அத்தியாயம்-15

அதில் அவளும் எழுந்து நின்று கொள்ள அவளை முறைத்து பார்த்தவன் “என்ன பண்ணிட்டு இருக்க எதுக்கு என் பக்கத்துல வந்து உட்காற?  இவ்ளோ பெரிய இடத்துல உனக்கு உட்கார ஒரு சின்ன இடம் கூடவா கிடைக்கல?” என்றான் காட்டமான குரலில். 

“கரண் ப்ளீஸ் ரொம்ப குளிருதுடா! நம்ம ரெண்டு பேரும் உரசிட்டு உக்காந்தோம்னா கொஞ்சம் ஹீட்டா இருக்கும்ல அதுக்காக தான் பா பண்ணினேன்.  மத்தபடி வேற எந்த நோக்கத்தோடு உன் பக்கத்துல வரல ப்ளீஸ் புரிஞ்சுக்கோ கரண்!”  என்றவள் அவன் சுதாரிக்கும் முன்பு வேகமாக வந்த அவனை கட்டிப் பிடித்துக் கொண்டாள். 

அதில் தன்னில் இருந்து அவளை பிரித்தவன் வேகமாக அவளை அறைய முற்பட அவனது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டவள் அப்படியே அதை தன்னுடைய கன்னங்களில் வைத்து தேய்த்துக் கொண்டே அப்படியே கழுத்துக்கு கீழே கொண்டு செல்ல முயல நொடிப்பொழுதில் கையை எடுத்துக் கொண்டவன் தன்னுடைய கோபத்தை  கட்டுப்படுத்திக் கொண்டு நிதானமான குரலில் பேச ஆரம்பித்தான். 

“ஆராத்யா நீ குளிருக்கு பயந்துட்டு தான் இப்படி எல்லாம் பண்றேன்னு எனக்கு புரியுது ஆனா எனக்கு சுத்தமா நீ பண்றது புடிக்கல. தயவு செஞ்சு என் பக்கத்துல நெருங்காம இரு.  நான் உனக்கு ஏதாவது இங்க கவர் பண்ணிக்க இருக்கான்னு பார்க்கிறேன்!”  என்றான். 

அவளோ மீண்டும் அருகில் நெருங்கிக் கொண்டே “இல்ல கரண் ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோ என்னால சுத்தமா முடியல. ரொம்ப குளிருது எனக்கு கோல்டுனாவே ஒத்துக்காது!”  என்றவள் லேசாக திறந்து இருந்த  அவனது சட்டை  பட்டனை அவன் சுதாரிக்கும் முன்பு வேகமாக இன்னும் இரண்டு பட்டனை திறந்து விட்டவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள அதில் அருவருப்படைந்தவன் அவளை தள்ள முற்பட ஆனால் அவளோ அவனை மிகவும் இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டாள். 

அவளிடம் பலத்தை  காட்ட விரும்பாதவன் “ஆராத்யா இப்ப மட்டும் நீ என்ன விட்டு பிரியல இதுக்கப்புறம் நடக்கப் போற எதுக்கும் நான் பொறுப்பு கிடையாது!  தயவு செஞ்சு என்கிட்ட இருந்து தள்ளிப் போயிடு எனக்கு அருவருப்பா இருக்கு”  என்றான் முகத்தை சுழித்த வண்ணம். 

அதில் அவனைக் கோபமாக நிமிர்ந்து பார்த்தவள் “நான் கட்டிப்புடிச்ச உனக்கு அருவருப்பா இருக்கு!  இதுவே அந்த அபி ரஞ்சிதா ஜூனியர் பொண்ணு கட்டிப்பிடிச்சா உனக்கு ரொம்ப சுகமா இருக்கும் இல்ல எனக்கு ஒரு விஷயம் புரியல எந்த விதத்துல நான் அவளை விட குறைஞ்சிட்டேன் நானும் ஃபர்ஸ்ட் இயர் ல இருந்து உன்கிட்ட நெருக்கமாக ட்ரை பண்ணிட்டு இருக்கேன் நீ ஏன் என்னோட காதல புரிஞ்சுக்க மாட்டேங்குற உதாசீனப்படுத்துற நான் மத்தவங்க கிட்ட எப்படியோ உன் கிட்ட அன்பா தானே நடந்துக்கிறேன் உனக்கு ஏன் என்னோட காதல் புரிய மாட்டேங்குது கரண்!”  என்றால். 

