அத்தியாயம் 18
” இப்படி எல்லாம் சொன்னா நீ சரிப்பட்டு வர மாட்ட இரு..”, என்ற தீரன் மித்ரா அருகே மேலும் நெருங்கினான்..!!
உதட்டில் காயம் பட்ட பகுதியை விட்டுவிட்டு காயம் படாத பகுதியை மீண்டும் காயப்படுத்த தொடங்கினான்.
வலி தாங்காமல் கண்களை மூடி கொண்டாள்.
உயிர் வலியை உதட்டின் மூலம் உணர வைத்து கொண்டிருந்தான் அவன்.
ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாததால் வேகமாக அவனை பிடித்து தள்ளி விட்டு விட்டாள்..
” வேணாம் வேணாம் விட்ருங்க.. இப்ப என்ன நான் சாப்பிடணும் அவ்வளவு தானே ?? குடுங்க”, என்று கூறியவள் அங்கிருந்த தட்டை எடுத்து மடமடவென்று பிரிட் ஜாமை மிக வேகமாக உண்ணத் தொடங்கினாள்.
அவள் தள்ளிவிட்ட வேகத்தில் கீழே விழுந்து கிடந்த தீரன் அவள் சாப்பிடுவதை பார்த்து இதழ் கடையோரம் புன்னகை பூக்க செய்தான்.
எண்ணி ஐந்தே நிமிடத்தில் மொத்தத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டாள் அவள்
“ இந்தா டேப்லெட் இதையும் போடு”
மறுக்காமல் அதையும் வாங்கி போட்டுக் கொண்டாள்.
“படுத்து தூங்கு”, என்று அவன் கூறவும் கட்டிலில் படுத்தவள் போர்வையை இழுத்து போட்டுக் கொண்டு உறங்க முயற்சித்தாள்.
அதை பார்த்த தீரனுக்கு சிரிப்பு தாங்கவில்லை..
கட்டளையாக வந்த ஒவ்வொரு வார்த்தைகளுமே அவளின் மீதுள்ள அக்கறையால் தான் என்று அவளுக்கும் புரியவில்லை..!!
அவள் மீதுள்ள காதலால் தான் இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று அந்த மடையனுக்கும் புரியவில்லை..!!
நன்றாக சாப்பிட்டதாலா அல்லது மன உளைச்சல் காரணமா அல்லது டேப்லெட்டின் மகிமையா என்று தெரியவில்லை படுத்த சிறிது நேரத்திலேயே நன்றாக உறங்கிவிட்டாள் மித்ரா.
அதன் பிறகு வெகு நேரம் லேப்டாப் வைத்து தன்னுடைய அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்.
போட்டி கம்பெனிகளுக்கு எதிராக மாபெரும் சலுகை ஒன்றை அறிவித்திருந்தான் அவனுடைய கம்பெனியில்.. அதன் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக அவனுடைய பர்னிச்சர் கடையை தேடி வந்தார்கள்..
எனவே போட்டி கம்பெனிகள் இப்பொழுது அடி வாங்க தொடங்கியிருந்தது விற்பனையில்..!!
மேலும் மேலும் வியாபாரத்தை எப்படி முன்னேற்றலாம் என்கிற நோக்கத்தில் தான் இப்பொழுதும் லேப்டாப் வைத்து அலுவலக வேலைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருக்கிறான்..
நஷ்டம் என்கிற வார்த்தைக்கு இடமில்லை தீரனின் அகராதியில்..!!
எப்பொழுதும் லாபம் தான்.. வெற்றி தான்.. முன்னேற்றம் தான்..
அப்பேர்ப்பட்ட சாம்ராஜ்யத்தை கட்டி ஆளும் இந்த அரசனின் மனைவி, ஒரு சிறிய கம்பெனியில் சம்பளத்திற்கு வேலைக்கு போக போகிறாள் என்பதை அறிந்து கொண்டால் இந்த அரக்கன் என்ன செய்வானோ தெரியவில்லை..!!
எல்லா வரவு செலவு கணக்குகளையும் சரிபார்த்துவிட்டு லேப்டாப்பை மூடி வைத்தவன் மெதுவாக மித்ரா பக்கம் திரும்பி பார்த்தான்.
கண் மூடி தூங்கும் வேளையிலும் கண்ணை பறிக்கும் அழகு ராட்சசியாக இருக்கிறாளே என்று தன்னையும் அறியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
போர்த்தியிருந்த போர்வை விலகியிருப்பதை கூட அறியாதளவிற்கு நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மித்ரா.
கள்ளங்கபடம் இல்லாத அந்த அழகிய பால் முகத்தில், தான் செய்து வைத்த லீலைகள் அப்பட்டமாக தென்பட்டது..!!
