கேட்கும் போது உனக்கு சிரிப்பா இருக்கும் என்னடா இவன் இப்படி எல்லாம் பேசுறான் என்று.. உண்மையிலேயே இது எல்லாத்தையுமே நான் அனுபவிச்சு தான் வந்தேன்.
இப்ப வந்து நான் உனக்கு ஒரு சில விஷயங்களை சொல்கிறேன்
சித்தி தான் நிலா…என்னை எடுத்து வளர்த்தது.
அம்மா ரொம்ப நாளுக்கு ஒருத்தரம் தான் வருவாங்க பார்ப்பாங்க…
தலையில கை வைப்பாங்க.அதோட போயிடுவாங்க.
எனக்கு பழகிடுச்சு.அம்மா அப்படித்தான் இருப்பாங்கன்னு.
சித்தி வீட்டுல நான் இருக்குறது அவங்களுக்கு இன்னும் ஈஸியா போயிடுச்சு.
‘இனிமேல் நம்ம வீட்டுக்கு வரவேண்டாம்’அப்படின்னு சொல்லாமலே வராமலே இருந்துட்டாங்க.
அப்பா அந்த நாளிலிருந்து முழுசா உடைஞ்சு போனார்.
முதல்ல அமைதியா இருந்தார்.
அப்புறம்…,குடிக்க ஆரம்பிச்சார்.
சித்தி வீட்டுல இருக்குறதால
வீட்டுக்குள்ள இருக்கவே மாட்டார்.
பின்னாடி இருக்குற அந்த கெஸ்ட் ஹவுச்ல அதிகமா தங்கி இருப்பார்.
சித்தி சமைச்சா மட்டும் வருவார்.சாப்பிடுவார்.என்னை ஒரு தடவை பார்த்துட்டு எதுவும் சொல்லாம போயிடுவார்.
அதுதான் அவரோட வாழ்க்கை.
அவரோட வாழ்க்கை அந்த ஒரு ரூம்லேயே முடிஞ்சிருச்சு நிலா.
அப்போ எனக்கு பதினாலு… பதினஞ்சு வயசு இருக்கும்.
முதன்முதலாஅம்மா என்னை ஒரு பார்ட்டிக்கு கூட்டிட்டு போனாங்க.
அம்மா கூட போறேன்’ன்னு எனக்கு ரொம்ப சந்தோஷம்.
ஆனா அங்கே போனதும் என்ன குழந்தை மாதிரி
ஒருத்தர்கூட பார்க்கல.
நான் அங்கே இருந்தேனா…
இல்லையா யாருக்கும் கவலை இல்ல.
நான் தனியா நின்று இருப்பதை பார்த்து என்கிட்ட நிறைய பேர் பேசினாங்க நான் யாருன்னு தெரியாம … என்னிடம் சில கேள்விகள் எல்லாம் கேட்டாங்க சின்ன பையன் கிட்ட கேப்பாங்களா ரைம்ஸ் சொல்லு அது மாதிரி என் வயசுக்கு தகுந்த மாதிரி சில கேள்விகள் கேட்டாங்க நான் புத்திசாலித்தனமாக பதில் சொன்னேன் .
அதுல நிறைய பேருக்கு என்ன பார்த்து ரொம்ப ஆச்சரியம் .
நிறைய பேர் வந்து கேட்டாங்க,
இந்த பையன் யாருன்னு.
அப்போ தான் அம்மா சொன்னாங்க, இவன் என் பையன் ன்னு.
அவங்க எல்லாம் சிரிச்சாங்க.
உங்களுக்கு இவ்வளோ பெரிய பையன் இருக்கானா?
நாங்க குழந்தை கூட இல்லன்னு நினைச்சோம் ன்னு.
அப்புறம் பாராட்ட ஆரம்பிச்சாங்க.
