இதயத்தின் மொழி -13

மணி 9.30 இருக்கும்… “அபியால வைட் பண்ண முடியாம அவளே அர்ஜூனுக்கு கால் பண்றா”.

“நம்பர் பிஸின்னு வருது… உடனே கட் பண்ணிடுறா”..

அபி: “யாருக்கு கிட்ட பேசிட்டு இருக்கான்.. என்கிட்ட பேசுறேன்னு சொன்னா.. ஏதாவது முக்கியமான கால்லா இருக்கும்.. ஓகே வைட் பண்ணுவோம்”..

“ஒரு 2 நிமிஷத்துல அர்ஜூனே கால் பண்றான்”..

அபி: “ஹாலோ”!!

அர்ஜூன் : “சாரி சாரி”…

அபி: “எதுக்கு”??

அர்ஜூன் : “நீ கால் பண்ணும் போது ஹெ. ச். ஆர் பேசிட்டு இருந்தாங்க..அதா அட்டன் பண்ண முடியலை”.

அபி: “பரவால்ல… ஊருக்கு கிளம்பியாச்சா”..

அர்ஜூன் : “ம்ம்.. போய்ட்டு தா இருக்கேன்..உனக்கு தா கால் பண்ணலாம்ன்னு பார்த்தா. அதுக்குள்ள அவரு கால் பண்ணி மீட்டிங் பத்தி பேசிட்டு இருந்தாரு.. அவாய்ட் பண்ண முடியலை”.

அபி:” பரவால்ல விடு..நீ சாப்டியா”…

அர்ஜூன் இல்ல. “நீ சாப்டியா”??

“அபி சாப்டேன்,ஏன் இன்னும் சாப்பிடலை”..

“அப்போ கெளசல்யா உள்ள வராங்க”..

கௌசல்யா: “அபி இன்னைக்கு மாத்திரை சாப்பிடலையா” ?

“அபி அச்சோ மறந்துட்டேன் மா”…

கௌசல்யா:” எத்தனை தடவை சொல்றது..என்ன தலை போற வேலையா இருந்தாலும் மாத்திரை சாப்பிடமா இருக்க கூடாதுன்னு உங்க அப்பாக்கு மட்டும் தெரிஞ்சு இருந்து இருந்தா இன்னேரம் கத்தி இருப்பாரு”.

அபி: “உஸ்ஸோ.. ஒரு நாள் சாப்பிடலான்னா என்ன மா ஆகா போது.. போங்க மா.சும்மா கத்திட்டு”…

அர்ஜூன்:” ஏய்?? என்ன மாத்திரை எதுக்கு “??

அபி: “ஒரு நிமிஷம். சொல்றேன். இரு ன்னு மாத்திரை யை வாங்கி சாப்டுட்டு வரா”..

“கௌசல்யா முகம் வாடி போய் கிழே போறா”…

அபி: “உம்.. இப்போ பேசு”..

அர்ஜூன் : “எதுக்கு மாத்திரை. உடம்பு சரி இல்லையா” ??

அபி: “இல்ல. ஒரு மாசத்துக்கு முன்னாடி லைட்டா தலை சுத்தலா இருந்தது..அப்போ சத்து கம்மியா இருக்குன்னு கொடுத்தாங்க அது தான்”.

அர்ஜூன்: “ஓ.அப்பறம்” ??

அபி :”அப்பறம் ?? என்ன ?? நீங்க தான் சொல்லணும்”.

அர்ஜூன்:” கண்டிப்பா உங்க அம்மா வீட்டுல இருந்து தான் படிக்கணுமா “??

அபி:”ஃ ப்ளீஸ் அர்ஜூன் !! எனக்காக”…

“இது கேட்கும் போது அர்ஜூனுக்கு வார்த்தையே வரலை”..

“அபி ஓய் லைன்னா இருக்கீயா”??

அர்ஜூன் : “இருக்கேன் இருக்கேன்”…

அபி:” உனக்கு என்ன பிடிச்சு இருக்கா”..

அர்ஜூன் : “ம்ம்”….

அபி : “ம்ம்…என் போட்டோ கொடுத்தாங்களா”??

அர்ஜூன் :” ம்ம்..ஆனா நான் பாக்கல… பார்க்ல தான் உன்ன நல்லா பார்த்தா”..

அபி : “அப்போ நிச்சயம் பண்ண அப்போ “??

“என்னை பாக்கமாலே ஓகே சொல்லிட்டீங்களா”??

அர்ஜூன் : “உண்மையை சொல்லணும்னா அன்னைக்கு உன்ன பாக்க வந்ததே இந்த கல்யாணம் வேண்டா..ன்னு உன்கிட்ட பேசி நிறுத்த தான்”..

“அபிக்கு இது பெரிய அதிர்ச்சியா இருந்தது”..

