உயிராக வந்த உறவு – அத்தியாயம் 10
அவள் தாரணியின் அருகே வந்து “இந்த அலுவலகம்,உங்க தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இடம் இல்லையென” அவன் சொல்லவும்
தாரணி தலையசைத்த படி“அது தான் எனக்கும் வேணும்.”என சொல்லவும்
எவ்வளவு திமிர என அவளை அவன் பார்த்தபடி,’ இவ வாழ்க்கையில் என்றும் நடந்திருக்கும் கண்டிப்பா தெரிஞ்சே ஆகணும்’ என அவன் நினைத்துக் கொண்டே இருக்கும் போது அவனை அலைபேசி சிணுங்க, அதில் அர்ச்சனா என்று பெயர் வரவும்
அவன் மொபைலை கட் பண்ண தொடர்ந்து இரண்டு மூன்று தடவை வந்து கொண்டே இருக்கவும் ,”ஆபீஸ் டைம்ல போன் பண்ணாதா எத்தனை டைம் சொல்றது” என தீரன் சொல்ல
மறுமுனையில் இருந்து” ஏன் உங்க எக்ஸ் லவ்வர் கூட ஒட்டி உறவாடி எதாச்சும் பண்ணிட்டு இருக்கீங்களா, அத நான் டிஸ்டர்ப் பண்றனா?” என அவள் கேட்க
என்ன பேசுற இது ஆபீஸ் வேலைக்கு யார் வேணாலும் வருவாங்க போவாங்க என அவன் தொண்டையை செருமியபடி சொல்லவும்
“யார் யாரோ வந்தா பரவால்ல ஆனா வந்திருக்கிறது உங்க தாரணி எனக்கு தெரியாது நினைச்சீங்களா?” என அவள் கேட்கவும்
இங்க பாரு தேவையில்லாதது எல்லாம் பேசாத, தாரணி கண்கள் அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டு இருக்க
அந்த கண்ணில் ஒரு பொறாமை தீ எட்டி பார்க்கவும் இது தான் சமயம் என்று தீரன் “அர்ச்சனா நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப்போகுது நீ எதுக்கு தேவையில்லாத பத்தி எல்லாம் பேசிட்டு இருக்க, நம்ம ரெண்டு பேரும் ஈவினிங் மீட் பண்ணலாம் பாய், சீ யு பேபி” என சொல்லி போனை வைக்கவும்
தாரணி எதையும் கண்டுக்காதடி நின்று கொண்டு இருக்க,”சரி எவ்வளவு நேரம் தான் இப்படி நின்னுட்டு நான் பேசுறதெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க வாங்க உங்கள எல்லா ஸ்டாப் கிட்டயும் கொஞ்சம் இன்றோடியூஸ் பண்றேன்” என்று அவன் சொல்ல
“ஹலோ மிஸ்டர் நான் ஒன்னும் நீங்க பேசறது எல்லாம் கேட்கல, நான் நின்னுட்டு இருக்கும் போது தான் நீங்க பேசுங்க” என்று ஒரு விரலை அவள் நீட்டி சொல்ல
“எப்படியோ கேட்டீங்களா, அது ஒன்னும் இல்ல.. என்னோட ஃபியான்சி கூட தான் பேசிட்டு இருந்தேன்”என்று அவன் சொல்ல
“நான் உங்ககிட்ட எதுவுமே கேட்கலையே சார், இப்ப தான் தனிப்பட்ட பிரச்சனைக்கு இங்க இடம் இல்லைன்னு சொன்னீங்க, அப்புறம் எனக்கு என்கிட்ட சொல்றீங்க?” என்று அவள் கேட்கவும்
“ஹான்..அது சரிதான் பட் என்னோட மேரேஜ்க்கு இந்த ஆபீஸையும் இன்வைட் பண்ணுவேன் அப்போ உங்களை இன்வைட் பண்ணனும் இல்ல, அதனால தான் சொல்லி வைக்கிறேன்” என்று அவன் சொல்லி வேகமாக முன்னே நடக்க
அவளும் அவன் பின்னே அன்ன நடை இட்டு சென்றான்
அலுவலக ஹாலில் எல்லாரும் கூடியிருக்க,வழக்கமான திங்கட்கிழமை கூட்டம்.ஆனா அந்த நாளில் காற்றே கொஞ்சம் கனமாக இருந்தது.