நீங்க எல்லாத்திலயும் நல்லா இருக்குறீங்க. உங்க பையன் ரொம்ப இன்டெலிஜெண்ட். உங்கள மாதிரி தான் உங்க பையன் ..
நாங்க பேசிப் பார்த்தோம்.ரொம்ப அறிவா பேசுறான்.
இதெல்லாம் நீங்க கொடுத்த ட்ரெயினிங்க் தான்.
நீங்க தான் வளர்த்தீங்கன்னு.
இப்படி எல்லாம் சொல்லும்போது நிலா…
அந்த வார்த்தைகள் என் காதுக்குள்ள குத்தின மாதிரி இருந்துச்சு.
எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அந்த பார்ட்டிக்கு ஏன் போனேன் என்று …
ஒரு தடவை கூட என்னோட அம்மா என்னை திரும்பி கூட பார்க்கவே இல்லை , ஆனா எல்லாரும் பாராட்டினதும் அது அவங்க எடுத்துக் கொள்வது என்ன நியாயம் ?..
அதனால தான் நான் எல்லாரும் முன்னாடியும் சில விஷயங்களை சத்தம் போட்டு சொல்லிட்டேன் .
அந்த டைம்ல நான் பொய் சொல்ல முடியல.
எல்லாரு முன்னாடியும் வாயைத் திறந்து சொன்னேன்.
அப்படி எல்லாம் இல்ல ,
என்னோட அம்மாவுக்கு நான் என்ன படிக்கிறேன் என்று கூட தெரியாது . எந்த ஸ்கூல்ல படிக்கிறேன் தெரியாது .
அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாமே பிசினஸ் பிசினஸ் பிரண்ட்ஸ் பிசினஸ் பார்ட்னர் ..
அதை தவிர என்னோட அம்மாவுக்கு எதுவும் தெரியாது எங்க அப்பா இப்ப எந்த நிலைமையில் இருக்காருன்னு கூட அவங்களுக்கு தெரியாது . அது ஏன் தெரியுமா ?… என்னுடைய அப்பா கிட்ட இருக்கிற கம்பெனி சொத்துக்கள் இது மட்டும் தான் முக்கியம் .
அவர் முக்கியம் இல்ல … அதனாலதான் என்னோட அப்பாவ அவங்க கண்டுக்காம அவங்க வேலையிலேயே குறிக்கோளா இருக்காங்க என்ன வளர்த்தது எல்லாமே என்னோட சித்தி தான் .
அவங்களை சித்தி என்று சொல்வதை விட உண்மையிலேயே அவங்க என்ன பெத்திருக்க வேண்டும் கடவுள் அந்த வாய்ப்பு அவங்களுக்கு கொடுக்காம விட்டுட்டாங்க . அவங்கள நான் இன்னொரு அம்மான்னு சொல்ல மாட்டேன் .
அவங்க மட்டும் தான் என்னோட அம்மா , இவங்க இல்ல …
இப்ப கூட பார்ட்டிக்கு கூட்டிட்டு வந்தாங்க . ரொம்ப சந்தோஷமாகத்தான் வந்தேன் அம்மா கூட போறோம்னு நினைச்சு .. ஆனா இங்க வந்ததுல இருந்து அவங்க என்ன எப்பவாவது திரும்பி பார்த்தார்களா இல்ல இங்க இருக்கிற யாருக்காவது நான் இவங்களுடைய பையன் என்று தெரியுமா ?..
நிச்சியமா எதுக்குமே வாய்ப்பே கிடையாது .
