அத்தியாயம் 6

மனிஷா, பிரதிக்ஷாவை  420 கேஸ்ல உள்ள தள்ளுவோம் என்று சொல்லவும் லட்சுமியும் பிரதிக்ஷாவும் ரம்யாவும் ஒருவர் ஒருவரை பார்த்துக் கொண்டனர்.

இவர்கள் மூவரின் முகமாற்றத்தை கண்டு கொண்டார் சரஸ்வதி.

இரு வீட்டாரின் உறவினர்  அனைவரும் தாலி கட்டி சிறிது நேரத்திற்குள் ‘விதுரன் பிரதிக்ஷாவிற்கு டைவர்ஸ் கொடுக்கலாம்னு இருக்கேன்’ என்று சொன்னதையே அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருக்க மனிஷா 420 கேஸ்ல பிரதிக்ஷாவை   உள்ள தள்ளுவோம்!’ என சொல்லவும் அதிர்ந்து நின்றனர்.

மனிஷா சொல்லியதும்  விதுரன் பதில் எதுவும் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருக்க, ‘விதுரன் என்ன சொல்லுவான்’ என்று அனைவரும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றனர்!

சரஸ்வதியோ சிறிது நேரத்திற்கு முன்பாக விதுரனை சமாதானம் செய்வதற்காக புடிக்கலைன்னா டைவர்ஸ் கொடுத்துரு என்று விதுரனை  ஆசுவாசப்படுத்த சொல்லி இருக்க,

எங்கு விதுரனை  உறுதியாக டைவர்ஸ் செய்ய வைத்து விடுவார்களோ என்று அவரின் மனமும் படபடத்தது.

“தாலி கட்டின மஞ்சள் ஈரம் கூட இன்னும் மாறல அதுக்குள்ள எங்க வீட்டு பொண்ண டைவர்ஸ் பண்றேன்னு சொல்றீங்களே மாப்பிள்ளை இது நல்லா இருக்கா?” என்று பிரதிக்ஷாவின் சித்தப்பா கேட்டார்!

அவருக்கு அவரின் பிரச்சினை, ஒருவேளை டைவர்ஸ் செய்து விட்டால் தன்னுடைய எதிர்கால திட்டம் எதுவும் நடக்காமல் போய்விடுமோ என்று பேச ஆரம்பித்து விட்டார்.

இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு லட்சுமியும்  “இப்படி கல்யாணம் பண்ணி டைவர்ஸ் பண்றதுக்கு தான் நீ என் மகள் கழுத்துல தாலி கட்டுனீங்களா? அப்பவே கட்ட மாட்டேன்னு சொல்லி இருந்தா கூட இவ்வளவு வலி இருந்து இருக்காது!” என்று தன் மகளுக்காக அவரும் கண்கலங்கி பேச  ஆரம்பித்து விட்டார்!

தன் தாய்  கண்கள் கலங்கவும் பிரதிக்ஷாவின் கண்கள் கலங்கியது. அவளின் இந்த நிலைக்கு காரணம் அவளேதான்  என்று தெரிந்தால் கூட தன் அன்னையின் கண்ணீரை காண   அவளின் மனம் கனத்தது.

நிலைமை கை மீறி போவதை உணர்ந்து கொண்ட அம்பிகா பக்கத்தில் இருந்த சரஸ்வதி அருகில் சென்று அவரின் தோலை தட்டி “அவன் கிட்ட பேசு” என்று சைகையால் சொல்ல  சரஸ்வதியும் பேச ஆரம்பித்தார்.

“மனிஷா என்ன பேசிக்கிட்டு இருக்க  யோசிச்சு தான் பேசுறியா? இப்படி ஒரு சம்பவம் நடந்து விதுரன் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லி இருந்தால்  இந்நேரம் எல்லாம் நியூஸ் சேனலையும் அவன் தான் வந்து இருப்பான்,

அப்படி ஒரு நிலைமை வரக்கூடாதுன்னு தான் விதுரன வற்புறுத்தி பிரதிக்ஷா கழுத்துல தாலி கட்ட வச்சேன், இப்ப நீ சொல்றத பார்த்தால்  அவனை எல்லாம் நியூஸ்லயும் தலைப்புச் செய்தியா வர வைக்காம விட மாட்ட போல!” என்று கொஞ்சம் காட்டமாக பேசினார்.

“அத்தை  நான் அதுக்கு சொல்லல, பொய் சொல்லி தானே இவ கல்யாணம் பண்ணி இருக்கா, விதுரனோட வாழ்க்கையை விட்டு இவ போறதுக்கு ஒரு வழிய தான் நான் சொல்றேன்!” என்று மனிஷா கூறினாள்.

