மௌன ராகம் 38
அத்தியாயம் 38:
லண்டனின்குளிர்காலக் காற்று ராகாவின் முகத்தில் மோதியபோது, அவளுக்குள் ஒரு புதிய தெம்புபிறந்தது. கடந்த வாரம் நடந்த அந்தத் தாக்குதல் அவளைப் பயமுறுத்தவில்லை, மாறாகத் தனது தந்தையின் லட்சியத்தின்மீதான உறுதியை அதிகப்படுத்தியிருந்தது. லண்டன் பல்கலைக்கழகத்தின் பிரம்மாண்டமான பட்டமளிப்பு விழா அரங்கில் அவள்நின்றிருந்தாள். இன்று அவள் வெறும் ஒருமாணவி அல்ல; தனது தந்தை கவிவர்ஷனின்கவிதைக்கும், தாய் பிரக்யுவின் காதலுக்கும்கிடைத்த ஒரு வெற்றிக் கனியாகஅங்கே நின்றாள்.
பட்டமளிப்புவிழா தொடங்கியது. ராகா சிறந்த மாணவிக்கானதங்கப் பதக்கத்தைப் பெற மேடைக்கு அழைக்கப்பட்டாள். அரங்கத்தில் இருந்த அத்தனை வெளிநாட்டு மாணவர்களும், பேராசிரியர்களும் அவளையே உற்றுப் பார்த்தனர்.
மேடைக்குவந்த ராகா, மைக்கை ஏந்தியபோது அவள் கண்களில் ஒருமின்னல் தெரிந்தது. “இங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். இன்று நான் இந்தப் பதக்கத்தைப்பெறும்போது, எனக்கு ஒரு பழைய சம்பவம்நினைவுக்கு வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால், இதே லண்டன் தெருக்களில்ஒரு இளைஞன் பசியோடும், அவமானத்தோடும் அலைந்து கொண்டிருந்தான். அவனது ஒரே சொத்து அவனதுமௌனமும், அவன் நேசித்த பெண்ணின்நினைவுகளும் மட்டும்தான். அந்த இளைஞன் என்தந்தை கவிவர்ஷன்,” என்று அவள் தொடங்கியபோது அரங்கம்நிசப்தமானது.
அவள்தொடர்ந்தாள், “அன்று அவர் இழந்த கண்ணீர்தான்இன்று எனக்கு இந்தப் பதக்கத்தைத் தந்துவிட்டது. என் அப்பா எனக்குச்சொல்லிக் கொடுத்தது ஒன்றே ஒன்றுதான்: ‘மௌனம் என்பது ஒடுங்கிப்போவது அல்ல; அது ஒரு புதியஉலகத்தை உருவாக்குவதற்கான ஆயத்தம்’. இன்று நான் பெற்றுள்ள இந்தஅறிவு, வெறும் தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல; அது மனிதர்களின் வலியைப்புரிந்துகொள்வதற்கான மொழி,” என்று அவள் பேசி முடித்தபோது, எழுந்த கைதட்டல் ஓசை தேம்ஸ் நதிக்கரைவரை எதிரொலித்தது கவிவர்ஷனின் மகள் என்பதே பலருக்குஅப்போது தான் தெரிந்தது
இந்தநேரடி ஒளிபரப்பைக் கோயம்புத்தூரில் உள்ள தனது அலுவலகத்தில்அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கவிவர்ஷன், அப்படியே நாற்காலியில் சரிந்தான். அவனது கண்கள் தாரை தாரையாகக் கண்ணீர்வடித்தன. பிரக்யு அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள்.
”கவி… பார்த்தியா? நம்ம ராகவி நம்மளோட அத்தனை வலிகளையும் ஒரு நிமிஷத்துல துடைச்சுட்டா,” என்றாள் பிரக்யு தழுதழுத்த குரலில்.
கவிவர்ஷன்அவளை அணைத்துக் கொண்டான். “ஆமா பிரக்யு. அன்னைக்குநான் லண்டன்ல பாத்திரம் கழுவினப்போ, ஒருவேளைச் சாப்பாட்டுக்காகக் கெஞ்சினப்போ, என் சந்ததி இவ்வளவுபெருமையா அதே இடத்துல நிக்கும்னுநான் நினைக்கவே இல்லை. இது உன்னோட காதல்கொடுத்த வரம்,” என்றான்.