ஏன் தெரியுமா ?… சும்மா பேருக்கு இங்கே என்ன கூட்டிட்டு வந்து இருக்காங்க மத்தபடி அவங்களுக்கு என் மேல எந்த ஒரு அக்கறையும் இல்லை . இங்கே இருக்கிற நிறைய பேர் நீங்க உங்களுடைய குழந்தைகளுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க ,
எல்லாருமே அவங்களுடைய கையால அந்த குழந்தையோட கையை இறுக்கமாக பிடிச்சபடி இருக்கீங்க இல்ல தூக்கி வச்சிருக்கீங்க ஆனா என்னோட அம்மா என்னை இங்க விட்டுட்டு போனவங்கதான் நான் இருக்கேனா இல்லையா என்று கூட பார்க்கல ,
இப்படி எல்லாம் சொல்லும்போது எங்க அம்மா கோபப்பட்டு கன்னத்தில் விக்ரம் என்று சொல்லி அறைந்துவிட்டார்கள் . என்னை இதுவரைக்கும் யாரும் அடிச்சதே இல்ல முதல் முறை அவங்க தான் அடிச்சாங்க .
நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சித்திய புடிச்சு பயங்கரமான சத்தம் . இப்படித்தான் பிள்ளையை வளர்ப்பையா ?…
என் பிள்ளை உன் கைக்குள் போட்டு போட்டு கிட்ட அப்படித்தானே , உன் வாழ்க்கை ஒன்றும் இல்லாமல் போயிடுச்சு என்பதற்காக இப்ப என்னோட வாழ்க்கையை கெடுக்க வந்திருக்கியான்னு மனசாட்சியே இல்லாம அவங்கள பாத்து சொன்னாங்க 14 வருஷம் அவங்க எனக்காக அவங்க வாழ்க்கையை தியாகம் பண்ணிட்டு இந்த வீட்ல இருந்தாங்க ,
அது எல்லாம் அவங்க கண்ணுக்கு தெரியல,
என்னை இவன் எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தி தான் இது எல்லாத்துக்கும் காரணம் நீதான் நீ அவனை சொல்லிக் கொடுக்காமல் வளர்த்து என் மேல அபாண்டமா தப்பு தப்பா குற்றம் சொல்லி வளர்த்திருக்க போல அதனால தான் என் பையன் என்ன இந்த மாதிரி எதிரியா பார்க்கிறான்.
. அவங்க அப்பா கூட பரவாயில்லை போல… நீ ரொம்ப மோசமானவளா இருக்கேன்னு சித்திய புடிச்சு ரொம்ப மோசமா பேச ஆரம்பிச்சாங்க ஆனா சித்தி எதுவுமே பேசல அக்கா..
அப்படி இல்லக்கா அவன் கிட்ட நான் பேசுறேன் அப்படி இனிமேல் பேச மாட்டேன்னு சொல்ல இனிமேல் இவனை நான் எங்கேயும் கூட்டிட்டு போக மாட்டேன்.
அப்படி என்ன சித்திய படிச்சு பயங்கரமா பேசிட்டு கிளம்பிட்டாங்க. அப்போ அப்பா வழி மறிச்சாரு. அம்மா கைய புடிச்சு தர தர என்று இழுத்துட்டு வந்து, அவன் பேசுனதுல என்ன தப்பு?…
நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி இருக்கோம் அதுவும் காதலிச்சு கல்யாணம் பண்ணி இருக்கோம். இங்கே வந்ததிலிருந்து உனக்கு என்னோட பணம் என்னோட சொத்து என்னோட கம்பெனி இது மேல தான் குறிக்கோளா இருக்கே தவிர குடும்பம் எப்படி இருக்கு.
குடும்பத்தில் இருக்கிற ஆட்கள் எப்படி இருக்காங்க எதுவுமே உனக்கு தெரியல, ஒரு வாய் என்னைக்காவது ஆசையா சமைச்சு போட்டு இருப்பியா?..
உன் தங்கச்சி இங்க வந்ததிலிருந்து எனக்கு அன்னபூரணி மாதிரி நேரத்துக்கு சாப்பாடு போட்டா…
இந்த பொண்ணுக்கு இதுவரைக்கும் நான் பத்து ரூபா செலவு பண்ணது கிடையாது. இந்த வீட்டுக்காக வேண்டாம் நான் செலவு பண்ணி இருக்கேன் இந்த பொண்ணுக்காக ஒரு துணிமணி கூட நான் எடுத்து கொடுத்தது கிடையாது.
