“உன்னோட பிஏ ஸ்டெல்லா உன்னைய லவ் பண்றாங்கனு நினைக்கிறேன்…” என்று ரதி கூறியதைக் கேட்ட ராம் “சும்மா விளையாடாத…” என்றபடியே அவர் இருக்கையில் அமர்ந்து அவரின் லேப்டாப்பில் மீட்டிங்கு தேவையான சில முக்கிய பைல்களை தேடி எடுத்துக் கொண்டிருந்தார்.
அவரின் முன்னிருந்த மேஜையில் சாய்ந்து நின்றுக்கொண்டு இருந்த ரதி அவரின் கரத்தைப் பிடித்து நிறுத்தியே “நான் பொய் சொல்லல… உண்மையை தான் சொல்றேன்… அந்த பொண்ணுக்கு உன் மேல இன்ட்ரஸ்ட் இருக்கு… உனக்கும் இன்ட்ரஸ்ட் இருந்தா ட்ரை பண்ணி பாரு… யாருக்கு தெரியும் நாளைக்கு அந்த பொண்ணே கூட உன் வாழ்க்கையா ஆகலாம்…” என்று கூற
ராமுக்கு அவரின் நண்பன் சசிகுமார் கூறுவது போலவே இருந்தது… “அவனும் இப்படி தான் ஏதாவது ஒரு பெண் என்னைய பார்த்து விட்டால் போதும் உடனே அவர்களை ட்ரை பண்ணி பாருனு சொல்றது வழக்கம்… அதேமாதிரி தான் இவளும் பேசுறா…” என்றே அவளின் கன்னத்தை செல்லமாக தட்டி
“அப்படி எல்லாம் எதுவும் இல்ல… பாஸ் அப்படிங்கிற விசுவாசத்துல ஏதாவது கூட குறைச்சலா எனக்காக பேசியிருப்பாங்க… அதை வச்சி எல்லாம் இப்படி பேசக்கூடாது…” என்று சிறுபிள்ளைக்கு கூறுவது போலவே கூறி தேடி எடுத்த பைலை பென்டிரைவில் பதிவு பண்ண தொடங்கினார்.
ஆனால் ரதியால் அவ்வளவு சாதரணமாக விட முடியாமல் “நீ ஏன் ராம் இப்படி இருக்க? அந்த பொண்ணே உன் முன்னாடி வந்து கிரீன் சிக்னல் கொடுத்தாலும் நீ இப்படி தான் இவ்ளோ மக்கா அத கண்டுக்காம இருப்பியா? இப்படி இருந்தா உன் வாழ்க்கை என்னத்துக்கு தான் ஆகும்…” என்று சலித்துக்கொள்ள
சின்ன சிரிப்புடனே “ஹ ஹ… நீ ரொம்ப அதிகம் யோசிக்கிற… என் வாழ்க்கை அவ்வளவுதான்… இனிமே என் வாழ்க்கையில எந்த ஒரு பொண்ணுக்கும் இடம் இல்லை… வேலை குடும்பம் இப்போ நீ அப்படியே ஓடிட வேண்டியதுதான்… அதவிட்டுட்டு இனி ஒரு பொண்ண பார்த்து புடிச்சிருக்குன்னு சொல்லி பழகி கல்யாணம் பண்ணி பிரச்சனை குடும்ப வாழ்க்கை அப்படா இதெல்லாம் இந்த வயசுல எனக்கு ஒத்துவராதும்மா… ஆள விடு…” என்றே சீட்டில் சாய்ந்தவரின்
சட்டை காலரை பிடித்து இழுத்தே “இப்படி கண்டதை உளறாத… ஃபார்ட்டி பைவ் எல்லாம் ஒரு ஏஜா? இது ஒன்னும் அவ்வளவு பெரிய வயசு இல்ல… அவன் அவன் சிஸ்டி எய்ட்டில கூட மேரேஜ் பண்ணிக்கிறான்… நீ என்னடானா இன்னமும் எடக்கு நாட்டான் மாதிரியே உளறிக்கிட்டு இருக்க…” என்றவளின் விழிகளை பார்த்த ராமுக்கு அவள் அவரின் மீது அக்கறை கொண்டு பேசுகிறாள் என்றே தோன்றியது.