அபி : “ஏன்”??

அர்ஜூன்:” எனக்கு கல்யாணத்துல பெருசா விருப்பம் இல்ல. ஏற்கனவே 1 பொண்ணு ஃபோட்டோ கொடுத்தாங்க. வீட்டுல யாரும்லா பாக்குல். நான் மட்டும் தா தனியா போய் அந்த பொண்ணுக்கிட்ட பேசி நிறுத்திட்டேன்”.

அபி : “அப்போ நான் ஃபஸ்ட் இல்லையா”??

அர்ஜூன்: “புரியலை என்ன கேட்குறான்னு”.

அபி: “அப்போ நான் உனக்கு ஃபஸ்ட் இல்லையா ன்னு கேட்டேன்..2 வது தானா”..

அர்ஜூன் : “ஏய் !!! லூசு… அப்படிலா இல்ல..நீ தான் என்னோட ஃபஸ்ட் அதோட பேஸ்ட்டும் கூ. உன்ன என்னோட அப்பா அம்மா எல்லாருக்கும் பிடிச்சு இருக்கு.அதோட எனக்கும்”.

“இல்லன்னா கல்யாணம் வேண்டாம்னு சொல்ல வந்துட்டு நான் இப்போ ரெடி ஆகுவேன்னா” ??

அபி: “ஏன் வேண்டாம்னு நினைச்ச”..

அர்ஜூன்:” அதா என் பாஸ்ட் பத்தி சொல்ல வேண்டாம்னு சொன்னீயே… அது தா காரணம்”.

அபி:” இன்னும் அவளை நினைச்சுட்டு இருக்கியா”??

அர்ஜூன்:” ஏய்.. நான் லவ் பண்ணால் டி.அவ தா லவ் பண்ணா”..

அபி: “டி யா”??

அர்ஜூன்: “சாரி.ஒரு ப்ளோ ல் வந்துருச்சு”.

அபி:” பரவால்ல. ஓகே ஓகே பாஸ்ட் வேண்டா விடு நம்மலை பத்தி மட்டும் பேசு”.

அர்ஜுன்:” ம்ம் சேரி”.

அபி: “போய் சாப்பிடு பா”.

அர்ஜூன்:” இன்னும் அவ்வளவு தான் 5 நிமிஷம் தா.இடம் வந்துரும். அப்பறம் சாப்பிடுறேன்”.

“இப்படியே பேசிட்டு அபி தூங்கிட்டா..அரஜூனும் தூங்கிட்டான்”..

“அடுத்த நாள்ல இருந்து டைம் இருக்கும் போது எல்லாம் பேசிட்டே இருந்தாங்க ரெண்டு பேரும்”..

“ப்ரியா பாரு மா… எப்படி பேசுறான்னு”…

“கௌசல்யா அவளை கட்டிக்க போறவன்ககிட்ட தானே பேசுறா..விடு டி”…

ப்ரியா:”அதுக்குன்னு ?? இவ்வளவு நேரமா வா.. நைட்லா பேசுறா… காலையில பேசுறா.. மதியம் சாய்ந்திரம் ஏன் நாள் புரவும் பேசுறா”..

“கணபதி உள்ள வர”…

அபி : “சேரி அப்பா வராரு.. நான் அப்பறம் பேசுறேன்”….

அர்ஜூன் : “ம்ம்”..

அபி : “ஹே ஹே….ஒரு நிமிஷம்”.

அர்ஜூன்: “சொல்லு அபி”..

அபி: “உன்னோட ஃபோட்டோ வேணும்”.

அர்ஜூன்: (அவன் மொத்த பல்லும் தெரியுற அளவுக்கு ஒரு சிரிப்பு) “சொல்லி இருந்தா வீடியோ கால் பண்ணி இருப்பேன்”..

அபி: ஹாலோ…” என் பிரண்டு கேட்டா”…

அர்ஜூன்:”அப்போ !! உனக்கு வேண்டாம் மா”.

அபி:” அமைதியா இருக்கா”.

அர்ஜூன்: “லைன்ல இருக்கியா” ??

அபி:” இருக்கேன்”…

அர்ஜூன் : “அப்போ பதிலை சொல்லு. உனக்கு வேண்டாமா”??

அபி : “வேணும் தான்”…

அர்ஜூன் : “அதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்குற செண்ட் பண்றா”..

அபி : “ம்ம்…சரி.. வைக்குறேன்”…

அர்ஜூன்: “அவன் போட்டோஸ் அனுப்புறான்”..

அபி :”அதுல பாத்து ரசிக்குறா”…

“அழகு டா நீ”…

“அதுல 2 போட்டோவை லஷ்மி க்கு அனுப்புறா..என் வருங்கால கணவன் ன்னு”…

 

தொடரும்…
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page