ஆனாலும் என் பிள்ளையின் கவனித்துக்கொண்டு எனக்கும் சாப்பாடு ஆக்கி போட்டுக்கிட்டு இந்த வீட்ல எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிற ஒரு பொண்ணு கிட்ட நீ இப்படி பேசி இருக்க கூடாது.
ஒழுங்கா மன்னிப்பு கேளு…. இப்படி ரொம்ப கோபமாக சொல்லும்போது,
என்னது?… மன்னிப்பு நான் கேட்கணுமா?…
நல்லா இருக்குடி…. நீ என்கூட பிறந்ததற்கு நீ என்ன வேலை பார்த்து இருக்கேன்னு தெரியுதா என் புருஷனையும் கைக்குள்ள போட்டுக்கிட்டியா?..
உன்னை நான் சும்மாவே விட மாட்டேன் நீ இங்க இருக்க கூடாது வீட்டை விட்டு போ… அப்படின்னு சித்தி ரொம்ப அசிங்கப்படுத்தி அப்பாவையும் சித்தியையும் தப்பா பேசி இங்க இருந்து விரட்டி விட்டுட்டாங்க.
எங்க இருந்து போடி இனிமேல் என் பிள்ளையை பார்க்கிறேன் என்று சொல்லி இங்கே வந்து குடும்பம் நடத்திட்டு இருக்க கூடாதுன்னு அசிங்கமா பேசி அனுப்பி வெச்சிட்டாங்க.
முதன் முதலில் அந்த மாதிரி அக்கா பேசினது எங்க சித்தி நாளை தாங்கிக்க முடியல… என்னோட அக்காவே என்னை தப்பா பேசிட்டானு அவங்க மனச உடைந்து அம்மாச்சி வீட்டுக்கு போயிட்டாங்க.
கொஞ்ச நாள் பயங்கர தனிமை…
அப்பா நாளை இந்த மாதிரி வார்த்தைகளை தாங்கிக்க முடியல அதுக்கு என்ன பதில் சொல்லணும் தெரியல,
இப்படி தினம் தினமும் ஏதோ ஒரு வகையில் என்னுடைய அம்மா ஒரு மாதிரி தான் நடந்துக்கிட்டாங்க அதுக்கு அடுத்து நான் போன் பண்ணி அழுது கூப்பிட்டேன் நீங்க இல்லாம இருக்க முடியல சித்தி என்று சொல்லி,
என்னோட அழுகையை கேட்டதுமே அவங்க என் பிள்ளை அழுகிறார்கள் என்று சொல்லி வேகமாக ஓடி வந்தாங்க…
அவங்கள பார்த்த மறுபடியும் என்னோட அம்மா இன்னும் மோசமா பேச ஆரம்பிச்சாங்க.
எல்லாத்தையும் எனக்காக மட்டுமே அவங்க தாங்கிக்கிட்டாங்க நாளுக்கு நாள் இந்த சண்டை அதிகமாக்கிட்டே போச்சு.
அம்மாவுடைய கோபத்துக்கு முக்கியமான காரணம் அவங்களுக்கு அந்த இடத்தில் முக்கியத்துவம் இல்லை அந்த இடத்தை என்னோட தங்கச்சி புடிச்சிகிட்டா அப்படி என்ற கோபம் இருந்துச்சு.
ஆனால் நாளுக்கு நாள் அவர்களுக்கு சந்தேகமும் அதிகமாச்சு. எனக்கும் 26 வயதிற்கு மேல் ஆகிவிட்டது கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சித்திக்கு ஒரே யோசனை இத அம்மா கிட்ட சொல்லி பார்த்தாலும் கூட என் பிள்ளைக்கு என்ன செய்யணும் எனக்கு தெரியும்னு எனக்கு கம்பெல் பண்ணி கம்பெனிக்கு வர வச்சாங்க கம்பெனி ஒரு வருஷம் பாத்துக்கிட்டேன். இதற்கிடையில் மறுபடியும் இதே மாதிரி ஒரு பிரச்சனை.
