கடவுளே இவள் என்ன இப்படி இருக்கிறாள்.. சும்மா ஒரு வார்த்தை சொன்னதற்கு பித்து பிடித்து போய் ஜுரமே வந்து விட்டது ..,அம்மாவை அழைத்து வருகிறான்..
வரும் போதே,” இவள் என்னம்மா இப்படி இருக்கிறாள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை ..நான் அவனுடனேயே இருக்கிறாளே என்று இப்படி சொன்னால் இப்பொழுது ஜுரமே வந்து விட்டது .. “
கயல் மகனை தான் திட்டுகிறார். “நீதான்டா ஏதாவது தொந்தரவு செய்து மித்ராவை பாடாய் படுத்துகிறாய்.. மகனை ஸ்கூல் அனுப்ப வேண்டும் என்று அவளுக்கு தெரியாத . .குழந்தையை விட்டு பிரிய வேண்டும் என்று நீ சொல்லித்தான் அவளுக்கு தெரிய போகிறதா . .” அம்மா இதை சொன்னதும் தான் செய்தது தவறோ என்று அவனுக்கு எண்ணத் தோன்றுகிறது ..
நான் தான் தவறா இல்லை, அவள்தான் தப்பாக செய்கிறாளா என்று ஒரே குழப்பமாக இருக்கிறது ..குழந்தை பிறக்கும் எல்லார் வீட்டிலும் இப்படித்தான் பிரச்சனை நடக்கிறதா என்று யோசிக்க தொடங்குகிறான் ..யாரிடமாவது கேட்டு இருந்தால் அவன் மித்ராவின் போக்கினை கண்டுபிடித்து இருப்பான்..
ஆனாலும் அம்மா சொல்வதை தான் கேட்கிறான்..”அப்படி என்றால் அவள் போக்கில் விட்டு விடு.. கொஞ்சம் அமைதியாக இரு ..குழந்தை வளர வளர எல்லாம் தானாக சரியாகி விடும்.. ” என்கிறார்…பிறகு அவளை சமாதானம் செய்து டாக்டரிடம் அழைத்துப் போன பிறகுதான் அவளுக்கு காய்ச்சலே நிற்கிறது..
என்னதான் தன் மனதை கொஞ்சம் சமாதானம் செய்து கொண்டாலும் அவனால் அவள் செய்வதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..’ இது என்னடா அநியாயமாக இருக்கிறது.. உன் பையன் ஸ்கூலுக்கு போவான் என்று சொன்னாலா ஒருத்திக்கு காய்ச்சல் வரும்.. சரி இனி நானும் வேடிக்கை பார்க்கிறேன்.. இவள் எப்படித்தான் இவனை வளர்த்து ஆளாக்கி ஸ்கூலுக்கு அனுப்பி, திருமணம் எல்லாம் செய்து வைக்கப் போகிறாள் என்று ..அவளாயிற்று, அவள் மருமகளாயிற்று ..
இதை நினைக்கும் போதே சிரித்து விடுகிறான் .. ‘இப்பொழுது தான் ஒரு வயதே ஆகிறது ..அதற்குள் மருமகள் வரையும் போய் விட்டேனே.. எல்லாம் இவள் படுத்தும் பாடு ..வேறு ஒன்றும் இல்லை.., ஹூம் என்று பெருமூச்சு விடுகிறான்..
மித்ராவின் செயல்பாடுகளும் நாளுக்கு நாள் இன்னும் மோசமாகத் தான் போகிறது .. கயலும், மாறனும் குழந்தையை ஆசையாய் தூக்க வந்தால் அவன் அப்பொழுதுதான் தூங்கி விழித்திருந்தாலுமே , “அவனை நான் தூங்க வைக்க வேண்டும் அத்தை ..தூக்க நேரம் மாறிப் போனால் அவன் அழ ஆரம்பித்து விடுவான்..” என்கிறாள்..
கயல் நேராகவே கேட்டு விட்டு வருகிறார்.. ” என்னடி பெரிய ஊர் உலகத்துல இல்லாத அதிசயமாய் பிள்ளையை பெற்று வைத்திருக்க.. தாத்தா பாட்டிக்கு பேரனை கொஞ்ச வேண்டுமென்று ஆசை இருக்காதா என்ன ..கொஞ்ச நேரமாவது குழந்தையை கொடுக்கிறாயா ..அப்படி எப்படித்தான் அலுக்காமல் சலிக்காமல் பொழுதன்னைக்கும் வைத்துக் கொள்கிறாயோ.. “
” அதுவுமில்லாமல் இப்பொழுது ரொம்பவும் பொய் வேறு பேச கற்றுக் கொண்டு விட்டாய் .இப்பொழுதுதான் தூளியில் தூங்கிக் கொண்டு இருந்தான் பார்த்தேன் ..திரும்பவும் எப்படி அவனை தூங்க வைப்பாய் .. சரிடி நானும் பார்க்கிறேன். நீ அவனை தூங்க வை ..அவன் இப்பொழுது தூங்குகிறானா இல்லையா என்று பார்ப்போம்.. “என்று வேண்டுமென்றே அவள் எதிரில் உட்கார்ந்திருக்கிறார்..
