தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்
உடல் முழுதும் குருதி வழிய,மருத்துவமனை ஸ்ரெக்சரில் இழுத்து செல்ல படுகிறான் ஆர்யன்.அவனுடன் அவனது கசின் பிரதரும் மற்றும் உற்ற நண்பனுமான ராகும் அழுத படியே ஆர்யனின் கரத்தினை பற்றி பின் தொடர…மற்ற நண்பர்களின் கண்ணீர் குரலும் ,பேச்சு சப்தமும் அவன் செவிகளை வந்தடைய வில்லை.
அனிகாவின் அலறல் சப்தம் மட்டுமே காதுகளை நிறைந்திருந்தது.ஆப்ரேசன் தியேட்டருக்குள் மருத்துவர்கள் அவனை சுற்றி நின்று…அவனது காயங்களுக்கு சிகிச்சை செய்வது மங்களாக தெரிகிறது.
“என் அனிகாவிற்கு என்ன ஆயிற்று?” என்று கேட்க நினைத்து தோற்று போகிறான்…மெல்ல மெல்ல அவனது கண்களை இருள் சுழ்ந்துக் கொள்கிறது.
பெங்களூருரின் மிக பிரமாண்டமான திருமண மண்டபத்தில் ….ஆர்யன் வெட்ஸ் அனிகா என்ற பெயரை தாங்கிய பலகையை கலைந்து கொண்டிருந்தான் ஒரு வேலை ஆள்.இந்தியாவின் மிக முக்கிய தொழிற் அதிபர்களின் வாரிசுகளின் திருமணம் என்று மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட …அனைத்து அலங்காரங்களும் கலைக்கப்பட்டு கொண்டிருந்தன.
அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேலை ஆட்களின் புலம்பல் மட்டுமே அந்த அரங்கை நிறைத்தது.
“கலியாண நாள் அன்னைக்கே அந்த பொண்ணுக்கு சாவு வரனும்”என்றாள் ஒரு பெண்.
“சாகலாம் இல்லையாம் சீரியஸ் கண்டிசன்னு தான் சொன்னாங்க”என்றான் ஒருவன்.
“ஆமா,இவங்க போன வண்டிய… ஒரு கண்டெயினர் லாரி வந்து மோதுனதுல…வண்டியோட மேம்பாலத்து மேல் இருந்து கீழா விழுந்துடாங்கலாம்…”
என்றாள் இன்னொரு பெண்.
“பையனுக்கு உடல் முழுக்க அடியாம்…பொண்ணு தான் ரோட்டுக்கு நடுவுல இருந்த டிவைடர் ப்ளாக்ல விழுந்து …முதுகு தண்டு டேமேஜ் ஆனதா சொன்னாங்க”என்றாள் முதலில் ஆரம்பித்த பெண்மணி.
“அப்படினா மூளைல பாதிப்பு ஏற்பட்டிருகக்கும்,திரும்ப மீண்டு வரதெல்லாம் பிரம்ம பிரயத்தனம்”என்றாள் இரண்டாமவள்.
“நிச்சயம் முடிஞ்சா ,கலியாண பொண்ணும் மாப்பிள்ளையும் எவ்வளவு ஜாக்றதையா இருக்கனும்.
இந்த காலத்து பிள்ளைங்க எங்க நாம சொல்லற கேக்குறாங்க”என்றான் ஒரு முதியவன்.
“எல்லாம் கண் திருஷ்டி தான்…நேத்திக்கு இராத்திரி அந்த பிள்ளைங்க வளைஞ்சி நெளிஞ்சி அடுறத என் பொண்ணு போன்ல காட்டுனா….போன்ல போட்ட உலகமே பாக்குமாம்… அப்பறம் கண்ணு படாம என்ன ஆகும்”என்று தன் பாட்டிற்கு பேசிக் கொண்டு வேலைகளை தொடர்ந்தனர் அந்த ஆட்கள்.
ஊடகங்கள் முழுவதும் ராய் குழுமத்தின் வாரிசான ஆர்யனின் திருமணம் நின்று விட்டதையும்,அதற்கான காரணத்தையும் ஃப்ளாஷ் நீயூசில் ஒளிபரப்பிய போதும்…ஒரு சிலர் ஆர்வமாக மண்டபம் வரை வந்து திரும்பிச் சென்றன.
