நலம் தானா ஊதாப் பூவே!! -7

“தடுக்கி விழ நேர்ந்த போதும் தாங்கிப் பிடிக்க வரும் கரத்தினிடம் சிக்கிக் கொள்ள விரும்புகிறேன் “

…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…

பாகம் -7

ஏற்கனவே மயக்க மருந்து கொடுத்த ஜூஸ் குடித்து மயங்கி கிடந்தவளை வர்மா தூக்கிச் சென்று வீட்டில் சேர்த்த சம்பவம் திரும்பவும் நிகழாமல் இருக்க, சீக்கிரமே இங்கிருந்து ஆரண்யாவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவில் இருந்தான் வர்மா,

விஜய் அவளிடம் நெருங்கி பேசினால் கூட பொறுத்துக் கொள்ளாதவன் மற்றவர்களை அவளிடம் நெருங்க விட்டு விடுவானா,

நிதிஷா, ஆரண்யாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இவளிடம் அப்படி என்ன இருக்கிறது, வர்மா வேலைக்கு சேர்த்து கொண்டதோடு, அவளிடம் நெருக்கம் காட்டுவது போல் தெரிகிறது. அழகு, படிப்பு, அந்தஸ்து இப்படி எல்லா விதத்திலும் நான் தான் பெரிய இடத்தில் இருக்கிறேன். இவள் என் கால் தூசிக்கு வருவாளா, அன்று கொடுத்த மயக்க மருந்து பத்தாது, இன்னும் வேற ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் நான் தான் என்று வெளியே தெரியக்கூடாது’

யோசித்தவள், வேறு யாராவது ஆரண்யாவை பார்க்கிறார்களா, கண்களை அப்படியே எல்லா இடத்திலும் சுழல விட, ராஜ் குரூப் ஆப் கான்ஸ்டரக்ஷன் வருண் ஆரண்யாவை விழுங்கும் பார்வை பார்த்து நிற்க, இவளுக்கோ மனதில் ‘ஆடு சிக்கிடுச்சு இவனை வச்சு இவளுக்கு ஒரு முடிவு கட்டுவோம், இவங்க பேசறதை வர்மா பார்க்குற மாதிரி செஞ்சிட்டா போதும், மத்தது தானா நடக்கும்’ திட்டம் தீட்டியவள், வர்மா எங்கிருக்கிறான் என்று பார்த்தாள்.

வர்மா யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். இது தான் சமயம் என்று வருணிடம் சென்றாள்.

வருண் பற்றி கேள்வி பட்டிருக்கிறாள். ராஜஸ்தான் தான் இவர்களின் பூர்வீகம், இப்போது சென்னையில் ராஜ் குரூப் ஆப் கன்சட்ரக்ஷன், அழகான பெண்ணைப் பார்த்து விட்டாள் போதும் அவர்களிடம் பேசி, பழகுவது தான் வருணின்  குணம்.

ஷைன் பிளாக் 3 பீஸ் கோட், சராசரி உயரம், எப்போதும் சிரிப்பு இருக்கும் அவனிடம்

“ஹாய் வருண்”

நிதிஷாவை உற்றுப் பார்த்தவன் “ஹாய் பேப்”

“ஐயம் நிதிஷா”

“வாவ் நைஸ் நேம், யூ லுக் வெரி ப்ரீட்டி”

“தேங்க் யூ வருண், யூ லுக் சோ கூல்”

“தேங்க் யூ டியர்” அவன் சிரிப்பை பார்த்தவள் அப்படியே பார்த்திருக்க,

அவள் முகத்தின் முன் கை அசைத்தவன் “நிதிஷா” என்றான்

“ஹான்” அவனிடமிருந்த பார்வையை விலக்கியவள்

“வருண் ராஜ் குரூப் ஆப் கன்சட்ரக்ஷன், ஆம் ஐ கரெக்ட்”

“எஸ் எஸ், யூ “

“சுனில் குரூப்ஸ்”

“சுனில் அங்கிள் ஐ க்நொவ் ஹிம் வெரி வெல்”

இருவரும் கைக் குலுக்கிக் கொண்டனர். “மை பிரண்ட் ஆரண்யா” அவளைப் பார்த்து சொல்ல

வருண் கண்கள் மின்னியது “நிதிஷா, இன்ட்ரோ கொடுக்க முடியுமா” கண் சிமிட்டிக் கேட்டான்.