எனக்கு பொண்ணு பார்க்கறதுக்கு நாலு பேர் கிட்ட சித்தி சொல்லி வச்சிருப்பாங்க போல, அப்போ பொண்ணும் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து நல்ல பொண்ணா பாக்கணும் அப்படின்னு பேசி ஒரு பொண்ணையும் பார்த்தாங்க.
நான் ஆபீஸ் ஆபீஸ்ல இருந்ததால எனக்கு அதை பத்தி எதுவும் தெரியல, ஆனா இந்த விஷயம் அம்மாவுடைய காதுக்கு போய் அம்மா பயங்கர கோபத்தோடு வீட்டுக்கு வர அந்த நேரத்துல,
மாப்பிள வீடு எப்படி இருக்குன்னு பாக்கணும்னு சொல்லி பொண்ணு வீட்டுக்காரங்க நம்ம வீட்டுக்கு வந்துட்டு போயிருப்பாங்க போல அவங்க வாசல்ல வச்சு அம்மா மீட் பண்ணி யாரு என்னன்னு பேசி இருக்காங்க.
அப்ப அவங்க விஷயத்தை சொன்னதுமே, பயங்கர கோபத்துல வீட்டுக்குள்ள வந்து சித்தி போட்டு அம்மா அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அடிக்கடி இந்த வார்த்தையை சொல்லி சொல்லி திட்டுனதுனால அப்பா கோவத்துல ஆமா,
அதுக்கு என்ன இப்போ?…
நீ என்னோட பொண்டாட்டியா இந்த வீட்ல என்னோட வாழ முடியுமா அப்படி வாழ்ந்தால் உன் தங்கச்சி இங்க இருந்து அனுப்பி வைத்து விடுகிறேன் அப்படின்னு கோவத்துல சொல்லிட்டாரு. ஓ அப்படி போகுதா கதை…
அப்படி நான் உங்களுக்கு அது ரொம்ப ட்ரிகர் பண்ண மாதிரி ஆயிடுச்சு.
திருப்பியும் வார்த்தை வித்தியாசமா பேசி அங்க பெரிய சண்டை வந்து கடைசில சித்தி அம்மாவை அடிச்சுட்டாங்க. நானும் பொறுத்து பொறுத்து போய்கிட்டு இருக்கேன். உன் வீட்டுக்கு யாரையாவது வேலைக்கு போட்டு இருந்தா கூட இந்நேரம் நீ எவ்வளவு சம்பளம் கொடுத்து இருக்கணும்னு தெரியுமா?… எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்ததுக்கு நீ இப்படி பேசுறியா ஆமாண்டி…
உன் சொத்து எல்லாத்தையும் ஆட்டைய போடுறது தான் வந்து இருக்கேன். இப்ப என்ன அதுக்கு என்ன எப்ப பாத்தாலும் என் வீட்டு வந்து துரத்திக்கிட்டே இருக்க இனிமேல் நான் அப்படி போக மாட்டேன் நீ வேணும்னா இங்க இருந்து போ அப்படின்னு சுத்தி கோவத்துல பயங்கரமா பேசிட்டாங்க.
என்னோட இடத்தை நீ பிடிக்கலையா உன்னை நான் கொல்லாம விட மாட்டேன் என்று சொல்லிட்டு ரொம்ப கோவமா போயிட்டாங்க.
அதுக்கு அடுத்து ரெண்டு நாள் கழிச்சு இந்த சம்பவம் நடந்துச்சு.
சைக்கோ மாதிரி அவங்க பிஹேவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.
