கேண்டீனில் பேசிய பிறகு இரண்டு நாட்களாக தாராவின் வகுப்பறைக்குச் செல்லாத சூர்யா, அன்று மதியம் சென்றிருந்தான். அவள் கோபமாக எழுந்து அவனுக்கருகில் வந்திட,
“இங்க பாரு நீ என்னைத்தான் லவ் பண்ணனும்னு நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணல. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. எனக்கு இருக்கிற ஒரே சந்தோஷமே தினமும் உன்னோட முகத்தைப் பார்க்குறதுதான். உனக்கு பிடிச்சா என்னை லவ் பண்ணு. பிடிக்கலையா கண்டுக்காத. இன்னும் 6 மாசத்துல எனக்கு கோர்ஸ் முடிஞ்சிடும். அதுக்கப்புறம் நான் உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன். சும்மா அட்வைஸ் பண்ணி என் மூட ஸ்பாயில் பண்ணாத” என்றவன் அங்கிருந்து வெளியேறினான்.
“என் தாரா என் தாரா.. நீயே என் தாரா..” அவன் செல்போன் ரிங்டோனும் அவன் பின்னே செல்ல அதன் ஒலி குறைந்தது.
நதியா மறுநாள் தான் ஷீலாவிற்கு போன் செய்தாள்.
“ சாரி டி நேத்து பேச முடியல. என்ன பண்ணிட்டு இருக்க?”
“லஞ்ச் டைம் ஃப்ரீ தான். நீ சொல்லு உன்னோட ஆசை மச்சான் என்ன பண்றார்? நாம 8th ஸ்டாண்டர்ட் ஸ்கூல் படிக்கும் போது அவர் காலேஜ் படிச்சுட்டு இருந்தார்ல”
“ஆமா அழகா இருப்பான் கார்த்தி. லேசா அரும்பு மீசை வச்சு, நல்ல கலரா இருப்பான். அவனோட குரல் கூட அழகா இருக்கும். நல்லா பாட்டு பாடுவான். அவனோட காலேஜ் புக்ல நிறைய கவிதை எல்லாம் எழுதி வச்சிருப்பான்”
“அடேங்கப்பா அவ்வளவு காதலா. உன் லவ்வ அவர்கிட்ட போய் சொன்னியா இல்லையா?”
“அந்த கொடுமையை ஏன் கேட்குற? ஸ்கூல் படிக்கும்போது அவன் அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவான். அம்மா முன்னாடி ஜாலியா என்னை கிண்டல் பண்ணுவான். நானும் வாடா மாமா, போடா மாமான்னு அவன் கிட்ட வம்பிழுப்பேன். நான் ஏஜ் அட்டென்ட் பண்ணதும், என்னோட அம்மா, ‘மாமாவா இருந்தாலும் அவன்கிட்ட பேசக்கூடாதுன்னு’ ஸ்ட்ரிக்ட் டா சொல்லிட்டாங்க.
“அதுக்கப்புறம் அவன் வீட்டுக்கு வந்தாலும் நான் ‘வாங்க..’ அப்படின்னு கூப்பிட்டுட்டு ரூமுக்கு போயிடுவேன். ரொம்ப வருஷம் கழிச்சு அவனை எங்க குலதெய்வ கோவில்ல பார்த்தேன். அன்னைக்கு நான் தாவணிலாம் உடுத்திட்டு போயிருந்தேன். நான் சாமி கும்பிட்டுட்டு இருந்தப்போ பயபுள்ள என்னையவே பார்த்துட்டு இருந்தான்.
“எனக்கு மனசுக்குள்ள 1000 பட்டர்பிளைஸ் பறக்க ஆரம்பிச்சுருச்சு. நானும் அவனையே பார்த்துட்டு இருந்தேனா.. அப்போ அவன் பார்வை வேற எங்கேயோ போச்சு. எங்க பார்க்குறான்னு திரும்பிப் பார்த்தா, அவன் அவ்வளவு நேரமா பார்த்தது என்னை இல்லடி. என் பக்கத்துல நின்னுட்டு இருந்த என்னோட பெரியம்மா பொண்ணை” அவள் பெருமூச்சோடு சொல்லி முடிக்க,
“அடப்பாவி.. என்னடி இப்படி பண்ணிட்டான்.அப்புறம் என்ன ஆச்சு?” ஆர்வமாய் கேட்டாள் ஷீலா.
