அத்தியாயம் 10

சங்கர் ஒவ்வொருவருக்கும் பத்திரிக்கை தந்தார்.

இதோ நம் அகிலாவின் அருகில் வந்து பத்திரிகையில் அகிலாவின் பெயரை எழுதி ” எல்லாரும் கண்டிப்பா வரணும் ம்மா ” என்றார் சங்கர். 

 

புன்னகையோடு பத்திரிக்கையை வாங்கி ” கண்டிப்பா எல்லாரும் வரோம் சார் “என்றாள் அகிலா. 

 

சங்கர் அனைவருக்கும் சிரித்த முகமாக பத்திரிக்கை வைத்து விட்டு அவருடைய கேபினில் சென்று அமர்ந்தார். 

 

அகிலா பத்திரிக்கையை வருடி பிரித்து பார்த்தாள். 

 

மணமகன் அஸ்வந்த். மணமகள் அபிராமி என்று இருக்க, அகிலாவின் கண்கள் பெரிதாகியது. 

 

அபிராமியின் திருமண பத்திரிக்கையை இவள் பார்க்கவே இல்லை. கோபத்தில் கௌரி அவள் கையில் கொடுத்த பத்திரிகையையும் மேஜயிலேயே வைத்து விட்டாள். பார்த்திருந்தால் தெரிந்திருக்குமே. இப்பொழுது பார்த்ததும் அதிர்ச்சியாகி நின்றாள். 

 

நம்ப பாஸோடயா அக்காக்கு கல்யாணம்! 

அன்று சுகன்யாவின் இறுதி சடங்கில் அகிலாவும் கலந்து கொண்டாள். 

 

அந்த முகம் இன்றும் அகிலாவின் மனதில் நிற்கிறது. மறக்க கூடிய முகமா அது?  எத்தனை நாள் மனைவியை தன் அலுவலகத்திற்கு அழைத்து வந்திருப்பான் அஸ்வந்த். 

 

நம் அக்காவை விட இவர் ஒரு படி மேல் அல்லவா. அலுவலக ஊழியர்களை சமமாக நடத்துவாரே. சிரித்த முகமாகவே இந்த அலுவலகத்தில் வலம் வந்தார். ஏதோ எதிர்பாராத நேரம் பிரசவத்தில் இறந்து விட்டார். 

 

இவருடன் தான் நம் அக்காவிற்கு திருமணமா? நம் அக்கா இவருடன் வாழ்ந்தால் கண்டிப்பாக இருவரின் வாழ்வும் நன்றாக இருக்குமே என்று பலவாறு சிந்தனை கொண்டு இருக்க, அவளையும் அறியாமல் கண்களில் நீர் கசிந்தது. 

 

பத்திரிக்கை கை நழுவி அவளுடைய மேஜயிலேயே விழ, கண்களை சிமிட்டி விழி நீரை துடைத்து கொண்டு அகிலா நிமிர, வலிய கரம் ஒன்று வெள்ளை நிற டிஸுவை பிடித்து அவள் முன் நீட்டியது. 

 

அகிலா சிவந்த கண்களோடு அவனை மொறைத்தாள் . 

 

என்னாச்சு அகி ஏன் அழுற? கேட்டது கார்த்திக் தான். 

 

டேய் உன்னைய,  அவ்ளோ தான் பார்த்துக்கோ. எதுக்கு என்னைய அகினு கூப்பிட்ற. இனிமேல் என்னைய கூப்பிட்ட உன் பல்லை உடைச்சிருவேன் என்றாள் விரல் நீட்டி. 

 

சரி அப்புறமா கோபப்படு. இப்போ இந்த டிஷ்யூ வாங்கி கண்ண தொடைச்சுக்கோ. 

 பாரு கண்ணெல்லாம் எப்படி கலங்கி சிவந்து போய் இருக்கு என்றான் கார்த்திக்.

 

டேய் உன் அன்பு எல்லாம் இங்க தூக்கிட்டு வராத சரியா அப்புறம் உன் கை கால் எல்லாம் ஒடச்சிடுவேன் என்று மிரட்டினாள் அகிலா. 