தீரன் தனது கண்ணாடியை சரி செய்து கொண்டு, எல்லாரையும் ஒரு முறை சுற்றிப் பார்த்தான்.
அப்போதுதான் அவன் குரல் ஒலித்தது.
“Today… we have a new addition to our team.”
அந்த வார்த்தையோடு பல கண்கள் ஒரே நேரத்தில் கதவு பக்கம் திரும்பின.
தாரணி மெதுவாக அவன் பின்னே வர,
சாதாரண உடை அணிந்து,எந்த அலங்காரமும் இல்லை.ஆனா முகத்தில் ஒரு தைரியம்,தீரன் அவளை ஒரு பார்வை பார்த்தபடி“Meet Dharani,” என்றான் சற்று தாமதத்தோடு.
“Junior Executive.”என சொன்னான்
சிலர் சின்ன சிரிப்பு சிரித்தார்கள். ஜூனியர்ன்னு சொன்ன விதத்திலேயே, அவளின் இடத்தை அடையாளப்படுத்திவிட்டான்.
“She’ll be working under me directly,”
என்று சொன்னபோது,அவனின் உதட்டோரத்தில் ஒரு நுனிச் சிரிப்பு.
அந்த சிரிப்பு,என் கீழ்தான் நீ இருக்கணும்ன்னு சொல்லாமலே சொன்னது.
“Hope she’ll prove herself this time.” அப்புறம் அடிக்கடி லீவு போடக்கூடாது அதுதான் மெயின் ரூல் என அவன் சொல்ல
அவளும் ஹம் என தலை அசைக்க,
“ஓகே தாரு கேரி ஆன் யுவர் ஒர்க்” என அவன் சொல்லி அவளின் கையை குலுக்க,
அந்த இரண்டு வார்த்தைகள்
அவளின் கடந்த காலத்தை எல்லாருக்கும் முன் தூக்கி போட்டது.
அலுவலகத்தில் சிலர் அவளை ஆராய்ந்து பார்த்தார்கள். சிலர் சந்தேக பார்வையுடன் பார்க்க,
என்னது சார் அந்த பொண்ணு இப்படி கூப்பிடுறாங்க என்று சிலர் கிசுகிசுக்க
தாரணி ஒரு நொடி அவனை பார்த்து
“Thank you for the opportunity,”
என்று அமைதியாக சொன்னாள்.
அவளின் குரலில் நடுக்கம் இல்லை.
அந்த நொடியில் தான் தீரன் புரிந்தான்.அவள் மனதில் அவன் இல்லை என..
“Let’s get back to work” என்று தீரன் கூட்டத்தை முடிக்க,எல்லாரும் மெல்ல மெல்ல கலைந்தார்கள்.ஆனா தாரணியின் உள்ளே, ஒரு தீர்மானம் உருவாகிக் கொண்டிருந்தது.தான் வந்த வேலையை ஒழுங்காக பார்க்க வேண்டும் என்று..
அனைவரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தனர்.திடீரென அலுவலகத்தில் மதியம் பதட்டம் பரவ,
ஒரு முக்கியமான கிளையன்ட் பிரசன்டேஷன் ப்ராஜெக்ட் ஃபைல்ல பெரிய பிழை.Data mismatch.
Meeting இன்னும் முப்பது நிமிஷத்தில் ஆரம்பிக்கப் போகுது “Who prepared this?”என்று தீரனின் குரல் கடினமாக ஒலித்தது.
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க,
யார் இப்படி பண்ணினாலும் ஒழுங்கா சொல்லுங்க என அவன் கோபமாக கேட்கவும்
“Sir… system-ல update ஆகல போல…” என்று ஒருவர் தப்பித்துக் கொள்ள,
தீரன் நெற்றியை சுருக்கிய படி, தன் தலையில் கையை வைத்து “Excuses வேண்டாம். Solution சொல்லுங்க.”என சொல்ல
அந்த நேரத்தில் தாரணி அமைதியாக கோப்புகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் வேகமாக டேட்டாவை ஸ்கேன் பண்ணின.
