இதழ் – 19

சரஸ்வதி அருவியின் அறைக்கு வர, வேகமாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் அருவி.

“எங்க போன அருவி? எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல…” என்றாள் சரஸ்வதி கவலையுடன்.

‘உங்கள மாதிரி மாமியார் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்… ஆனா தெரிஞ்சே உங்க மனசை நான் காயப்படுத்துறேன்… என்னை மன்னிச்சிடுங்க அத்தை’ என மனதில் நினைத்து அருவி கலங்கினாள்.

“உன் கிட்டதான் அம்மா கேட்குறாங்க… பதில் சொல்லு” என்றபடி அறைக்குள் வந்தான் ராகவன்.

“அத்தை… அதுவந்து…” என அவள் ஏதோ சொல்ல வர,

“அம்மா, நான் கேட்டதுக்கே அவ எந்தப் பதிலுமே சொல்லல” என்றான் அவளை முறைத்தபடி.

அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவள்,  

“நான் எங்க போனாலும் உங்க கிட்ட சொல்லிட்டு போகணுமா? எனக்குனு இங்க எந்த சுதந்திரமும் கிடையாதா? இந்த வீட்ல நான் என்ன… அடிமையா? உங்க பையன கல்யாணம் முடிச்சுட்டு இந்த வீட்டுக்கு வந்து என்னோட சந்தோஷமே போச்சு!” என்றாள் அருவி கோவமாக.

அங்கு வந்த சேதுராமன், “உனக்கு என்னாச்சு அருவி? ஏன் இப்படியெல்லாம் பேசுற? உனக்கு என்ன பிரச்சனை… எங்க கிட்ட சொல்லு” என்றார் பாசமாக.

“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நீங்க சும்மா சும்மா என்னை கேள்வி கேட்கறது எனக்குப் புடிக்கல. என்னை கொஞ்சம் நேரம் அமைதியா விடுங்க” என்றாள் அருவி முகத்தைத் திருப்பிக் கொண்டு.

அவள் பேசியதை நம்ப மாட்டாமல் இருவரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்து நின்றனர். பின் தன் மனைவியை மெதுவாகத் தங்கள் அறைக்கு அழைத்து வந்தார் சேதுராமன்.

“என்ன ஆச்சுங்க இந்த பொண்ணுக்கு? ஏன் இப்படி நடந்துக்குறா?” எனக் கவலையுடன் சரஸ்வதி கேட்டாள்.

“ஒண்ணும் இல்ல… விடு. பேசாம நீ தூங்கு. உன்ன ஏற்கனவே டென்ஷன் ஆகக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க” எனக் கூறியவர் தன் மனைவிக்கு ஊட்டி விட்டு, அவரும் இரண்டு வாய் சாப்பிட்டு இருவரும் உறங்கினார்கள்.

இங்கு கதறி அழுதாள் அருவி. அறைக்கு வந்த ராகவன் கதவைச் சாத்திவிட்டு நக்கலாகச் சிரித்தான் அவளைப் பார்த்து.

திரும்பி அவனைப் பார்த்தவள் எழுந்து கோபமாக, “ஏன் இப்படிப் பண்றீங்க சொல்லுங்க? உங்களுக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்? அத்தையும் மாமாவும் என் மேல உயிரா இருக்காங்க… அவங்களை இப்படிப் பேச வைக்கிறீங்க. அவங்க மனசு எப்படி கஷ்டப்பட்டிருக்கும்?” என்றாள்.

“போதும்… நிறுத்துடி! ரொம்ப ஓவரா பேசாத. முதல்ல எனக்கு அவங்க அம்மா அப்பா… அதுக்கப்புறம்தான் உனக்கு அத்தை மாமா. புரிஞ்சுதா? ரொம்ப நல்லவ மாதிரி நடிக்காத” என்றான்.

“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நான் நல்லவதான்” என்றவளின் கழுத்தைப் பிடித்து சுவரோடு தூக்கியவன்,  

“என்னடி? பயம் விட்டுப் போச்சா?” 

அவன் இறுக்கியதில் அருவிக்கு இருமல் வர, அவளைப் பொத்தென பெட்ஜில் போட்டான்.

