தூரிகை 9❤️

அவர்கள் முன்னே துரத்தி வர இவள் பின்னாடியே நகர்ந்து கொண்டு வரவும் ஒருவன் அவள் கைப் பின்னிருந்து இழுத்த வேகத்தில் அவன் மேலே சாய்ந்தாள்.

அவள் விலக, அவன் இழுக்க… இப்படியே சென்றுக் கொண்டிருக்க… அவன் ஓங்கி ஒரு அரை அவள்

கன்னத்தில் விட்டதில் அவளுக்கு பொறிக் கலங்க அப்படியே!! கன்னத்தில் கை வைத்து நின்று நிமிர்ந்து பார்க்கும் போது தான் தெரிந்தது, அங்கு ருத்ர மூர்த்தியாய் அமுதன் நின்று கொண்டிருப்பது…

ஆம் ஜிபில் ஏறி அமர்ந்தவனுக்கு, ” ஒருவேளை அவ யார்கிட்டயாவது மாட்டியிருப்பாளா! ஒரு தடவை அந்த ஒதுக்குப்புறமான இடத்துக்கு போய் பார்த்தா தான் என்ன என்று ஒரு நொடி யோசித்தான். 

அடுத்த நொடியே அவனின் இயல்பான குணம் போகவிடாமல் தடுக்க எதைப்பற்றியும் சிந்திக்காமல் சட்டென ஜிப்பிலிருந்து குதித்து அந்த ஒதுக்கு புறம் வந்த போது தான் தெரிந்தது உண்மையாகவே அவள், அவன் நினைத்தது போல பிரச்சனையில் மாட்டிருப்பது. 

அவளை காக்க வேண்டி தான்  இழுத்து தன் மேல் நிறுத்திக் கொண்டான்.

ஆனால், அவளோ அவனைப் பார்க்காமலே விலகிச் செல்ல அவள் கன்னத்தில் ஒரு அடி விட்ட போது தான், நிமிர்ந்து அவன் கண்ணையும் உடையும் வைத்து அது அமுதன் என தெரிந்தும் அவள் மனம் மகிழ்ச்சியடையாமல், “ஐயோ! இவர் எதற்கு வந்திருக்கிறார். இவங்களாவது பேசிட்டு தான் கொள்ளுவாங்க…  இவர் கொன்னுட்டு தானே பேசுவாரு,, கடவுளே!! என்னை இந்த ஒரு ராத்திரி மட்டும் இவங்ககிட்ட இருந்து எல்லாம் காப்பாத்து என்று வேண்டிக் கொண்டிருந்தவளின் அருகே வந்து , “ஏண்டி ஒரு தடவை இழுத்தா வந்து பக்கத்தில் நிற்க மாட்டீயா!!” என்று உரிமை உள்ள கணவனை போல் கண்டித்தான். அமுதன்!!

அவ்ளோ அவனை வைத்துக் கண் எடுக்காமல், “நான் எதுக்கு உங்க பக்கத்துல வந்து நிக்கணும்,” என்பது போல் பார்த்தாள்.

இவர்களின் பார்வை பரிமாற்றங்களை பார்த்த  நால்வர்களில் ஒருவன் கையை உயர்த்திக்கொண்டே  ரொம்ப ராங்காக “நீ என்ன அவ புருஷனா இல்ல பெரிய ஹீரோன்னு நினைப்பா!! ஆழம் தெரியாம காலை விட்டுட்ட பாரு நீ ஒத்த ஆள் நாங்க நாலு பேரு அதுவும் இல்லாமல் வயசு வேற கொஞ்சம் ஆகி இருக்கும் போல,, ” என்று அவர் மாஸ்க் அணிந்திருந்ததால் யார்? என்று தெரியாமல் அவனிடம் நக்கலாக கூற அவன் பேசிய கை விரல்களை பிடித்து அப்படியே  முறித்து அவன் வலியில் கத்த கத்த , “அதான் பேசிட்டு இருக்கேன் இல்லை அதுக்குள்ள  என்ன அவசரம் உனக்கு,” என்று கேட்டான். 