“யா சுயர், பட் ஒன் கண்டிஷன்”

“வாட் பேப்” அவசரப்படுத்தினான்

“நீ கொஞ்ச நேரத்துக்கு அவ கிட்ட பேசிட்டு இருக்கணும், வேற எங்கும் போய்டக் கூடாது ஓகே வா”  வலிய இவளாவே வந்து பேச வைக்குறா, இதுல எதனா உள்குத்து இருக்குமோ, அவன் முகம் யோசனைக்குத் தாவிட,

‘என்ன இவன் இவ்ளோ யோசிக்கிறான். செய்ய மாட்டானோ ‘ மனதில் யோசித்தவள் “வருண் இவ என்னோட வுட்பி  ஆபீஸ்ல தான் ஒர்க் பண்றா, வர்மா கூட டைம் ஸ்பென்ட் பண்ண பார்த்தா இவ வந்து வந்து இந்த வேலை இருக்கு, இவர பார்க்கணும் எதனா சொல்லிட்டே இருக்கா, அதான் கொஞ்ச நேரம் பார்த்துகிட்டா போதும் ” வர்மா விடம் பேச துடித்துக் கொண்டிருப்பவள் போல பேச, வருணும் நம்பி ஆரண்யாவிடம் பேச சம்மதித்தான் பின் விளைவுகளை யோசிக்காமல்,

ஆரண்யாவிடம் அழைத்துச் சென்றாள். இவர்கள் சென்ற நேரம் ஆரண்யா  மட்டும் இருந்தாள். வர்மா பிசினஸ் விஷயமாக பேசிகொண்டிருந்தான். அவ்வப்போது  ஆரண்யாவை  அவன் பார்வை தீண்டிக் கொண்டுதான் இருந்தது யாரும் அறியாமல்,

“ஹாய் ஆரண்யா ” நிதிஷா சொல்ல,

நிதிஷாவின் குரல் கேட்டு திரும்பிய ஆரண்யா “ஹாய்” என்றாள் சொன்னதற்கு பதிலுக்கு சொல்ல வேண்டுமே,

“சாரி ஆரண்யா  அன்னைக்கு கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன். அதுக்கு காரணமும் இருக்கு, சொன்னா நீ என்னை புரிஞ்சிப்ப”

“நான் அதை அப்பவே மறந்துட்டேன், நீங்க சாரி சொல்ல அவசியம் இல்லை ங்க” நிதிஷாவின் பேச்சில் உண்மை இல்லை என்று தெரியும். இயல்பாக பேசி அவளை கடந்து விடலாம் என்று நினைத்தாள்.

நிதிஷாவின் பின்னே நின்றிருந்த வருண் முன்னே வந்து நிற்க, “ஆரண்யா  இது வருண், வர்மவோட பிரண்ட், ராஜ் குரூப் கேள்வி பட்டிருப்பியே வருண் தான் இப்போ பார்த்துக்குறாரு

“ஹாய் ஆரண்யா ” சிரிப்புடன் வருண் சொல்ல,

“ஹாய் சார் ” என்றாள் வர்மா வந்து விட மாட்டாரா என்ற எண்ணத்தில் பார்த்தாள். அவன் மாடியில் இருக்கும்  அறையில் பேசிக் கொண்டிருந்தான்.விஜயும் அங்கு இல்லை.

