அத்தியாயம் 8
அகிலா தன் அறையை விட்டு வெளியே வந்திருந்தால் வந்திருப்பவர்கள் யார் என்று பார்த்திருப்பாள். ஆனால் அவள் தான் தாய் தந்தையின் மேல் இருந்த கோபத்தில் அறையை விட்டு வெளியே வரவில்லையே! சரி அது போகட்டும்.
இதோ பலத்த யோசனையோடு காரை இயக்கினான் அஸ்வந்த்.
இன்று நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்து முகத்தில் புன்னகையோடு கையில் தன் பேரனையும் வைத்து கொண்டு சன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்தார் பாரிஜாதம்.
அம்மா என்று யோசனையோடு தாயை அழைத்தான் அஸ்வந்த்.
என்ன ப்பா என்றார் பாரிஜாதம்.
அவளுக்கு இது நிஜமாவே செகண்ட் மேரேஜ் தானா? என்று கேட்டான்.
பாரிஜாதம் மகனின் கேள்வியில் பட படத்து கணவரை பார்க்க, அவரோ மகனின் கேள்வியில் எப்பொழுதோ கண்களை மூடி சீட்டில் சாய்ந்த வண்ணம் தூங்கி விட்டார்.
அம்மா என்னாச்சி? என்று பதில் கூறாமல் இருக்கும் தாயிடம் கேட்டான்.
ஆ… ஆமா ப்பா. இது ரெண்டாவது கல்யாணம் தான் அந்த பொண்ணுக்கு. ஏன் ப்பா அப்படி கேட்குற?
அவளை பார்த்தால் அப்படி தெரியல மா என்றான்.
அய்யயோ பயத்தில் விழிகளை உருட்டினார் பாரிஜாதம். உண்மையை கூறினால் இவன் முருங்கை மரம் ஏறி விடுவானே என்று நினைத்தார்.
நான் உன்கிட்டே அந்த பொண்ணோட டீடெயில்ஸ் சொல்லும் போது, நீ எனக்கு அது தேவை இல்லாத விஷயம்னு சொல்லிட்ட. இப்போ என்னனா இது அவளுக்கு ரெண்டாவது கல்யாணம் தானானு கேட்குற. ஏன் ப்பா? என்றார்.
சரி அவளை பற்றி சொல்லுங்க என்றான்.
சங்கர் கண் இமைக்குள் கருவிழிகளை சுழட்டினார். ஒரு கண்ணை பாதி திறந்து மகனை பார்த்தார்.
அவன் கார் ஓட்டுவதில் கவனமாக இருந்தான். அவனின் பார்வை சாலையில் இருந்தது.
பாரிஜாதத்தை பார்த்த சங்கர், “உண்மையை சொல் ” என்பது போல் கண்களால் கூறினார்.
விழிகளை பெரிதாக விரித்த பாரிஜாதம், ” நோ ” என்று தலை அசைத்தார்.
ஏன் மா? எது கேட்டாலும் அமைதியா இருக்குறீங்க? சந்தேகமாக கேட்டான்.
இல்லை ப்பா… உன் பையன் தூங்கிட்டு இருக்குறான்ல அதான் என்று சமாளிக்க, பரவாயில்லை சொல்லுங்க என்றான் அஸ்வந்த்.
அது ப்பா…. நான் சொல்லுவேன். ஆனால் நீ அந்த பொண்ணுக்கிட்டே கேட்க கூடாது. ஏனா இந்த விஷயம் ரொம்ப சென்சிடிவ் என்றார் பாரிஜாதம்.
அப்படி என்ன சொல்ல போகிறார்? சரி சொல்லுங்க. நான் அவள்க்கிட்டே கேட்க மாட்டேன் என்றான்.
அவள் பேரு அபிராமி என்று தாய் கூற, அது எனக்கு தேவை இல்லை டீடெயில் மட்டும் சொல்லுங்க என்றான்.
அடப் பாவி என்று சங்கர் மனதிற்குள் கூறினார்.
இல்லை வேணாம் பா. நீ தெரிஞ்சிக்க வேணாம். ரோடை பார்த்து வண்டியை ஓட்டு . கோபப்பட்டு விட்டார் பாரிஜாதம்.
சரி சரி சொல்லுங்க கேட்குறேன் என்றான் அஸ்வந்த்.
நீ இடையில எதும் பேசாத டா.
ம்ம் சரி.
அவள் பேரு அபிராமி. கவெர்மென்ட் ஸ்கூல் டீச்சர். நல்ல பொண்ணு. நல்ல குணம் என்றார்.
ம்ம்.
ஆனால் இப்படிப் பட்ட பொண்ணுங்கள கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறாரோ தெரியல.
ஏன் மா?
மகனின் இந்த பேச்சை கேட்க, இந்த மூணு மாசம் எவ்வளவு ஏங்கி இருப்பார் இந்த தாய். அது இன்று தான் நடந்தது போல. அஸ்வந்த் இலகுவாக பேசினான்.