அதேஅறையில் இருந்த ஹர்ஷாந்தும் நிலாவும் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொண்டனர். “அண்ணி! ராகாஅக்கா லண்டனை மட்டும் ஜெயிக்கல, உலகத்தோட இதயத்தையே ஜெயிச்சுட்டாங்க,” என்றான் கவின் உற்சாகமாக.
அதேவாரம், ரூபனின் உடல்நிலை மிகவும் நலிவடைந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவிவர்ஷன் ஓடோடிச் சென்று அவரது கைகளைப் பற்றிக் கொண்டான்.
”கவி… எனக்குஒரு ஆசை,” என்றார் ரூபன் மிக மெதுவான குரலில்.
”சொல்லுங்க மாமா. நீங்க என்ன கேட்டாலும் நான்செய்வேன்,” என்றான் கவிவர்ஷன்.
ரூபன்கவிவர்ஷனின் கையைத் தனது நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். “அன்னைக்கு நான் உன்னைப் பிரிச்சதுக்காக, என் சொத்துக்களை எல்லாம் உன் பேருக்கு எழுதிக்கொடுத்தேன். ஆனா இன்னைக்கு நீஅதையெல்லாம் வச்சு ஒரு பல்கலைக்கழகத்தையே கட்டிட்ட. என்னோடகடைசி ஆசை என்னன்னா… நம்மகுடும்பம் மட்டும் இல்ல, இந்த உலகமே உன்னோட ‘மௌனங்களின் மொழி’யைக் கத்துக்கணும். அன்பால எதையும் சாதிக்கலாம்னு நீ உன் மகளுக்குக்கத்துக் கொடுத்த மாதிரி, இந்தத் தலைமுறைக்கும் சொல்லிக் கொடு,” என்றார்.
அன்றுஇரவு, ரூபன் அமைதியாகக் கண்ணை மூடினார். அவர் இறக்கும் போது அவர்முகத்தில் ஒரு நிம்மதி இருந்தது. கவிவர்ஷன் தனது மாமனாரை ஒருதந்தையாகவே மதித்து, அவருக்குச் செய்ய வேண்டிய அத்தனை இறுதிச் சடங்குகளையும் முறைப்படி செய்தான். அந்தச் சடங்கில் பழைய பகைவர்கள் யாரும்இல்லை; மாறாக அன்பால் இணைந்த ஒரு மாபெரும் கூட்டமேஇருந்தது.
ரூபனின்இறப்பைக் கேள்வியுள்ள ராகவி உடனே நாடு திரும்பினாள். மீனா தானதான் புரக்யுவையும் மேனகாவையும்தேற்றிக் கொண்டிருந்தார். தனது தப்பை உணர்ந்துதிருந்திய மனிதனல்லவா மேனகா மற்றும் மீனா இருவரும் ராகாவைஅணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டனர்.
அன்றுமாலை, கவிவர்ஷனும் பிரக்யுவும் தங்களின் ‘ ராகா வனத்தில்’ தனியாக அமர்ந்திருந்தனர். சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தான்.
”கவி… நம்மவாழ்க்கை இப்போ ஒரு முழுமையான வட்டத்தைஅடைஞ்ச மாதிரி எனக்குத் தோணுது,” என்றாள் பிரக்யு அவனது தோளில் சாய்ந்து கொண்டு.
”இல்லை பிரக்யு… இது ஒரு முடிவு இல்லை. இது ஒரு அழகான தொடக்கம். நம்ம பிள்ளைகள் மூலமா நம்ம காதல் இன்னும்பல நூற்றாண்டுகள் வாழப்போகுது. நாம மௌனமாத் தொடங்கினஇந்தப் பயணம், இன்னைக்கு ஒரு பெரும் சங்கீதமாமாறியிருக்கு,” என்றான் கவிவர்ஷன்.
அவன்தனது கவிதைப் புத்தகத்தை எடுத்தான். அதில் இறுதி வரியை எழுதத் தொடங்கினான்:
“மௌனங்கள் என்றும்முடிவதில்லை…
“அவை காலத்தின்கரங்களில் கவிதைகளாகத் தவழும்!”
அவர்கள்இருவரின் கரங்களும் கோர்க்கப்பட்டிருந்தன. ராகவினதும் கவினதும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தில் ஒரு புதிய விடியலின்ராகம் ஒலித்துக் கொண்டிருந்தது.
