2.. மௌனத்தின் கடைசி எல்லை..
“ ஓகே மித்ரன் நான் சொன்னா தடுக்க முடியாது இது உங்க அம்மாவே சொன்னா.. உனக்கு ஓகே தானே.” கேட்டார் சத்யா..
“ நோ வே எங்க அம்மா எப்பவுமே அத சொல்ல மாட்டாங்க..” சொன்னான் மித்ரன்..
“ அதை நீ டிசைட் பண்ண கூடாது மை சன்.. நீ என்ன சொன்ன உங்க அம்மாவ எப்ப வேணாலும் பாப்பேன்னு சொன்னேன் நீ விருப்பப்பட்டா மட்டும் அது நடக்காது உங்க அம்மாவும் விருப்பப்படனும் இல்லையா நீ எடுக்கப் போற முடிவுல தான் எல்லாமே இருக்கு..” சொன்னார் சத்யா..
“ இல்ல உங்க மனசுல நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க பேசுறது உங்களுக்கு மட்டும் தான் புரியும்னு நினைக்கிறேன் மத்தவங்க யாருக்குமே புரியாது.. என்னோட கல்யாணத்தை பத்தி என்கிட்ட பேசாம நீங்களா ஒரு முடிவு எடுத்துட்டு இப்போ வந்து நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா தான் உங்க அம்மாவை பார்க்க முடியுமா என்ன அர்த்தம்.. அதுவும் இல்லாம நீங்க சொல்றது எப்படி இருக்கு தெரியுமா நீ இந்த கல்யாணத்தை பண்ணிக்கலாம்னா என்னோட அம்மாவே என்ன பாக்க மாட்டாங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு.” நக்கலாக கேட்டான் மித்ரன்..
“ அப்போ சொல்ல வேண்டியவங்க சொன்னா தான் நீங்க நம்புவீங்க ஓகே வெயிட் பண்ணு. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க அம்மா இங்க வருவா அவ வாயாலே கேட்டு தெரிஞ்சுக்கோ .” சொன்னார் சத்யா..
சத்யா தன் வார்த்தைகளை முழுதாகவும் சொல்லி முடிக்கவில்லை அரை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே நுழைந்தவர் மித்ரனை ஒரு பார்வை கூட பார்க்காமல் சத்யாவை பார்த்தார். சத்யா மீராவை அவரைப் பார்த்ததும்..
“ மிரா உன்னோட பையன் கிட்ட நீ சொன்னதை நான் சொன்னேன்.. அதைக் கேட்டு நான் அவன பேக் மெயில் பண்றேன்னு சொல்றான் நீயே சொல்லிடு..” சொன்னார் சத்யா..
“ மித்து அவருக்கு நான் பேக் மெயில் பண்ணனும்னு அவசியம் கிடையாது.. உங்க அப்பா சொல்றது உண்மை தான் நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிற மாதிரி இருந்தா தான் நான் உன்ன பாப்பேன் பேசுவேன் இல்லையா இதுக்கு அப்புறம் உன்னை பார்க்கவும் மாட்டேன் உன் கிட்ட பேசுவோம் மாட்டேன்.. நான் உன் கிட்ட இதுவரைக்கும் எதுவுமே கேட்கல உன்னோட விருப்பப்படி தான் நான் நானும் நடந்திருக்கேன் உன்னோட அப்பாவும் நடந்திருக்காரு இப்போ இந்த ஒரு விஷயத்துல எங்க விருப்பப்படி தான் நீ நடக்கணும் அதுதான் என்னோட ஆசை அது மட்டும் இல்ல இது தான் என்னோட முடிவு.. உங்க அப்பாக்காக இல்லனாலும் எனக்காக நீ பண்ணுவேன்னு நான் நம்புறேன்……ஏங்க நான் பேச வேண்டியது பேசிட்டேன் அவன் என்ன பதில் சொல்றான்னு கேட்டுட்டு சொல்லுங்க.” சொல்லியவர் முகத்தை திருப்பி வைத்து விட்டார் மீரா.
“ என்ன மித்ரன் உங்க அம்மா சொன்னத நல்லா கேட்டுகிட்டயா அப்புறம் நான் பேக் மெயில் பண்றேன்னு சொல்லக்கூடாது..” சொன்னார் சத்யா..
தன் தாயின் வார்த்தைகளைக் கேட்ட அவனக்கு மிகவும் கவலையாக தான் இருந்தது ஆனாலும் தன் தந்தையை பார்த்தவன் ஒரு நக்கல் சிரிப்பு சிரித்து..
“ இதோ பாருங்கப்பா நான் உங்க பையன் நீங்க எப்படி அம்மாவை பேசி இந்த விஷயத்துக்கு ஒத்துக்க வச்சிருப்பீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்.. அதுவும் இல்லாம நீங்க சொல்லி நான் கேட்க மாட்டேன் அதனால அம்மாவை வச்சு காய் நகத்துறீங்க..” சொன்னான் மித்ரன்..