அவளுக்கு குழந்தை பொறக்காதாம் ப்பா. உடம்புல ஏதோ பிரச்சனை என்றார்.
நொடியில் சடன் பிரேக் ஒன்றை போட்டான் அஸ்வந்த்.
சங்கர் பதறி எழுந்தார்.
என்னாச்சி பா? பாரிஜாதம் கேட்டார்.
ஒன்னும் இல்லை மா. நீங்க சொல்லுங்க.
அதுனால அந்த பையன் அவளை டிவோர்ஸ் பண்ணிட்டான் என்றார் பாரிஜாதம்.
குழந்தை பொறக்காதா? ஐயோ அது எவ்வளவு பெரிய வலி. ஒரு பெண்ணால் இதை தாங்கி கொள்ளவே முடியாதே என்று அவனுக்கும் சங்கடமாக தான் இருந்தது.
ஏன் மா? அப்போ அவளுக்கு தைராய்டா என்று கேட்டான்.
ஒன்னு சொன்னா சரினு கேட்குறானா என்று மனதில் தன் மகனை திட்டினார் பாரிஜாதம்.
இல்லை ப்பா. ஒரு வருஷம் அந்த பையனோட சேர்ந்து வாழ்ந்துருக்குது. குழந்தை பொறக்கலயாம். அதுனால அவன் வேணாம்னு சொல்லி டிவோர்ஸ் பண்ணிட்டான் என்றார்.
என்ன இது சுத்த மடத்தனமா இருக்கு. கல்யாணம் பண்ணுனதும் குழந்தை பெத்துரனுமா என்று அவனுக்குள் கோபம் எழுந்தது.
நான் உன்கிட்டே கேட்குறது ஒண்ணே ஒன்னு தான் ப்பா. அந்த பொண்ணு நம்ப வீட்டுல சந்தோசமா இருக்கணும். அவளோ தான் என்றார் அந்த தாய்.
நீங்க நான் சொன்னதை மட்டும் அவள்க்கிட்டே சொல்லுங்க. அவள் அது படி நடந்தாலே அவள் சந்தோஷமா இருப்பாள் என்றான் அஸ்வந்த்.
அட மட சாம்பிராணி. புள்ளைய தூக்க கூடாது. ரூம்குள்ள வர கூடாதுனு சொன்னா அந்த புள்ளை என்ன வீட்டுக்கு முன்னாடி டென்ட் போட்டா டா இருக்கும். இது யாவும் சங்கரின் மனக்குமுறல்.
அவளை நினைத்து பாவமாக தான் இருந்தது நம் நாயகனுக்கு.
***
அம்மா அவங்க வீட்டுல என்னைய பற்றி சொல்லிட்டிங்களா? என்று கேட்டாள் அபிராமி.
உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை அபி. நீ தான் இதை பெரிய விஷயமா எடுத்துக்குற என்றார் கௌரி.
பெரிய விஷயமா இல்லாமல் இருந்திருந்தா நல்லா தான் மா இருந்துருக்கும் என்று வேதனையோடு அபிராமி கூற,
அவங்ககிட்டே சொல்லிட்டேன் அபி. அவங்களுக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்லைனு சொல்லிட்டாங்க டா என்றார் கௌரி.
அப்டினா கண்டிப்பா அவருக்கும் தெரிஞ்சிருக்கும் என்று தப்பு கணக்கு போட்டு விட்டாள் அபிராமி.
இந்த மாசத்துல இன்னும் ரெண்டு வாரத்துல ஒரு நல்ல முகூர்த்தம் இருக்குது. அது ஒன்னு தான் இந்த மாசத்துல வர்ற முகூர்த்தமும் கூட. அதுலயே கல்யாணத்தை வச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க என்றார் கல்யாண்.
அகிலா தன் தலையில் கை வைத்து பேசுவதை கேட்டு கொண்டிருந்தாள்.
ஆமாங்க. கல்யாண வேலை நிறைய இருக்குது என்று கௌரி கூற,
ம்மா கல்யாணத்தை ரெஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சிக்கலாம் ம்மா என்றாள் அபிராமி.
இல்லை டா. இது உனக்கு முதல் கல்யாணம் என்றார் தந்தை.
ஏற்கனவே நிறைய செலவு பண்ணி கல்யாணம் நின்று போச்சு. நமக்கு தான் நஷ்டம். இதுல கொஞ்சம் கடன் வேற இருக்கு என்று குடும்ப சூழ்நிலையை அபிராமி காரணம் காட்ட,
உங்களுக்கு செலவு பண்ணாமல் நான் யாருக்கு டா செலவு பண்ண போறேன் என்றார் அந்த பாசமான தந்தை.
அபிராமியின் விழிகளில் இருந்து நீர் சுரந்தது.
நீ எதுக்கு டி அழுற, அதோ அவள் இருக்குறா பாரு. அவள் கடன் அடைப்பா என்று அகிலாவை காண்பித்து கௌரி கூறினார்.
ஹான்…ஆசை தோசை அப்பள வடை. என்னால முடியாது. யாரும் நான் சொல்லுறதை கேட்கல. நான் ஏன் நீங்க சொல்லுறதை கேட்கணும் என்றாள்.