 

உதட்டோரம் புன்னகையை பரவ விட்ட கார்த்திக், “ஐயோ பயந்துட்டேன்பா” என்றான்.

அவனின் பேச்சு அவளுக்கு எரிச்சலை தர டேய், ஏற்கனவே உன்னால நான் அனுபவிச்ச வலியும் வேதனையும் அதிகம். சும்மா என்ன வந்து டிஸ்டர்ப் பண்ணாத அப்புறமா நான் போய் சார்கிட்டே சொல்லிக் கொடுத்துடுவேன். அப்புறம் அவர் உன் வேலையை காலி பண்ணிடுவாரு என்றாள். 

அவளின் வலியும் வேதனையும் அதிகம் என்ற வார்த்தையில் கார்த்திக்கின் மனம் வலித்தது.

ஆனால் அடுத்த நொடி அவனை அவனே சரி செய்து கொண்டு, சார்கிட்டே சொன்னா சொல்லிக்கோ எனக்கு ஒன்னும் பயம் இல்லை என்றான். 

 

அகிலா கடுங்கோபத்தில் எழுந்தாள். 

 

சங்கரின் கேபினை நோக்கி நடையை போட்டாள். 

 

கார்த்திக் அவளின் மேஜயில் டிஸுவை வைத்து விட்டு அவன் இடம் சென்று அமர்ந்தான். 

 

தன் மகனின் கல்யாண அழைப்பிதழை பார்த்து கொண்டிருந்தார் சங்கர். அவர் மனம்  சந்தோச கூத்தாடியது. 

 

எக்ஸ்கியூஸ் மீ சார், என்ற அகிலாவின் குரலில் நிமிர்ந்து பார்க்க, 

 

வா மா அகிலா என்றார் சங்கர். 

அவரை பார்த்ததும் அகிலா வந்த விஷயம் மறந்து விட்டாள். 

அவரிடம் அனுமதியும் கேட்காமல் அவர் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். 

 

சார் என்றாள் கலங்கிய குரலில். 

சொல்லு மா. ஏன் கண் கலங்குது? என்னாச்சு? என்று கேட்டார் சங்கர். 

 

அகிலா மௌனம் காக்க, அவரே பிரச்சனையை யூகித்து விட்டதாக நினைத்து, ” கார்த்திக் உன்னைய மறுபடி தொல்லை பண்றானா மா “? என்று கேட்டார். 

 

அவன் தன்னை தொல்லை செய்தான் தான். ஆனால் அகிலா கூறாமலேயே சங்கர் கண்டு கொண்டாரே! எப்பொழுதெல்லாம் கார்த்திக் வந்து தன்னை தொல்லை செய்கிறானோ அப்பொழுதெல்லாம் சிறு பிள்ளை போல் அகிலா சென்று சங்கரிடம் கம்ப்ளைண்ட் செய்வாள். 

 

அப்பொழுதெல்லாம் அலுவலகத்தில் சார் என்ற ஸ்தானத்தை விட தந்தையின் ஸ்தானத்தில் இருக்கின்ற சங்கர், கார்த்திக்கை கண்டித்து விடுவார். 

 

அவனும் அவரின் அதட்டலுக்கு பயப்படுவது போல் பயந்து, மறுபடியும் அவனின் சேட்டைகளை ஆரம்பிப்பான். 

 

இப்பொழுது இல்லை சார் என்னும் விதமாய் தலை அசைத்தாள் அகிலா. 

 

அவன் உன்னைய தொல்லை பண்ணலயா?  அப்போ ஏன் மா அழுகுற என்றவர் சற்று பதட்டப்பட, 

 

அவரின் மேஜயில் இருந்த அழைப்பிதழை கையில் எடுத்தாள் அகிலா. 

 

சங்கர் கேள்வியோடு அவளை நோக்க, 

இவங்க என் அக்கா அபிராமி என்றாள். 

