ஸ் வாங்கணும்னு நான் கோர்ட்ல கூட அப்ளை பண்ணிட்டேன் தெரியுமா!! ஒழுங்கா டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு, இன்னும் கொஞ்ச நாள் அமைதியா இருந்துட்டு நான் சொல்றபடி ஒழுங்கா என்னை விட்டு போயிடு… அதுதான் உனக்கு நல்லது” எனத் தன் பற்களைக் கடித்தபடி கூறியவன் எழுந்து நின்றான்.

“இல்லை… நீங்க பொய் சொல்றீங்க… நீங்க சொல்றதை நான் நம்பவே மாட்டேன்” என அழுதாள் அருவி.

“இங்க பாரு… இன்னைக்கு நம்ம ஊருக்கு கிளம்புறோம். ஒரு விஷயம் சொல்றேன்… நல்லா கேட்டுக்கோ… இங்கே நடந்த எதுவுமே வெளிய தெரியக் கூடாது… நம்ம ரெண்டு பேருக்கும் சண்டைனு யாருக்கும் தெரியக் கூடாது… புரிஞ்சுதா!! அப்படித் தெரிஞ்சுச்சு உன்னோட அம்மா அப்பாவை நீ உயிரோட பார்க்க முடியாது” என்றான் கொடூரமாக.

“நீங்க இப்படி எல்லாம் மாறுவீங்கன்னு நான் நினைச்சு கூடப் பாக்கல…”

“இது தாண்டி என்னோட உண்மையான முகம்… அதை முதல்ல புரிஞ்சுக்கடி பைத்தியக்காரி” என அவளை கீழே தள்ளிவிட்டு குளியல் அறைக்குள் சென்றுவிட்டான் ராகவன்.

அன்று காலையில் எழுந்த அருவி, நேற்று பார்த்த அந்த பச்சை குத்தும் பெண்ணிடம் சீக்கிரமாகச் சென்றாள்.

“என்னம்மா? இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க?” என அந்தப் பெண் கேட்டாள்.

“என் வீட்டுக்காரரோட பேரை என் நெஞ்சுல பச்சை குத்தணும்” என்றாள் அருவி வெட்கத்துடன்.

“பச்சை குத்தினா காய்ச்சல் வருமே…”

“பரவாயில்லை” என்றாள்.

அவன் பெயரை “ராகவன்” என்று பச்சை குத்தும் போது அவனை ஏன் நினைத்துக் கொண்டு அவன் கண்களையே பார்ப்பது போல் நினைத்துக் கொண்டாள். அதனால்தான் அவளுக்கு அந்த பச்சை குத்திய வலி தெரியவில்லை.

அவனிடம் தான் இதைக் காட்டினால் அவன் தன் முத்தத்தால் அவளது காயத்தைப் போக்குவான்… தன்னை அப்படியே அள்ளித் தூக்கிக் கொஞ்சுவான்… அவனே மருந்தாகி தன் வலியைப் போக்குவான் என நினைத்துக் கொண்டு ஆசையாக வீட்டிற்கு வந்தாள்.

ஆனால் அவன் இப்போது பேசிய பேச்சு அவள் உடல் முழுவதும் நெருப்பை அள்ளி வீசியது போல் இருந்தது. அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் இதயத்தில் ஈட்டியால் குத்தியது போல் துடித்துப் போனாள் பெண்ணவள்.

குளித்து வெளியே வந்தவன், “நான் வெளியில போயிட்டு வர்றதுக்குள்ள நீ ரெடியா இருக்கணும்… நம்ம ரெண்டு பேரும் இன்னைக்கு ஊருக்கு போகணும்… புரிஞ்சுதா?” என வேகமாக உடை மாற்றி கீழே இறங்கினான்.

“ஐயா, அம்மா” என கண்ணம்மா கேட்டாள்.

“அவ தலைவலிக்குதுன்னு படுத்திருக்கா… நீங்க தொந்தரவு பண்ணாதீங்க… இன்னைக்கு சாயந்திரம் நாங்க ஊருக்கு கிளம்பணும்… ரெடி பண்ணுங்க” என்றவன் தன் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

“சரிங்க!” என்றனர் கண்ணம்மாவும் சுப்பையாவும்… ♥️

“அச்சச்சோ… பாவம் அருவி… அடுத்து என்னனு தெரிஞ்சுக்க, நாளைக்கு எபி கண்டிப்பா படிங்க பிரண்ட்ஸ்!”

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,354 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page