கிட்ட தட்ட ஐந்து நாட்கள்,மருத்துவமனையே ஆர்யனின் உயிரை காப்பாற்ற மிக சிரமப்பட்டது.அதிக உதிர போக்கின் காரணமாக சுய நினைவு இறழந்தவனின்… O நெகட்டிவ் பிளட் குரூப்க்கு, டோனர் கிடைப்பதற்குள் ஆரியனின் குடும்பம் ஒரு வழி ஆகி போனது.
ஒரு நீண்ட உறகத்திற்கு பிறகு இன்று தான் கண் விழிகிறான்…அருகே அவன் தலையை வருடியபடி அவன் அன்னை தீட்சண்யா,மறு புறம் அவன் தந்தை விக்ரமன்..எப்பொழுதும் விரைபாகவே இருக்கும் அவர் முகம் கூட கலங்கி தவித்தது.அடுத்து அவன் தாத்தா…ஹர்சவர்தன் ராய் கம்பீரமான முதியவர்…குழந்தை போல் அழுதுக்கொண்டிருக்க…அவரை சமாதான படுத்தியபடி பாட்டி லக்ஷ்மி.இறுதியாக கலங்கிய முகத்துடன் ராகுல் மற்றும் அவனது நண்பர்கள் என அனைவரும் கூடி இருந்தும்…
அவனது கண்கள் தேடியதோ அவனின் கண்மணியை தான்.அந்த அறையில் அவள் இல்லை என்றதும் நெஞ்சம் குளிர தொடங்கியது.கண்கள் தானாக கண்ணீரை சுரக்க…நெஞ்சத்தில் பரவும் குளிரை தடுக்க வழி தெரியாது தினறியவன்.
“அனி…அனி..க்கு என்ன ஆச்சு..?”என்றான் மெல்லிய குரலில்.
அவனிடம் என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை…இப்போதைக்கு அவனை டென்ஷன் ஆக விடக்கூடாது என்று நினைத்த ராகுல்..
“ஷி is fine,பக்கத்து அறையில் தான் இருக்கா….அவளுக்கு இன்னும் மயக்கம் தெளியல டா..அதனால் தான் யாரையும் இன்னும் பார்க்க ஹலோவ் பண்ணல”என்ற ராகுலை வெறித்தவன்.. நினைவு அந்த நிகழ்வை நோக்கி பயணித்தது.
அனிகாவின் அலறல் காதுகளை அடைக்க…”இல்ல அவ…அவளுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது…அவ நல்லாதா இருப்பா ..இருக்கனும்”என்று நினைத்தவன் மனம் வழக்கதிற்கு மாறாக மிக வேகமாக துடிக்க…தனது இன்டீயூசன் சொல்வதை ஏற்க மறுத்து…நண்பன் கூறுவது உண்மையாக இருக்க வேண்டும் என்று முதல் முறையாக இறைவனை யாசித்தான்.
“நான்…அவளை பார்க்கனும்.உள்ள போக வேண்டாம் ,அறைக்கு வெளியே நின்று பார்தாலே போதும்..ப்ளீஸ்”என்று கெஞ்சும் நண்பனை சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை.
“அம்மா…அம்மா…என்ன அனி கிட்ட கூட்டிட்டு போங்க…நான் அவள பார்கனும்…”என்றவன் அப்பொழுது தான் தனது குடும்பத்தின் கலங்கிய முகத்தை பார்கிறான்.”ஏதோ சரி இல்லை….நான் நினைபதா..இல்லை இல்லை அனி…என் அனிகாவிற்கு என்ன ஆக போகிறது.நேற்று என்னுடன் நன்றாக தானே இருந்தாள்”என்ற மனதின் பிதற்றள்களை ஓரம் தள்ளியவன்.
எழுந்து அமர்ந்தான்,எங்கிருந்து அத்தனை பலம் வந்ததோ… தட்டுத்தடுமாறி படுக்கையை விட்டு எழுந்தவன்….தனது கையில் இருந்த செலைன் ஊசியை பிடுங்கி எறிந்துவிட்டு,அதன் விளைவால் இரத்தம் சொட்டும் கரத்தை பொருட்படுத்தாது …பக்கது அறைக்குச் சென்றான்.
குடுபத்தின் அத்தனை பேர் தடுத்தும்…யாராலும் அவனை கட்டுபடுத்த முடியவில்லை…தன்னை கட்டி அனைதிருந்த ராகுலை உதறி தள்ளியவன்.அருகே இருந்த அறைக்குள் செல்ல, வெற்று படுகை தான் அவனை வரவேற்றது.