இவ்வளவு நேரம் இங்கு நடந்ததை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த பிரதிக்ஷா,

“இங்க பாரு நான் பொய் சொன்னதை நீ பார்த்தியா? விதுரன் என்கிட்ட தப்பா நடந்துகிட்டது உண்மைதான் அவர் 

சுயநினைவோடு என்கிட்ட நடந்துக்கிட்டார்னு நான் சொல்லவே இல்ல, சுயநினைவு இல்லாம தான் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டாரு,

நேத்து என்னோட ரூமுக்கு வரும்போது சுய நினைவா தான் வந்தாரான்னு அவர் கிட்ட கேளு!” என்று அழுத்தமாக கூற அனைவரும் அதிர்ந்து போயினர்.

பிரதிக்ஷா அழுத்தமாக கூறியதை கேட்கவும் உண்மையில் விதுரன் அவளிடம் தவறாகத்தான் நடந்திருப்பான் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஒரு கணம் வந்து போனது.

“இப்ப என்ன? என்னைய 420 கேஸ்ல தள்ள போறீங்க அப்படித்தானே! யாரு 420கேஸ்ல உள்ள போறானு நானும் பார்க்கிறேன், நான் நீங்க சொல்ற எல்லா டெஸ்டுக்கும் ஒத்துக்கிறேன்!” என்று சொல்ல அங்கிருந்து அனைவரும் அதிர்ந்து போயினர்.

விதுரன் கூட பிரதிக்ஷா சொல்லியதை கேட்டு ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டான்.

‘இவள் ஏதோ ஒரு பெரிய திட்டத்தை போட்டு தான் தைரியமா பேசுறா, இவளை இப்படியே விடக்கூடாது’ என்று எண்ணினான்  ரஞ்சித்.

ரஞ்சித் விதுரனை “இங்க வா உன்கிட்ட  கொஞ்சம் பேசணும்!” என்று அழைத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்றான்.

அவர்கள் இருவரின் பின்னாடி மனிஷாவும் சென்றாள்.

“உனக்கு என்ன புத்தி மாறி போச்சா? அறிவுகெட்ட தனமா  கேஸ் குடுக்குறேன்னு சொல்ற! கேஸ் கொடுத்தால்  வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுப்பாங்க. அந்த டெஸ்ட்ல நமக்கு பேவரா ரிசல்ட் வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் நமக்கு எதிரா ரிசல்ட் வந்தால் என்ன செய்வ?” என்று ரஞ்சித் கேட்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“ரஞ்சித் நான் ஏற்கனவே சொல்லிட்டேன் நான் எந்த தப்பும் பண்ணல எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு!”  என்று விதுரனும் அழுத்தமாக  சொல்ல,

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி  பிரதிக்ஷா எவ்வளவு தைரியமா சொன்னால் பாத்தியா? இப்ப யாரை நம்புறது!”என்று ரஞ்சித் கேட்க விதுரன் ரஞ்சித்தை பார்த்தான்.

“இங்க  யாரு தப்பு பண்ணாங்கன்னு இப்ப ஆராய்ச்சி பண்ற நேரம் கிடையாது, தெரிஞ்சோ தெரியாமலோ தப்பு நடந்து போச்சு! இதுல இருந்து தப்பிக்கிறதுக்கு வழிய தான் நீ பார்க்கணும்! அவ பொய் கேஸ் கொடுத்து உன்னைய கல்யாணம்   பண்ணிட்டானானு  நீ கம்ப்ளைன்ட் கொடுத்தா கோர்ட்ல இருந்து வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க சொல்லுவாங்க. எனக்கு தெரிஞ்சு, அவ அத்தலெட்   உனக்கு புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்.   அத்லெட்டா இருக்கிற நிறைய பொண்ணுங்களுக்கு  டெஸ்ட் எடுத்து  பார்த்தால் டெஸ்ட் ரிசல்ட்  சரியா இருக்காது. இப்போ பிரதிக்ஷாவுக்கும் டெஸ்ட் எடுத்து  பாக்கும்போது ரிசல்ட்  பாசிட்டிவா வந்தா ஓகே தான் ஒருவேளை நெகட்டிவா வந்தா,” என்று ரஞ்சித் சொல்ல இருவரும் அப்படியே அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டனர்.

“பிரதிக்ஷாவுக்கு  பேவரா ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் கட்டாயம் உன்னால அவள விட்டு எக்காரணத்தைக் கொண்டும் பிரிய முடியாது. கண்டிப்பா அவளோட தான் வாழனும்கிற  கட்டாயத்துக்கு நீ தள்ளப்படுவ. அதனால  ஆறு மாசம் ஆனாலும் அவளை மியூச்சுவல் டைவஸ்க்கு  சம்மதிக்க வச்சு டைவர்ஸ் பண்றதுக்கு வழிய பாரு! இந்த ஆறு மாசத்துல அவளுக்கு எதிரான எவிடன்ஸ் உனக்கு கிடைச்சா அத வச்சு கூட உன் மேல எந்த தப்பில்லைனு  கோர்ட்டுல ப்ரூவ் பண்ணி அவகிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கலாம்.