அவள் இருமிக் கொண்டே அமர்ந்திருக்க, “இங்க பார்! எங்க அம்மாவே பார்த்துதான் நல்ல பொண்ணுனு எனக்கு உன்ன கல்யாணம் முடிச்சு வச்சாங்க. நீ இப்படி நடந்துக்கிட்டாதான் உன் மேல அவங்களுக்கு வெறுப்பு வரும். அதுக்காகத்தான் உன்ன இப்படிச் செய்யச் சொன்னேன். புரிஞ்சுதா?!” 

“இப்படி நீங்க என்னை கொஞ்சம் கொஞ்சமா சித்திரவதை செய்யிறதுக்கு பதிலா… என் கழுத்த நெரிச்சு கொன்றுருங்க. நான் செத்துப் போயிடுறேன்” என மனம் நொந்து கூறி அழுதாள்.

“நீ இப்படி ஒரேயடியா சாகக்கூடாதுடி. உன்ன மாதிரி பொண்ணுங்க எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா துடிச்சு சாகணும். எத்தனை பசங்கள நீங்க சாகடிச்சிருக்கீங்க!” 

“நான் நடிக்கிறேனா?! நீங்க என்னதான் பேசுறீங்கன்னு எனக்கு ஒண்ணும் புரியல” என்றாள்.

“ஒண்ணும் புரியல… புரியலன்னு சொல்ற பொண்ணுங்களுக்குத்தான் எல்லாமே தெரியும். புருஷன எப்படி மயக்குறது, மாமனார் மாமியார் கிட்ட இருந்து எப்படி பிரிக்கிறது அப்படிங்கிறது வரைக்கும்” என்றான்.

“நீங்க என்னைத் தப்பா நெனச்சிட்டு இருக்கீங்க. ஒரு நாளும் அப்படி நினைச்சது இல்லைங்க.”

“ஆரம்பத்துல எல்லா பொண்ணுங்களும் இப்படித்தானே சொல்றீங்க? ஆரம்பத்தில் எங்க அம்மா அப்பானு சொல்லுவீங்க… கொஞ்ச நாள் கழிச்சு எங்கள உங்க கைக்குள்ள போட்டுக்கிட்டு, அவங்க கிட்ட இருந்து எங்கள பிரிச்சிடுவீங்க” என்றான் ராகவன் கோவமாக.

“நீங்களா கற்பனை பண்ணாதீங்க” என்றாள்.

அவள் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்தவன், “என்னடி? பேச விட்டா ரொம்ப ஓவரா பேசுற… வாய ஒடச்சிடுவேன் பாத்துக்கோ!” என்றவன் கோபமான முகத்தைப் பார்க்க அவளுக்கு மனம் அவ்வளவு வலித்தது.

‘இவனையா… நாம உருகி உருகி காதலிச்சோம்’ என நினைத்தவள், “நான் ஒண்ணு சொன்னா செய்வீங்களா… ப்ளீஸ்?”

“என்ன?”

“தயவு செய்து உங்கள நான் கெஞ்சிக் கேட்கிறேன்… என்னை எங்க வீட்டிலேயே விட்டுடுங்க. நான் எங்க வீட்டிலேயே இருந்துடுறேன்.”

“அப்படியா?!”

“ஆமாங்க… தயவுசெய்து எனக்கு இந்த ஒரு உதவி மட்டும் பண்ணுங்க.”

“ஒரு கண்டிஷன்.”

“சொல்லுங்க.”

“நீ உங்க அம்மா அப்பாவ பார்க்கப் போகக்கூடாது. அப்படி நீ பார்க்கப் போனேன்னா… அது தான் அவங்கள நீ கடைசியா பார்க்கிறதா இருக்கும். அதுக்கப்புறம் உன்னால அவங்கள எப்பவும் பார்க்கவே முடியாத இடத்துக்கு அனுப்பி விடுவேன்” என்றான்.

அவன் கூறியதைக் கேட்டு அப்படியே தலையில் இடி விழுந்தது போல் அமர்ந்து விட்டாள் அருவி.