ராகுலின் சட்டையை கொத்தாக பிடித்த ஆரியன்…
“எ…எங்க டா..என் அனி…அனிகா.எங்க..அவ”என கேட்கும் முன்பே கண்ணீரை வழிந்து விட.
உண்மையை உணர்ந்து நிலைகுழைந்து போன ஆர்யன்… அவ்விடத்திலேயே தோய்ந்து அமர்ந்தான்.மனதில் தோன்றும் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டவன்.
“நான் இங்க வந்து எத்தனை நாள் ஆகுது?”என்றான் உணர்ச்சிகள் காட்டாது.
“அ…ஐந்து நாள் ஆகுது”என்ற ராகுலை உதடுகள் நடுங்க பார்த்தவன்… மீண்டும் அழ துடித்த கண்களை கட்டுபடுத்திக்கொண்டு.
“சரி,வா.அவ எங்க…என்னை அவகிட்ட கூப்டு போ”என்ற நண்னை வினோதமாக பார்த்தவன்..பின்பு அவன் கேட்கும் அர்த்தம் புரிந்து.
“இ…இல்ல ஆர்யன்.அ…அனியோட பேரன்ஸ்…அவ…அவள..யூஎஸ் கே எடுத்துட்டு போயிடாங்க…அவ பொறந்து வளர்ந்தது அங்க தான.அத்தான் “என்று தயங்கிய படி கூறிய நண்பனை அழுகையை விழுங்கி பார்தவன்.
“சரி வா யூ.எஸ் போகலாம்”என்றான் ஆர்யன்….அவளுடைய கல்லறையை ஆவது தனது கன்னீரால் கழுவினால் தான்..அவனுடைய இதயத்தில் இருக்கும் வலி சற்று மட்டுப்படும் என்று தோன்றியது.
ராகுலுக்கும்,ஆர்யனின் அன்னை தந்தையருக்கும் அவனை என்ன கூறி சாமாளிப்பது என்று தெறியவில்லை.விபத்தில் உடைந்த காலை,ஆப்பரேஷன் செய்து சரி செய்திருக்க...அதன் வலி எல்லாம் அவனுக்கு உறைக்க கூட இல்லை போலும்.
“தான் கூறுவது உடனே நடந்தாக வேண்டும்” என்று நிற்பனை என்ன செய்து சமாதானம் செய்வது தெரியவில்லை.
“ஆர்யன் ….கண்ணா உனக்கு உடல் முழுக்க அடி பட்டிருக்கு,பாரு கால்ல கூட இரத்தம் கசியுது.இப்போதைக்கு நீ அங்க போக வேண்டாம்.உடம்பு சரியானதும்,அப்பாவே உன்னை அங்க அழைச்சிட்டு போவார்”என்ற தாயின் மென்மையான ஸ்பரிசம் அவனை குளிர்விக்க வில்லை.
அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரைபுரண்டோட…
“மாம்,உங்களுக்கு புரியலையா..எ…எனக்கு அவள பாக்கனும்.என்னால முடியல மாம்,மூச்சு முட்டுது, பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்கு ,இ…இங்க வலிகுது மாம்”என்று நெஞ்சை நீவிக் கொண்டு அழும் மகனை காண முடியாமல் கதறிவிடட்டார் தீட்சண்யா.
“ஆர்யன்,நாங்க தான் சொல்றோம் இல்ல கண்ணா…உன் உடல் நிலை சரி ஆகட்டும்.பிறகு நீ ..”தனது தாத்தா சொல்லும் அறிவுரைகளை கேட்கும் அளவு பொருமை இல்லை.
“ஐயோ,ஏன் எல்லாருமா சேர்ந்து என்னை கொல்றிங்க,ஆஆஆஆஆஆஆஆ”என்று வெறிபிடித்தவன் போல் கத்தியவன் கதறி அழ…பெற்றவர்களுக்கும் தான் மகனின் வேதனை கண்டு நெஞ்சம் எல்லாம் கலங்கியது.
கீழே மடங்கி அமர்ந்து,நெஞ்சம் வெடிக்க கதறும் நண்பனை கட்டி அனைத்துக் கொண்டான் ராகுல்.பொதுவாக ஆர்யன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆள் இல்லை,மிகவும் கவனமாக சூழ்நிலையை கையாளும் ஆடவன்.ஆனால்,இந்த காதல் அவனை சுறா வளியாக சுழற்றி அடிக்கிறது.
