மயங்கினேன் சொல்ல தயங்கினேன். கதையை பற்றி

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்.

 

கதையை பற்றி சொல்லனும்னா ஒரு பழைய பாட்டு வரும் “நானே ராஜா நானே மந்திரி” ன்னு நினைக்கிறேன் படத்தோட பெயர். “மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே “னு. அநேகமா நம்ம வாசகால்ஸ் கேட்டு இருப்பீங்க. நானும் கேட்டேன். இந்த கதையோட லைன் யோசிக்கும் பொழுது அந்த பாட்டுதான் ஞாபகம் வந்துச்சு.

 

ஹீரோ : ஆறடி ஆணழகன்,அமிதாப்பச்சன், திராவிட நிறம் , ஹெசல் ஐஸ், கூர்மையான மூக்கு,பிசினஸ் டைக்கூன் இப்படி எல்லாம் இல்லங்க. சராசரி ஆண்மகன்.பாக்க அழகுதான். ஒருமுறை பார்த்தா நிச்சயம் பெண்களோட ஹார்மோன் என்னனு கேக்கும். கொஞ்சம் வெள்ளை நிறம். சராசரி இந்திய ஆண்களின் உயரம். அவ்ளோதான்.அவன் என்ன செய்யறான், என்ன படிச்சிருக்கான் இதெல்லாம் எபிசோடே ஆரம்பிக்கும் பொழுது சொல்றேன். அப்போதானே நானும் எபிசொட் எழுத முடியும்.

அவனோட பெயர் மட்டும் இப்போது சொல்லிடறேன் “விஜய ராகவன் “பெயர் நல்லா இருக்கா… எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.அதனால் வச்சேன். உங்களுக்கும் இவனோட பழகும் பொழுது பிடிக்கலாம்.

 

ஹீரோயின் : இவளும் சராசரி பொண்ணுதான். நம்ம வீட்டு பக்கத்து வீட்டுல ஒரு பொண்ணு.பார்வைக்கு லட்சணமா, கொஞ்சமே பொறுமையா, நம்மள மதிச்சு பேசற ஒருத்தியா, தேவைக்கு உதவி பண்ண கேட்டா செய்யுறவளா, இருந்தா அவளை எப்படி பாப்போம்? நம்ம ஹீரோயினுக்கு சுருட்டை முடி, மூக்கு குதலை. சோ நோ ஒற்றைக்கல் மூக்குத்தி. உயரம் அஞ்சடி நாலு அங்குலம். சிவந்த நிறம்.அதையெல்லாம் மேக்கப் போட்டு இன்னமும் அதிகமா காமிக்குற அளவுக்கு விருப்பம் இல்ல. கன்னத்தில் கொஞ்சம் பருக்கள் இருக்கு.அதோட பிங்க் நிறம் இன்னமும் அவளை அழகா காமிக்குது. மெல்லிய உடல்வாகு இல்லை. வஞ்சனை இல்லாம சாப்பிடும் வழக்கம்.சோ கொஞ்சமே பூசிய உடல்வாகு.

அவளோட பெயர் வேண்டாமா… “சந்தனா ” சின்ன வயசுலேந்தே பிடிச்ச பெயர் இது. என்னோட கதைகளில் ஏனோ இந்தப் பெயரை நா எடுக்கல.இப்போ அந்தக்குறை சரியாகிடுச்சு.

ரைட்டு… கதையோட பிரயாணம் செய்ய ரெடியாகுங்க. கொஞ்சம் சோகம், கொஞ்சம் காதல், கொஞ்சமே காமம் , கொஞ்சம் அழுத்தம்னு எழுத யோசிச்சு வச்சிருக்கேன். நூறு சதவிகிதம் குடும்பதனமான கதைகள் தான். ஏதாவது 18 + வந்தா சொல்லிடறேன். அதுவும் புரிந்துகொள்ள ஒரு வயது வேணும் அதுக்குதான்.

சரி.. சின்ன அறிமுகம் கொடுத்தாச்சு. இனிமே எபிசொட் எழுதிட்டு உங்கள சந்திக்க வரேன்.

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page