இதழ் – 17
வீட்டிற்குள் வந்த அகிலா, கிச்சனில் ராகவனும் அருவியும் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து மீண்டும் தோட்டத்திற்கே ஓடினாள்.
எதிர்பாராமல் தன் உதடு அருவியின் உதடு மேல் பட்டதும், மின்சாரம் சாக்கடித்தது போல், தன் உடலில் மின்சாரம் பாய்ந்ததை உணர்ந்தவன் சட்டென அவளை விட்டு விலகினான்.
திடீரென அவன் விலகியதும், “இவருக்கு என்ன ஆச்சு? இவரைப் புரிஞ்சிக்கவே முடியல” எனத் தன்னைத் தானே நொந்து கொண்டவள் கிச்சனில் வேலைகளை முடித்துவிட்டு துடைத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
மெதுவாக எட்டிப்பார்த்தபடி வந்தாள் அகிலா. யதார்த்தமாகத் திரும்பிப் பார்த்த அருவி, “இப்ப எதுக்கு பூனை போல எட்டிப் பார்த்துட்டு வர?” எனக் கேட்டாள்.
“இல்லை… இங்க யாராவது இருக்காங்களான்னு பாத்துட்டு வந்தேன்.”
“இங்க யார் இருக்கப் போறாங்க?”
“இல்லையே… உன் கூட ஒருத்தர் இருக்குற மாதிரி இருந்துச்சே.”
“அதுவா… அது பூனை” என்றாள் அருவி தடுமாற்றத்துடன்.
“அந்த பூனைக்கு ரெண்டு கால் இருக்கும் சரியா!!” என்றாள் அகிலா சிரித்தபடி.
அருவி அமைதியாக நிற்க, அவளருகில் வந்தவள், “முதல்ல கிச்சன்ல நானும் அம்மா மட்டும்தான் இருப்போம்… ஐயா கூட வரமாட்டார்… ஆனா இப்ப புதுசா ராகவன் அண்ணா வர ஆரம்பிச்சிட்டாங்க… அதான் இப்ப அவரு இருக்காரா இல்லையானு பார்த்தேன்” என்றாள்.
“உங்க அண்ணனுக்கு இங்க என்ன வேலை?”
“அதான்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அண்ணன் பார்த்த வேலையைத் தான் நான் பார்த்தேனே.”
“நீ என்ன சொல்ற?” எனக் கேட்ட அருவி அவளை நிமிர்ந்து பார்த்தாள்.
“நான் எதையும் பாக்கலன்னு சொன்னேன்” என்றாள் குறும்புடன்.
அவள் கூறியதைக் கேட்ட அருவி வெட்கத்தில் அமைதியானாள்.
“அகிலா…” என அவள் தாய் வாசலில் நின்று அழைத்தாள்.
“என்ன? எங்க அம்மா குரல் கேக்குது” என அகிலா வெளியே வர, அவள் பின்னாலேயே வந்தாள் அருவி.
இங்கு தோட்டத்தில் சரஸ்வதி சேதுராமனிடம் பணிவாக நின்று பேசிக் கொண்டிருந்தாள் அகிலாவின் தாய் தனம்.
“ஐயா! என்னோட மருமகன் வந்திருக்கிறார்.”
“எதுக்கு வந்துருக்கான்?” எனக் கேட்டார் சேதுராமன்.
“நான் மனம் திருந்திட்டேன்… என் பொண்டாட்டியைக் கூட்டிட்டு போறேன்… என்கூட சேர்த்து வைங்கன்னு சொல்றாரு ஐயா” என்றாள் தனம்.
“அவன் உன் பொண்ணை அவ்வளவு டார்ச்சர் பண்ணியிருக்கான்… இப்ப திருந்தி வந்திருக்கான்னு சொல்ற… அவனை எப்படி நம்புறது?” எனக் கேட்டார் சேதுராமன்.
“எவ்ளோ நாள் தான் அவளை எங்க கூட வச்சிக்க முடியும் ஐயா?”
“அதுக்காக?” என சரஸ்வதி கேட்டார்.
“இப்ப நான் என்ன தான் ஐயா பண்றது?”
“இதுல அகிலாவோட விருப்பமும் முக்கியம்… அவளை நீ வற்புறுத்தக் கூடாது.”
“சரிங்கய்யா” என தனம் தலையசைத்தாள்.