அவருக்கு கோபம் தான் ..மருமகளிடம் இதைப் பற்றி கேட்க வேண்டும் .. -அவள் என்ன பேசுகிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் .. ,வேண்டுமென்று தான் வந்து அவளிடம் பேச்சு கொடுக்கிறார் …
உடனே அவள் பேய் பிடித்தவளை போல கத்தத் தொடங்குகிறாள்.. “அப்படி என்றால் நான் சொன்னதை நீங்க நம்பவில்லை என்று தானே அர்த்தம்.. நான் என்ன பொய்யா சொல்கிறேன் .. அவன் தொட்டியில் தூங்கியது என்னவோ உண்மைதான்.. ஆனால் போட்ட கொஞ்ச நேரத்திற்குள் விழித்து விட்டான்.. அதிலிருந்து நான் தான் வைத்துக் கொண்டு இருக்கிறேன்.. அப்பொழுது எல்லாம் வந்து யாரும் குழந்தையை கொடு .. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கேட்கவில்லை ..
எனக்குத்தான் தலையெழுத்து.. எப்பொழுது பார்த்தாலும் அவனை வைத்துக் கொள்ள வேண்டும் என்று.. நீங்கள் மூன்று பேருமே சுலபமாக என் மீது பழியை போட்டு தப்பித்துக் கொள்கிறீர்கள்..சரி இந்தாங்க நீங்களே உங்கள் பேரனை வைத்துக் கொள்ளுங்கள் ..எனக்கு மட்டும் என்ன இவனை தனியே வளர்க்க வேண்டும் என்று எழுதி வைத்து இருக்கிறதா .. “
அவள் கத்த தொடங்கியதுமே அவன் வீரிட்டு அலறுகிறான்.. ஒரே வீட்டில் இருந்தாலும் அவனுக்கு தாத்தா பாட்டி கொஞ்சம் தான் அறிமுகமாகி இருக்கிறது.. அழும் போது அவனை தூக்கவும் இன்னும் அலறத் தொடங்குகிறான் ..
‘ கயலுக்கு ஏன்டா இவளிடம் பேசினோம். , என்று இருக்கிறது..
” அம்மாடி என்னால உன் பிள்ளையை சமாளிக்க முடியாது ..நீ ஏதாவது செய்து கொள் ..ஆனாலும் நீ செய்வது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.. அவ்வளவு தான் சொல்வேன்..” சொல்லி விட்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறி விடுகிறார். அரவிந்தனிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறார்..
அவனிடம் சொன்னால் அவன் அதற்கு மேல் கவலையாய் பேசுகிறான்.. ” போம்மா நீயாவது அடுத்த ரூமில் இருக்கிறாய்.. உன்னிடம் அவன் வரவில்லை என்றால் சரி எனலாம் ..ஆனால் அவன் பக்கத்தில் தான் படுத்து கிடக்கிறேன்.. என்னிடம் கொஞ்ச நேரம் கூட இருக்க மாட்டேன் என்கிறான். என்ன செய்வது ..”
“எல்லாவற்றிற்கும் காரணம் உன் மனைவி தான்டா ..இதற்குத்தான் நாங்கள் பார்த்து கேட்டுக் கொண்டு வந்திருந்தால் அந்தப் பெண் கொஞ்சமாவது வாயை மூடிக் கொண்டு இருப்பாள்.. “
” அடடா நீ ஆரம்பித்து விட்டாயா கிழவி.. அம்மாடி தாயே உன்னிடம் பேசுவதற்கே எனக்கு வர வர பயமாக இருக்கிறது..சரி நான் தான் போய் விழுந்து விட்டேன் .இனி என்ன செய்வது .. என் மகனும் மனைவியும் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு விட்டு வரவா.. நீ என்னை வைத்து பார்த்துக் கொள்வாயா .
எப்பொழுது பார்த்தாலும் இதையே சொல்லிக் கொண்டு ..எனக்கு எரிச்சலாக வருகிறது.. “
“அடேய் நான் சும்மா சொன்னேன் .. இப்படி அபசகுனமாய் பேசாதடா.. அதெல்லாம் என் மருமக நல்லவள் தான்.. இப்பொழுதுதான் அதுவும் இந்த பயல் பிறந்ததுல இருந்து தான் இப்படி ஆகி விட்டாள்.. ஏன்னு தான் தெரியல.. “
” அதற்கு தான் நான் காரணம் கேட்டதற்கு பதில் அழகாக சொல்லி விட்டாளே.. அவள் அம்மா வீட்டில் எல்லாருமே பெண் குழந்தைகளாம்..அதனால்தான் பையன் என்றதும் அதிக ஈடுபாடாகி , அதிக பாசம் வைத்து இப்பொழுது அவளால் மாற முடியாமல் தவிக்கிறாளாம் .. நானும் கொஞ்சம் கொஞ்சமா என்னை மாற்றிக் கொள்கிறேன் என்கிறாள்..பார்ப்போம் என்ன செய்கிறாள் என்று.. “
நம்பிக்கையுடன் பேசுகிறான் அரவிந்த்..
