அத்தியாயம் 10

விதுரனுக்கும் பிரதிக்ஷாவிற்கும் முதலிரவிற்கான ஏற்பாடை செய்து கொண்டிருந்தனர் அம்பிகாவும் சரஸ்வதியும்!

இவர்கள் இருவரும் பறந்து பறந்து வேலை செய்து கொண்டிருப்பதை அங்கிருந்த சோபாவில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் ரஞ்சித்தின் அப்பா.

தன் மகனுக்கு மணம் முடிக்க வேண்டிய பெண்ணை  விதுரனுக்கு மணம் முடிக்க வேண்டிய சூழ்நிலையையே  ஏற்றுக்கொள்ள முடியாமல் ஏற்கனவே அவர் இருக்க இப்போது இவர்கள் இருவரும் முதலிரவு ஏற்பாட்டை செய்யவும் சரஸ்வதியின் மேல் அளவு கடந்த கோபம் வந்தது ரஞ்சித்தின் அப்பாவிற்கு!

சரஸ்வதிக்கு தன் கணவனின் மனநிலை நன்றாக புரிந்தாலும், இப்போதைக்கு அவரை சமாதானம் செய்வதை விட இங்கு இருக்கின்ற சூழ்நிலையை சுமூகமாக்குவதற்கான ஏற்பாடுகளை தான் செய்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் இங்கு நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் பார்க்க முடியாமல் ரஞ்சித்தின் அப்பா, ” சரஸ்வதி இங்கே நடக்கிறது எல்லாம் என்னால பாக்க முடியல, என்னை மீறி கோபப்பட்டு ஏதாவது பேசிடுவனோனு பயமாயிருக்கு அதனால நான் இங்கே இருந்து கிளம்புறேன்! நீ எல்லாத்தையும் முடிச்சிட்டு அங்க வந்து சேரு!” என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறப் போனார்.

“என்னங்க உங்க கோபம் ஆதங்கம் எல்லாம் புரியுது, இவ்வளவு நேரம் நீங்க பொறுமையா இருந்ததே பெரிய விஷயம்னு   எனக்கு தெரியும். இன்னும் கொஞ்ச நேரத்துல பிரதிக்ஷாவை விதுரனோட அறைக்கு அனுப்பிடுவோம், அதுக்கு முன்னாடி அப்பாவா உங்களுடைய ஆசிர்வாதம் உங்க மகனுக்கு கண்டிப்பா தேவை! அத ஞாபகம் வச்சுட்டு  இங்கே இருந்து கிளம்பலாமானு யோசிச்சு முடிவெடுத்து சொல்லுங்க சொல்லுங்க!” என சரஸ்வதி சொல்ல சரஸ்வதியை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ரஞ்சித்தின் அப்பா.

“உங்க மகனோட நலனுக்காக, உங்க கோபம்  எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு   உங்க மகன் நல்லா இருக்கணும்னு ஆசீர்வாதத்தை பண்ணிட்டு போங்க! நான் காலையில  அவங்க ரெண்டு பேரையும் கோயிலுக்கு அழைச்சிட்டு போயிட்டு வந்து, வீட்டில விட்டுட்டு ஊருக்கு வரேன்!” என்று கூறினார் சரஸ்வதி.

‘ஒரு பக்கம் விதுரன் மேல் கோபம் இருந்தாலும் சரஸ்வதி சொன்னது சரிதான்’ என்பதை உணர்ந்து அப்படியே தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். ரஞ்சித்தின் அப்பா எதுவும் சொல்லாமல் இருக்க, தான் சொன்னதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார் என்பதை உணர்ந்து சரஸ்வதி தன்னுடைய வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.

இங்கு விதுரனுக்கும் பிரதிக்ஷாவிற்கும்  முதலிரவு நடத்த ஏற்பாடு நடக்கிறது என்பதை தெரிந்து கொண்ட ரஞ்சித்தும் மனிஷாவும் கோபத்தில் கொந்தளித்தனர்.

“அது எப்படி, இவங்க எல்லாரும் யோசிக்காம  இப்படி ஒரு ஏற்பட்ட பண்ணிக்கிட்டு இருக்காங்க!” என்று ரஞ்சித் கோபமாக கேட்க,

“இது எல்லாத்துக்கும் காரணம் உங்க அம்மா தான்! கொஞ்சம் கூட பெத்த மகன் கல்யாணம் நின்னு போச்சுன்னு வருத்தமே இல்லாம, தேவையில்லாத வேலையை எல்லாம் செஞ்சுக்கிட்டே இருக்காங்க!” என்று மனிஷா கூறினாள்.

“எப்பவுமே அவங்க இப்படி தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க! என்னைய விட அவங்களுக்கு விதுரன் ஒரு படி மேல தான், இதனால தான் உயிர் நண்பனா இருக்கிற விதுரன் மேல அப்பப்ப எனக்கு கோபம் வருது!” என்று கண்கள் சிவக்க கூறினான் ரஞ்சித்.

“என்னவோ போ எனக்கு ஒன்னும் புரியல! உங்க குடும்ப விஷயத்தை அலசி ஆராயிரதுக்கு எனக்கு நேரம் கிடையாது முதல்ல  விதுரன  நான் சொந்தமாக்கிக்கணும், விதுரன்கிட்ட பேசி டைவர்ஸ் கொடுத்துட்டு என்னைய கல்யாணம் பண்ண சம்மதிக்க வைக்கலான்னு நான் திட்டம் போட்டால் அதுக்குள்ள முதல் இரவுனு ஒரு சம்பவத்தை எல்லாரும் நடத்த ஏற்பாடு பண்றாங்க. எனக்கு என்னமோ ரெண்டு பேருக்கும் முதலிரவு ஏற்பாட பண்ணிட்டால் சீக்கிரத்துல அவங்க ரெண்டு பேருக்கும் குழந்தை பிறந்துவிடும். அந்த குழந்தையை காரணம் காட்டி பிரதிக்ஷாவ டைவர்ஸ் பண்ண கூடாதுன்னு விதுரன் கிட்ட சொல்லுவாங்கனு நினைக்கிறேன்! அவங்க நினைச்சபடி  நடந்தால் என்னோட நிலைமை என்ன ஆகும்!” என்று கவலைப்பட ஆரம்பித்தாள் மனிஷா.