அப்பொழுதுதான் அகிலாவும் அருவியும் அங்கு வருவதைப் பார்த்து,
“இங்க வா” என அகிலாவை அழைத்தார் சேதுராமன்.
“என்னங்க ஐயா?” என்றபடி பணிவாக வந்து நின்றாள் அவர் முன்னால்.
“உன் வீட்டுக்காரர் வந்திருக்கிறதா உங்க அம்மா சொல்றாங்க… அவர் கூட போக உனக்கு விருப்பமா? நீ உன் புருஷன் கூட போய் வாழறியா?” எனக் கேட்டார்.
அமைதியாக இருந்தாள்.
“உன் மனசுல என்ன நினைக்கிறாயோ அதைச் சொல்லு… உன் விருப்பத்துக்கு மாறா நாங்க எதுவும் செய்ய மாட்டோம்… உங்க அம்மா என்ன சொன்னாலும் அதை நாங்க பார்த்துக்கிறோம்” என்றார் சரஸ்வதி.
“இல்லம்மா… என் புருஷன் குடிச்சா தான் அந்த மாதிரி என்னை போட்டு அடிப்பாரு… சண்டை போடுவாரு… மத்தபடி என் மேல பாசமாதான் இருப்பாரு.”
“அதனால?” எனக் கேட்டார் சேதுராமன்.
“அதனால நான் அவர் கூடவே போறேன்” என்றாள் அகிலா.
“சரி… மறுபடி இதே மாதிரி அவன் உன் கூட சண்டை போட்டான்னா… இனிமே உன் கூட நான் வாழ மாட்டேன்… என்னைத் தேடி வராத… அப்படியும் தொந்தரவு பண்ணினா போலீஸ்ல சொல்லி கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்… சொல்லிட்டு வந்துரு… புரிஞ்சுதா?” என்றார் சரஸ்வதி.
“சரிங்கம்மா” என்றாள் அகிலா.
இப்பொழுதுதான் அவர் முகத்தில் சந்தோஷத்தைப் பார்த்தது போல இருந்தது தனத்திற்கு, சேதுராமன் சரஸ்வதிக்கும் அருவிக்கும் கூட.
“அப்போ சந்தோஷமா உன் புருஷன் வீட்டுக்கு கிளம்பு” என்றார் சேதுராமன் தன் மனைவியைப் பார்த்தபடி.
அவர் பார்வையின் அர்த்தம் புரிந்த சரஸ்வதி வீட்டிற்குள் சென்று ஒரு தாம்பூலத்தில் சேலை, பூ, குங்குமம், வளையல், பணம் கொண்டு வந்து அகிலாவிடம் கொடுத்தார்.
சேதுராமன் சரஸ்வதி காலில் விழுந்தாள் அகிலா.
“நீ நல்லா இரு” என அவளை இருவரும் ஆசீர்வதித்தனர்.
அவர்களிடம் விடை பெற்ற அகிலா அருவியிடம் வந்து அவளை கட்டி அணைத்துக் கொண்டாள். அவள் கண்களிலும் கண்ணீர்.
“நான் போயிட்டு வரேன்” என்றாள் அகிலா.
“சரி” எனத் தலையசைத்தாள் அருவி.
“நான் என் புருஷன் வீட்டுக்கு போயிட்டு வரேன்… நீ பார்த்து இருந்துக்கோ… அதான் கிச்சன்ல கூட என்ஜாய் பண்றியே” எனக் குறும்புடன் கூறிய அகிலா மீண்டும் அவள் கன்னத்தைக் கிள்ளிவிட்டுச் சென்றாள்.
தன்னை அறியாமல் வெட்கப்பட்டாள் அருவி.
மறுநாள் காலையில் அருவி அவனுக்கு டீ கொடுத்துவிட்டுச் செல்ல, “ஏய்! நில்லு” என்றான் ராகவன்.
திரும்பி நின்றவள், “என்னங்க?” எனக் கேட்டாள்.
“இனிமேல் என் அம்மா அப்பா கிட்ட நீ கோவமாதான் பேசணும்.”
“என்ன சொல்றீங்க?” என அதிர்ந்தவள், “அவங்க கிட்ட நான் எதுக்காக கோவமா பேசணும்?” என்று கேட்டாள்.
