அத்தியாயம் 15

அத்தியாயம் 15

அவனுடைய செயலால் அச்சத்தில் மிடறு விழுங்கியவள்.. ஆழமாக அவனுடைய கண்களை ஊடுருவினாள்..!!

அடேங்கப்பா எவ்வளவு பெரிய கண்ணு??!! கண்ணா இது?? இல்ல இல்ல.. வலை வீசி பிடிக்கிற கடல் மீன் போல இருக்கு.. இந்த ஆரஞ்சு சுளை உதடுகளை ருசி பார்க்க நினைக்கிறதே என்னுடைய பாழாய் போன மனம் இந்த நேரம் பார்த்து.. 

கோபத்தில் இருக்கும் போது இப்படி ரொமான்ஸ் பண்ண நினைக்க கூடாதுடா அறிவு கெட்ட தீரா.. திட்ட நெனச்சு தான் இங்கே கூட்டிட்டு வந்த சண்டை போட நினைச்சு தான் இங்க ரூம் புக் பண்ணி இருக்க.. அதை விட்டுட்டு ரொமான்ஸ் பண்றதுக்கு ரூம் புக் பண்ணல.. அதை நல்லா ஞாபகம் வச்சுக்கிட்டு உன் மனசுல இருக்குற கோவத்தை அவ கிட்ட கொட்டு.. நான் சொல்றது கேக்குதா இல்லையா?? உன்னுடைய கோபத்தை அவகிட்ட காண்பி, என்று அவனுடைய உள் மனம் அவனுக்கு எடுத்துரைத்தது ஆனால் அதெல்லாம் அவன் மண்டைக்குள் ஏறினால் தானே..??!!

அவனுடைய மூளையும் சரி மனுசும் சரி இப்பொழுது மொத்தமாக ஆஃப் ஆகி இருந்தது..

பேட்டரி போன பொம்மை போல அவளுடைய அழகில் சொக்கி கிடந்தான்..!!

அவளை நெருங்காதே..

அவளிடம் சண்டை போடு..என்று அவனுடைய உன் மனம் அவனுக்கு அதிகாரமாக கமாண்ட் கொடுத்து கொண்டிருக்கும் பொழுதே அவனையும் அறியாமல் அவனுடைய இரும்பு கரங்கள் அவளுடைய மென் இடையை அணைக்கத் தொடங்கியது..!!

அவளின் விழிகளை நேருக்கு நேராக பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய கண்கள் இப்பொழுது அவளின் இதழ்களை நோக்கி குனிந்தது..

அவன் பார்வை செல்லும் திக்கை நோக்கி அவனுடைய இதழ்களும் பயணிக்க..

மித்ரா தான் மிரண்டு போனாள்..!!

அடுத்து அவன் என்ன செய்வான் என்று அவள் நன்கு அறிவாள்.. அதனால் வேகமாக அவனை பிடித்து தள்ளி விட முயன்றாள்..

” என்ன பண்ணிட்டு இருக்கீங்க?? இதுக்காக தான் என்னை பிடிச்சு இழுத்துட்டு வந்தீங்களா முதலில் என்னை விடுங்க”, என்று அவள் திணறி போனாள் அவன் அணைப்பில்..

என்னவோ தெரியவில்லை.. இவள் விலக நினைக்கும் ஒவ்வொரு முறையும் இறுக அணைத்து கொண்டு முத்தமிட வேண்டுமென்று ஆவேசம் பொங்குகிறதே இந்த எண்ணத்தை எப்படி அடக்குவது?? என்று தவித்தான் அவன்.

தன்னை வேண்டாம் என்று துச்சமாக மதித்து செல்லும் பெண்ணை நான் ஏன் தேடி போக வேண்டும் என்று எண்ணுபவன் அவன்.

அப்படிப்பட்டவன் இன்று தன்னை துச்சமாக மதிப்பதும் இல்லாமல் தன்னை கண்டாலே அருவருப்பாக ஒரு பார்வையை பார்த்துவிட்டு தன்னிடமிருந்து விலக நினைக்கும் மித்ராவை மட்டும் ஆசை தீர ருசிக்க வேண்டும்.. தன் அருகிலேயே அவளை வைத்துக் கொள்ள வேண்டும்.. அவளுடைய ஓர கண் பார்வை கூட மற்றவர்கள் மீது படக்கூடாது என்று நினைக்கும் அளவிற்கு அவள் மீது அவனுக்கு பொசசிவ்னஸ்  அதிகமாக வளர்ந்திருந்தது..!!