“Sir…” என அவள் மெதுவாக அழைக்க,
அனைவரும் அவளைப் பார்த்தார்கள்.
“இந்த mismatch Q3 revenue sheet-ல தான் இருக்கு. Backend calculation formula correct இல்ல. Last revision-ல manual edit பண்ணிருக்காங்க.”என சொல்லி
அவள் laptop-ஐ அவன் பக்கம் திருப்பினாள்.
“See… இந்த column-ல percentage auto link ஆகணும். ஆனால் direct value enter பண்ணிருக்காங்க. அதனால projection முழுக்க change ஆகி இருக்கு.”
தீரன் ஒரு நொடி அவளைப் பார்த்தான்.
அவள் குரலில் தயக்கம் இல்லை.
“Fix பண்ண முடியுமா?” என அவன் கேட்க
“10 மினிட்ஸ் குடுங்க சார் நான் எல்லாத்தையும் சரி பண்ணி தரேன்” என சொல்லி அவள் இருக்கையில். உட்கார்ந்தாள். விரல்கள் கீபோர்டு மேல் வேகமாக நகர,அவள் முகத்தில் வேலையின் நினைவு மட்டும்,பழைய நினைவுகள் இல்லை.
அலுவலகம் முழுக்க அமைதியாக இருக்க,பத்து நிமிஷம் கூட ஆகவில்லை.
“Sir… check pannunga.”
Screen-ல updated graph.
Correct projection.Clear explanation slide கூட add பண்ணியிருந்தாள்.
“Client கேட்க வாய்ப்பு இருக்குற கேள்விகளுக்கும் notes add பண்ணிட்டேன்,” என்று அவள் சொல்ல
தீரன் மடி கணினியை நெருக்கமாகப் பார்த்தான்.ஒவ்வொரு slide-ம் flawless.
அவனுக்கு உள்ளேஒரு அதிர்ச்சி.
இந்த அளவுக்கு sharp-ஆ இருந்தாளா அவள்…?இல்ல நான் அவளை இந்த அளவுக்கு பார்க்கவே இல்லையா…?என அவன் யோசித்துக்கொண்டே இருக்க
சிறிது நேரத்தில் மீட்டிங் தொடங்க,Client சில கடினமான கேள்விகள் கேட்க,
தீரன் ஒரு நொடி யோசிக்கும் போது
தாரணி மெதுவாக முன் வந்து, அனைத்தையும் விவரித்தாள்
ஒரு வழியாக மீட்டிங் முடிந்ததும் கிளையண்ட் “Good recovery. Impressive clarity.” என சொல்ல
அந்த வார்த்தை அலுவலகத்துக்கு ஒரு நிம்மதியாக இருக்க,எல்லாரும் பெருமூச்சு விட,தீரன் மெதுவாக அவளைப் பார்த்தான்.
இந்த முறை அவன் பார்வையில் எந்த
ஏளனமும் இல்லை.சின்ன சிரிப்பு கூட இல்லை.அது அவள் வேலைக்கான ஒரு அங்கீகாரம்.“Good work,” என அவன் அவனைப் பார்த்து சொல்ல
அவள் தலையசைத்தபடி,“Thank you, sir.”என்றாள்
மீண்டும் அந்த சார், அது தூரம் காட்டும் வார்த்தை மட்டும் இல்லை.
அது அவள் வரம்பை காட்டும் வார்த்தை.
அவள் திரும்பி நடக்கும்போது,
அலுவலகத்தில் சிலர் அவளை பெருமையாக பேசினார்கள்..
தீரன் தனது நாற்காலியில் அமர்ந்தபடி யோசித்தான்.நான் அவளை குறைத்து மதிப்பிட்டேனா…?அல்லது… இன்னும் அவளை முழுசா புரிஞ்சுக்கவே இல்லையா…? என பல வித யோசனையுடன் அமர்ந்தான்..