“தயவு செய்து அவர்கள எதுவும் பண்ணிடாதீங்க… நான் அவங்கள பாக்கப் போகல” என்றாள் அவன் காலைப் பிடித்துக் கெஞ்சியபடி.

“பாக்குறது இல்ல… நினைக்கக் கூடக் கூடாது. புரிஞ்சுதா? நான் சொன்ன மாதிரி நீ கேட்கணும். இல்லேன்னு வை… அவங்கள அழிச்சிடுவேன்” என்றவன் எதுவும் நடக்காதது போல் பெட்டில் படுத்து உறங்கிவிட்டான்.

காலையில் நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.  

‘காலையில் அவளை கோயில்ல விட்டுச் சென்றதும்… எதுக்காக வந்து விட்ருக்காருன்னு தெரியல! இருந்தாலும் கடவுளே… உன் சன்னதியில் இருக்குறதும் மனசுக்கு நிம்மதியா இருக்கு’ என நினைத்தாள்.  

நேரம் ஆக ஆக ‘ஒருவேளை அவர் வராம போயிடுவாரோ… ஏன் இப்படி ஆயிட்டாரு?’ என்றவள் கோயில் வேலைகளைச் செய்தாள். இரவு ராகவன் அவள வீட்டுக்கு அழைக்க வந்ததும் ‘மனசு மாறி தான் கூப்பிட வந்திருக்கிறான்’ என மனதில் கொஞ்சம் சந்தோஷப்பட்டவள்… இப்போது ராகவன் பேசிய பேச்சில் மொத்தமாக நொறுங்கிப் போனாள்.

‘மறுபடியும் இந்த சித்திரவதை படுத்துவதுக்கு தான் என்ன கூட்டிட்டு வந்திருக்கானா கடவுளே… என் மேல கொஞ்சமாவது இரக்கம் இருந்தா… இப்படி தூங்கும்போது நான் செத்துப் போயிடணும். எனக்கு இந்த வாழ்க்கை வேணாம் கடவுளே… நான் நினைச்சு வந்தது ஒண்ணு… ஆனா நடந்துகிட்டு இருக்கிறது ஒண்ணு. இவருக்கு என்ன நெனைக்கிறாருன்னு எனக்குத் தெரியல! என்னால இவர் பண்ற கொடுமை எல்லாம் தாங்க முடியல தெய்வமே… கருப்புசாமி’ என நினைத்துக் கொண்டபடி அழுது அழுது ஓய்ந்து அப்படியே அழுது கரைந்தாள்.

அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்தவள், “அருவி!” என்ற ராகவனின் சத்தத்தில் திடுக்கிட்டு கண் விழித்தாள். எதிரில் ராகவன் இல்லை.  

‘அவர் நம்ம பக்கத்துல இல்ல… ஆனா எதுக்கு இவ்ளோ சத்தமா கத்துறார்னு தெரியலையே’ என அடித்து விட்டு முகம் கழுவிவிட்டு கீழே வர, சேதுராமனும் சரஸ்வதியும் கையில் பேக்குடன் நின்றிருந்தனர்.

“உங்களைத் தான் அப்பா கேட்குறேன்… பதில் சொல்லுங்க. ரெண்டு பேரும் எங்க போறீங்க?” என ராகவன் கேட்டான்.

“நாங்க கொஞ்ச நாளைக்கு வெளியில இருந்துட்டு வரலாம்னு போறோம். மத்தபடி ஒண்ணும் இல்ல” என்றாள் சரஸ்வதி.

“எங்கேயும் போகாதீங்க அத்தை” என்றாள் அருவி அழுதபடி.

அவளது பாசம் ராகவனுக்கு நடிப்பாகவே தெரிந்தது. ‘எப்படி நடிக்கிறா பாரு’ என அவளையே முறைத்தபடி நின்றான்.

“இல்ல… நாங்க எங்கேயும் போகல. கோயிலுக்கு தான் போறோம். சும்மா ஒரு 5 நாள் போயிட்டு வந்துடுவோம். நீயும் ராகவனும் மனசு விட்டு பேசுங்க சரியா? உன் மனசு கொஞ்சமா ரிலாக்ஸ் ஆகட்டும். உனக்கு நாங்க டெய்லி போன் பேசுறோம். பாத்துக்கோ சரியா?” என்றவர் அன்பாக அவள் நெற்றியில் முத்தமிட்டாள் சரஸ்வதி.