விலகி செல்ல நினைத்தவளை மீண்டும் கை அருகில் கொண்டு வந்து நிப்பாட்டி வைத்து அவளை சிறை பிடித்தான் கயவன்..

” என்னடி நினைச்சுட்டிருக்க உன் மனசுல ?? என்ன தைரியம் இருந்தா நீ அவன் கூட போவ?? ஆல்ரெடி நான் உன்கிட்ட சொல்லிருக்கேன் அவனை பார்க்க கூடாது பேசக்கூடாதுன்னு இருந்தும் நீ மறுபடியும் அவன் கூட போய் பேசுற..  அப்போ என்னோட பேச்சுக்கு என்ன மரியாதை ?? இந்த தீரன் ஒரு விஷயத்தை சொன்னா அதைக் கேட்டு தான் ஆகணும்.. கேட்க மாட்டேன் என்று சொல்றவங்க இந்த பூமியில் இருக்க முடியாது.. இன்னொரு தடவை அவன் கூட உன்னை பார்த்தேன் அப்புறம் நடக்கிறதே வேற.. இதுதான் கடைசியா இருக்கணும்.. ஆமா எதுக்காக அவனை பார்க்க போன??”, என்று கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான்.

லூசு பய… முதல்ல கேக்க வேண்டிய கேள்விய கடைசில கேட்டுட்டு கடைசியா சொல்ல வேண்டியதை எல்லாம் முதல்ல சொல்றான்.. சரியான லூசா இருப்பான் போல என்று மனதிற்குள் அவனை சரமாரியாக திட்டிக் கொண்டவள், அது எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றாள்..

பதில் சொல்லாமல் அவள் அப்படியே நிற்கவும் இவனுக்கு கோபம் தலைக்கேறியது.. 

உடனே அவளுடைய இரண்டு கைகளையும் அழுத்தமாக பிடித்தான்..

வலி தாங்காமல் அவள் முகம் சுருங்கினாள்..

” வலிக்குது தயவு செஞ்சு என்னுடைய கையை விடுங்க ரொம்ப வலிக்குது”, என்றாள் அவள் கெஞ்சுதலாக.

“ அப்போ ஒழுங்கு மரியாதையா உண்மைய சொல்லு எதுக்காக அவனை பார்க்க போன??”

” நான் எங்க போனா என்ன?? யாரைப் பார்த்தா , யார் கிட்ட பேசினா உங்களுக்கு என்னங்க வந்தது ?? உங்க வேலை என்னவோ அதை மட்டும் பார்த்துட்டு போங்க.. என்ன சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க ?? ஞாபகம் இருக்கா இல்லையா?? 

உங்களுக்கு தேவை உங்களோட சந்தோஷம் அதை மட்டும் பாருங்க அதுக்காக தானே விலை பேசி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.. புருஷன் பொண்டாட்டி மாதிரி என்னை உரிமையா நீங்க திட்டுறதுக்கோ,  என்கிட்ட உரிமை எடுத்து இப்படி கேள்வி கேட்கிறதுக்கோ உங்களுக்கு உரிமை இல்ல..

இப்படி திட்டுறதுக்கும், யார் கூடவோ நான் பேசுவதை பார்த்து கோபப்படுறதுக்கோ நீங்க ஒன்னும் என்னோட நிஜமான புருஷன் கிடையாது.. அப்படித்தான் நீங்க என்கிட்ட ஆரம்பத்தில் சொன்னீங்க எதுக்கும் அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாதுன்னு.. இப்ப நீங்க மட்டும் எதுக்காக என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிறீங்க?? நான் யார் கிட்ட பேசினா உங்களுக்கு என்ன வந்தது மிஸ்டர்??”, என்றாள் முகம் சிவக்க..

” என்னடி சொன்ன ?? எனக்கு என்ன உரிமை இருக்கா?? எனக்கு இல்லாத உரிமை இந்த உலகத்துல வேற எவனுக்கும் கிடையாதுடி உன்கிட்ட”, என்றவன் மூர்க்கத்தனமாக அவளை இழுத்து கட்டிலின்  மீது தூக்கி போட்டான்..

வேகமாக தூக்கி அவன் வீசியதில் இடுப்பு லேசாக வலி ஏற்பட்டுவிட்டது அடிபட்டதில்..