அவளை வேகமாக தன்னிடம் இருந்து தள்ளி விட்டவன் “நீ சொல்றதெல்லாம் சரிதான் நீயும் அவளும் ஒன்னு கிடையாது அவ என் மனசுல இருக்குற இதயராணி என்னுடைய மகாராணி, ஆனா நீ?  என்றவன் அவளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு 

“என்கூட ஒரே கிளாஸ்ல படிக்கிற பொண்ணு மட்டும் தான். எனக்கு உன்ன பிடிக்கவே பிடிக்காது தயவு செஞ்சு இன்னொரு முறை அவளையும் உன்னையும் கம்பேர் பண்ணி என்கிட்ட பேசின அடுத்தவாட்டி பேசறதுக்கு உன் வாய் இருக்காது ஞாபகம் வச்சுக்கோ அடிச்சு ஒடச்சிடுவேன்! இன்னொரு முக்கியமான விஷயம் நீ பண்றதுக்கு பேரு காதல் கிடையாது. காதலிக்கிறவங்க பிடிக்கலைன்னு சொன்னா ஒதுங்கி போயிடனும் அவங்களுக்காக காத்து இருக்கணும் முடிஞ்சா ஆனா நீ பண்றது எனக்கு காதல் மாதிரியா தோணல!  என்றான். 

அதில் இன்னும் வெறியானவள் அவன் அருகில் சென்று முத்தமிட முனைய ஓங்கி அவளது கன்னத்தில் தற்பொழுது பொறுக்க முடியாமல் அறைந்து விட்டான். 

அதில் பொத்தொன்று தரையில் விழுந்தவள் “ஏண்டா உனக்கு என்ன பிடிக்க மாட்டேங்குது! ஆ ஆ .. என்று அந்த அறையை அதிரும் வண்ணம் கத்தியவள் 

“இப்ப மட்டும் நீ என்கிட்ட வரல கண்டிப்பா நான் என்னோட ட்ரெஸ் எல்லாம் கிழிச்சிட்டு நீ என்ன கெடுத்த என சொல்லிடுவேன் என்றால்.

அதில் அவளை அதிர்ச்சி அடைந்து பார்த்தவன் லூசு மாதிரி ஏதாவது பண்ணிட்டு இருக்காத நானே தப்பிக்க முடியுமா முடியாதா என்று பார்த்துக் கொண்டிருக்கிற நேரத்தில் நீ வேற ஏதாவது பண்ணிட்டு இருக்காத எனக்கு டென்ஷன் ஆகுது!”  என்றான் கடுப்புடன். 

“நான் ஒன்னும் பொய் சொல்லல இன்னைக்கு எனக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும் ஒன்னு நீ எனக்கு வேணும் இல்லனா உனக்கு அந்த அபி வேண்டாம்!”  என்றால் அவள் கோவமான குரலில். 

அதில் இவன் கோபமடைந்து அவளது அருகே நெருங்கி கழுத்தைப் பிடித்து நெறித்தவன் “நீ யாரடி அவ எனக்கு வேணாம்னு சொல்றதுக்கு?  நான் சொல்ற நல்லா கேட்டுக்கோ அபி ஒருத்தி மட்டும் தான் இந்த கரனுக்காக பிறந்தவ நானும் என்னுடைய காதலும் அவளுக்கு  மட்டும் தான் . எங்க அம்மாவுக்கு அப்புறம் இந்த உலகத்துல உயிரா நினைக்கிறது  அவளை மட்டும் தான் அவளை பத்தி ஏதாவது தரகுறைவா பேசின கொன்னுடுவேன் ஜாக்கிரதை!”  என்றவன் கழுத்திலிருந்து கையை எடுக்க இறுமி க் கொண்டே கீழே அமர்ந்தவள் 