யாரும் கடன் அடைக்க வேணாம். கல்யாண செலவை மாப்பிள்ளை வீட்டுல பார்த்துக்குறேனு சொல்லிட்டாங்க. நமக்கு ஒரு செலவும் இல்லை என்றார் கல்யாண்.
அதிர்ச்சியில் விழிகளை பெரிதாக விரித்தாள் அபிராமி.
நான் மாப்பிள்ளையோட அம்மாகிட்டே உன்னைய பற்றி சொன்னதும் அவங்க தான் நாங்க எல்லா செலவும் பார்த்துக்குறோம். நீங்க உங்க பொண்ணை மட்டும் எங்களோட அனுப்பி வைங்கனு சொன்னாங்க என்றார் கௌரி.
என்னது அக்காவை மட்டும் அனுப்பி வைக்க சொன்னாங்களா? இதுலயே உங்களுக்கு எதும் புரியலையா மா? அவங்க என் அக்காவை கொடுமை படுத்துவாங்க. நான் என் அக்காவை எங்கயும் அனுப்ப மாட்டேன் என்ற அகிலா, அபிராமியின் அருகில் வந்து அவளை கட்டி கொண்டு ” அக்கா ப்ளீஸ் நீ அவங்கள கல்யாணம் பண்ணிக்காத ” என்றாள்.
கௌரி, அகிலாவை அபிராமியிடம் இருந்து பிரித்து எடுத்தவர் ” எப்போ பாரு அவள் மனசை கலைக்குறாள் ” என்று திட்டினார்.
போங்க நான் இப்போ சொல்லுறது யாருக்கும் புரியாது. அனுபவிச்சா தான் தெரியும் என்று கண்கள் கலங்க கூறிவிட்டு சென்றாள்.
அபிராமியும் எதுவும் தங்கையிடம் கூறவில்லை.
அகிமேல நீங்க எப்பவும் கோபப்படாதீங்க மா. அவள் மனசுல உள்ளதை வெளிப்படையா சொல்லுவாளே தவிர வேற எதும் மனசுல வச்சிக்க மாட்டாள். இப்போவும் எனக்காக தான் இப்படி பேசுறாள் என்று தாயிடம் அன்பு கோரிக்கை வைத்தாள் அபிராமி.
எனக்கு தெரியாதா அபி? அவள் கொஞ்சம் துடுக்கு அவளோ தான். ஆனால் எப்படி சொல்லுறா பாரு. இந்த கல்யாணம் நடக்க விட மாட்டாளாம். அது ஒரு தாயா எனக்கு பயமா இருக்கு டி என்றார் கௌரி.
யாரு நீ பயப்படுற ஆளா? என்று கல்யாண் வேண்டும் என்றே மனைவியை சீண்டினார்.
கணவரின் கேள்வியில் கௌரிக்கு மூக்கு பெரிதாகியது. ம்மா அப்பா கிண்டல் பண்றாரு மா . ப்ளீஸ் அடிச்சிராத அப்பாவை என்று மகளும் சேர்ந்து சீண்ட கௌரி நிஜமாகவே சிரித்து விட்டார்.
***
அஸ்வந்த் வெகு நாட்கள் கழித்து அந்த வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தான்.
இந்த திருமண பேச்சை எடுத்ததில் தான் அவன் இந்நேரம் வரை அவனின் அறைக்கு செல்லவில்லை என்று பாரிஜாதம் சங்கர் இருவருக்கும் தெரிந்தது.
ஹாலை சுற்றி தன் பார்வையை சுழல விட்ட அஸ்வந்த், அம்மா இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் என்றான்.
என்ன என்பது போல் மகனை பார்த்தார் பாரிஜாதம்.
இதோ நானும் சுகன்யாவும் சேர்ந்து எடுத்த போட்டோ இருக்குல்ல என்றதும், சங்கர் பாரிஜாதம் இருவரும் அந்த போட்டோவை பார்த்தனர்.
அவள் இந்த வீட்டுக்குள்ள வரான்னு இந்த போட்டோ எதையும் கழட்ட கூடாது. என் வாழ்நாள் முழுதும் இந்த போட்டோ இங்க தான் இருக்கணும் என்றான்.
பாரிஜாதம் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் ” சரி ப்பா இருக்கட்டும் ” என்றார்.
இந்த வீட்டிற்கு புதிதாக ஒரு பெண் வர போகிறாள். அவள் எப்படி இருப்பாள்? சுகன்யா அம்மா மாதிரி இருப்பாளா? என்று மனதில் சுகன்யாவை நிறுத்தி சிந்தித்து பார்த்தார் அங்கு ஓரமாக நின்று கொண்டிருந்த சரோஜா.
அஸ்வந்த், சுகன்யா இருந்த இடத்தை அவளுக்கு கொடுத்தால் அவளும் சுகன்யா போல் நடந்து கொள்வாள். இதில் சிந்திக்க என்ன இருக்கிறது?
தொடரும்.