“ராகுல்….ராகுல் ,அன்னைக்கு தான் நாங்க ரொம்ப சந்தோஷமா இருந்தோம்.என் கைகுள்ளயே இருந்தா டா.இன்னும் ஒரு 4 மணி நேரம் போயிருந்த…நாங்க இரண்டு பேரும் கணவன்-மனைவி டா.நான் எ…எப்படி …..அவ இல்லாம இருப்பேன்”என்றவன் ஏங்கி ஏங்கி அழ …அவனது கண்ணீரை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் கூட கலங்கி தான் போயினர்.
இவனுக்காக,அந்த வீ.ஜ.பி தளத்தையே வாங்கி இருந்ததால்,அவனுடைய உணர்வுகள் யாராலும் கட்சிக்காக இணையதளத்தில் வெளியிட்டு காசு பார்க முடியவில்லை என்ற வருத்தம் ஒரு சில பத்திரிக்கைகளுக்கு.
ஒரு கட்டத்திற்கு மேல் அவனை சமாதானம் படுத்த இயலாது….ஊசியின் மூலம் தான் உறக்கத்தை தழுவினான்.அதன் பின்னான நாட்களில் அழவில்லை என்றாலும் ….உள்ளுக்குள் இறுகி போனான் ஆரியன்.யாரிடமும் முகம் குடுத்து பேசுவதில்லை,தனிமையில் தனது காதலியிடம் மானசீகமாக மன்னிப்பை யாசித்தான்.
நண்பனுக்கான அனைத்து பணிவிடைகளையும் ராகுல் பார்த்து கொண்டான்.கட்டளையிட்டால் ஆயிரம் ஆட்கள் வேலை செய்ய வருவார்கள் என்றாலும்,அதில் அன்பும்,கனிவும் ,அக்கரையும் இருக்குமா என்றால்….கேள்விக் குறி தான்.எத்தறை முறை ராகுல் ஆர்யனை இயல்பு நிலைக்கு திரும்ப முயன்றும்,பலன் எண்ணமோ பூஜ்யம் தான்.
இப்பொழுதெல்லாம் அடிக்கடி கண்கள் குளம் கட்டிக் கொள்கின்றன.
**_மீண்டும் ஒரே ஒரு வாய்பிற்காக இறைவனிடம் மன்றாடுகிறான் ஆர்யன்_**
இம்முறை இறைவன் கண் திறந்து வரம் தான் கொடுக்கிறார்…பார்க்கலாம் நம் நாயகன் அதை பொக்கிஷமாக பார்த்துக் கொள்வானா அல்லது தூக்கி எறிவானா என்று.
இங்கே சென்னை மாநகராத்தில்,சுற்றிலும் இருள் சூழ்ந்த வேலையில்…ஒரு குப்பை தொட்டியின் பின்பு ,தனது கைகளால் வையை பொத்தியபடி அமர்ந்திருக்கிறாள் அவள்.
“டேய் எங்க டா போனா அந்த…..?
ஒரு கோடி பணம் டா அந்த நாய்க்கு விலை…தேடுங்க சூடு பட்ட காலோடு தப்பிச்சு போயிருக்க முடியாது.இங்க தான் இருப்பா?”என்று ஒருவன்…தன்னுடன் இருந்த 4 ஆட்களுக்கு கட்டளையிட அவர்களும் கலைந்து சென்றனர்.
அப்பொழுது அந்த பெரிய குப்பை தொட்டியில் இருந்து வெளியேறிய நாய் அவளை பார்த்து குறைக்க…அதை துறத்தி விட்ட அந்த அரக்கன்.
மறைந்து இருந்தவளின் பிடரி முடியை பற்றி வெளியே இழுத்து வந்தான்,அவனிடம் இருந்து ஓட முயன்றவளின் கன்னத்தை பிடித்து…அவளது கண்களை பார்த்துக் கொண்டே..தனது வாயில் இருந்த சிகிரேட்டை எடுத்து..அவளின் தோள் பட்டையில் சூடு வைக்க.
அவள் அனிந்திருந்த உடையை ஊடுருவி ,அவளது மென்மை சருமத்தை புன்னாக்கியது …அந்த செந்தனல்.
நேசம் தொடரும்…
ஆர்யன்❣️________
இனி ரெகுலர் அப்டேட் வரும்…கொஞ்சம் சப்போர்ட் பன்னுங்க மக்களே.
