“என் கண்கள் தேடும் தொலைவில் நீ இருந்தால் அதுவே என் இதயத்தை இன்பம் கொள்ள வைக்கிறது”
…. ஊதாப் பூவின் இதழ்களில் ஒன்று…
பாகம்-6
“வர்மா நீ சொன்ன மாதிரி ரெண்டு கொட்டஷன் ரெடி பண்ணிட்டேன். ஆனா எதை டெண்டற்கு அனுப்ப போறோம்” இரண்டு கைகளில் வைத்துக்கொண்டு விஜய் கேட்க,
கையில் வைத்திருந்த பேனாவால் இரண்டையும் மாற்றி மாற்றி காட்டியவன் விஜயின் வலது கையில் உள்ள கொட்டேஷனைக் காட்ட,
“இது நான் ரெடி பண்ணது டா”
“ம்ம்”
“வர்மா கன்பார்மா” தயக்கத்துடன் நிற்ப வனைப் பார்த்தவன் “ஏன் நீ ரெடி பண்ணது தானே, அப்புறம் என்ன தயக்கம்”
“இல்ல, இது நீ பதவி ஏத்துக்கிட்டு பண்ற முதல் ப்ராஜெக்ட், என்னால கிடைக்காம போய்ட்டா “
வாய்க்குள் நாக்கை சுழட்டி வர்மா பார்த்த பார்வையில்
“சத்தியமா புரியல, நீயே சொல்லு, நான் என்ன பண்ணனும்”
சிரித்தவன் “அதான் உனக்கே புரிஞ்சிடுச்சே, அதையே பண்ணு”
“பண்றேன் நல்லாவே புரியுது” வர்மாவின் குணம் தெரிந்தவன் நிழல் போல கூடவே இருக்கும் விஜய் தானே, ஆரண்யா தயார் செய்த கொட்டேஷன் தான் வர்மா அனுப்புவான் என்று தெரியும். அதை விஜய் வாயிலே வர வழைக்கத் தான் வர்மா செய்தது.
“எக்ஸ்கியூஸ் மீ சார்” ஆரண்யா கதவினை தட்டி உள்ளே வர அனுமதி கேட்க,
“எஸ் கம் இன்” வர்மாவின் குரல் கேட்டு உள்ளே வந்தாள்.
‘வாம்மா வன தேவதை உன்னைப் பத்தி தான் இங்க போய்ட்டு இருக்கு’ மனதில் நினைத்த விஜய் வெளியே அவளைப் பார்த்து சிரித்து வைக்க,
“குட் மார்னிங் சார்” வர்மாவிடம் சொல்லியவள், விஜய் புறம் திரும்பி “குட் மார்னிங் சார்”, வர்மா தலை அசைப்பை பதிலாக கொடுக்க, விஜயோ”குட் மார்னிங் ஆரண்யா”
இன்றும் புடவை கட்டிக் கொண்டு வந்திருக்க, விஜயோ “நீ புடவைலாம் எங்க மா எடுக்குற, இதெல்லாம் நம்ம ஊர்ல கிடைக்குதா, புதுசா இருக்கே”
அவள் பதில் பேசவில்லை சிரிப்புடன் தலை அசைக்க “ஓ வெளி ஊரா” விஜய் விடுவதாய் தெரியவில்லை. ‘ஆம்’ என்பதாய் தலை அசைக்க,
“விஜய் மீட்டிங் எப்போ” வர்மா சத்தமாய் கேட்க,
‘அதானே பார்த்தேன் ஒரு பொண்ணு கிட்ட கூட நான் பேசிடக் கூடாது உடனே கூப்டுருவான்’ மனதில் திட்டியவன் “11 மணிக்கு சார்”
தனது ஸ்மார்ட் வாட்சில் பார்த்தவன் நேரத்தைக் காட்ட, “ஆல் ஆர் ரெடி சார், நீங்க வாங்க” விஜய் வெளியே செல்ல,
ஆரண்யாவும் வெளியே செல்ல அனுமதி கேட்க, அவளிடம் ஒரு பேப்பரை நீட்டினான் வர்மா, அதை வாங்கிப் பார்த்தவளிடம், படிக்குமாறு கண்ணால் சைகை செய்ய