ஆகையால் அவரும் “ஓகே ஓகே எனக்கு ஒன்னும் அவ்ளோ பெரிய ஏஜ் ஆகலைன்னு ஒத்துக்குறேன்… போதுமா… இப்பையாவது என் காலர விடுறியா?” என்று கேட்க
“அது…” என்றே சட்டையை விட்டு கசங்கிய இடத்தை சரி செய்ய
“எப்படி இவ்ளோ ஈஸியா என்கிட்ட ஒட்டிக்கிட்டா?” என்றே தோன்ற “ஆமாம்… உன் டாடி எனக்கு கல்யாணம் பண்ணி வச்சே தீரணும்னு உன்கிட்ட ஏதாவது சொல்லி பிராமிஸ் வாங்கிக்கிட்டாரா என்ன?” என்று கேட்க
“ஏய்ய்ய் அது உனக்கு எப்படி தெரியும்?” என்று உடனே ரதி கேட்க
வாய்விட்டே சிரித்து ரதியின் நெத்தியில் வலிக்காமல் தட்டி “ஹ ஹ இதுக்கு பேரு தான் போட்டு வாங்குறது… கிவன் டேக் பாலிசி…” என்றதும் அவளும் அசடு வழிந்தே
“என்னோட டாடிக்கு உன்னைய ரொம்ப ரொம்ப பிடிக்கும்… எப்பயும் உன்னைய பத்தி தான் வீடு ஃபுல்லா பேசிக்கிட்டே இருப்பாரு… என்னோட ராம் எவ்ளோ அறிவாளி தெரியுமா? எவ்வளவு இன்டெலிஜென்ட் தெரியுமா? ஆனா குடும்பத்துக்காக அவனோட படிப்ப விட்டு உழைச்சான்… படிப்பு போனா கூட அவனோட அறிவுக்கும் திறமைக்கும் உழைப்புக்கும் பணம் சம்பாதிச்சுக்குவான்… ஆனால் வாழ்க்கையவே வாழாம இருக்கான்…”
“அவன நினைக்க நினைக்க வேதனையா இருக்குனு சொல்லி சொல்லியே அவருக்கு ரொம்ப வருஷமாவே கவலையாவே இருந்தது… உனக்கு ஒரு நல்ல பொண்ண பார்த்து எப்படியாவது கல்யாணம் பண்ணனும்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாரு…”
“அதை கேட்டு கேட்டு வளர்ந்த நானும் சின்ன பிள்ளையில டாடி டோன்ட் வரி டாடி நான் பெருசா ஆகி உங்க ராம கட்டிக்குவேன்னு சொல்லுவேன்… அப்ப மம்மி நீ பெரியவளா ஆகும் போதெல்லாம் ராம் அண்ணா அப்பா வயசுல இருப்பாருடினு சொல்லுவாங்க…” என்று கூறிக்கொண்டு இருந்தவள்
ராமின் தலை முடியை கலைத்தே “நாணும் விடாம பரவால்ல என்னால கட்டிக்க முடியலைன்னா என்ன? நான் அவருக்கு அழகான ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன்னு சொல்லுவேன்…” என்று சிரிப்பும் குறும்பும் கலந்து கூறினாள்.
ராமுக்கு வேதனையாக இருந்தது… “நண்பனின் உயிரை பறித்ததற்கு பதிலாக எனது உயிரைப் பறித்து இருக்கலாம்… என் நண்பன் நீண்ட ஆயுளோடு குடும்பத்தோடு வாழ்ந்து இருக்க வேண்டியவன்… இவளும் அம்மா அப்பா கூட சந்தோஷமா இருந்திருக்க வேண்டியவள்…” என்று வாடியே சீட்டில் சாய்ந்து இமைகளை மூடியவனின் மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் வந்தது.
என்ன தான் குறும்பாக மலர்ந்த முகமாக கூறினாலும் ரதிக்குமே அம்மா அப்பாவின் ஏக்கம் இருக்கவே செய்ய “ஏன் ராம் டாடியவும் மம்மியவும் இந்த கடவுள் இவ்வளவு சீக்கிரம் கூட்டிக்கிட்டாங்க? எனக்கு அவங்கள எவ்வளவு தேடுது தெரியுமா? நீ மட்டும் இல்லனா நான் அனாதையா தான்…” என்று சொல்லும் போதே அவளை இழுத்து அணைத்துக்கொண்டார்.