” அம்மா”, என்ற முனங்கலோடு இடுப்பை பிடித்துக் கொண்டு மெதுவாக எழுந்து அங்கிருந்து நகர முற்பட்டாள்.

ஆனால் அதற்கு அவன் விட்டால் தானே ??

பாய்ந்து வந்து அவள் மீது விழுந்து.. எந்த பக்கமும் அவள் நகர முடியாதபடி அவளுடைய இரு கைகளையும் தன் கரங்கள் கொண்டு சிறைப்பிடித்தான்..

கால்களையும் சரி மொத்த உடலையும் சரி எங்கும் நகர்த்த முடியாதபடிக்கு தன்னுடைய மொத்த எடையையும் அவள் மீது சுமத்தி இருந்தான்..

கடவுளே பெரிய பாறாங்கல் வந்து மேலே விழுந்தது போல் இப்படி கணக்கிறதே என்னால் வலி தாங்க முடியல.. எப்போ இவன் எழுந்து.. நான் இங்கிருந்து தப்பித்து போவது?? 

நடக்கிற காரியம் இல்லை போலருக்கு.. இவனை அடிக்கிறதுக்கு கையை கூட நகர்த்த முடியாதபடி என் கை இரண்டையும் லாக் பண்ணி வச்சிருக்கான் படுபாவி.. என்ன பண்றது இப்போ ?? , என்று அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே வன்மையாக அவளுடைய இதழ்களை தீண்டினான் தீரன்..!!

வேண்டாம் வேண்டாம் என்பதுபோல முகத்தை அங்கும் இங்கும் அவள் அசைக்க பார்க்க.. அந்த முயற்சியும் தோல்வியில் முடிய வைப்பது போல அவளின் இதழ்களை மிகவும் வன்மையாக தீண்டி ரத்தம் வரும் அளவிற்கு அவளை நோகடித்தான்..

வலி தாங்க முடியாமல்.. எரிச்சல் ஒரு பக்கம் ரத்தம் ஒரு ஒரு பக்கம் என்று வலியை பிரதிபலிக்கும் விதமாக கண்களில் கண்ணீர் வடிய படுத்திருந்தாள் மித்ரா..

யார் கூட வேணாலும் நான் பேசுவேன் யார் கூட வேணாலும் பழகுவேன்.. அதைக் கேட்க நீ யாரு எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்??  நீ என்ன நெஜமாவே எனக்கு புருஷனா ?? என்று அவள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் அவன் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது..

அதன் வெளிப்பாடாக அவனுடைய முரட்டுத்தனம் மொத்தமும் இப்பொழுது அவள் இதழ்களில் தண்டனையாக இறங்கியது..

கண்களில் கண்ணீர் வழிய படுத்திருந்த தன் மனைவியை கண் திறந்து பார்த்தான் அந்த அரக்கன்..

தாங்க முடியாத வேதனையும் வலியும் அவளுடைய கண்களில் பிரதிபலித்தது..

மெதுவாக நிமிர்ந்த பொழுது தான் அவனுடைய நாவில் உணரப்பட்ட வித்தியாசமான சுவையும் , ரத்த வாடையும் சேர அவளுடைய இதழ்களை அப்பொழுது தான் கவனித்தான் அவன்..

ஏற்கனவே சிவந்திருந்த அவளுடைய இதழ் கடையோரமாக இப்போது இரத்தம் கசிந்து கொண்டிருந்தது..

அதைப் பார்த்து அதிர்ச்சியானான் அவன்..!!

அட கடவுளே, நம்மளுடைய கோபத்தை காட்டணும்னு நினைச்சோம் ஆனா கடைசியில் அது இப்படி முடிஞ்சு போயிடுச்சு அவ்வளவு மூர்க்கத்தனமாகவா நடந்து கொண்டேன் கொஞ்சம் வேகமாக தான் செயல் பட்டுவிட்டேனோ?? அதான்  இப்படி ஆயிடுச்சு.. என்று தன்னை தானா நொந்து கொண்டான் அந்த அரக்கன்..!!

வேண்டுமென்று அவன் எதையும் செய்யவில்லை தான்..

அவனுடைய கோபம் அவன் கண்ணை மறைத்து விட்டது இருந்தாலும், கோபத்தில் ஒருவன் இந்த அளவிற்கா மூர்க்கத்தனமாக நடந்து கொள்வது ??

அதுவும் ஒரு பெண்ணை இந்த அளவிற்கு காயப்படுத்தி இருக்கிறான்..