“அப்புறம் என்ன என் மனசுல பறந்த பட்டர்பிளை எல்லாம் அடிச்சு சாகடிச்சுட்டு வேற வேலையை பார்க்கப் போயிட்டேன். அவனோட கல்யாணத்துக்குப் போய் ‘எங்கிருந்தாலும் வாழ்க..’ அப்படின்னு அட்சதையை தூவி வாழ்த்திட்டு, என் கண்ணுல வராத கண்ணீரைத் துடைச்சுட்டு வந்துட்டேன் டி” நதியா சோகமாய் பேச, ஷீலா சத்தமாக சிரித்து விட்டாள். மிதுனோ சிரிப்பை அடக்கி, உதட்டை மடித்து சத்தமில்லாமல் சிரித்தான்.
“ஏன் டி என் காதல் கதையை கேட்டா உனக்கு சிரிப்பு வருதா?”
“நீ பண்ணதுக்கு பேர் காதல். அதுக்கு என்னை அழச் சொல்றியா? நீ சொன்ன மாடுலேஷன்ல தான் எனக்கு சிரிப்பு வந்தது. அது சரி உங்க மாமா பையன் பாலாஜி மேல கூட உனக்கு கிரஷ் இருக்குன்னு சொல்லியிருந்த. அவர் என்ன ஆனார்?”
“அதுவா அதுவும் நான் 8th படிக்கும் போது நடந்த சம்பவம் தான். என் சித்தி பொண்ணு ‘நான் தான் பாலாஜி மாமாவை கல்யாணம் பண்ணிப்பேன்’னு சொன்னா. நான், ‘முடியாது.. அவன் என்னோட மாமா, நான் தான் அவனை கல்யாணம் பண்ணிப்பேன்’னு சொன்னேன். ரெண்டு பேருக்கும் சண்டையாகிடுச்சு. அந்த கோபத்துல நாங்க ஒரு கல்யாணத்துக்குப் போகும் போது, அவன் ஆப்பிள் கேட்டதுக்கு நான் தர முடியாது போடான்னு சொல்லிட்டேன். அப்போ அவன் 10th ஸ்டாண்டர்ட் படிச்சிட்டு இருந்தான்.
“அந்த விஷயத்தை ஞாபகம் வச்சிருந்த பக்கி, அவனுக்கு கல்யாணப் பேச்சு எடுத்தப்போ என்னைப் பத்தி கேட்டதுக்கு, ‘அவ திமிர் பிடிச்சவ, அன்னைக்கு எனக்கு ஆப்பிள் தரல. அவ எனக்கு வேணாம்னு’ சொல்லிட்டானாம். ஆப்பிள் தந்த அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டான். சரிதான் போடான்னு நான் அவனோட கல்யாணத்துக்கே போகலையே” நதியா சொல்லி முடிக்க,
“ஒரு ஆப்பிள் உன் காதல்ல விளையாடிருச்சே” விழுந்து விழுந்து சிரித்தாள் ஷீலா. நதியாவின் பேச்சில் மிதுனின் இதழ்கள் நீண்டு விரிந்திருந்தன.
“ஆமா அதென்ன காதலா ஜஸ்ட் அவனுங்க மேல கிரஷ். ஆனா ஒண்ணு நான் யாரையாவது காதலிச்சா அவங்களுக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகிடும்”
“எப்படி சொல்ற?”
“எனக்கு அந்த நடிகரை ரொம்ப பிடிக்கும். நான் அவரை ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சேனா உடனே அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு”
“அடிப்பாவி நடிகரை லவ் பண்ணா எப்படி சக்சஸ் ஆகும்?”
“அட அது இல்லடி. நான் காலேஜ் படிக்கும் போது என்னோட சீனியர் ஒருத்தனை ரொம்ப பிடிச்சிருந்தது. கருப்பா தான் இருப்பான். ஆனா கட்டையா மீசை வச்சு மேன்லியா இருப்பான். அவனை அப்பப்போ பார்த்து சைட் அடிச்சுட்டே இருந்தேன். திடீர்னு காலேஜ் முடிக்கிறதுக்குள்ள அவன் வேற பொண்ணை லவ் மேரேஜ் பண்ணிட்டான் டி”
“ஹையோ என்னால சத்தியமா முடியல டி. உன்னோட காதல் கதை எல்லாம் யார்கிட்டயும் சொல்லிடாத”
“ஏன் டி என்னை தப்பா நினைச்சுப்பாங்களா?”
“உன்னை வச்சு காமெடி பண்ணிடுவாங்க” அவளை பங்கமாய் கலாய்த்தாள் தோழி.
“போடி எனக்கே ஃபீலிங்ஸா இருக்கு”
“சரி நீ ஃபீல் பண்ணிட்டே இரு. எனக்கு லஞ்ச் டைம் ஓவர். நான் ஈவ்னிங் பேசுறேன்” ஷீலா போனை கட் செய்தாள்.