படித்தவள் முதல் வரியிலே விழி விரித்தாள். அடுத்து அடுத்து என அனைத்தையும் படித்தவள், “சார் இதை நோட்டீஸ் போர்டுல ஒட்டிடவா”
“மீட்டிங்க்ல சொன்னதுக்கு அப்புறம் செய்ங்க”
“ஓகே சார்” வர்மாவிடம் சொல்லி விட்டு வெளியே வந்தவள்.’ஏன் பர்ஸ்ட் இப்டி ஓரு ரூல்ஸ், இதுக்காக தானே கிளாஸ் போய் கத்துக்கிட்டேன். எல்லாம் வேஸ்ட் டா போச்சு. இவர புரிஞ்சிக்கவே முடியலையே, என்கிட்ட சொன்னது ஒன்னு, இப்போ இவர் நடந்துக்குறது வேற மாதிரி இருக்கே. இப்பவே கண்ணை கட்டுது. இதுல எங்க இருந்து நினைச்சதெல்லாம் செஞ்சி முடிக்குறது. கடவுளே நீ தான் என்னை காப்பாத்தணும். நான் நினச்சு இங்க வந்த விஷயம் நல்ல படியா முடியணும்’ கடவுளிடம் அவசர கோரிக்கை வைத்தவள் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு வேகமாய் சென்றாள்.
சரியாய் 11 மணிக்கு வர்மா மீட்டிங் அறைக்குள் வர, அனைவரும் அங்கே வந்திருந்தனர்.
அவன் அவனுக்காக போடப்பட்ட இருக்கைக்கு செல்லும் வரை அங்கிருந்த அனைவரும் வணக்கம் சொல்ல, சிறு தலை அசைப்புடன் சென்றவன், அமரவில்லை, நின்று கொண்டே அனைவரையும் அமர சொன்னவன் பக்கத்தில் விஜயும், ஆரண்யாவும் நின்றிருந்தார்கள். “குட் மார்னிங் ஆல், என்னடா டெய்லி மீட்டிங்கான்னு நீங்க நினைக்கிறது புரியுது.
கவர்மெண்ட் காண்ட்ராக்ட் கிடைக்குற வரைக்கும் இப்போ சொல்ற புது கன்டிஷன்ஸ் பாலோவ் பண்ணி தான் ஆகணும். ஒருமுறை ஆரண்யாவைப் படிக்கச் சொன்னவன், நோட்டீஸ் போர்டில் இருக்கும் புரியாதவங்க பார்த்து, படிச்சு தெரிஞ்சிக்கோங்க”
சுருக்கமாய் பேசி விட்டு தனது அறைக்குச் சென்றான்.
இன்று கொட்டேஷன் அனுப்ப வேண்டிய கடைசி நாள். வர்மாவின் கொட்டேஷன் அனுப்பப்பட்டது. நாளை மறு நாள் டெண்டர் யாருக்கு என்று அறிவிக்கப்படும். புதிய கட்டுப்பாடுகள் வேறு அறிவிக்க அலுவலகமே பரபரப்பாய் இருந்தது.
வர்மாவிடம் கையெழுத்து வாங்க உள்ளே வந்த விஜய், “எல்லாம் ஓகே தான் அதுல முதல்ல சொல்லி இருக்குறது தான் கொஞ்சம் இடிக்குது”
“உனக்கு ஏன் இடிக்கணும்”
“எனக்கு இல்லை, ஸ்டாப்களுக்குத்தான்”
“அவங்க வந்து கம்பளைண்ட் பண்ணாங்களா உன் கிட்ட”
“இல்லை தான் பட்”
வர்மா முறைக்க அதன் பிறகு விஜய் வாய் திறக்கவே இல்லை.
இரண்டு நாட்கள் கழிந்து டெண்டர் அறிவிக்கும் நேரம் சீட்டின் முனையில் அமர்ந்து நெளிந்து கொண்டிருந்தான் விஜய்.