உதட்டில் ஏற்பட்ட காயத்திற்கு கூட மருந்து போட்டால் இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும் ஆனால் அவன் நடந்து கொண்ட முறையில் அவள் மனதில் ஏற்பட்ட காயத்திற்கு எப்பொழுது மருந்து கிடைத்து அது சரியாகும் என்று தெரியவில்லை.. 

அவன் அவள் மீது உரிமையை நிலைநாட்டுகிறேன் பேர்வழி என்று அவளிடம் மூர்க்கமாக நடந்து கொண்டு மேலும் மேலும் அவளிடமிருந்து விலகி தான் செல்கிறான் அவன்.

அவளுடைய நிலையை பார்த்துவிட்டு அவனே மெதுவாக எழுந்து அமர்ந்தான்..

அவன் கொடுத்த வலி உயிர் வரை சென்று அவளை தாக்கியது..!!

கண்களில் இருந்து வற்றாத கங்கை நீராய் வடிந்து கொண்டே இருந்தது கண்ணீர்.

மெதுவாக எழுந்து அமர்ந்தவள் அவனை இமைக்காமல் அப்படியே பார்த்துக் கொண்டே இருந்தாள்..

அவள் கண்களில் தென்பட்டது சத்தியமாக பயமோ அல்லது கோபமோ கிடையாது..

அதில் தெரிந்தது வித்தியாசமான ஒரு உணர்வு.. !!

அதை வேதனை என்று சொல்வதா அல்லது வருத்தம் என்று சொல்வதா அல்லது அடிபட்ட பாம்பின் வேதனையை குறிக்கும் விதமாக அவளுடைய பார்வை தென்பட்டது என்று எடுத்துக் கொள்வதா என்று அவனுக்கே தெரியவில்லை..

அசைய மறுத்த கருவிழிகளின் வழியே தன் கணவனை ஊடுருவினாள் ஆழமாக..

அந்த நிமிடம்..

அந்த ஒரு நிமிடம் தான்.. 

அதிகமாக தன் தாயை நினைத்து அழ தொடங்கினாள் அவள்..

ஒருவேளை இந்நேரம் அம்மா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா ?? இப்படி பட்ட ஒருவன் வந்து தன்னை காயப்படுத்தி கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்திருப்பானா ?? இதோ இப்போது கூட தன்னை தாங்க முடியாத வேதனைக்கு ஆளாக்கிருக்கிறான்.. இதையெல்லாம் யாரிடம் சொல்லி அழுவது??

யாரிடம் தன்னுடைய வேதனையை பகிர்ந்து கொள்வது..??

அம்மா இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதே என்று வருந்துவது ஒரு பக்கம் இருந்தால்.. இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனையை யாரிடமும் சொல்லி புலம்ப கூட ஆள் இல்லாமல் போய்விட்டதே என்கிற வேதனை தான் அவளை இன்னும் அதிகமாக பாதித்தது..!!

பெற்ற தாய் இல்லை என்று ஆகிவிட தந்தை தான் உலகம் என்று வாழ்ந்தாள்.. அவரும் நெஞ்சில் எட்டி உதைக்காத குறையாக அவளை வேண்டா வெறுப்பாகத்தான் வளர்த்தார்.. அந்த கொடுமையை கூட பகிர முடியவில்லை அவளால் யாரிடமும்..

அதே போல இந்த அரக்கனுக்கு வாழ்க்கைப்பட்டு அவன் தரும் துன்பங்களை கூட யாரிடமும் பகிர்ந்து மனதில் உள்ள பாரம் குறையும் மட்டும் கண்ணீர் வடிக்க கூட முடியவில்லையே..என்ற ஆதங்கம் தான் அவளைக் இப்போது கொன்றது..

தனக்காக இந்த உலகில் யாரும் இல்லை.. தனக்காக யோசிக்கவோ கண்ணீர் வடிக்கவோ யாரும் இல்லை.. என்கிற நினைப்பே அவளை கொன்று கூறு போட்டது..!!

யாருமில்லாத காரணத்தால் தானே தன்னை இப்படி எல்லாம் செய்கிறான் தட்டிக் கேட்க ஆள் இல்லை என்பதால் தானே தனக்கு இப்படி ஒரு நிலை?? என்கிற எண்ணம் தோன்றவும் கண்ணீர் தாரைதாரையாக கொட்டியது அவளுக்கு..!!

– தொடரும்..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page