இருவரிடமும் காதல் இல்லை… காமம் இல்லை… ஆனால் அன்பும் பாசமும் போட்டி போட்டுக்கொண்டு இருந்தது.
ராம் உடைய கோட்டை கெட்டியாக பிடித்து அவரின் நெஞ்சில் முகம் புதைத்து கண்ணீரோடு “எனக்கு கடவுள பிடிக்கவே இல்லை… யாருக்கும் தீங்கு செய்யாத என்னோட மம்மியையும் டாடியையும் கொன்ன அந்த கடவுள நான் அடியோட வெறுக்கிறேன்… என்னைய அனாதையா நிக்க வச்ச அந்த கடவுள நான் வெறுக்குறேன்… சொத்துக்காக வந்த அந்த குடும்பத்தையும் வெறுக்கிறேன்… எல்லாரையுமே வெறுக்குறேன்….” என்று குலுங்கி குலுங்கி அழுதாள்.
ராம் உடைய மனமும் பாரமானது… ஆனால் எதுவும் பேசாமல் அவளை அழ விட்டார்… கூடவே செல்போனை எடுத்து ஸ்டெல்லாவுக்கு ஏதோ மெசேஜ் தட்டிவிட்டு போனை ஓரம் வைத்தார்.
ரதியும் சிறிது நேரத்திலே அவரிடம் இருந்து விலகி “சாரி நான் உன்னோட முக்கியமான மீட்டிங்கையும் கெடுத்துட்டேன்… சாரி சாரி நீ மீட்டிங்கு போ…” என்று ரதி ராமைவிட்டு விலக
இருக்கையில் அமர்ந்திருந்த ராம் பழைய படியே அவளை இழுத்து மடியில் அமர வைத்தே “மீட்டிங்க தள்ளி வச்சிட்டேன்… இன்னம் ஒன்னவர் இருக்கு… எவ்வளவு அழனுமோ அழுதுடு… இதுக்கு மேல நீ எப்பயும் அழக்கூடாது… இனி உன் வாயில இருந்து நீ அனாதைன்னு சொல்லவே சொல்லாத… ஏன்னா உனக்கு நான் இருக்கேன்… இந்த ராம்குமார் இருக்கான்… இந்த ஆர்கே இருக்கான்… உனக்கு என்ன வேணுமோ எவ்ளோ வேணுமோ எவ்வளவு பாசம் வேணுமோ அன்பு வேணுமோ எவ்வளவு உரிமை வேண்டுமோ எல்லாத்தையும் உனக்கு கொட்டி தர இந்த ராம்குமார் இருக்கான்… நான் உயிரோட இருக்குற வரைக்கும் நீ அனாதை இல்லை…” என்றதுமே ராமை கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.
“எனக்கு தெரியும் ராம்… ஆனாலும்…” என்று தேம்ப அவளின் முதுகை மென்மையாக தடவியே
“ஹேய் விடும்மா… அவங்க இரண்டு பேரும் எங்க போக போறாங்க? நம்பள சுத்தி தான் எங்கையாவது இருந்து நம்பள பார்த்துக்கிட்டே இருப்பாங்க… அதோட உனக்கு கல்யாணம் ஆகி பிறக்குற குழந்தையா கூட உன்னோட மம்மி டாடியே பிறக்க வாய்ப்பு இருக்கு…” என்றவரின் மார்பிலே செல்லமாக தட்டி
“டிபிகல்ட் ஆம்பள மாதிரியே பேசாத…” என்று சிணுங்க
“ஏய்ய்… நான் சீரியஸா தான் சொல்றேன்… கண்டிப்பா உன்னுடைய மம்மி டாடியே உனக்கு குழந்தையா பொறப்பாங்க… நான் வேணும்னா உனக்கு மாப்பிள்ளை பார்க்கவா?” என்று கேட்க
“ஒன்னும் தேவை இல்ல… நான் என்னோட மம்மி டாடி இழப்புல இருந்து மீண்டு வந்தாலே போதும்…” என்று கூற
“குட் வெரி குட்… நல்ல டெசிஷன்தான்… கண்டிப்பா நீ இதுல இருந்து வெளிவர நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்… உனக்கு துணையா இருப்பேன்…” என்று ராம் கூறி அவரின் பாக்கெட்டில் இருந்த டைரி மில்க் எடுத்து அவளிடம் நீட்டியவர்
சந்தன முகத்தவள் அழுததால் சிவந்து இருந்த முகத்தை கண்டதும் “பாரு அழுததால முகமே சிவந்து போச்சி…” என்று கூறிய படியே சிறுபிள்ளைகளுக்கு கண்ணீரைத் துடைப்பது போலவே ராம் அவர் கோட்டின் கை பாகத்தால் அவளின் கண்ணீரை துடைத்து டைரி மில்க்கை நீட்டினார்.
