3.. மௌனத்தின் கடைசி எல்லை..
சத்யா கேட்டதும் என்ன பதில் சொல்வது என்று யூதிகாக்கு தெரியவில்லை.. அதில் அவள் அமைதிக்காக இருக்க மித்ரன் இதழில் இருந்து புன்னகை மலர்ந்தது..கறுப்பு நிற பிசினஸ் சூட்டில் அவன் ஒரு கிரேக்கச் சிலையைப் போலக் கம்பீரமாகக் காட்சியளித்தாலும், அவனது ஆழ்மனதில் ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டு இருந்தது. மித்ரன்க்கு எதிரே அமர்ந்திருந்த யூதிகா, ஒரு தேவதையைப் போல அமைதியாக இருந்தாள்.சத்யா பேசத் தொடங்கினார்,
” யூதிகா.. இந்த கல்யாணம் நமக்கு ரொம்ப முக்கியம். உனக்கு இந்தத் கல்யாணத்துல முழுச் சம்மதம் தானே?” மீண்டும் கேட்டார் சத்யா.
மித்ரன் யூதிகாவை நிமிர்ந்து பார்த்தான். ‘ இப்போது பிடிக்கவில்லை என்று சொல்வாள்?’ என்று அவன் இதயம் நினைத்துக் கொண்டு இருக்க . மெல்ல நிமிர்ந்தவள் எதிரில் அமர்ந்திருக்கும் மித்ரனை பார்த்தால்.. யாரும் அறியாத வண்ணம்..
“ என்னம்மா அமைதியா இருக்க. உன் மனசுல இருக்கிறது வெளிப்படையா சொல்லு எந்த தயக்கமும் வேணாம் ” சொன்னார் மீரா.
“ யூதி ஏன் அமைதியா இருக்க ஏதாவது பேசு எல்லாரும் கேட்கிறார்கள் இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்.” சொன்னார் நாதன்.
அவள் அப்பவும் அமைதியாக இருக்க..
“ ஏய் யூதி எல்லாரும் கேக்குறாங்க இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் வாயைத் திறந்து பதில் சொல்லு.” சற்று அதட்டலாக சொன்னார் சுதா..
“ சுதா கொஞ்சம் பொறுமையா இரு அவ மனசுல இருக்குறத அவ சொல்லனும் இல்ல இப்படி மெரட்டன அவ எப்படி சொல்லுவா. யூதி மா உன் மனசுல என்ன இருக்கு வெளிப்படையா சொல்லு யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்.” அன்பாக அவளை தோளோடு அனைத்து கொண்டு சொன்னார் மீரா..
அதில் சற்று தைரியம் வந்தவள் போல்..
” இந்த கல்யாணத்துல எனக்குச் சம்மதம் அங்கிள் ,” மிக மெல்லிய குரலில் சொன்னாள்.
அது அங்கு இருக்கும் அனைவர் காதலும் விழுந்தது ஏன் மித்ரன் காதிலும் விழுந்தது ஒரு நொடி தான் கேட்பது கனவு நினைவா என்று அவன் அதிர்ந்து அவளை பார்த்துக் கொண்டு இருக்க.. இவனின் அதிர்ச்சியை கண்ட சத்யா வேண்டுமென்றே.
“ என்னம்மா சொன்ன நீ சொன்னது சரியா கேக்கல கொஞ்சம் சத்தமா சொல்லு.” என்றார் சத்யா..
ஏற்கனவே வார்த்தைகள் வரவில்லை இதில் மீண்டுமாக என்பது போல் இருக்க இப்பொழுது ஒரு பெருமூச்சு ஒன்று இழுத்து விட்டவள்..
“ எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்..” சொன்னாள் யூதிகா..
“ நாதன் அதான் யுதியே சம்மதம் சொல்லிட்டாலே அப்புறம் என்ன பத்து நாள்ல கல்யாணம். அதுக்கு தேவையான ஏற்பட்ட எல்லாத்தையும் பாரு. இந்த கல்யாணம் செம கிராண்டா இருக்கணும் எல்லாரும் இத பார்த்து வாயை பொளக்குற மாதிரி இருக்கணும்.” சொன்னார் சத்யா.
“ கண்டிப்பா கல்யாணத்தை தடபுடலாம் பண்ணிடலாம்.” சொன்னார் நாதன்.