ரோஜா வண்ண இதழ்களை இப்பொழுது ரத்த சிவப்பு நிறத்தில் மாற்றி வைத்திருந்தான் இந்த கயவன்..!!
காயம் பட்ட இடத்திற்கு லேசாக மருந்தை தடவி களிம்பு போல ஏதோ ஒன்றை போட்டு விட்டிருந்தார் வளர்மதி..
அதன் காரணமாக அவளுடைய இதழ்கள் பளபளர்த்தது..!!
ஒரு கையை தலைக்கு அணை கொடுத்து மறுக்கையை அருகில் இருந்த தன் தலையணை மீது வைத்திருந்தாள் அவள்.
சந்தன நிறமும் எலுமிச்சை நிறமும் கலந்து செய்து வைத்தது போல அவளுடைய மெல்லிடை அவனைப் பார்த்து நக்கல் அடித்தது..❤️❤️
ஜன்னல் வழியை வீசும் காற்றுக்கு தகுந்தார் போல அவளுடைய மேலாடை நடனமாடியது..
“எந்த கவலையும் இல்லாம எப்படி தூங்குறா பாரு .. எந்த நேரத்தில் இவ கழுத்துல தாலி கட்டினேனோ அப்பத்திலிருந்து எனக்கு தான் பிரச்சனை.. எனக்கு தான் கவலை இருக்கு.. இவ நல்லா கும்பகர்ணி மாதிரி தூங்குறா??”, என புலம்பியது அவன் நெஞ்சம்.
கன்னத்தில் கை வைத்து.. நேரம் போவது தெரியாமல் அவளையே மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தான் தீரன்.
தங்கத் தாமரை மகளே..
வா அருகே..
தத்தி தாவுது மனமே..
வா அருகே..
மெல்லிசையாக இந்த பாடல் அந்த அறையில் ஒலித்துக் கொண்டிருந்தது டேப் ரெக்கார்டரில்..
வேலை செய்யும் நேரத்தில் பாடலை கேட்பது அவனுடைய வழக்கம்.
இன்றும் அதேபோல் மெல்லிசையாக பின்னணியில் பாடலை ஓட விட்டுவிட்டு தன் வேலையை கவனித்துக் கொண்டிருந்தான்..
வேலை முடிந்த பின் பாடல் வரிகளை கவனிக்க தொடங்கிய பிறகு அவனுடைய எண்ணம் முழுக்க வியாபித்திருந்தாள், அகமத்ரா..!!
கண் போன போக்கிலே கால் போகலாமா??..
கால் போன போக்கிலே மனம் போகலாமா ?? , என்று அந்த காலத்திலேயே அருமையான கருத்துள்ள பாடலை எதற்காக பாடி வைத்தார்களோ தெரியவில்லை.. ஆனால் இப்பொழுது இந்த சூழ்நிலையில் தீரனுக்கு இந்த பாடல் பக்காவாக பொருந்தியது..!!
அவன் கண் பார்த்து ரசித்ததை அவனுடைய கால்களும் அருகே சென்று ரசிக்க வேண்டுமென்று அடம் பிடித்ததோ என்னவோ.. உடனே அவளை நெருங்கியது இவனுடைய நீண்ட நெடிய கால்கள்..!!
“டேய் ஏற்கனவே உனக்கு வார்னிங் கொடுத்திருக்கேன் மறுபடி மறுபடி இந்த தப்பு பண்ணாத அவ கிட்ட நெருங்காதே ஏற்கனவே அவளுக்கு உடம்பு சரியில்ல.. இன்னைக்கு கூட நீ அவளை காயப்படுத்தி ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் நீ தான் உதட்டில் பேண்டேஜ் போட்டு இழுத்துட்டு வந்திருக்க.. மறுபடியும் அவளை காயப்படுத்த முயற்சி செய்யாதே தீரன்.. இது உன்னுடைய குணத்துக்கு ஏற்ற நடவடிக்கை கிடையாது.. அப்படி என்ன பெரிய பேரழகியா அவள்?? எதுக்காக அவ கிட்ட இப்படி மண்டி போட்டு கிடக்கு உன்னுடைய மனசு??”, என காரி துப்பி கேள்வி கேட்டது அவனுடைய மூளை.