ஒருவேளை ப்ரூப் பண்ண முடியாத பட்சத்துல  அவள மியூச்சுவல் டைவர்ஸ் பண்ணலாம். அத விட்டு மனிஷா சொன்ன மாதிரி 420 கேஸ்  போட்டு உள்ள தள்ற முயற்சியை கைவிட்டு, அப்படி பண்ணுனால் நமக்கு தான் பேக் ஃபயர் ஆகும்!” என்று ரஞ்சித் சொல்ல  அப்படியே அமர்ந்து விட்டான் விதுரன்.

சரஸ்வதி சொல்லியதும் டைவர்ஸ் செய்துவிட்டு தன்னுடைய வேலையை பார்க்கலாம் என்று தன்னுடைய மனதை சமாதானம் படுத்தி இருந்தான்.

தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிய வந்ததும் பிரதிக்ஷாவின் மேல் அவன் கோபம் உயர்ந்து கொண்டே போனது.

“அப்புறம் அவளை பத்தி உங்களுக்கு தெரியாத விஷயம் ஒன்னு இருக்கு. பிரதிக்ஷாவும் வக்கீல் தான் அதை மறந்துடாதீங்க , சட்டத்திலிருந்து எப்படி தப்பிக்கணும்னு  அவளுக்கு நல்லாவே தெரியும்!” என்று சொல்ல  ஆடி போயினர் இருவரும்!

“அவள்  வக்கீலா?” என்று மனிஷா தன்னுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்த, “ஆமாம்  நாங்க ரெண்டு பேரும் ராஜ்மோகன் சார் கிட்ட தான் ஜூனியரா ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கோம், அங்க அவள பார்த்து தான் எனக்கு புடிச்ச போயி அம்மாகிட்ட பொண்ணு கேட்க சொன்னேன். நல்லபடியா  எல்லாம் நடந்துச்சு ஆனால் கடைசி நேரத்துல!”….. என்று ரஞ்சித் தடுமாற,” மன்னிச்சிடு மச்சான் என்னால தான்!” என்று மன்னிப்பு கேட்டான் விதுரன்.

“சரி விடு மச்சான், இப்படிதான் நடக்கணும்னு இருந்திருக்கும் போல! எனக்கு தெரிஞ்சு ராஜ்மோகனை பத்தி நீங்க எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க பிரதிக்ஷாவுக்கு ஒரு பிரச்சனைனா அவரே இந்த கேஸ்ல ஆஜர் ஆகுறதுக்கு வாய்ப்பு இருக்கு! அதனால நம்ம எல்லாத்தையும் யோசிச்சு தான் முடிவெடுக்கணும்!”  என்று சொல்ல அமைதியாய் இருந்தான் விதுரன்.

“அதுக்காக ஆறு மாசம் எப்படி பொறுமையா இருக்க முடியும்” என்று மனிஷா கேட்க, “ஆறு மாசம் எதுக்கு பொறுமையா இருக்கணும்!” என்று சிரித்தான் ரஞ்சித்.

ரஞ்சித்தின் பேச்சைக் கேட்டு இருவரும் ரஞ்சித்தை பார்க்க  “ஆறு மாசம் கோர்ட்டு சேர்ந்து வாழ சொல்லும், ஆனால் மச்சான் நினைச்சால்  ஆறு நாள்ல அவளை வீட்டை விட்டு துரத்திறலாம்!” என்று ரஞ்சித் சிரித்துக்கொண்டே சொல்ல  விதுரனும் மனிஷாவும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்தனர்.

இருவரின் முகம் மாற்றத்தை கண்டு கொண்ட ரஞ்சித் “என்ன சொல்றேன்னு  புரியலையா?” என்று கேட்க  இருவரும் இல்லை என்பதை போல் தலையசைத்தனர்.

‘அவங்க மூணு பேரும் போயி இவ்வளவு நேரம் ஆச்சு! மூணு பேரும்   என்ன பேசிக்கிட்டே இருக்காங்க  என்று  தவித்துக் கொண்டிருந்த சரஸ்வதி, என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்! முதல்ல அவங்க என்ன பேசுறாங்கன்னு தெரிஞ்சுக்கணும் என்று நினைத்துக் கொண்டு  மூவரும்  பேசிக் கொண்டிருந்த அறையை நோக்கி சென்றார்.

சரஸ்வதி மாடியேறி  அறைக்குள் நுழையும் போது ரஞ்சித்  சொல்லிய வார்த்தைகள் சரஸ்வதியின் காதில் தெளிவாக  விழ அதிர்ந்து போய் நின்றார் சரஸ்வதி.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
விரகதாபம் தீருமோ விதுரா?
976 22 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page