இவர்கள் இருவரும் கல்யாணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்க தன் வருங்கால மருமகளிடம் பேச தொடங்கினார் மீரா.
“ இதை சொல்ல வாடா இவ்வளவு தயங்கின நான் ஒரு நிமிஷம் பயந்து போயிட்டேன்.” சொன்னார் மிரா..
“ இல்ல ஆண்ட்டி நிறைய ப்ராஜெக்ட் பண்ணி இருக்கேன்.. கல்யாண னு சொன்ன உடனே என்ன பண்றதுன்னு தெரியல அதுக்கு தான் கொஞ்சம் தயங்கிட்டு இருந்தேன்..” சொன்னால் யூதிகா..
இவ்வளவு நேரம் அதிர்ச்சியில் இருந்த உனக்கு சற்று கோபமும் வந்தது அவள் மேல் அதில் சற்றென்று எழுந்து நின்றவன்..
“ அப்பா அம்மா அங்கிள் ஆன்ட்டி. நானுமே நிறைய ப்ராஜெக்ட் ல சைன் பண்ணி இருக்கேன் இப்போ கல்யாணம் நீங்க வேண்டா வச்சீங்கன்னா என்னால எதுவுமே செட்யூல் பண்ண முடியாது அப்புறம் பிரச்சனையா தான் ஆகும். அதனால மேரேஜ் ரொம்ப சிம்பிளா வச்சுக்கலாம் முடிஞ்ச அளவுக்கு நம்ம ரெண்டு பேமிலி மட்டும் எங்களோட செடியூஸ் எல்லாம் முடிஞ்ச உடனே எங்க மேரேஜ் அலோன்ஸ்மென்ட் பண்ணிக்கலாம்..” சொன்னான் மித்ரன்.
“ என்ன பேசுற மித்து நம்ம வீட்டிலும் சரி அவங்க வீட்லயும் சரி நடக்கப் போற முதல் கல்யாணம் அது நல்லா சந்தோஷமா பண்ணாம ஒரு ரெண்டு பேரு ஃபேமிலி மட்டும் போதும்னு சொல்ற.” கோபமாக கேட்டார் மீரா..
“ மீரா என்ன டென்ஷன் ஆகாதுன்னு சொல்லிட்டு நீ ஏன் இப்படி டென்ஷன் ஆகுற கொஞ்சம் பொறுமையா இரு. மித்து கண்ணா ஒரு பத்து நாள் ஷூட்டிங் தள்ளி வைக்க முடியாதா எங்களுக்கும் உங்க கல்யாணத்தை நன்றாக பண்ணி பார்க்கணும்னு ஆசை இருக்காதா.” கேட்டார் சுதா.
“ சாரி ஆன்ட்டி உங்க எல்லாருடைய நிலைமை எனக்கு புரியுது ஆனா என்னோட நிலைமை தான் உங்களுக்கு புரிய மாட்டேங்குது.. பத்துக்கும் மேல காண்டாக்ட்ல சைன் பண்ணி இருக்கேன்.. ஏற்கனவே ரெண்டு டைரக்டர் படம் எடுக்கணும்னு சொல்லி பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க இப்ப போயிட்டு இருக்க படம் பிக்ஸ் பண்ண டேட்ட விட டூ வீக்ஸ் லேட் ஆகுற மாதிரி இருக்கு அந்த பிராப்ளமே சால்வ் பண்ண முடியல இப்போ மேரேஜ் சொல்லி இன்னும் நான் ஹோல் பண்ணேன் பிரச்சனை வேற மாதிரி போகும் அதுக்கு தான் சொல்றேன் சிம்பிளா பண்ணிக்கலாம்..” சொன்னான் மித்ரன்..
“ மித்ரன் நீ பண்றது சரி கிடையாது.” சொன்னார் சத்யா கோபமாக.
“ சத்யா கொஞ்சம் அமைதியா இரு நான் பேசுறேன்.. மித்ரன் வேற வழியே இல்லையா உங்க கல்யாணத்தை நன்றாக கிராண்டா பண்ணி பாக்கணும்னு ஆசைப்படறோம்.” சொன்னார் நாதன்.