அவனை முறைத்துப் பார்க்க மட்டும் தான் முடிந்தது அவளால். என்ன சொன்னாலும் அவன் தன் இழுப்புக்கு வராமல் இருப்பது ஏனோ அவளுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.  விவரம் தெரிந்த வயதில் இருந்து தனது அழகை பார்த்த மற்றவர்கள் தன் பின்னால் சுற்ற தன் அழகை வைத்து யாரை வேண்டுமானாலும் தன் வலையில் வீழ்த்த முடியும். தனது காலுக்கு கீழ் கொண்டுவர முடியும் என்று அகந்தை கொண்டவள் இவனின் பாராமுகம் ஒதுக்கம் இவளை விட அழகில் குறைந்தவள் பணத்தில் குறைந்தவள் அந்தஸ்தில் குறைந்தவளை இதய ராணி மகாராணி என்று போற்றுவது அவளுக்கு மிகவும் கோபத்தையும் இயலாமையும் ஆற்றாமையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது. 

வெளியே என்ன செய்கிறார்கள் என்று பார்த்துவிட்டு வரலாம். 

அந்த அறையில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் இன்னும் சில இடங்களுக்கெல்லாம் சென்று பார்த்துவிட்டு  ஸ்னாக்ஸ் பிரேக் கொடுத்துவிட்டு அந்த இன்சார்ஜ் நபரும் சென்றுவிட பாத்ரூம் செல்ல வேண்டும் என்று மாணவ மாணவிகள் அவர்களுக்கு உரிய இடத்திற்கு சென்று விட தேவன் தேவி ஸ்ரீ நந்தன் மூவரும் ஒரு இடத்தில் அமர்ந்தவர்கள் இவ்வளவு நேரம் கரண் இல்லாததை இப்பொழுதுதான் கவனித்தனர். 

“எங்கடா போனான் இந்த கரண்?  யாராவது அவனை பாத்தீங்களா?” என்று கேட்டால் தேவி. 

“இல்ல நம்ம அந்த freezer  அறையில் இருந்து வெளில வந்ததுக்கு அப்புறம் நான் பாக்கல!”  என்று யோசித்து சொன்னான் தேவன். 

“டேய் அது ஃப்ரீசர் அறை இல்லடா ஸ்டோரேஜ் ரூம்டா !” என்றால் தேவி அவனது தலையில் அடித்த வண்ணம். 

“அதுக்கு எதுக்குடி என்னை அடிக்கிற எனக்கு தெரிஞ்சத நான் சொன்னேன்!” என்றான்.

“சரிடா!”  என்றவள்

” ஆனா உனக்கு வந்து வாழ்வ பாத்தியா எங்க கிளாஸ்ல வரவேண்டிய கோ – ஆர்டினேட்டர் வரலைன்னு சொல்லி உன்ன வர வச்சுட்டாங்க ஆனா உன் கிளாஸ் பசங்க உன் மேல பயங்கர பொறாமையில இருப்பாங்க!”  என்றால் தேவி. 

அப்பொழுது அங்கே வந்த ஆராத்யாவின் தோழி ஒருத்தி “தேவி ஆராத்யாவை பார்த்தியா?”  என்றால். 

தேவி அவளைப் பார்த்த முறைத்து விட்டு “அவளை பத்தி எதுக்காக என்கிட்ட கேக்குற எனக்கு என்ன தெரியும் ?” என்றால். 

“நான் எல்லாத்துகிட்டையும் கேட்டுட்டு தான் இருக்கேன் உன் கிட்ட மட்டும் கேட்கல அவளை காணோம்!”  என்றவள் பரபரப்பாக இருக்க

அதைக் கேட்ட தேவி தேவன் ஸ்ரீ நந்தன் மூவரும் “என்ன ஆச்சு என்ன சொல்ற?” என்றனர். 

“ஆமா ரொம்ப நேரமா நானும் தேடிட்டு இருக்கேன் அவளை காணோம் சரி எங்கையாவது ரெஸ்ட் ரூம் போயிருப்பா இல்ல ஏதாவது போன் கால் பேச போயிருப்பானு நானும் வந்துருவான்னு அமைதியா இருந்தேன்.  ஆனா நானும் ரெஸ்ட் ரூம் பக்கமெல்லாம் போயிட்டு பாத்துட்டு வந்துட்டேன் அவளை எங்கேயும் காணோம் எனக்கு பயமா இருக்கு!”  என்று அவள் லேசாக அழுக ஆரம்பிக்க 

உடனே “போன் பண்ணி பாத்தீங்களா?”  என்றான் ஸ்ரீ நந்தன்.