“ இங்க பாரு மித்து உங்க அப்பா சொல்லிக் கொடுக்கிற அளவுக்கு நான் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது அது மொத புரிஞ்சுக்கோ.. இந்த விஷயம் வேணும்னா உங்க அப்பா சொன்னதா இருக்கலாம். இந்த முடிவு என்னோடது..” சொன்னார் மீரா.
“ நீங்க இந்த முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி என்ன பத்தி ஒரு தடவையாவது யோசிச்சு பாத்தீங்களா ம்மா.” என்றான் மித்ரன்.
“ நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்த மித்து.. கொஞ்ச நாளாவே நீ சரியில்ல வீட்டுக்கு சுத்தமா வராது இல்ல.. உன் மனசுல என்ன இருக்குன்னு எங்க கிட்ட நீ சொல்லவும் மாட்டேங்கற கல்யாணம் பேச்சு எடுக்கும் போதெல்லாம் தள்ளி போட்டுட்டே போற இப்ப என்னடான்னா வேணவே வேணாம்னு முடிவா சொல்ற அப்படி இருக்கும்போது நான் இந்த முடிவு எடுக்கறது தப்பு இல்ல இல்ல என் பையனுக்காக என் மனச கல்லாக்கிகிட்டு என்ன முடிவு எடுத்தேன்.. நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும்தான் நான் உன்கிட்ட பேசுவேன் உன்னை பார்ப்பேன் நீ கல்யாணம் வேணாம்னு சொன்ன நான் செத்தாலும் நீ வராத நீ தான் என்னோட முடிவு..”
“ அம்மா எதுக்கு இப்படி பேசுறீங்க.” இவர் பேச்சில் கோபம் கொண்டு கேட்டான் மித்ரன்.
“ வேற எப்படி பேச சொல்ற நீ இவ்ளோ பிடிவாதமா இருக்க சொல்ல உன்னோட அம்மா எனக்கு பிடிவாதம் இருக்காதா.” கோபமாக கேட்டார் மீரா.
தன்னுடைய அம்மா தன்னிடம் விடாப்பிடியாக இப்படி நிற்பது அவனுக்கு ஒரு புறம் கோபத்தை கொடுத்தாலும் அவர் மனம் வேதனைப்படுவது நன்றாக புரிந்தது அதில் ஒரு நிமிடம் என்ன செய்வது என்று புரியாமல் நின்றவனுக்கு எப்படியும் யூதிகா தன்னை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்ள மாட்டாள் நினைத்தவன்.
“ சரி ஓகே இப்போ நான் என்ன பண்ணனும் நினைக்கிறீங்க..” கேட்டான் மித்ரன்..
“ என்ன மித்ரன் இவ்வளவு நேரம் உங்க அம்மா சொன்னது கேட்டதுக்கு அப்புறம் நான் என்ன பண்ணனும்னு கேக்குற..” கேட்டார் சத்யா.
“ என்னோட சம்மதத்தை விடுங்க. இந்த கல்யாணத்துல யூதிகாக்கு ஓகேவான கேட்டீங்களா.” என்றான் மித்ரன்.
“ சோ உன்னோட பிரச்சனை இந்த கல்யாணத்துக்கு யூதிகாக்கு சம்மதமா இல்லையான்னு.. சரி யூதிக்கு சம்மதமா உனக்கு ஓகே தானே.” கேட்டார் சத்யா.
“ யூதிகா அவளோட முடிவு சொல்லட்டும் அதுக்கப்புறம் என்னோட முடிவா சொல்றேன்.” சொன்னான் மித்ரன்.
“ இங்க பாரு மித்து.. யூதிக்கு சம்மந்தமான கேட்ட ஓகே அதுல எந்த தப்பும் இல்ல அவ சொன்னதுக்கு அப்புறம் நீ சொல்றேன்னு சொல்றது தான் எனக்கு சரியா படல உன்னோட முடிவு என்னன்னு சொல்லு. அவளுக்கு ஓகேனா உனக்கு ஓகே தானே எந்த பிரச்சினையும் இல்லையே.” கேட்டார் மீரா..
தன் தாயின் மனம் நோகக்கூடாது என்று நினைத்தவன் எப்படி அவள் மறுப்பு தான் தெரிவிப்பாள் என்று நினைத்து.
“ யூதிகாக்கு ஓகே நா எனக்கு ஓகே மா. அதுவும் அவ சம்மதத்தை என் முன்னாடி சொல்லணும் ” சொன்னான் மித்ரன்.
“ ஓகே நான் நாதன் கிட்ட சொல்லி யூதிகாவை கூட்டிட்டு வர சொல்றேன் உன் முன்னாடியே அவளோட சம்மதத்தை சொல்லுவா நல்லா கேட்டுக்கோ.” சொன்னார் சத்யா.
“ என்னங்க அவன் சொல்றத கேட்டுட்டு இருக்கீங்க இப்பவும் அவன் சொல்றத தான் நம்மள செய்ய வைக்கலாம் நம்ப சொல்றத அவன் செய்யல.” சற்று கோபமாக சொன்னார் மீரா.