“முதல்ல என்னை எதிர்த்து பேசறத நிப்பாட்டு… நான் என்ன சொல்றேனோ அதைத்தான் நீ ‘சரி’னு கேட்கணும்… செய்யணும்… அவங்க கிட்ட ரொம்ப கோவப்படாம… அதே நேரம் கோபப்படணும்… புரியுதா!! அப்படித்தான் நீ பேசணும்.”
“இவர் என்ன சொல்றாரு?” என அருவி புரியாமல் அவனைப் பார்த்தாள்.
“அவங்க என்ன சொன்னாலும் நீ எதிர்த்து பேசணும்.”
“இல்லைங்க!! வேணாம்… அவங்க மனசு கஷ்டப்படும்.”
“அப்படித்தான் நீ பேசணும்… புரிஞ்சுதா!! அவங்க உன்னை வெறுக்கணும்… அந்த மாதிரி நீ நடந்துக்கணும்.”
“வேணாங்க… என்னால அப்படி செய்ய முடியாது” என்றாள் கண் கலங்கியபடி.
“ஒழுங்கா நான் சொல்ற மாதிரி செய்… இல்லைன்னு வை… உங்க அம்மா அப்பா…” என்றான் அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தபடி.
“இல்லைங்க!! நான் நீங்க சொல்ற மாதிரியே நடந்துக்கறேன்” என்றவள் கீழே வர,
“அருவி… இன்னைக்கு நீ சிக்கன் பிரியாணி செஞ்சுரு… உங்க மாமா உன் கையால பிரியாணி செஞ்சு சாப்பிடணும்னு சொல்றாரு” என்றார் சரஸ்வதி.
“நான் செய்ய மாட்டேன் அத்தை.”
“ஏன்?”
“தெரியும் ஆனா!! நான் சமைக்க மாட்டேன்.”
“ஏன்?” என சரஸ்வதி கேட்டார்.
“எனக்கு சமைக்கத் தெரிஞ்சா நான் சமைக்கணுமா? என்னை உங்க வீட்ல வேலைக்காரினு நினைச்சிட்டு இருக்கீங்களா? சரி… எதுவும் சொல்லக் கூடாதுனு நானும் பொறுமையா இருக்கலாம்… பெரியவங்களை எதிர்த்து பேசக் கூடாதுனு நினைச்சா… எப்ப பாத்தாலும் அது சமைச்சுக் கொடு… பக்கடா செஞ்சுக் கொடுன்னு சொல்லிட்டு இருக்கீங்க…”
அவள் பேசுவதை நம்ப மாட்டாமல் அவர் பார்த்துக் கொண்டிருக்க, “நீங்க இவ்ளோ பெரிய பணக்காரவங்க… எவ்வளவு வசதி இருந்தும்… பங்களா, கார் இருந்தும்… மருமகளை மாடா வேலை வாங்குறீங்க ஏன்?” என அவள் பேசிக்கொண்டே போக, சரஸ்வதியால் அவள் பேசுவதை நம்ப முடியவில்லை.
தான் அதிகமாகப் பேசிவிட்டோமோ என நினைத்து அருவி மன வேதனையுடன் அமைதியாக வாயை மூடிக்கொண்டாள்.
அவள் அருகில் வந்து அவள் தலையை வாஞ்சையாகத் தடவியவர், “இப்படியெல்லாம் சொல்லக் கூடாது அருவி… வீட்ல எவ்வளவு வசதி பணம் இருந்தாலும்… எத்தனை வேலைக்காரங்க இருந்தாலும்… கட்டுன புருஷனுக்கும்… வீட்ல எல்லாருக்கும் நாமதான் சமைத்துக் கொடுக்கணும்… அதுதான் அவங்களுக்கு நம்ம மேல பாசம் அதிகமாகும்… சரியா!! இனிமே எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் நான் சமைக்கிறேன்… உன் புருஷனுக்கு மட்டும் நீ சமைச்சுக் கொடு… சரியா… அப்பதான் அவனுக்கு உன் மேல இன்னும் காதல் அதிகமாகும்… புருஷன் பொண்டாட்டிக்குள்ள அந்த ஒரு பாசம் என்பது கிடைக்கும்… பொண்டாட்டி கை பக்குவத்துல சாப்பிடணும்னு தான் எல்லா புருசனும் ஆசைப்படுவாங்க… சரியா?” என்றவர் மென்மையாக அவளிடம் கூறிவிட்டுச் சென்றார்.