ரதியும் அழகாக முகத்தை இங்க அங்க என்று காட்டி காட்டி துடைத்துக்கொண்டு டைரி மில்க்கை வாங்கி பிரித்தபடியே “உனக்கும் வேணுமா?” என்று கேட்க
சாப்பிட பெரிதாக விருப்பம் இல்லை தான்… ஆனாலும் அவளிடம் வம்பு செய்ய விருப்பம் இருந்ததால் அவரும் “அழுகை எல்லாம் நிறுத்தி இருக்கேன்… கண்ணீர எல்லாம் தொடச்சி இருக்கேன்… அதுக்காகவாவது முக்காவாசி கொடுத்த பரவால்ல தான்…” என்று கூற
“எதே முக்காவாசியா? வேணும்னா ஒரு பைட் கடிச்சுக்கோ… முக்காவாசி எல்லாம் தர முடியாது…” என்று கூறியவள் வேக வேகமாக பிரித்து அவளின் வாயில் திணிக்க செல்ல
அவள் தர மாட்டேன் என்றதும் ராமும் “என்ன ஒரு பைட்டா… ஹேய்… அதெல்லாம் எங்க பத்தும்? அதுவும் இவ்வளவு பெரிய சாக்லேட்ல நான் மட்டும் வெறும் ஒரு பைட் எடுத்துக்கணும் நீ எல்லாத்தையும் சாப்பிடுவியா? இரு இரு வரேன்…” என்று அவள் வாயில் வைக்கப் போன அவளின் மணிக்கட்டை பிடித்து வைக்க விடாமல் தடுத்து அவரின் வாய்க்கு அந்த சாக்லேட்டை இழுத்து வர
“நீ சாக்லேட்டை இழுத்துட்டு போனா நான் வரமாட்டேனா? இருடா வரேன்… என் டைரி மில்க்ல ஒரு பைட் விட்டுக்குடுக்குறதே பெரிய விஷயம்… நீ என்னடான்னா முழுசா இழுக்குறியா?” என்றே அவள் பாய்ந்து கொண்டு அவரின் வாயிடம் சென்ற சாக்லேட்டை விழுங்க அவளும் வர எதர்ச்சியாக இருவரும் ஒரே நேரம் சாக்லேட்டை கடிக்க ஆரம்பித்தனர்.
இருவரும் ஒன்றாக கடிக்கவும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தனர்… இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது… மலர்ந்த முகமாகவே ஒரு பைட் எடுத்துக்கொண்ட இருவருக்குமே ஒருவரை ஒருவர் தள்ளிவிட மனம் வரவில்லை… ஆகையால் இருவருமே அடுத்த பைட் கடித்தனர்.
அதன் பின் ராம் விட்டுக் கொடுக்க தலையை சாக்லேட் விட்டு பின் எடுத்துச்செல்ல அதை கண்ட அவளோ அவரின் பின்னங்கழுத்தை பிடித்து மீண்டும் அந்த சாக்லேட்டில் வாயை வைக்க வைத்தாள்.
சரியாக அந்த நேரம் “சார் மீட்டிங்கு டைம் ஆச்சு…” என்ற குரலுடனே கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்த ஸ்டெல்லாவின் விழிகள் சினத்தில் சிவந்தது.
வருவாள் ரதி…