“அப்பா…” என்றான் ராகவன் சேதுராமனைப் பார்த்து.

“நாங்க கோயிலுக்கு தான் போறோம். ராகவா… எங்க மருமகள நல்லா பாத்துக்கோ.”

“அப்பா! நான் சொல்றத கேளுங்க அப்பா” என அவன் கூற,

“உன் கிட்ட பிசினஸ் பத்தி பேசணும்” என சற்றுத் தள்ளி அழைத்து வந்தவர்,  

“நாங்க நல்லா யோசிச்சுதான் இந்த முடிவு எடுத்தோம். கல்யாணம் பண்ண புருஷன் பொண்டாட்டிக்கு தனிமை ரொம்ப முக்கியம். அது அருவிக்கு கிடைக்காததுனால தான் அவ இந்த மாதிரி நடந்துக்கிறான்னு எங்களுக்கு தோணுது.”

“அது வந்து அப்பா… அதுக்காக நீங்க…”

“நாங்க இப்ப எடுத்த முடிவு கிடையாது. நீங்க ஹனிமூன் போயிட்டு வந்ததுக்கு அப்புறமே நாங்களும் கோயிலுக்கு போகணும்னு முடிவு எடுத்து தான் இப்போ கிளம்புறோம். மத்தபடி வேற ஒண்ணும் இல்ல” என்றாள் சரஸ்வதி.

“அத்தை! தயவு செய்து என்னை மன்னிச்சிருங்க” என அவர் காலில் விழுந்து கெஞ்சினாள் அருவி.

அவருக்கும் அவளைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது.

அப்போது அவர் அருகில் வந்த சேதுராமன், “சரஸ்வதி… கிளம்பலாம்” எனத் தலையசைக்க,

“நாங்க ஒரு கோவிலுக்கு போயிட்டு வரும்போது நீங்க ரெண்டு பேரும் பழையபடி சந்தோஷமா இருக்கணும். அதுதான் எங்களுக்கு முக்கியம்” என அவர்கள் காரில் ஏறிப் புறப்பட்டனர்.

அப்படியே தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்த அருவியை, “தர… தர” என இழுத்து வந்தவன் குளியல் அறைக்குச் சென்று சவரைத் திறந்து விட்டு அவளை நிற்க வைத்தான்.

“நான் சொல்ற வரைக்கும் இங்க இருந்து வெளில வரக்கூடாது. புரிஞ்சுதா?! என்னை மீறி ஒரு அடி நகர்ந்தா… அப்புறம் உன் ஆத்தா அப்பன் எலும்பு கூட கிடைக்காது” என்றான் ராகவன் ஆத்திரத்துடன்.

“சரி” என அவள் தலையசைக்க, ஆபீஸ் கிளம்பிச் சென்ற ராகவன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நேரம் ஆனது. மணியைப் பார்த்தான்… மணி 2 ஐக் காட்டியது.  

‘12 மணிக்கே கால் வலிக்குதுன்னு சொல்லி பெட்ல போய் படுத்திருப்பா… வீட்டுக்கு போய்ப் பார்த்துக்கலாம்’ என்றவன் சற்று நேரம் கழித்து மெதுவாகவே வீட்டிற்கு வந்து பார்க்க… வீட்டில் அவள் இருப்பது போல் தெரியவில்லை.

“அருவி!” எனக் கத்தினான். 

வேகமாகத் தன் அறைக்கு வந்து பார்க்க… குளியல் அறையில் மயங்கி நிலையில் கிடந்தாள் அருவி.

♥️ அச்சச்சோ! அருவிக்கு என்ன ஆச்சுன்னு தெரியலயே… 🤔 பாவம் அவ… நாளைக்கு எபி மிஸ் பண்ணாம படிங்க பிரண்ட்ஸ் ப்ளீஸ் ❤️

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
இதழில் கதை எழுதும் நேரமிது
1,358 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page