“காங்கிரட்ஸ் ஆரண்யா, உன்னால தான் டெண்டர் கிடைச்சுதாம் டாட் பெருமையா சொல்லிட்டு இருந்தாரு. இப்போ தான் கம்பெனில ஜாயிண்ட் பண்ணீங்களாம் ஒர்க்ல சின்சியர், டெடிகேஷன், ஸ்மார்ட் அண்ட் யூர் லுக்ஸ் சோ கர்ஜியஸ் ” அவன் கண்கள் அவளின் மேல் அழுத்தமாக பட,

‘ஒழுங்கா புடவையே கட்டி இருக்கலாம். இவரால வந்தது. இவன் என்ன இப்டி பார்க்குறான். இதுல இவ வேற துணைக்கு, அப்டியே  என்னை பாதுகாக்குற  மாதிரி பேச்சும், செயலும் இருக்கும், பேச்சா அவர் எப்படி உன்கிட்ட பேசுனாரு? மனம் கேள்வி கேட்க, அது பேசல தான் ஆனா பார்வை இருக்கே, அந்த கண்ணு பேசறது எனக்கு புரிஞ்சிடுச்சு. ஓ அந்த அளவுக்கு போய்டுச்சா, ஹேய் என்ன ரொம்ப பேசுற, முதல்ல போ இங்கிருந்து உள் மன கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மனதை அடக்கியவள்

எதுவும் பேச வில்லை சங்கடமாய் சிரித்து வைத்தாள்.

வர்மா வருகிறாரா என்று கழுத்து வலிக்கும் வரை பார்த்து வைத்தவளை இரண்டு பேரும் கடுப்புடன் பார்த்தனர்.வருணிடம் கண்ணைக் காட்டிய நிதிஷா வர்மா படியிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்து அவனிடம் சென்றாள்.

வர்மாவின் வருகையை வருணும் பார்த்தான். ஆரண்யாவின்  முன் வந்தவன் வழி மறித்து நின்று கொண்டான். இவனைத் தாண்டி செல்ல வேண்டும் என்றால் இவன் கொஞ்சம் விலகி வழி விட வேண்டும் இல்லை எனில் இவனை உரசிக் கொண்டு தான் செல்ல வேண்டும்.

விஜயிடம் பேசியதற்கே உடை, அமரும் இடம், நேரம் என்று மாற்றி விட்டானே, இவன் இப்படி நெருங்கி பேசுவதைப் பார்த்தாள் என்ன ஆகும். இதற்கும் நான் தானே அவரிடம் மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டுமே.

“சார் கொஞ்சம் ஒர்க் இருக்கு நான் போகணும் ” எப்படியோ திக்கித் திணறி சொல்லி விட்டாள்.

“இப்போ தான் தெரியுது அப்பா சொன்னது எவ்ளோ சரின்னு, இவ்ளோ சின்சியர் ஆகாது ஆரண்யா, 10 நிமிஷம் பேசிட்டு போலாமே” அவனும் விட வில்லை அவளை,

தவிப்புடன் நின்றிருந்தவளை ரசிப்புடன் பார்த்தான். ஏதேதோ பேசினான் அவள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள். போக விடாமல் வம்பிழுப்பவனிடம்  என்ன செய்வது, போனை எடுத்தவள் அழைப்பு விடுத்து துண்டித்திருந்தாள். இனி பிரச்சனை இல்லை ஏதாவது கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்.

“வர்மா என்னை வேணா சொன்ன, அங்க பாரு உன் பி. ஏ எப்படி நெருக்கமா நின்னு பேசிட்டு இருக்கா, உன்கிட்ட வேலை செஞ்சிட்டு உனக்கு எதிரா இருக்குறவங்க கிட்ட பேசுறா ” அவளைப் பற்றி அவனிடம் கெட்ட எண்ணங்களை பதிவிட நினைத்தாள்.

அவள் சொல்வதை அவன் கவனிக்காதது போல் நடந்தவன் முகம் கோவத்தில் சிவந்தது. பார்ட்டியும் முடியும் தருவாயில் இருக்க, அனைவருக்கும் நன்றி கூறியவன் ஆரண்யாவை  வெளியே வருமாறு கண் ஜாடை காட்டி விட்டு சென்றான்.