கை முறிக்கப்பட்டவனோ? “டேய் என்னடா! வாய் பேசிட்டு இருக்கும்போது கையை முறிக்கிற,” என்றான்.

“ஓஓ இது பத்தலையா?” என்று அவனின் கையை பின்னே முறுக்கி நடுமுதுகில் தன் முட்டியாலேயே ஒரு அடி வைத்தான்.

அவன் அடித்ததை பார்த்ததிலேயே  குழலி 2 அடி பின்னே சென்று விட்டாள்.

அடி வாங்கியவனுக்கோ அவன் முதுகு தண்டுவடமே உடைந்து விடும் அளவிற்கு வலி எடுக்க அதை பொறுக்கமுடியாமல் அவன் நண்பர்களை பார்த்து, “டேய் என்னடா! பாத்துட்டு இருக்கீங்க வந்து அடிங்கடா! என்றுக் கத்தினாலும் அவன் பார்வை கெஞ்சுவது கேட்கவும் இருவர் வந்து அமுதனின் இடது கையையும், மற்றொருவன் இடுப்பையும் வளைத்து பிடிக்க முன்பு அடித்திருந்தவனை விட்டுவிட்டு, பின்னாடி இருந்தவனை தன் வலது முட்டியால் அவன் மூக்கில் குத்த அவன் மூக்கு சில்லு உடைந்து ரத்தம் கொப்பளித்தது.

தன் கை இடது கையை பிடித்திருந்தவனை ஒரு முறை முறைக்க அவன் அதிலேயே பயந்து அப்படியே கீழே சரிந்து விட்டான்.

இன்னொருவனோ? இவர்கள் அடி வாங்கியதை பார்த்து அப்படியே நின்று விட்டான்.

“இப்ப சொல்லுங்கடா! எனக்காக வயசாயிடுச்சு,”என்றான்.

அவர்கள் நால்வரும் கையெடுத்து கும்பிட்டு விட்டு, ” இல்லைங்க சார் எங்கள விட்டுடுங்க… ” என்றுக் கேட்கவும் அவன் குழலியைப் பார்க்க..  இவன் அவர்களை அடித்ததை பார்த்தே அவள் பேச்சு மூச்சு இல்லாமல் அப்படியே! சிலை போல் நின்றிருந்தவளை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு தன் விரலை எடுத்து,  காது குடைந்து கொண்டே, ” சரி போங்க!” என்றான்.

அவர்களுக்கு இது தான் சந்தர்ப்பம் கீழே என்ன இருக்கிறது என்றுக் கூட பார்க்காமல் விழுந்து எழுந்து செல்லும் போது ஒருவன், “நல்ல விருந்து தருவான்னு பாத்தா இப்படி மருந்து போட வைத்துவிட்டாயடா!” என்று புலம்பி கொண்டே வேறு சென்றனர்.

அவர்கள் சென்றதும் அவன் சென்று அவள் முகத்திற்கு நேரே சொடக்கிட அதில் தெளிந்தாலும் தன்னை காப்பாற்றியதால் இவன் மேல் மரியாதை கொள்வதா? இல்லை ஒருவனை இரக்கமே இல்லாமல் கொலை செய்ததற்காக பயப்படுவதா? என்று தெரியாமல் ஒரு குழப்ப நிலையிலேயே நின்றிருந்தாள்.

அவள் சொடக்கிட்டதில் நிமிராததால் அவள் கன்னங்களில் மெல்ல தட்டி, ” ஓய் என்ன இங்கே நின்னு தவம் செய்வதா உத்தேசமா? சீக்கிரமா வா நீ எந்த ஊருக்கு போகணுமோ அந்த ஊருக்கு பஸ் ஏத்திட்டு போறேன், ” என்றான்.

“அதெல்லாம் வேண்டாம் நானே போகிறேன் ஏன்னா! பஸ் வர இன்னும் ரெண்டு மூணு மணி நேரம் ஆகுமாம்,” என்றாள்.

“ஓஓஓஓ அப்படியா!” என்று சொல்லிவிட்டு, தன் போனை எடுத்து 

பேருந்து நிலைய தலைமை அதிகாரியை அழைத்து,  “என்ன கணேசன் கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்ல பஸ்சே காணோம் என்ன ஆச்சு என்ன பிரச்சனை,” என்று கேட்டான்.