மிதுன் சத்தமில்லாமல் மனதிற்குள் சிரித்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனுடைய மனம் லேசாகியிருந்தது. ‘இந்த மாதிரியான அவளுடைய குறும்புத்தனமான பேச்சில் தான் வைஷு மயங்கியிருப்பாளோ’ என யோசித்தவன், அவனுடைய லேப்டாப்பை எடுத்து போனை கனெக்ட் செய்து அவள் போனில் இருக்கும் கேலரியை ஓபன் செய்தான்.
அதில் ஒரு வீடியோவைப் பார்த்தால் வெள்ளை நிற ஜார்ஜெட் புடவை, ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து, ‘கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை’ பாடலுக்கு இடுப்பை வளைத்து நதியா குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.
இன்னொரு வீடியோவில் அதே சேலையில் ‘இப்போ சாத்து நடை சாத்து’ பாடலுக்கு மீனாவைப் போல் இடுப்பை வளைத்து ஆடியிருந்தாள். அவரைப் போலவே நளினமாக நடந்து, இடையை வளைத்து ஆடியிருந்தாள்.
நீ போடு காதல் விண்ணப்பம்..
கிடைக்காது வேறே சந்தர்ப்பம்..
நீ வந்து ஆடும் ஊஞ்சல் நான்..
அழகாக பாடும் ஏஞ்சல் நான்..
தரையிலே தரிசனம்
தருகிற நிலவிது..
அறையிலே அபிநயம்
புரிகிற மலரிது..
செக்காக என் பின்னே
சுத்தாத ஆள் இல்லை..
எல்லாரும் என் பேரை
சொல்லாத நாள் இல்லை..
அவளோ ஒரு கையை தூக்கி பாடிக் கொண்டே ஆடிட, மெய்மறந்து போனான். அவள் ஆடும் வீடியோவை ரிப்பீட் மோடில் போட்டுவிட்டு கன்னத்தில் கை வைத்து அவள் இடையை இமைக்காமல் ரசித்திருந்தான். நதியா ஏதோ பொழுதுபோக்குக்காக வீடியோக்கள் எடுத்து வைத்திருந்தாள். அது மிதுன் கண்களுக்கு விருந்தாகும் என்று அவளே எதிர்பார்த்திருக்க மாட்டாள்.
இரவு அறைக்குச் சென்றவன், அவள் முகத்தை பார்க்க முடியாமல் தடுமாறினான். ‘அவள் தனக்கு சொந்தமில்லாத போது, அவளுடைய அனுமதியின்றி அவளைப் பார்த்து ரசித்தது தவறு தானே’ என்ற உறுத்தல் அவனுக்குள்.
இரவு தூக்கத்தில் இருந்தவன், யாரோ அறைக் கதவின் பாஸ்வேர்ட் போடும் சத்தம் கேட்டு விழித்து பார்த்தால், நதியா தான் எழுந்து வெளியே சென்றாள்.
மெதுவாக அவளுக்குத் தெரியாதவாறு அவனும் பின்னே சென்று பார்த்தால், நதியா பால்கனி கதவைத் திறந்து அங்கு பெய்து கொண்டிருந்த மழையில் நனைய ஆரம்பித்தாள்.
மிதுன் அவளைப் பார்த்திருக்க, அவளோ அந்த பக்கம் திரும்பி இவனுக்கு முதுகு காட்டியபடி, அவளுடைய மனதிற்குள் நன்னாரே பாடல் ஓடிக் கொண்டிருக்க, அதற்கு ஏற்றார் போல பாடல், இசை ஏதுமின்றி நனைந்தவாறு ஆடிக் கொண்டிருந்தாள்.
மழையில் ஓடி, ஆட, தொப்பலாக நனைந்து அவள் திரும்பிட, மிதுன் பால்கனி வாசலில் நின்று அவளைப் பார்த்திருந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்தவள் அறைக்குச் செல்ல, அவனும் அவளுக்குப் பின்னால் சென்றான்.
அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டவன், வேகமாக அவளது கையைப் பிடித்து இழுக்க, நதியா திரும்பிப் பார்த்தாள். கோவைப்பழமாய் அவள் இதழ்கள் சிவந்திருக்க, நனைந்ததில் மெல்லிய நடுக்கத்தில் இருந்தன.
நடுக்கதோடு விரிந்திருந்த அவள் இதழ்களை தன் அதரங்களுக்குள் பூட்டிக் கொண்டவன், அவளது இதழ்தேனை சுவைக்க ஆரம்பித்திருந்தான். திடுக்கிட்டு விழிகளை விழித்தவள் உறைந்து போயிருக்க, பகலெல்லாம் அவன் கண்களுக்கு விருந்தாகியிருந்த அவளது இடையை அவளுடைய நைட் ட்ரெஸை விலக்கி, தன்னுடைய கைகளுக்கு விருந்தாக்கியிருந்தான்.