சங்கர் சற்று அதிர்ந்து போனார். உன் அக்காவா? 

ஆமா சார். என்னோட அக்கா தான் என்றவளின் கண்களில் இருந்து நீர் அதிக அளவு உற்பத்தியானது. 

 

இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். 

 

திடீர் என்று யோசனை வந்தவராக, அக்காவை பொண்ணு பார்க்க வரும் போது நீ இல்லை. கோவில்ல போய் பத்திரிக்கையும் தாலியும் வச்சி படைக்கும் போதும் நீ வரலையே. ஏன் மா என்று கேட்டார் கனிவாக. 

 

எனக்கு அக்காவுக்கு கல்யாணம் நடக்குறது புடிக்கல சார் என்று தேம்பினாள் அகிலா. 

 

அதுனால கோபப்பட்டு வரலையா? என்று கேட்டார் சங்கர். 

 

ஆமா சார். ஆனால், இன்னைக்கு இன்விடேஷன் பார்த்ததும் ரொம்ப புடிச்சிருக்கு. அக்கா ஹாப்பியா இருப்பாங்கனு தோணுது என்றாள். 

 

அவளின் வார்த்தையில் புன்னகைத்தவர் ” கண்டிப்பா உன் அக்கா எங்க வீட்டுல நல்லா இருப்பாள். சந்தோசமா இருப்பாள். அவளுக்கு அங்க ஒரு குறையும் இருக்காது என்றார் சங்கர். 

 

தேங்க் யூ சார். 

 

எதுக்கு தேங்க்ஸ். இனிமேல் நாம எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒன்னு என்று சிரித்தார். 

 

அகிலா தன் கண்ணீரை துடைத்தாள். ஆனால் அது இன்னும் சுரந்து கொண்டே தான் இருந்தது. 

 

அவளின் கண்ணீரில் மனம் வெதும்பிய சங்கர், உன் அக்கா நல்ல பொண்ணு. ரொம்ப அமைதி. ஆனால், நீ…. என்று அதோடு கூறாமல் முடிக்க, 

 

ஆனால், நான்… அகிலா அவரின் முகம் பார்த்தாள். 

 

உன் வாய் யாருக்கும் வராது. அடாவடி பொண்ணு என்றார். 

 

அது உண்மை தான் என்று அகிலா லேசாக உதடு விரித்து சிரித்தாள். 

 

சார் நான் போய்ட்டு வரேன் என்று கிளம்பினாள். 

சரி இனிமேல் அழக் கூடாது என்று கூறினார் சங்கர். 

சரி என்று தலை அசைத்து வெளியே வந்தாள் அகிலா. 

 

புகார் செய்ய போகிறேன் என்று கூறியவள் இன்னும் சார் கேபினை விட்டு வெளியே வரவில்லையே என்று சங்கரின் அறையை வெறித்து பார்த்தான் கார்த்திக். 

 

அகிலா வெளியே வந்தாள். அவளுடைய இடத்தில் அமர்ந்தாள். மேஜயில் இருந்த டிஸு எடுத்து கண்களை துடைத்தாள் . 

 

ஹாங்….. வாய் பிளந்தான் கார்த்திக். அவனின் இதயம் குத்தாட்டம் போட்டது. 

 

சங்கரை பார்த்து பேசி விட்டு வந்ததும், கார்த்திக் என்ற ஒருவன் வந்து தன்னுடைய கண்ணீரை மறைக்க டிஸூ கொடுத்தான் என்பதையே மறந்து போனாள் அகிலா. 

 

ஆனால் இவனோ அவன் கொடுத்த டிஸுவில் அவள் கண்களை துடைத்ததுக்கு சந்தோசப் பட்டு கொண்டான். 

****

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்றதும் அகிலா தன் அக்காவை ஓடி சென்று அணைத்து கொண்டாள். 

 

அபிராமி தன்னை அணைத்திருக்கும் தங்கையை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்தாள். 