அவரும் ஒன்னும், “இல்லைங்க சார் இங்க ஒரு சின்ன போராட்டம் நடக்குது அதுவும் இல்லாம இந்த டைம்ல பஸ் அந்த அளவுக்கு இருக்காது மூணு மணிக்கு மேல தான் பஸ் இருக்கும்,” என்று கூறினார்.

அப்போது தன் கை கடிகாரத்தை பார்க்க அது 12. 30 என காட்டவும் புரிந்து கொண்டு, “சரி கணேசன் நான் ஒரு வேலையா இந்த பக்கம் வந்தேன் அதுதான் சும்மா உங்களை பாத்துட்டு போலாம்னு போன் பண்ணுனேன்.” என்று போனை வைத்து விட்டு அவளிடம் திரும்பி, ” இப்போ இங்க பஸ் வராதாம் மூன்றரை மணிக்கு மேல தான் வருமாம்? பாத்து பத்திரமா போயிடுவியா, ” என்று கேட்டான்.

அவள் அதற்கு அமைதியாக இருந்தாள்.

“ஏய்… உன் கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன் ஒரே விஷயத்தை என்னால ஓராயிரம் முறை கேட்க முடியாது என்ன பாத்து போயிடுவியா?” என்று கேட்டான்.

அவள் அந்த இடத்தை சுற்றி ஒரு முறை பார்க்க… அந்த இடம் மயான அமைதியை தத்து எடுத்துக் கொண்டிருக்க… என்னவோ போல் ஆகியது அதற்காக இவனை  துணைக்கு வைப்பதற்கு பேசாமல் வாயவே மூடிக்கொள்ளலாம். என்று நினைத்துக் கொண்டிருந்தால் ஆனால் அவன் விடாமல், “நீ எந்த ஊருக்கு போகணும்…”  என்று கேட்டான்.

“காஞ்சிபுரம்,” என்றாள்.

“ஓ சரி வா அந்த பக்கம் போகலாம்.” என்று சொல்ல அங்கு பெங்களூர் வண்டி மட்டுமே இரண்டு இருந்தது. 

அவள் எதுவும் பேசாமல் மீண்டும் வந்து இருட்டு இருக்கும் பக்கமே செல்ல அவன் அவளின் கையைப் பிடித்து, ” இப்ப எதுக்கு திரும்பவும் அந்த பக்கமே போற, ” என்று கேட்டான்.

“அது ஒன்னும் இல்ல என்னுடைய பேக்கை அங்கிருந்துதான் தூக்கி போட்டாங்க ஊருக்கு போறதுக்கு காசு வேணுமே!” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு,, 

இப்போதுதான் நான் அவனுக்கு புரிந்தது தான் அந்த பையை எங்கோ வீசி எரிந்தது. ஆம் அவன் அதைக் கண்டு அப்போது படபடதைத்தாலும் ஜீப்பில் ஏறி அமர்ந்தவுடன் அதை தூக்கி  ஏறிந்து விட்டான். அதை இப்போது நினைவு கூரந்து, ” அது அந்தப் பக்கம் தான் எங்கேயோ வீசினேன் அது எப்படியும் அங்க  முன்னாடி தான் விழுந்து இருக்கும் வா பக்கம் போய் பார்க்கலாம் வா!” என்று அவளை அழைத்து சென்றான்.

அவளுக்கு அவன் மேல் துளியும் நம்பிக்கையில்லை, ஆனாலும் தன்னை இந்த கயவர்களிடமிருந்து காப்பாற்றியதற்காக மட்டுமே அவன் மீது ஏதோ ஒரு நம்பிக்கை வர அவன் பின்னே சென்றிருந்தாள்.

அவர்களின் கெட்ட நேரம் அவன் வீசி எரிந்த பை அங்கே தான் இருந்தது. ஆனால், அந்தப் பையில் ஒரே ஒரு பொருள் கூட இல்லை எல்லாம் அங்கிருந்தவர்கள் எடுத்துவிட்டு பையை மற்றும் வீசி எரிந்திருந்தார்கள்.