“ ஏன் நீ தான் இவ்வளவு டென்ஷன் ஆகுற அவன் இவ்வளவு தூரம் இறங்கி வரும் போது அவனுக்காக நம்ப இது கூட பண்ணலன்னா எப்படி.. டென்ஷன் ஆகாம இரு நான் பார்த்துக்கிறேன்.” சொல்லியவர்.
உடனே தன் போனை எடுத்த நாதனுக்கு அழைத்தார்.. இங்கு நாதன் சத்யாவின் அழைப்பை பார்த்ததும் உடனே போனை அட்டென்ட் செய்தவர்.
“ சொல்லு சத்யா..” கேட்டார் நாதன்..
“ யூதிகா சம்மதம் சொல்லிட்டாளா.” கேட்டார் சத்யா.
“ ஆமா சத்யா இது தான் நேத்து நான் உன் கிட்ட சொன்னேனே மறுபடியும் என்ன கேட்கிற.” கேட்டார் நாதன்.
“ சரி நீயும் சுதா யூதிகா மூணு பேரும் கிளம்பி ஆபீஸ்க்கு வாங்க.” சொன்னார் சத்யா.
“ என்ன சத்யா ஏதாவது ப்ராப்ளமா உடனே வர சொல்ற நான் தான் இன்னைக்கு வரலன்னு சொல்லி இருந்தேனே உன் கிட்ட.” என்றார் நாதன்.
“ எனக்கு ஞாபகம் இருக்கு இருந்தாலும் நீ உடனே கிளம்பி வா மத்தத இங்க வந்தோனே பேசிக்கலாம்..” சொன்னார் சத்யா.
“ சரி ஓகே நான் கிளம்பி வரேன்.” சொல்லியவர்.
போனை வைத்ததும் தன் மனைவியை அழைத்து விஷயத்தை சொல்ல சிறிது நேரத்தில் யூதிகாவும் அங்கு வர மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்..
ஆபீஸ்..
ஒரு மணி நேரத்தில் நாதன் யூதிகா சுதா இருவரும் அங்கு வர.. எப்பொழுதும் இல்லாத திருநாளாய் மீரா மித்ரன் இருவரும் அங்கு இருக்க ஏதோ பிரச்சனை என்று நினைத்த நாதன்.
“ ஏதாவது பிரச்சனையா சத்யா.. இவ்வளவு அவசர அவசரமா வர சொல்லி இருக்க.” தயக்கத்துடனே கேட்டார் நாதன்.
“ நீ நினைக்கிற மாதிரி எந்த பிரச்சினையும் இல்லை… என்னதான் நம்ம ரெண்டு பேரும் முடிவு பண்ணி இருந்தாலும் பசங்களையும் ஒரு வார்த்தை கேக்கணும் இல்ல.. நீதான சொன்ன யூதிகா கிட்ட கேட்கணும்னு அதான் பேசாம ரெண்டு பேரையும் நேர்ல வச்சு பேசிடலாம்னு வர சொன்னேன் வேற ஒன்னும் இல்ல..” சொன்னார் சத்யா.
“ இத நம்ம வீட்ல பேசி இருக்கலாமே.” சொன்னார் நாதன்..
“ நமக்கே தெரியும் இவங்க ரெண்டு பேரும் எவ்வளவு பிஸி என இவங்க ஃப்ரீயா இருக்க டைம்லயே இதை பத்தி பேசலாம் மித்ரனும் இங்க வந்தா அதனாலதான் உன்னையும் சுதாவையும் யூதிகாவையும் இங்க வர சொன்னேன் எல்லாரும் முன்னாடி பேசி முடிவு பண்ணிடலாம்னு..” சொன்னார் சத்யா.
“ எப்படி அண்ணா வந்ததிலிருந்து கேள்வி கேட்டுட்டே தான் இருப்பீங்களா உக்காந்து பேச மாட்டீங்களா வாங்க இது ஒன்னும் உங்க பிசினஸ் கிடையாது நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டே இருக்குறதுக்கு.. இது நம்ம ஃபேமிலி மேட்டர் எல்லாரும் ஒக்காந்து பேசுவோம்.” சொன்னார் மீரா.
மீரா சொன்னதும் சரி என்பது போல் தலை அசைத்தவர் அங்கு இருக்கும் மிகப்பெரிய சோபாவில் ஆறு பேரும் அமர்ந்தனர் மித்ரன் யூதிகா எதிரே அமர்ந்தான்.. ஆனால் யூத்திகாவோ அவனை கொஞ்சமும் நிமிர்ந்து பார்க்கவில்லை அதில் அவன் இதழில் ஒரு நக்கல் புன்னகை பூத்தது அந்த புன்னகை யாரும் அறியவில்லை அவன் ஒருவன் மட்டுமே அறிவான் அவள் செய்கையில்..
“ நான் சுத்தி வளச்சு பேச விரும்பல நான் டைரக்ட வரேன்.. யூதிகா உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே.” கேட்டார் சத்யா..
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..