” இல்ல போன் போகல ட்ரை பண்ணி பாத்துட்டேன்!”  என்றால் அந்த தோழியும். 

ஸ்ரீநந்தன் “எங்க தான் போனா இந்த கரணையும் இவ்வளவு நேரம் ஆளையே காணோம் ?” என்றவன்

அவனுடைய போனை எடுத்த கரணுக்கு தொடர்பு கொள்ள அதுவோ லைனே போகவில்லை.

அதில் எரிச்சல் அடைந்தவன் “இந்த கரண் வேற எங்க போனான்னு தெரியல? போன் பண்ணினாலும் போக மாட்டேங்குது இவனுக்கும்?”  என்றான்.

அதைக் கேட்டு அந்த தோழியும் “என்ன ஆச்சு கரன் காணாமா?  எங்க அவனை காணோம் உங்க கூட இல்லை. நானும் ரொம்ப நேரமா இவளையும் காணோம் அவனையும் காணோம் என்னதான் ஆச்சு?”  என்றால் அவளும் .

“தெரியல அவனும் எங்கேயாவது ரெஸ்ட் ரூம் ஏதாவது போய் இருப்பாண்டா நானும் அமைதியா இருந்துட்டேன் இல்ல ஏதாவது போன் கால் வந்து இருக்கும்னு ஆனா அவனையும் காணோம் !” என்றான் தேவன் .

“அப்ப வாங்க போய் தேடலாம்!”  என்று கூற இவர்கள் பேச்சைக் கேட்டு அங்கே வந்த சில மாணவர்களும் விஷயம் அறிந்து உடனடியாக இந்த தகவல் அங்கே இருந்த மூன்று ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட அவர்களும் மாணவர்களை “ஜாக்கிரதையா இருக்க மாட்டீங்களா வந்த இடத்தில் இப்படித்தான் பிரச்சனையை இழுத்து விடுவீங்களா?”  என்று திட்டி விட்டு

தேவியிடம் “என்னமா தேவி எங்க போனான் கரண்?”  என்று அவரிடம் விசாரிக்க 

“மேம் எனக்கும் தெரியல எங்க கூட தான் வந்தான் போன் பேசிட்டு இருக்கான்னு நானும் அமைதியா இருந்தேன். ஆனா இப்ப அவனை ஆள காணோம் !” என்றால்.

“இப்படி வந்த இடத்தில் சின்ன குழந்தை மாதிரி ஏமா  பண்றீங்க?”  என்று எரிச்சல் அடைந்தவர் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த கம்பெனியை சேர்ந்த ஒருவரிடம் விஷயத்தை கூற

” என்ன மேடம் பசங்கள ஒழுங்கா பாத்துக்க மாட்டீங்களா?”  என்று கடிந்து கொண்டவர் 

“சரி வாங்க எங்கெல்லாம் போனீங்களோ  ஆரம்பத்தில் இருந்து தேடலாம்!”  என்று கூறியவர் அனைவரையும் அழைத்துக் கொண்டு அவர்கள் சென்ற ஒவ்வொரு இடத்திற்கு சென்று தேடி கொண்டு இருந்தனர்.  பாத்ரூம் கேன்டீன் என்று இந்த இடங்களிலும் தேடி விட்டு வர 

அப்பொழுது வேறு எங்கெல்லாம் போனோம் என்று தேவன் யோசித்தவன் “சார்! ”  என்று அந்த கம்பெனியை சேர்ந்தவரின் அருகில் வேகமாக ஓடியவன் 

“சார் எல்லா இடத்துக்கும் பாத்துட்டு வந்துட்டோம் அந்த ஸ்டோரேஜ் ரூம் போனோம் இல்ல நீங்க கூட நிறைய Box  அடுக்கி வச்சிருந்தீங்களே அந்த இடம் இன்னும் பார்க்கவில்லை சார் மே பி அங்க மாட்டிக்கிட்டாங்கன்னா ரொம்ப கஷ்டமா போயிடும் நாங்க இருந்தப்பவே ரொம்ப ஜில்லுனு இருந்தது ப்ளீஸ் வாங்க சார் எதுக்கும் அந்த இடத்துக்கு போய் ஒரு வாட்டி பார்த்தரலாம்!”  என்றான். 