அதை எடுத்து பார்த்தவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழுக்கென கண்களில் கண்ணீர் துளிர்க்க… அதை அவன் அறியாமல் துடைக்கும் நேரம் அவன் பார்க்க அவனுக்கு என்னவோ போல் ஆகி, ” நம்மளால தான் இந்த பொண்ணுக்கு இப்படி ஆனதோ? ” என்று முதல்முறையாக தோன்ற அதை விலக்கி தள்ளிவிட்டு இப்ப, ” எதுக்கு அழகு சீன் கிரியேட் பண்ற, ” என்று கேட்டான்.

“என் சாரி எல்லாம் ஈரமா இருக்கு அதை மாற்றுவதற்கு மாற்று துணி கூட இல்லை ஊருக்கு போறதுக்கு காசு இல்லை… இதையெல்லாம் எங்க அம்மா கிட்ட சொல்லலாம் னா என் போன் எங்க போச்சுன்னு தெரியல,” என்று சிறு குழந்தை போல் சொன்னாள்.

“சரி விடு பேக்ல இருந்தது தான் காணாம போச்சு… போன் என்கிட்ட தான் இருக்கு நீ ஜீப்ல வரும்போது பொறுப்பே இல்லாம விட்டுட்டு போய்ட்ட,”  என்று குற்றப்பத்திரிகை வாசித்தான்.

அதைச் சொன்னவுடன் , “நான் எங்க பொறுப்பு இல்லாமல் விட்டுட்டு வந்தேன் உன்கிட்ட இருந்து எப்ப தப்பிக்கலாம் என்று தானே ஓடி வந்தேன், ” என்று மனதில் நினைத்துக் கொண்டு,, கண்களை விரித்து பார்த்தாள்.

” நீ பாக்குறதை பார்த்தா நான் என்னமோ உன் போனை எடுத்து வச்சுகிட்ட மாதிரி பார்க்கிற அதை காயலாங்கடைக்கு போட்டா கூட ஒரு ரூபாய் தேறாது.

இரு உன் போன் தானே வேணும் தரேன், ” என்று தன் மேல் பாக்கெட்டில் தேட அவர்களிடம் சண்டை போடும்போது அந்த போன் கீழே விழுந்து இருந்தது போல,, அதை அவனின் இடது கையை பிடித்திருந்தவன் பயத்தில் ஓடும் போது நகர்த்திக் கொண்டு அங்கிருக்கும் சாக்கடையில் தள்ளி விட்டு சென்று விட்டிருந்தான். 

இது அறியாமல் அவளிடம், ” எங்கோ கீழே விழுந்திருக்கும் போல இரு எடுத்துட்டு வரேன், ” என்று அவன் ஓட இவளும் அவள் பின்னே சென்றாள்.

அங்கு சென்று இருவரும் தேட அந்த போன் இருந்ததற்கான அறிகுறியே அங்கு இல்லை… 

அவளுக்கு  நடுரோட்டில் இருப்பது போல் ஆனது. அதை யோசித்தவளுக்கு மீண்டும் அழுகை வர அது இருளான இடம் தான் ஒருவர் முன் நின்று கொண்டிருக்கிறோம் என்பது கூட தெரியாமல் அங்கு இருக்கும் சுவரின் அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்து தன் முகத்தை மூடி அழத் தொடங்கி விட்டாள்.

முதல்முறையாக அமுதனுக்கு அவள் அழுவது ஒரு மாதிரியாகி போனது.

என்ன செய்வது, என்ன சொல்வது எதுவும் தெரியவில்லை…  

தேவையில்லாமல் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டோமோ என்று தன்னைத்தானே நொந்து கொண்டானே தவிர அவள் மீது இரக்கமெல்லாம் வந்துவிட்டதா என கேட்டால் அதுவும் கேள்விக்குறி தான்!!

தொடரும்.…

கதையின் போக்கு எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணிட்டு போங்க செல்லம்.…

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மேகத்தின் தூரிகை இவள்(ன்)
926 6 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page