“ஆரண்யா மேடம் டைம் என்ன”
வர்மாவிற்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஆரண்யாவிடம் கேட்க
“சார் டைம் 10.10 இன்னும் 20 நிமிஷம் இருக்கு”
“20 நிமிஷமா அவ்ளோ நேரம் தாங்குமா தெரியலயே, பப்ளிக் எக்ஸாம் க்கு கூட நான் இப்படி பயந்தது இல்லை டா” நகத்தைக் கடித்துக் கொண்டே கேட்க,
வர்மா எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான்.
‘இவன் கூலா இருக்கான் நாம தான் டென்ஷனா இருக்கோம். இவனால எப்படி இப்டி இருக்க முடியுதோ தெரியல’ சீட்டில் சாய்வதும் நிமிர்வதும் என்று இருந்தவன் “இப்போ” என்று கேட்கத் தொடங்கும் போதே
வர்மா,விஜயின் கையில் இருந்த வாட்சைக் காட்டி “இதுல பாரு தெரியும்”
“இது எனக்கு தெரியாதா” விஜய் சீரியசாய கேட்க
“தெரிஞ்சிகிட்டுடே ஏன் கேட்குற”
“டென்ஷனா இருந்தா அப்டி தான், உனக்குலாம் இது புரியாது”
கோப்புகளை எடுத்துக் கொண்டு வந்து அதிகாரி அமர, எல்லாருமே யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பிலே பார்த்துக் கொண்டிருந்தனர்.
இரண்டாம் இடம் சுனில் குமாரின் எஸ். கே கன்ஸ்டரக்ஷனுக்கும், முதல் இடம் வர்மா கன்ஸ்டரக்ஷனுக்கும் அறிவிக்க, விஜய் தான் நிம்மதி பெரு மூச்சு விட்டான்.வர்மாவிடம் வாழ்த்து சொன்னவன்
“நான் தான் டா தேவை இல்லாம டென்ஷன் ஆகிட்டேன்”
ஆரண்யாவுக்கும் வாழ்த்து சொல்ல, அவளின் பார்வை வர்மவைத் தான் தீண்டிக் கொண்டிருந்தது. அவன் எதாவது சொல்லுவான் என்று எதிர்பார்ந்திருந்தாளோ என்னவோ, வர்மா எதுவும் சொல்லவில்லை. விஜய் அவளின் பார்வை போன போக்கிலே புரிந்து கொண்டான். ‘நீ நினைக்குற மாதிரி என் நண்பன் இல்லை மா, அழகான புத்திசாலிப் பொண்ணா இருக்க, தப்பித் தவறி கூட இவன் மேல ஆசை வச்சிடாதா, உனக்கு வலிகள் மட்டும் தான் கிடைக்கும். என் நண்பனுக்கு காதல் னாலே பிடிக்காது. உன்கிட்ட நேரம் வரும் போது சொல்றேன்’ மனதில் ஆரண்யாவுக்காக வருத்தப்பட்டான்.
டெண்டர் அறிவித்த கடிதத்தை வாங்கிக் கொண்டு சென்றவர்கள் இரவு பார்ட்டியில் தான் சந்தித்தனர். டெண்டர் எடுத்தாதற்காகவும், சி இ ஒ பதவி ஏற்றுக் கொண்டதற்கும் சேர்த்து தான் இந்த பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அலுவலத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், பிசினஸ் பார்ட்னர்கள், பிசினஸ் நண்பர்கள், வர்மாவின் குடும்பத்தில் இருந்து வர்மாவின் அப்பா, வர்மா, வர்மாவின் தங்கை வந்திருக்க, பிசினஸ் நண்பன் என்ற முறையில் இரண்டாம் இடம் வந்த சுனில் குமாரும் தன் மகளுடன் வந்திருந்தார்.