ஆனால் அந்த நம்பிக்கையை உடைப்பதற்காகவே மறுநாள் பொழுது விடிகிறது .. எழுந்ததில் இருந்து எதற்கு அழுகிறாள் என்றே தெரியவில்லை..அரவிந்த் அவளிடம் ஏதேதோ கேட்டுப் பார்க்கிறான்.. பதிலே இல்லை .. கடைசியில் வழக்கம் போல கொஞ்சம் சத்தம் போட்டதும் தான் அவள் வாயில் இருந்து உண்மை வெளி வருகிறது..
“என் தங்கை மயூரிக்கு குழந்தை பிறந்து விட்டதுங்க..”கண்ணீரை துடைத்த படியே சிரித்துக் கொண்டே சொல்கிறாள். இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று புரிந்து கொண்டவன் அவள் அருகில் உட்கார்ந்து பொறுமையாய் பேசுகிறான்..
” சரிடி அப்படி என்றால் இது என்ன ஆனந்தக் கண்ணீரா .. “
“ஆமாங்க ஏன் சந்தேகமா கேட்கறீங்க..”
“ஓ அதனால தான் காலையிலிருந்து அழுது கொண்டிருக்கிறாயா.. நம்ம போய் பிறந்த குழந்தையை பார்த்து விட்டு வர வேண்டாமாடி.. குழந்தைக்கு உடைகள் எடுக்க வேண்டும் என்ன குழந்தை என்று சொன்னால் அதற்கு ஏற்ற மாதிரி நான் செலக்ட் பண்ணி விடுவேன்..”
இதை சொன்னதும், ” வேற என்னங்க பிறக்க போகுது.. பெண் குழந்தை தான் பிறந்திருக்கு .. “என்று சிரிக்கிறான்..
“ஓகோ இதற்காகத்தானே இவ்வளவு நேரம் அழுதாய் .. “
” பின்ன என்னங்க நாங்க என்ன பாவம் செய்தோம். எல்லோரும் பெண் குழந்தை. எங்களுக்கு பிறக்கப் போவது மாற்றி இருக்க வேண்டாமா..”
“ஏன்டி அடுத்த குழந்தை ஆண் குழந்தையா இருந்தா ஏற்றுக் கொள்ள மாட்டீங்களா .இப்படி அழறியே.. நல்ல வேளைடி ,உனக்கு பையனாய் பிறந்து விட்டான் ..இல்லா விட்டால் தினமும் இப்படி அழுதே என்னை சாகடித்து இருப்பாய் .. “என்றதும் பதிலே சொல்லாமல் தலை குனிந்த படியே உட்கார்ந்திருக்கிறாள்..
‘சரி இது அவளுடைய வீக் பாயிண்ட். இதை ஏன் நாம் சுட்டிக் காட்டிக் கொண்டு.. என்று அதை விட்டுத் தள்ளுகிறான்..
” ஆனால் என் தங்கையின் கணவர் பெண் குழந்தை தான் வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.. அவருக்கு அத்தனை ஆனந்தமாய் இருக்கிறது .. பிறந்த பெண் குழந்தையை பார்த்ததும் ..அப்படி என்னதான் இருக்கிறதோ பெண் குழந்தையின் மீது .. “மித்ரா வெறுப்புடன் பேசுகிறாள்..
“உனக்கு ஒன்று தெரியுமாடி.. சின்ன வயதில் எனக்கு தங்கை வேண்டும் என்று நான் ரொம்ப ஆசைப்பட்டேன்..ஆனால் என் அப்பாவும் அம்மாவும் ஒரே மகன் போதும் என்று முடிவு செய்தார்கள்.. அதனால் எனக்கு என்று அடுத்தது யாருமே இல்லாமல் போய் விட்டார்கள்.. அதனால் எனக்கு பெண் குழந்தைகளை பார்த்தாலே அவ்வளவு ஆசையாக இருக்கும் ..நானும் அப்படித்தான் நினைத்தேன்.. ஆனால் என்ன பையனாக போய் விட்டான் ..அடுத்ததாய் அவனுக்கு துணையாய் தங்கை ஒன்றை பெற்றுக் கொடுத்தால் சரியாய் போயிற்று.. “
“ஏங்க அடுத்தது ஆண் குழந்தை பிறந்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்வீங்களா .. “
“எனக்கு ஒன்றும் கஷ்டமில்லடி.. எப்பொழுது எனக்கு பெண் குழந்தை பிறக்கிறதோ ..அதுவரை நான் முயற்சி செய்து கொண்டே இருப்பேன் .. “
” இதெல்லாம் போங்கு ஆட்டம் ..என்னால எல்லாம் பெற்றுக் கொடுக்க முடியாதுப்பா.. அடுத்தது எந்த குழந்தையோ அதோடு நிறுத்தி விட வேண்டியதுதான் .. “
“அப்படி என்றால் பெண் குழந்தை தான் வேண்டும் என்று கொஞ்சம் எண்ணம் போடு.. இல்லா விட்டால் உனக்கு தான் கஷ்டம் .. “என்று விட்டு போகிறான்..
தொடரும்