“ அங்கிள் எனக்கு வேற சாய்ஸ் கிடையாது.. அப்பா அம்மா நீங்க சொன்ன எல்லாத்துக்குமே நான் ஒத்துக்கிட்டேன் நான் உங்ககிட்ட கேக்கறது இது மட்டும் தான் என்னையும் புரிஞ்சுக்கோங்க.. இல்ல உங்க விருப்பப்படி கிராண்டா பண்ணனும்னா இப்போதைக்கு எனக்கு இந்த கல்யாணம் வேணாம் இப்போதைக்கு மட்டும் இல்ல கல்யாணம்னு இதுக்கு அப்புறம் என் கிட்ட பேசாதீங்க.” சொன்னான் மித்ரன்.
இவனின் பேச்சைக் கேட்டவுடன் யூதிகாக்கு ஒரு விரக்தி புன்னகை தோன்றியது அது மட்டுமல்ல தன்னை பிடிக்கவில்லை என்று சொல்வான் என்று மனதில் நினைத்தவளுக்கு மாறாக அவன் அமைதியாக இருந்ததே சற்று வினோதமாக இருந்தது.. இப்பொழுது அவன் பேச்சிலே தெரிந்து விட்டது இந்த கல்யாணத்தில் சுத்தமாக விருப்பமில்லை அதிலும் தன்னை பிடிக்கவில்லை என்று அதனால் தான் யாருக்கும் தெரியாமல் இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்று சொல்கிறான் என்று நன்கு புரிந்தது யூதிகாக்கு..
“ மித்து என்ன பேசுற எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறியா நம்ம வீட்டிலயும் உன் கல்யாணம்தான் பர்ஸ்ட் அவங்க வீட்டிலேயே யூதிகா கல்யாணம் தான் பர்ஸ்ட் அப்படி இருக்கும்போது சிம்பிளா எப்படி பண்ணுவாங்க அதுவும் தமிழ்நாட்டில் டாப் 5 ல இருக்குற பணக்காரங்க இல்ல நம்மளும் ஒருத்தார் அப்படி இருக்கும் போது உங்க கல்யாணத்தை எதுக்கு அவ்ளோ சிம்பிளா நடத்தணும்.. எங்களால சிம்பிளா பண்ண முடியாது. எங்கள விடு பொண்ண பெத்த அவங்களுக்கு அவங்க பொண்ணு கல்யாணத்தை எப்படி எல்லாம் பண்ணி பாக்கணும்னு ஆசை இருக்கும் அவளுக்கும் தான் கல்யாணம் இப்படி எல்லாம் நடக்கணும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் இல்ல அதெல்லாம் மொத்தமா சேர்த்து குழி தோண்டி புதைக்க பார்க்கிறியே இது நியாயமா டா.” மிகுந்த கோபத்துடன் கேட்டார் மீரா..
அதற்கு மித்ரன் ஏதோ சொல்ல வாய் எடுக்க அதற்குள் பேசத் தொடங்கினால் யூதிகா..
“ ஆன்ட்டி அவர் சொல்றது தான் நானும் சொல்லணும் நெனச்சேன் எனக்கு அதை சொல்ல தைரியம் இல்லை அவரே சொல்லிட்டாரு.. இப்போதைக்கு என்னாலயும் எங்க கல்யாணத்தை வெளியே சொல்ல முடியாது.. ரொம்ப கிராண்டா பண்ணா மேக்சிமம் ஒரு மாசம் எதுவுமே பண்ண முடியாது அப்போ போட்டு அக்ரீமெண்ட் எல்லாம் என்ன பண்றது.. எங்கள நம்பி பணம் போட்டவர்களுக்கு நாங்க நேர்மையா இருக்கணும் இல்ல அதனால அவரு சொல்ற மாதிரி சிம்பிளா பண்ணிக்கலாம் எங்க செடுல் எல்லாம் முடியட்டும் அதுக்கப்புறம் கிராண்டா ஒரு பர்மிஷன் வச்சுக்கோ..” சொன்னால் யூதிகா..
“ யூதி என்ன இப்படி பேசுற உன் கல்யாணத்தை நாங்க எப்படி எல்லாம் பண்ணி பாக்கணும்னு ஆசைப்பட்டேன் கடைசில நீயும் இப்படி சொல்றியே.” கவலையுடன் கேட்டார் சுதா.