விஜய் ஓடி வந்து “வருண் எப்படி டா இருக்க, உன்னைப் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு ” கட்டி அணைத்து நகர்த்தியவன் ஆரண்யாவுக்கு  வழி விட்டான்.

நன்றி சொல்லியவள் வேகமாக வெளியே சென்றாள். காரின் மேல் சாய்ந்து நின்று போன் பேசிக் கொண்டிருந்தவன் ஆரண்யா  வந்ததும் கதவினைத் திறந்து கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அமர, இவளோ என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தாள்.

ஹார்ன் சத்தத்தில்  காரின் ஜன்னல் வழியே குனிந்து  வர்மாவைப் பார்க்க முறைத்தான் அவளை, காரின் கதவினை திறந்து கொண்டு  அமர்ந்தவள் கையினைப் பிசைந்து கொண்டு இருக்க, இது வேலைக்காகாது என்று நினைத்தவன் அவளின் அருகே நெருங்க, அவளுக்கு பயத்தில் வியர்வை ஆறாக ஓட, அவன் முன் துடைக்க முடியாமல் தவித்தாள்.

அவள் முகம் அருகே அவன் முகம் செல்ல, கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவள் முகம் தாண்டி அவன் முகமும் கையும் சென்றது சீட் பெல்ட்டினைப் போட்டவன் முகத்தில் வந்து மோதியது அவளின் கார்க்குழல், அதனை எடுத்தவன் அவளின் காதோரம் ஒதுக்கி விட்டு பார்வையை நகர்த்த விழி மூடிய பாவையின் முகம் வியர்வையில் இருக்க, கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது.

முகம் பார்க்கும் வேளை கோவம் எங்கோ மறைந்து போனது, அவள் கையில் சிக்கித் தவிக்கும் கைக்குட்டையை எடுத்தவன் அவள் முகத்தில் முத்துக்கள் போன்று ஜொலித்துக் கொண்டிருக்கும் வியர்வைத் துளிகளை பக்குவமாய் தொட்டு எடுத்தவன் கழுத்தினில் துடைக்க முன்னேற அதை செய்யாமல் அவள் கையில் வைத்து விட்டு தனது இருக்கைக்கு  வர அவன் இழுத்துப் பிடித்து வைத்திருந்த காற்று அவனை மீறி பெரும் உஷ்ணத்துடன்  வெளியேறியது.

காரினை ஓட்டத் தொடங்க, கண் மூடிய காரிகை இன்னமும் அப்படியே தான் இருந்தாள். பயத்தில் உறங்கி விட்டாளோ, எப்படி எழுப்புவது, அவளிடம் பேச விடாமல் அவள் மீதான கோவம் அவனுக்கு நினைவூட்டியது.

அமைதியான இந்த சூழல் பிடிக்கவில்லை, அவளை எழுப்பிட நினைத்து பாடலினை தட்டி விட

“போகும் வழி எல்லாம் காத்தே 
என் நெஞ்சில் கால் 
வைத்து நடந்தாய் 
கண் இரண்டும்
இமைக்காமல் பார்த்தேன் 
என் கண்ணிரண்டில் 
கண்ணீரை விதைத்தாய் “

இந்த பாடலை இது வரை அவன் கேட்டதில்லை அதில் இருந்த பெண்ணின் குரலில் இருந்த சோகமும்  வார்த்தைகளின் அர்த்தமும் பக்கத்தில் கண் மூடி கிடப்பவளின்  நிலையைக் கூற பாடலினை  மாற்றத் தோன்றாமல்  கேட்டவன் சத்தத்தின் அளவைக் கூட்டிட, இமைகள் பிரிந்து பாவை பார்த்தாள். அந்த பாடலும், அவர்களின் மனமும் அந்த அமைதியும் ஒரு வித இதமான உணர்வை இருவருக்கும் கடத்திட இருவருமே அதை  இதமாய் உணர்ந்தனர்.

இவர்களின் இதம் இனியும் தொடருமா அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் 
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page