ஹாஸ்பிடல் இருந்து நான் சீக்கிரமாவே discharge பண்ணுங்கன்னு சொல்லி கேட்டுட்டு வந்துட்டேன் அவங்க இறந்தது என்னால தாங்கிக்க முடியல…
என்ன பாத்துக்கங்க யாரும் கிடையாது. அதே நேரத்துல எனக்கு உன்னோட முகம் தான் ஞாபகத்துல இருந்துச்சு அதனால நான் வீட்டுக்கு தான் வந்தேன்.
அம்மா அவங்க ரெண்டு பேரும் போட்டோ முன்னாடி உட்கார்ந்து இதே வீட்ல குடிச்சிட்டு இருந்தாங்க..
நான் செஞ்சு காட்டிட்டேன் பாரு… அப்படின்னு சொல்லி, அப்பாவை கொல்றது அவங்களுடைய மோட்டிவ் இல்லை. ஆனா அப்பா இறந்த சோகத்தை விட சித்திய பழி வாங்கிட்டோம் என்ற சந்தோசம் தான் அவங்களுக்கு அளவுக்கு அதிகமா இருந்துச்சு.
இதெல்லாம் குடிச்சிட்டாங்க பயங்கரமா சத்தம் போட்டு பேசிட்டு இருந்தாங்க அந்த போட்டோவை பார்த்து… மிரண்டு போயிட்டேன்.
போதை தெளிக்கிற வரைக்கும் நான் எதுவும் பேசல நான் வந்த விஷயத்தை காட்டிக்கவே இல்லை.
மறுநாள் காலையில தான் நான் அவங்க கிட்ட பேசினேன். இந்த உண்மை உனக்கு எப்படி தெரியும் என்ற மாதிரி அவங்க முகத்தை வைத்திருந்தார்கள் பயப்பட ஆரம்பிச்சாங்க. என் கால்ல விழுந்து கதற ஆரம்பிச்சாங்க,
என்ன செய்வது என்று எனக்கு தெரியல,
ரொம்ப மனசு உடைஞ்சு ஒரே ஒரு வார்த்தை சொன்னேன்.
இதுவரைக்கும் நான் உங்களுக்குள் எதுவுமே நடந்தது இல்ல அப்பா வந்தா சித்தி ரூமுக்குள்ள போயிடுவாங்க அதேபோல சித்தி என்கூட இருக்கும்போது அப்பா குனிஞ்சு தலை நிமிர்ந்து பார்த்தது கிடையாது.
இப்படி அவங்க ரெண்டு பேரையும் நீ கொன்னுட்டு சந்தோஷமா இரு…
நான் மட்டும் உயிரோடு இருக்கிறேன் நான் போதும் என்று நினைத்தது மிகப்பெரிய தவறு என்று நான் உனக்கு புரிய வைக்கிறேன். இதைத்தான் நான் உனக்கு கொடுக்க போற தண்டனையா வச்சிருக்கேன்.
நீ செத்தா கூட, எங்க அம்மா என்று சொல்லி நான் கையால தொட்டு அழுக மாட்டேன்னு சொல்லிட்டேன். உனக்கு சடங்கு கூட செய்ய மாட்டேன்னு சொல்லிட்டேன் அப்போ இருந்து எங்க அம்மா கிட்ட நான் பேசுறது இல்ல..
அவங்க அப்படியே வீட்டை விட்டு போனவங்க தான்…
என்னை எவ்வளவு சமாதானப்படுத்த முயற்சி பண்ணாங்க. ஆனா எதுக்கு?… இரண்டு உயிரை எடுத்துட்டு சமாதானப்படுத்தி அவங்க என்னோட அம்மாவை ஆகுறதுக்கு கொலைகாரியாவை தூரமாக இருக்கட்டும்.
இப்படியெல்லாம் அவன் சொல்லி கண்கலங்கி உடைந்து போய் உட்கார்ந்து இருந்தான்.
நிலாவிற்கு அவனை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியல…