மாடர்ன் உடை என்ற பெயரில் முட்டிக்கு மேலே இருந்த கருப்பு நிற குட்டை பாவாடையும், முன்னழகை எடுப்பாய் தெரியும்படியான ஸ்லீவ் லெஸ் மஞ்சள் நிறத்தில் மேலாடையும் அணிந்திருந்த நிதிஷா, வர்மாவை ஆவலாய் எதிர்பார்ந்திருந்தாள், இந்த உடையில் வர்மாவை வீழ்த்திடலாம் என்ற கர்வப் புன்னகையில் காத்திருக்க,
3 பீஸ் லைட் ப்ளூ கோட்டில் ஜெல் வைத்து தூக்கி வாரப்பட்ட கேசத்துடன் ஆளை அசர வைக்கும் மேன்லி லுக்கில் வந்தவனை ஒரு நிமிடம் அங்கிருந்தோர் இமைக்காமல் பார்த்திருந்தனர். அவன் உடலில் கச்சிதமாய் பொருந்தி இருந்த உடையும், சிரிக்காத உதடுகள் கொஞ்சமாவது வளைந்தால் கூட அவனுக்கு இன்னும் அழகு தான். உதட்டினை சற்று மறைத்த மீசை அளவாய் இருந்தது. தீர்க்கமான பார்வை தன் முன்னே நிற்பவர்களை சற்று தள்ளி இருந்திட வைக்கும்.
“ஆண்களே பொறாமைக்கொள்ளும் பேரழகு” விஜய் தன் நண்பன் நடந்து வருவதைப் பார்த்து வெட்கம் கலந்து கூற, வர்மா வுக்கே சிரிப்பு வந்து விட்டது.
“வாவ் வர்மா நீ இப்ப சிரிச்சியா இதெல்லாம் வரலாற்றுல எழுதப்பட வேண்டியது. இரு இதை என் போன்ல பிடிச்சு வச்சிக்கிறேன். செல்பி எடுக்க போனை முன் பக்கம் வைத்து பார்க்க, இருவரை அடுத்து மூன்றாவதாய் ஒரு உருவம் போன் திரையில் தெரிய விழிகளில் ஒரு வியப்பு இது அவள் தானா, இதழ்களோ ஆரா என்று சொல்ல, மனமோ தடுமாற்றம் கொண்டது.
லைட் ராயல் ப்ளூ, அதில் சில்வர் நிற கற்கள் கொண்டு முழு நீள கவுன் அணிந்திருந்த ஆரண்யா, இரு பக்கம் மட்டும் முடியை எடுத்து சில்வர் நிற கற்கள் பதித்த கிளிப்பில் அடக்கி மீதமிருந்த முடிகளை படற விட்டிருக்க, காதிற்கு மேல் முடியில் சில்வர் கற்கள் 3 வரிசையில் நேர்த்தியாய் ஓட்டப்பட்டிருந்தது. காதில் தொங்கிய கற்கள் பதித்த நீண்ட பூக்களை அடுக்கி வைத்தல் போன்ற வடிவ காதணி, வளைந்த நாணல் போன்ற புருவங்களுக்கு மத்தியில் கற்கள் ஓட்டப்பட்ட பொட்டு, ஓவியத்தில் பார்ப்பது போல் இருந்தால்,
விஜயோ போனை நன்றாக திருப்ப, ஆரண்யாவும், வர்மாவும் மட்டுமே அதில் தெரிய, போனை வாங்குவது போல் வர்மா தொட அது போட்டாவாக சேமிக்கப்பட்டது. விஜய் இதை கவனிக்கவில்லை, அவன் கையில் இருந்த போனை வாங்கிய வர்மா அதை தன் மொபைலுக்கு அனுப்பி விட்டு டெலீட் செய்தவன், விஜயிடம்
“வாட்டர் பால்ஸை கிளோஸ் பண்ணு டா”
“அங்கேயும் இதே தானே” முனு முனுத் lதவன், வர்மா திட்டுவதற்குள்
” ஹாய் ஆரண்யா” அவளிடம் பேச சென்றவன் “ஹாய் சார்” ஆரண்யா சிரிப்புடன் கை அசைக்க, இங்கு ஒருவனோ நொடியில் இதமான மன நிலையை மாற்றி முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டு இருவரையும் கடந்து சென்றான் பார்க்காதது போல்
ஆரண்யா அழுது கொண்டிருக்க, காரினை வேகமாய் இயக்கியவன் பெரும் கோவத்தில் இருந்தான் காரோ சாலையில் சீறிப் பாய்ந்தது…
என்ன நடந்திருக்கும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