” அதெல்லாம் எனக்கு தெரியாது.. இவளை பார்த்தால் எனக்குள்ள என்னென்னமோ பண்ணுது.. நான் என்னோட கண்ட்ரோலை இழக்கிறேன்.. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்ததே கிடையாது இவ ஒன்னும் அப்படி பேரழகி கிடையாதுதான்.. ஆனால் என்னுடைய கட்டுப்பாடு மொத்தமும் கட்டவிழந்து போகிறதே இவளை பார்க்கும் பொழுது..?? இதுக்கு என்ன காரணம் என்று எனக்கே தெரியல.. அதே சமயம் அவள் என்னை விட்டு விலகி போறதும் , அவன் கிட்ட அதான்.. அந்த தடிப்பயன் அருண் கிட்ட நெருங்கி பழகுவதையும் என்னால ஏத்துக்க முடியல.. அதுக்கு காரணம் என்னன்னு இப்ப வரைக்கும் எனக்கு தெரியல இதுல குறுக்கால நீ வேற வந்து என்னை கேள்வி கேட்டு சாவடிக்காத”, என்று சீறியது அவனுடைய ஆழ்மனம்.
” சொன்னா கேளு அவளை நெருங்காத.. நெருங்காத.. போகாதடா.. டேய்.. டேய்.. டேய்.. போச்சு.. போச்சு மொத்தமா போச்..”, அவன் செய்ய போகும் காரியத்தை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு அவனுடைய மூளை அங்கிருந்து சென்று விட்டது..!!
அவளுடைய துயில் கலையாத வண்ணம் அவளருகே சென்று படுத்து கொண்டவன் மெதுவாக அவள் தோள் மீது கை போட்டு அணைத்துக் கொண்டான்..
அவர்களின் மூக்கும் மூக்கும் உரச , இரு இதழ்களுக்கு இடையில் இடைவெளியே இல்லாத வண்ணம் இறுக்கி அணைத்திருந்தான்..
எந்த வித செயற்கை மணமும் இல்லாத போதும் அவளிடமிருந்து இயல்பாக எழும் அந்த சுகந்தமான மணம் அவனை கட்டி போட்டது..
அவள் நெற்றியில் சுருளும் அந்த சுருள் முடியை கைவிரலால் பிடித்து விளையாடினான்..
மெதுவாக அவனுடைய கை.. அவள் நெற்றியில் கோலம் போட்டுக் கொண்டே நாசி வழியே தரையிறங்கியது.. அதரங்களை அடைந்த அவனுடைய விரல்கள் அவன் ஏற்படுத்திய இதழ்காயத்தை தொட்டு தடவி பார்த்தது..
தூக்கத்திலும் வலி ஏற்பட்டதோ என்னவோ மங்கையவள் முகம் சுருக்கினாள்..
உடனே கை விரல்களை எடுத்துக் கொண்டவன் அவளின் முதுகை மெதுவாக நீவ தொடங்கினான்..
தூக்கம் கலைந்தவளை மீண்டும் உறங்க வைக்கிறானாம்..
எப்பொழுதும் ஆக்ரோஷமாக அவளை ஆட்கொள்ள நினைக்கும் அவனுடைய மனம் என்னவோ தெரியவில்லை இன்று ஒரு பூவை கையில் ஏந்தி அதை வருடி கொடுப்பது போல அவளை மெதுவாக கையாண்டது அவனுடைய இரும்பு கரங்கள்..!!
” தீரன் விடுங்க.. ப்ளீஸ் வலிக்குது விட்டுடுங்க..”, அந்த ஆழ்ந்த தூக்கத்திலும் முனகியவளை காது கொடுத்து கேட்டான்.
அவன் மீது அவள் கொண்ட அச்சம்.. ஆழ்ந்த உறக்கத்தில் கூட கலையாமல் இருக்கிறதே என்று ஒரு பக்கம் அவனுக்கு வேதனையாக இருந்தாலும்..
இன்னொரு பக்கம்.. தூக்கத்திலும் அவளுக்கு என் பெயர் தான் வருகிறது உச்சரிப்பதற்கு என்று முட்டாள்தனமாக குதூகலித்தது..
அதன் பிறகு அவனுடைய கதகதப்பான கரங்களின் வருடலை உணர்ந்து கொண்ட அவளுடைய மூளை அவளை வேகமாக அலாரம் வைத்து எழுப்பி விட்டது..!!
கண் திறந்த மாத்திரத்தில் தன் அருகில் இருந்த தீரனின் முகத்தை கண்டதும் திடுக்கிட்டு போய் விலக நினைத்தாள்..
ஆனால் விடுவானா அந்த கயவன்??