வேகமாக அறைக்கு ஓடிவந்த அருவி வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள்.
ஃபைல் பார்த்துக் கொண்டிருந்த ராகவன் அவளை நிமிர்ந்து பார்த்து, “என்ன?” எனக் கேட்டான்.
“ஒண்ணும் இல்ல” என்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு துணிகளைத் துவைக்கச் சென்றாள்.
இங்கு சரஸ்வதி அமைதியாக அமர்ந்திருக்க, “என்னாச்சு? நான் கூப்பிடுறத கூட கவனிக்காம… மேடம் அப்டி என்ன யோசனையில் இருக்கீங்க?” என மனைவியின் அருகில் அமர்ந்தபடி கேட்டார் சேதுராமன்.
“இன்னைக்கு காலையில நம்ம மருமக அருவி பேசுனதை நானும் கேட்டேன்.”
“அருவிக்கு என்ன ஆச்சுன்னு தெரியலங்க!! ராகவனுக்கும் அவளுக்கும் ஏதோ சண்டையா இருக்கும் போல… அதனால அவ கொஞ்சம் எதிர்த்துப் பேசிட்டா…”
“அருவி இப்படிப் பேசுற பொண்ணு இல்லயே.”
“ஆமாங்க! நானும் அததான் யோசிச்சிட்டு இருக்கேன்.”
“சரி… விடு… நீ பீல் பண்ணாத” என்ற தன் கணவன் கூறியதில் அமைதியானார் சரஸ்வதி.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, “அருவி… இந்த கீரையை கூட்டு வச்சு… ரசம் வை.”
“வாயை மூடுங்க” என்றாள் அருவி சற்று சப்தமாக.
சரஸ்வதி அப்படியே அதிர்ந்து நின்றார்.
“என் புருஷனுக்கு என்ன சமைச்சுக் கொடுக்கணும்னு எனக்குத் தெரியும்… நீங்க ஒண்ணும் சொல்லத் தேவையில்லை” என அருவி கூறிக்கொண்டிருக்கையில் அந்த வழியாக வந்த ராகவன் அவள் பேசியதைக் கவனித்துவிட்டான்.
“இனிமே என்ன சமைக்கணும்… என்ன வைக்கணும்னா சொல்லிக்கிட்டு இருக்காதீங்க… எனக்குத் தெரியும்! நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க” என்றாள் அருவி கோவமாக எங்கோ பார்த்தபடி.
அமைதியாக சரஸ்வதி தன்னறைக்குச் சென்றுவிட்டார். அவருக்கு அருவி பேசியது மிகவும் வருத்தமாக இருந்தது.
சமைத்து வைத்துவிட்டு அறைக்கு வந்தாள் அருவி. அங்கு ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான் ராகவன்.
“என்ன சொன்ன?” எனக் கேட்டான்.
“நான் யார்கிட்ட என்ன சொன்னேன்?”
“அம்மாகிட்ட என்ன சொன்ன?”
“அவங்க என்னை ரசமும் கீரைப் பொரியலும் வைக்க சொன்னாங்க… நான் உங்க இஷ்டத்துக்கு சமைக்க முடியாதுன்னு” என அவள் கூறி முடிக்கும் முன் “பளார்… பளார்” என அவன் கன்னத்தில் அறைந்தான் ராகவன்.
அவன் அடித்த அடியில் பொத்தென கீழே விழுந்தாள்.
“என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? இவ்வளவு சத்தமா கத்துற… அதுவும் என் அம்மா கிட்ட… நீ பேசும்போது அவங்க மனசு எப்படி வாடிப்போயிருச்சு தெரியுமா!! இனிமே என் அம்மாகிட்ட அப்படிப் பேசினா உன்னக் கொன்னே போட்டுடுவேன்… பாத்துக்கோ” என்றான் ஆத்திரத்துடன் ராகவன்.
♥️ இவன் என்ன லூசா… தெரியலயே… இன்னும் அருவியை இவன் என்னவெல்லாம் கொடுமைப்படுத்தப் போறானோ தெரியல…
தெரிஞ்சுக்க அடுத்த எபி மிஸ் பண்ணாம படிங்க பிரண்ட்ஸ் ❤️