 

யாரோ என்கிட்டே பேச மாட்டேன்னு சொன்னாங்க. இப்போ வந்து என்னைய கட்டி புடிச்சி நிற்குறாங்க. என்ன விஷயமாம்? வேண்டும் என்றே முகத்தை திருப்பி பேசினாள் அபிராமி. 

 

அக்கா சாரிக்கா. நீ உன்னோட தாலியும் இன்விடேசணும் கோவிலை வச்சி படைக்கும் போது என்னைய மிஸ் பண்ணிருப்பள?  என்று கேட்டாள் அகிலா. 

 

இல்லையே. சட்டென்று கூறி விட்டாள் அபிராமி. 

 

பொய் சொல்லுற. நீ கண்டிப்பா என்னைய தேடி இருப்ப. 

 

இல்லை டி. நான் உன்னைய தேடலை. நீ வரல அதுனால இந்த டைம் கண்டிப்பா கல்யாணம் நடந்துரும்னு நினச்சேன் என்றாள். 

 

ஹ்ம்ம் போ அக்கா . நீ வேணும்னு சும்மா சொல்லுற என்ற அகிலா முகத்தை திருப்பினாள். 

 

அகிலாவின் கன்னங்களை பற்றிய அபிராமி, என்னோட சந்தோஷத்துலயும் சரி , கஷ்டத்துலயும் சரி நீ எப்பவும் என்னோட இருக்கணும்னு நினைப்பேன் அகி, என்றாள் அந்த அக்கா. 

 

அக்கா நீ யாரை கல்யாணம் பண்ணிக்க போற தெரியுமா என்று அகிலா தன் அக்காவிடம் கேட்க, 

அஸ்வந்த் என்றாள் அபிராமி.

 அவனின் பெயரை தவிர அவளுக்கு எதுவும் தெரியாது. அனைத்து விபரங்களையும் தெரிந்தவர் கல்யாண் கௌரி இருவர் மட்டுமே. 

 

ஆமா. ஆனால், அவர் யார் தெரியுமா? 

 

அபிராமி உதட்டை பிதுக்கினாள். 

அவர் என்னோட பாஸ். எங்க பாஸ் அவர் தான். அவங்க மனைவி இறந்ததும் தான் சார் வெளியே வரவே இல்லை. சார் ரொம்ப நல்லவர் அக்கா. அவங்க மனைவி ரொம்ப நல்லவங்க. சொல்ல போனால் உன்னைய விட ஒரு படி மேல என்றாள். 

 

அபிராமி தங்கை கூறுவதை ஆச்சர்யமாக பார்த்தாள். 

 

நீ எங்க பாஸை கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு ஓகே. நான் மேட்ரி மோனில எங்க பாஸ் போட்டோவை சரியா கவனிக்கல. ஏனா நான் அதுக்கு முன்னாடி அவருக்கு ஒரு குழந்தை இருக்குனு விபரத்தை தெரிஞ்சதும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் அக்கா. எனக்கு புடிக்கல. உனக்கு தான் என்னைய பற்றி தெரியுமே? 

 

நான் ஒரு விஷயத்தை சரியா தெரிஞ்சி புரியறதுக்குள்ள எனக்கு கோபம் மட்டும் தான் வரும். இது மாதிரி தான். பாஸ்னு தெரிஞ்சிருந்தா நான் யாருமேலேயும் கோபப்பட்டுருக்க மாட்டேன் அக்கா என்றாள் அந்த தங்கை. 

 

தங்கையின் வாயிலாக தன் வருங்கால கணவரின் குணத்தை அறிந்து கொண்டாள் அபிராமி. 

 

திருமணத்தை நினைத்து வெறுமையாக இருந்த நம் நாயகியின் மனம் அஸ்வந்த்தின் குணத்தை அறிந்து கொண்டதும் ஏதோ ஒரு சின்ன எதிர்பார்ப்பு ஒன்று அவளுள் வந்தது. 

 

அடுத்து திருமண அத்தியாயத்தில் சந்திப்போம் நண்பர்களே. 

தொடரும். 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண் கொண்டு பாரடா(டி ) என்னை
888 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page