மௌன ராகம் 34
அத்தியாயம் 34
காலம்அதன் போக்கில் பல மாற்றங்களை நிகழ்த்தியிருந்தது. கவிவர்ஷன் இப்போது வெறும் ஒரு தொழில் அதிபர்மட்டுமல்ல, உலகளாவிய சமூக மாற்றத்திற்கான ஒருகுறியீடாக மாறியிருந்தான். உலகப் பொருளாதார மன்றத்தின் அழைப்பை ஏற்று, அவன் மீண்டும் லண்டனுக்குப்பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை அவன்தனியாகச் செல்லவில்லை. அவனோடு அவனது பலமான ‘சாம்ராஜ்யம்’—மனைவி பிரக்யு மற்றும் துறுதுறுவென வளரும் மகள் ராகவி உடன்இருந்தனர்.
லண்டன்விமான நிலையத்தில் இறங்கியபோது, கவிவர்ஷனுக்குப் பழைய நினைவுகள் அலைமோதின. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அகதியைப் போல, பசியுடன், கிழிந்த பையுடனும் இதே லண்டன் தெருக்களில்அவன் அலைந்திருக்கிறான்.
”கவி… என்னயோசிக்கிற?” – பிரக்யு அவனது கைகளைப் பற்றிக்கொண்டாள்.
கவிவர்ஷன்லண்டனின் அந்தப் பனி மூடிய சாலையைப்பார்த்தான். “பிரக்யு… அன்னைக்கு நான் இந்தத் தெருவுலநடந்தப்போ, ஒருவேளைச் சாப்பாட்டுக்குக் கூடக் காசு இல்லாம இருந்தேன். ஆனா இன்னைக்கு இதே லண்டன் எனக்குச்சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்குது. இது எல்லாமே உன்னோடமௌனமான காதலுக்குக் கிடைச்ச வெற்றி,” என்றான் நெகிழ்ச்சியுடன்.
சின்னஞ்சிறுராகவி, கவிவர்ஷனின் விரலைப் பிடித்துக்கொண்டு, “அப்பா… இங்கே ஏன் இவ்வளவு குளிராஇருக்கு? நம்ம ஊர்ல வெயில்அடிக்குமே!” என்று தனது மழலை மொழியில்கேட்டாள்.
கவிவர்ஷன்அவளைத் தூக்கிக்கொண்டான். “இந்தக் குளிர் தான் உன் அப்பாவைஒரு போர்வீரனா மாத்துச்சு செல்லம். இந்த ஊர்ல தான்நான் நிறையக் கத்துக்கிட்டேன்,” என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.
அதேநேரம் கோயம்புத்தூரில், ஹர்ஷாந்த் தனது லேப்டாப்பைத் தள்ளிவைத்துவிட்டு, நிலாவிற்காகச் சத்தான பழச்சாறு தயாரித்துக் கொண்டிருந்தான். நிலா இப்போது எட்டுமாதக் கர்ப்பிணியாக இருந்தாள்.
”ஹர்ஷாந்த்… போதும், எனக்கு இதுக்கு மேல குடிக்க முடியாது,” என்று நிலா செல்லமாகக் கோபித்துக்கொண்டாள்.
”நிலா! டாக்டர்என்ன சொன்னாங்க? நீ சரியாச் சாப்பிடணும். நம்ம குழந்தைக்கு அறிவு மட்டும் இருந்தா போதாது, நல்ல பலமும் இருக்கணும். அண்ணாவோட மௌனிகா மாதிரி நம்ம குழந்தையும் ஒருசுட்டிப் பிள்ளையா வரணும்,” என்றான் ஹர்ஷாந்த் அக்கறையுடன்.
அப்போது சசிதரன்அங்கே வந்தார். “ஹர்ஷாந்த்! கவி லண்டன்ல இருந்துபோன் பண்ணானா? அவனோட ஸ்பீச் இன்னைக்குத் தானே?” என்று ஆர்வமாகக் கேட்டார் .
”ஆமா . இன்னும்ஒரு மணி நேரத்துல லைவ் வரும். லேப்டாப் ரெடியா இருக்கு,” என்றான் ஹர்ஷாந்த். இரண்டு குடும்பங்களும் கவிவர்ஷனின் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கஉரையைக் காண ஆவலுடன் காத்திருந்தனர்.
லண்டனின்புகழ்பெற்ற ஹால் உலகத் தலைவர்களால்நிறைந்திருந்தது. கவிவர்ஷன் மேடைக்கு வந்தபோது, பலத்த கைதட்டல் எழுந்தது. அவன் எளிய பருத்திச்சட்டையும், சாதாரணக் கோட்டும் அணிந்திருந்தான். அவனது தோற்றத்தில் ஒரு எளிமை இருந்தது, ஆனால் கண்களில் ஒரு மாபெரும் உறுதிதெரிந்தது.
”அனைவருக்கும் வணக்கம். இன்று நான் இங்கே ஒருபிசினஸ்மேனாக வரவில்லை. இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் இருந்துவந்த ஒரு சாதாரணக் கவிஞனாகவந்திருக்கிறேன்,” என்று அவன் தனது உரையைத்தொடங்கினான்.