“ அம்மா நீ கவலைப் படுற அளவுக்கு எதுவும் இல்லை இப்பவும் உங்க விருப்பப்படிதான் கல்யாணம் நடக்குது என்ன உன்ன சிம்பிளா நடக்குது அவ்வளவுதான்.. நம்ப ரெண்டு பேமிலி முக்கியமானவங்க அவங்கள வச்சு பண்ணிக்கலாம்.. நீங்க சொல்ற மாதிரியே பண்ணாலும் அன்னைக்கு ஒரு நாள் தான் எல்லாரும் வர போறாங்க கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் கிளம்பிடுவாங்க அவங்களுக்கு அந்த ஒரு நாள் மட்டும் தான் லீவாகும் எங்களுக்கு அப்படி கிடையாது இல்ல சொன்னா புரிஞ்சுக்கம்மா.” சொன்னால் யூதிகா.
இவள் என்னவோ அவனுக்காக தான் சொன்னாள் ஆனால் அவனும் அவன் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீக்கு பெட்ரோல் ஊத்தியது போல் மீண்டும் தகதக என்று எரிந்தது..
“ நான் சிம்பிள வச்சுக்கணும்னு சொன்னா முடியாது நல்ல கிராண்டா பண்ணனும்னு சொல்லுவேன்னு பாத்தா நீயும் சிம்பிளா வெச்சுக்கலாம்னு சொல்றீங்க அப்போ என் கூட நடக்கிற கல்யாணம் உனக்கு பிடிக்கல.. அதனால யாருக்கும் தெரிய கூடாதுன்னு நினைக்கிறேன் இட்ஸ் ஓகே ஐ அம் ஃபைன்.” தன் மனதுக்குள்ளவே சொல்லிக் கொண்டான் மித்ரன்.
அதன்பின் சிறிது நேரம் மௌனம் மட்டுமே நிலவியது பத்து நிமிடங்கள் கடந்து இருக்க..
“ சத்யா பசங்க சொல்றதும் கரெக்ட் தான் நம்ப கௌரவத்துக்கு மட்டும் பாக்கக்கூடாது அவங்களோட ஃபேஷனையும் நம்ம பாக்கணும் நம்ம எப்படி சொந்தகார்ல நின்னு முன்னுக்கு வந்தோமோ அதே மாதிரி அவங்க வரணும்னு ஆசைப்படுறது நம்ம தடுக்க கூடாது என்ன கல்யாணம் வேண்டாம்னு சொல்லலையே சிம்பிளா பண்ணிக்கலாம் தானே சொல்றாங்க ஓகே எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை பொண்ண பெத்த எனக்கே பிரச்சனை இல்லை என்ற முதல் உனக்கு என்ன கவலை விடு நம்ப ரெண்டு பேமிலி மட்டும் வீட்டோட பண்ணிக்கலாம்.. மித்ரன் சொல்ற மாதிரி அதாவது என்னோட மாப்பிள்ளை சொல்ற மாதிரி இவங்களோட வேலை எல்லாம் முடிஞ்ச உடனே கிராண்ட் ஒரு ரிசப்ஷன் வச்சிடலாம்..” என் சிரித்த முகத்துடன் நாதன்..
நாதனே இப்படி சொல்லிவிட சத்யாவால் எதுவும் பேச முடியவில்லை தன் மகனை முறைத்தபடி பார்த்தவர் தன் மனைவியை பார்த்தார் தன் மனைவியும் சரி என்பது போல் தலையசைக்க..
“ நான் சம்மதிக்கிறேன் உனக்கு என்ன பிரச்சனை இல்ல நம்ம எனக்கும் பிரச்சனை இல்லை.. வர முகூர்த்தத்துல கல்யாணம் அதாவது நாளன்னைக்கு.” சொன்னார் சத்யா..
“ ஓகே எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.” சொன்னான் மித்ரன்.
இவன் ஒத்துக்கொண்டது போல் மத்த மூவரும் ஒத்துக் கொண்டார்கள் அதன் பின் மித்ரன் அங்கிருந்து கிளம்பி விட யூதிகாவும் தனக்கு வேலை இருக்கிறது என்று அங்கு இருந்து கிளம்பி விட்டால் அதன் பின் கல்யாண வேலைகளை நான்கு பேரும் தொடர்ந்தார்கள்..
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
இப்படிக்கு உங்கள் அன்பு தோழி