அவன் தந்த முத்தமும், அவனது தீண்டலும் மழையில் குளிர்ந்திருந்த அவள் உடலுக்குள் மோக வெப்பத்தை ஏற்றிக் கொண்டிருக்க, மனதோடு உருகும் அவளின் உடலைத் தாங்கிட, மிதுன் தோளில் கையை வைத்து பிடித்துக் கொண்டாள்.
கண்களை மூடி அந்த முத்தத்தை ஆழ்ந்து ரசித்திருந்தவன், கண்களைத் திறந்து அவளைப் பார்த்து, “இட்ஸ் அமேஸிங். யூ டூ” என்றான்.
அவன் தந்த முத்தத்தில் அவளுக்குள் ஏதேதோ மாற்றங்கள் தோன்ற, மெல்ல அவனிடம் இருந்து விலகினாள். “நதியா.. ட்ரெஸ் ரிமூவ் பண்ணிட்டு படு” என்றவனின் குரலில் அத்தனை குழைவு. “ஹான்..” அவள் திடுக்கிட்டு அவனைப் பார்க்க, மோகத்தில் சிக்கியிருந்த அவனது விழிகளில் தானும் சிக்குண்டு போனாள் பாவை.
பாத்ரூமிற்குள் சென்று ஈர உடையை மாற்றி வந்தவள், போட்டிருந்த உடைகளைக் களைந்து படுத்துக் கொள்ள, எப்போதும்போல் அவள் மேல் விழுந்தும் விழாமலும் கூடலை ஆரம்பித்தான். மகிழ்ச்சியில் அவன் முகமெங்கும் ஒளிர்ந்த ஒளியில் மயங்கியவள் அவனையே பார்த்திருக்க, அவளைப் பார்த்தவன் மந்தகாசமாய் புன்னகைத்திட, அதில் தொலைந்த கணம் அவளும் இதழ் விரித்து ஒரு மென் புன்னகையை அவனுக்குத் தந்தாள்.
புன்னகையில் மலர்ந்த இதழ்கள் அவனை அழைத்திட, அதைக் கவ்வி கொண்டவன் முத்தத்தோடு தன் இயங்கலைத் தொடர்ந்தான். கொழு கொம்பு தேடும் கொடி போல, மெத்தையில் அங்குமிங்கும் அசைந்து கொண்டிருந்த அவள் கரங்களுடன் கரங்களை சேர்த்து, அவளது விரல்களோடு தன் விரல்களை இறுக்கினான்.
கூடலை முடித்து அவள் மார்பில் மூச்சு வாங்கி விழுந்தவன் சில நிமிடங்கள் அப்படியே இருக்க, நதியா தான் அவனைத் தள்ளினாள்.
மிதுன் அவள் இதழோடு இதழ் பொருத்தி அவளை மொத்தமாய் உறிஞ்சி எடுத்திருக்க, முதல் சுற்றிலேயே நதியா சோர்ந்து போனாள். இத்தனை நாட்களாக வலி மட்டுமே தந்த அவனது கூடல் இன்று அவள் பெண்மையை சிலிர்க்கச் செய்து, அவள் உடலின் தாப உணர்ச்சிகளை எழுப்பியிருந்தது.
அவள் சோர்ந்து தூக்கத்திலிருக்க, அவனோ அவள் இதழும் உடலும் தந்த மயக்கத்தில் இருந்தான். அவன் மனதை இதமாக்கிய அந்த பரவச உணர்ச்சிக்குப் பெயர் தெரியவில்லை, ஆனால் அவனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. எதையோ அடைந்து விட்ட திருப்தி அவனது மனதில்.
முதல்முறையாக மிதுன் அவனுடைய மூளையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, முழுக்க முழுக்க மனதின் கட்டுப்பாட்டில் இருந்தான். தன் மனம் சொன்ன அத்தனையும் செய்து பார்க்கிறான். அதில் தோன்றும் அதிகப்படியான இன்பத்தில் லயித்தும் போகிறான்.
அவன் மீண்டும் அழைப்பான் என்ற எண்ணத்தில், உடையை போடாமல், அவள் அப்படியே போர்வை போர்த்தி உறங்கியிருக்க, போர்வை விலகித் தெரியும் அவள் பின்கழுத்தும், கொஞ்சமாய் தெரியும் முதுகும் அவனுக்குக் கிறக்கத்தைத் தந்தன.
மிதுன் எழுந்து அவள் கூந்தலை விலக்கி, அவளுடைய பின்னங்கழுத்தில் முத்தமிட்டு, முதுகிலும் முத்தமிட்டான். அவளது போர்வைக்குள் நுழைந்தவன், அவள் ஆடையற்ற இடையின் மேலே கையைப் போட்டு தன்னுடன் சேர்த்து, பின்னிருந்து அவளை இறுக்கியணைத்தவாறு உறங்கிப் போனான்.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