அவரோ “அய்யய்யோ என்னப்பா சொல்ற அந்த இடத்துல ரொம்ப ஜில்லுனு இருக்குமே?”  என்று அனைவரும் வேக வேகமாக அந்த இடத்தை நோக்கி ஓடினர். 

அதில் கடைசியாக வேகமாக நடந்து கொண்டு வந்திருந்த ஆராத்யாவின் தோழி ஒருத்தி ‘ என்ன நம்ம பண்ண வேண்டிய சீன் எல்லாம் இவன் பண்ணிட்டு இருக்கான் சரி ஓகே யார் மூலமா அவங்க கிடைச்சா நம்மளுக்கு என்ன டாஸ்க் கரெக்டா அவ சொன்ன மாதிரி ஒரு மணி நேரத்துல கண்டுபிடிக்கிறாங்க இதுவே போதும் அவ நினைச்சதை அவ செஞ்சு இருப்பா ‘ நினைத்தவள்  என்று இவர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர். 

தற்பொழுது அந்த குளிரூட்டப்பட்ட அறையில் இருவரும் கிட்டத்தட்ட நடுங்கி கொண்டு இருந்தனர்.

 என்னதான் அவள் நெருங்கி வர முயற்சி செய்தாலும் தன்னுடைய கோபமான பார்வையில் அவளை கிட்டத்தட்ட எரித்துக் கொண்டிருந்தான் .

அதனால் அவளும் அதற்கு மேல் கையாலாகாத தனத்தை மறைத்துக் கொண்டு அவன் அருகில் நெருங்காமல் அங்கே ஓரமாகக் கிடந்த ஒரு தார்ப்பாயை கண்டுபிடித்தவள் அதை போர்த்திக் கொள்ள அவளது  நேரம் என்னவோ அதுவும் ஈரமாக இருந்ததால் அது அவள் மேல் பட்டு  இன்னும் குளிர் எடுக்க அதை தூக்கி ஓரமாக போட்டவள் அட்டை பெட்டிகளை அவளை சுற்றி வைத்து அதற்கு இடையில் குளிர் அண்டாதவாறு அமர்ந்து கொள்ள பார்க்க பாவம் அந்த பெட்டியிலும் ஜில் என்ற பொருட்கள் இருப்பதால் இதுவும் செய்ய முடியாத நிலையில் ஓரமாக ஒரு இடத்தில் கை கால்களை குறுக்கி அமர்ந்து கொண்டால். 

அந்த கம்பெனியை சேர்ந்தவரும் அதாவது நமது ஆராத்யாவுக்கு உதவுவதாக சொன்னவரும் வந்து அந்த மிகப்பெரிய அறையின் வாசல் கதவின் வெளியே நிற்க “டே கரண் உள்ள இருக்கியாடா?”  என்று தேவன் தேவி ஸ்ரீ நந்தன் கத்த ஆராத்யா உடைய தோழிகளும் “ஆரா , ஆராத்யா…”  என்று கத்தினர் .

அவரோ கடுப்பாக “ஏம்மா இப்படி எல்லாம் கத்தாதிங்க கம்பெனியில இருக்கிறவங்க  வேலை எல்லாம் பாதிக்கும். நீங்க என்ன காட்டு கத்து கத்தினாலும் உள்ள கேக்காது . தயவு செஞ்சு அமைதியா இருங்க. இப்படி கத்திக்கிட்டே இருந்தீங்கன்னா  எதுவுமே பண்ண முடியாது!”  என்று கோபத்தில் கத்தியவர்  தனது ஆக்சிஸ் கார்டை வைத்து அந்த அறையின்  கதவை திறக்க  உள்ளே கிட்டத்தட்ட மயங்கிய நிலையில்  கரண் அமர்ந்திருக்க அவனை ஒட்டி கைகளைப் பிடித்து கட்டிக் கொண்டு  அமர்ந்திருந்தாள்  ஆராத்யா.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page