“அது என்ன என்னை பார்த்தால் மட்டும் பேயை பார்த்த மாதிரி பயந்து போய் பின்னாடி போற?? என்னடி நினைச்சுட்டிருக்க உன் மனசுல உனக்கு தாலி கட்டின புருஷன் நான்..”, என்றவன் அவளை மேலும் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
” ஆரம்பிச்சிட்டீங்களா மறுபடியும் உங்களுடைய ரகளைய.. கொஞ்ச நேரம் தான் ஏதோ அமைதியா இருந்த மாதிரி தெரிஞ்சது அக்கறையா ஏதோ சாப்பாடு எல்லாம் எடுத்து கொடுத்தீங்க நான் கூட ஒரு நிமிஷம் நம்பிடலாமான்னு யோசிச்சேன் ஆனா உங்களுடைய குணம் தெரிந்ததால தான் உங்களை நான் நம்பவே இல்லை.. இதோ இப்பவே ஆரம்பிச்சிட்டீங்களே உங்களுடைய லீலைகளை”, என்றாள் முகம் சிவக்க.
“ உனக்கு வாயில வாஸ்து சரி இல்ல.. ஏற்கனவே உன் வாய்க்கு கட்டுப்போட்டிருக்கு பேசின பேச்சால.. இப்ப மறுபடியும் ஓவரா பேசாத அதுக்கும் சேர்த்து நீ தான் அனுபவிப்ப”
“ என்ன மிரட்டுறீங்களா??”
“ அப்படித்தான் வச்சுக்கோயேன்..”
உடனே அவனைப் பிடித்து தள்ள முயன்றாள்.
எப்படியும் இப்படி சில முயற்சிகளை அவள் கையாள்வாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும் அதனால் அவளுடைய கையை லாவகமாக பிடித்துக் கொண்டான் அவன்.
அதற்கு மேல் அவளை பேசவிடாமல் அவளின் கை, கால்களை அசைக்கக்கூட விடாமல் அவள் மீது படர்ந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆட்கொள்ள முயன்றான்..
செல்ல சிணுங்கலும் முனகலும் கேட்க வேண்டிய இடத்தில் கதறலும் அதட்டலும் தான் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தது அந்த அறையில்..
டோன்ட் டிஸ்டர்ப் ஆகர்ஷதீரன் என்று அவனுடைய பெயர் பலகை பொரித்த அந்த கதவு கூட இந்நேரம் வெட்கம் கொண்டிருக்கும்..
அந்த அளவிற்கு அவளை போட்டு பாடாய்படுத்தினான் அவன்.
ராட்சசனா இவன்??!!
ஒரு நாள் கூட நிம்மதியா இருக்க விடமாட்டேன் என்கிறானே.. கடவுளே கைநீட்டி உதவி என்று பணத்தை வேறு வாங்கியாயிற்று.. சொன்ன வாக்கை காப்பாற்றவும் செய்யணும்.. டீல் ஓகே தானே என்று அவன் கேட்டதற்கு ஆட்டு மந்தையிலுள்ள ஆடு போல மண்டையை ஆட்டிவிட்டேன்.. இப்பொழுது முடியாது என்று கூறினால் மட்டும் இந்த கசாப்பு கடைக்காரன் என்னை விடவா போகிறான் என்று அவளுடைய உள்மனம் ஊமையாக அழுது கொண்டிருந்தது..
அவனுடைய லீலைகளை கண்டால், அந்த மன்மதனே கூட ஒரு நொடி..
“நாம் தோற்று விட்டோமோ ??”, என்று சந்தேகம் கொள்ளுமளவிற்கு காதலில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்தான் அவன்..
காதல் இருந்ததோ இல்லையோ ஆனால் உச்சத்தை தொட வேண்டும் என்கிற வேட்கை இருந்தது அவனிடம்..
தன்னுடைய ராஜ லீலைகளை ரசித்து அவள் முனங்குவாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு.. அவளுடைய மௌனமான கண்ணீர் வழியும் விழிகளை கண்டதும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது அவனுக்கு..!!
என்ன செய்தாலும் அவளிடம் எந்தவித முகமாற்றமும் இல்லை.. அதில் கோபம் இல்லை சினுங்கல் இல்லை , நாணம் இல்லை.. ஏன் அவனை எதிர்த்து அவள் போராடக் கூட இல்லை , தடுக்கவும் இல்லை..
கிட்டதட்ட ஒரு மரபொம்மை போல அப்படியே படுத்திருந்தாள்..
அவனுடைய எந்தவித செயலுக்கும் அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டவில்லை..!!
அதுவே அவன் மனதிற்கு மாபெரும் அடியாக இருந்தது..!!
என்ன பெண் இவள் ??!!
எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் இருக்கா??
அதுவும் இந்த நேரத்தில் ஒரு பெண்ணால் இப்படி இருக்க முடியுமா?? என்று விசித்திரமாக அவளை ஒரு பார்வை பார்த்தான் தீரன்..!!
– தொடரும்..