அவன்தனது பேச்சில் தொழில்நுட்பத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை; மனிதநேயத்தைப் பற்றிப் பேசினான். “தொழில்நுட்பம் என்பது மனிதர்களைப் பிரிப்பதற்காக அல்ல, அவர்களை இணைப்பதற்காக இருக்க வேண்டும். என் ‘சைலண்ட் கனெக்ட்’ மென்பொருள் வாய் பேச முடியாதவர்களுக்குத்தொண்டை தந்தது. என் ‘டிஜிட்டல் வில்லேஜ்’ திட்டம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு தந்தது. ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக, நாம் ஒருவருக்கு ஒருவர் பேசும் ‘மௌனங்களின் மொழியில் தான் உண்மையான அன்புஇருக்கிறது,” என்றான்.
அவன்தனது உரையை முடிக்கும்போது, “என் வெற்றிக்குக் காரணம்இரண்டு விஷயங்கள்: ஒன்று என் தந்தை சொல்லிக்கொடுத்தநேர்மை, இன்னொன்று என் மனைவி கொடுத்தமௌனமான ஆதரவு. அன்பினால் எதையும் சாதிக்கலாம்,” என்று கூறி முடித்தபோது, அரங்கமேஎழுந்து நின்று பத்து நிமிடங்கள் கைதட்டியது.
நிகழ்ச்சிமுடிந்து வெளியே வந்த போது, கவிவர்ஷனை ஒரு முதியவர் சந்தித்தார். அவர் வேறு யாருமல்ல, கவிவர்ஷன்லண்டனில் பாத்திரம் கழுவிய அதே ஹோட்டலின் பழையஉரிமையாளர்.
”கவிவர்ஷன்… என்னைத்தெரியுமா? அன்னைக்கு உன்னை ஒரு சாதாரணத் தொழிலாளியாநினைச்சு நான் உன்னைக் கஷ்டப்படுத்தினேன். இன்னைக்கு நீ இவ்வளவு பெரியஇடத்துல இருக்கிறதைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாவும் இருக்கு, வருத்தமாவும் இருக்கு,” என்றார் அவர் தழுதழுத்த குரலில்.
கவிவர்ஷன்அவரது கைகளைப் பற்றிக்கொண்டான். “அப்படிச் சொல்லாதீங்க ஐயா. அன்னைக்கு நீங்கஎனக்கு அந்த வேலையைக் கொடுக்கலைன்னா, நான் லண்டன்ல உயிர் பிழைச்சிருக்க முடியாது. நீங்க தான் எனக்கு உழைப்போடஅருமையைக் கத்துக் கொடுத்தீங்க,” என்று சொல்லி அவருக்கு ஒரு பெரிய தொகையைத்தனது அறக்கட்டளை மூலம் வழங்கினான். கவிவர்ஷனின் அந்தப் பெருந்தன்மை அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.
லண்டன்பயணத்தை முடித்துவிட்டு கவிவர்ஷன் குடும்பம் கோயம்புத்தூர் திரும்பிய சில நாட்களில், ஹர்ஷாந்த்-நிலா தம்பதிக்கு அழகானஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘கவின்’ என்று கவிவர்ஷன் பெயரிட்டான்.
ராகவிக்கும்கவினுக்கும் இடையே ஒரு அழகான பந்தம்உருவானது. கவிவர்ஷன் தனது வீட்டில் ஒருசிறிய நூலகத்தை அமைத்தான். அங்கே அவன் எழுதிய கவிதைகளும், ஹர்ஷாந்த் உருவாக்கிய தொழில்நுட்பக் கருவிகளும் வைக்கப்பட்டிருந்தன.
”பிரக்யு… பார்த்தியா? நம்ம குடும்பம் இப்போ ஒரு பெரிய சோலையாமாறிடுச்சு,” என்றான் கவிவர்ஷன்.
பிரக்யுஅவனது தோளில் சாய்ந்து கொண்டாள். “ஆமா கவி. ஆனாநாம இன்னும் ஒரு விஷயத்தைச் செய்யலையே?”
”என்ன பிரக்யு?”
”நம்ம காதலைப்பத்தி ஒரு புக்கா எழுதலாம்னு சொன்னியே, அது என்ன ஆச்சு?”
கவிவர்ஷன்சிரித்தான். “அந்தப் புக்குக்கு நான் இப்போவே டைட்டில் வச்சுட்டேன்பிரக்யு. அதுதான் ‘மௌன ராகம். ஆனா அந்தப் புக்குக்குமுடிவே கிடையாது. ஏன்னா நம்ம காதல் காலங்களைக்கடந்து வாழப்போகுது,” என்றான்.
இரவுபன்னிரெண்டு மணி கவிவர்ஷன் தனதுவீட்டு மாடியில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். தூரத்தில் கோயம்புத்தூர் நகரத்தின் விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்தன. அவனது போனில் ஒரு செய்தி வந்தது. அது சிறையிலிருந்த தனபாலின் மறைவு பற்றிய செய்தி.
கவிவர்ஷன்ஒரு நிமிடம் கண்களை மூடினான். பகைமை மறைந்து விட்டது. இப்போது எங்கும் அமைதி. அவன் தனது கவிதைப்புத்தகத்தை எடுத்து ஒரு புதிய வரியைஎழுதினான்:
“மௌனங்கள் மொழியாகமாறும்போது…
“வலிகள் கவிதையாகஉருமாறும்!”