“இங்க பாரு, அவங்க என்ன வேணாலும் திட்டம் போடட்டும். விதுரன  பத்தி உனக்கு நல்லா தெரியும். அவன் இப்ப வர உன்னைய மட்டும் தான் காதலிச்சு கிட்டு இருக்கான். கண்டிப்பா அந்தப் பிரதிக்ஷாவோட முகத்தை கூட பார்க்க மாட்டான். அவங்க பண்ற ஏற்பாடு எல்லாம் தேவையில்லாதது அவங்களுக்கும் தெரியும்! ஆனாலும் பெரியவங்கன்னு நினைச்சு எதையெதையோ பண்ணிக்கிட்டு இருக்காங்க! அவங்க நெனச்சது நடக்க போகுதா இல்ல நம்ம நெனச்சது நடக்க போகுதான்னு சீக்கிரம் அவங்களே பார்ப்பாங்க!” என்று சொல்லி சிரித்தான்  ரஞ்சித்.

“நீ என்னென்னமோ சொல்ற  ரஞ்சித்,  எனக்கு இங்க நடக்கிறது எல்லாத்தையும் பார்த்தா பயமா இருக்கு, எங்க விதுரன் எனக்கு கிடைக்காம போயிருவானோனு  என் மனசு படபடன்னு அடிக்குது!” என்று பிரதிக்ஷா கூற,

“இங்க பாரு எதுக்கும் பயப்படாதே! கண்டிப்பா விதுரன உன் கூட சேர்த்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நான் சொல்றத மட்டும் நீ கேளு, இப்ப நீ போய் விதுரன் முன்னாடி நின்னு நான் உன்னைய காதலிக்கிறேன் நீ இல்லாம என்னால வாழ முடியாதுன்னு நடி, நீ பேசுற பேச்சில விதுரன் முதலிரவு அறைக்கு போற எண்ணத்தையே விட்டுடனும்! அப்படியே எங்க அம்மாவோட வற்புறுத்தலுக்கு பயந்து விதுரன் உள்ள போனாலும் பிரதிக்ஷா முகத்தை கூட ஏறெடுத்து விதுரன்  பார்க்க கூடாது அந்த அளவுக்கு உன்னோட பர்பாமன்ஸ் இருக்கணும்!” என்று கூறினான் ரஞ்சித்.

“இப்ப பாரு, என்னோட ஆக்டிங்க!” என்று சொல்லிவிட்டு மாடி ஏறி சென்று,

விதுரனின் அறைக்கதவை தட்டினாள் மனிஷா. கூடவே ரஞ்சித்தும் விதுரனின் அறைக்கு சென்றான்.

குழப்பத்தில் இருந்து கொண்டிருந்தவன் அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டு மெல்லமாய் எழுந்து வந்து கதவை திறக்க அங்கு கண்கள் கலங்கி நின்று கொண்டிருந்தாள் மனிஷா.

“இங்க என்ன நடக்குது விதுரா, இங்க நடந்த கல்யாணத்தையே இன்னும் என்னால ஜீரணிக்க முடியல, அம்பிகா அத்தையும், சரஸ்வதி அத்தையும் சேர்ந்து உனக்கும் அந்த பிரதிக்ஷாவுக்கும் முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்! அது உண்மையா?” என்று தெரியாதது போல் கேட்டாள் மனிஷா.

“இங்க பாரு மனிஷா எனக்கே என்ன நடக்குதுன்னு புரியல! ஒரு நாள்ல என் வாழ்க்கை சுத்தமா தலைகீழா மாறி போச்சு, ஆளாளுக்கு அவங்க அவங்க இஷ்டப்படி எதை எதையோ செய்யறாங்க! எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல, அம்மா இந்த ஏற்பாட  பண்ணாதீங்கன்னு சொன்னால்,  நான் சொல்றத கேட்கலைனா இனிமேலு என்கிட்ட பேசாதன்னு  சொல்றாங்க, நான் என்ன பண்றது சொல்லு! அதனால எதுவும் சொல்லாம உங்க இஷ்டத்துக்கு பண்ணுங்கன்னு சொல்லிட்டேன்!” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான் விதுரன்.

“சரஸ்வதி அம்மா சொன்னாங்கன்னா எல்லாத்தையும் செய்வியா? அவங்களுக்கு தான் புத்தி இல்லை உனக்கு எங்க போச்சு புத்தி!” என்று மனிஷா கோபத்தில் வார்த்தையை விட

“மனிஷா மொதல்ல பேச்ச  நிறுத்து! சரஸ்வதி அம்மாவுக்கு புத்தி இல்லைன்னு சொல்ற, இன்னும் ஒரு வார்த்தை அம்மாவ பத்தி தப்பா பேசினால்  பல்ல ஒடச்சிடுவேன்!” என்று விதுரன் கோபமாக சொல்ல, அப்பொழுது தான் மனிஷாவுக்கு புரிந்தது தான் என்ன சொல்லி இருக்கிறோம் என்று!

இங்க ரஞ்சித்தோ, ‘இவளை என்ன சொல்ல சொன்னால் இவ என்ன சொல்லிக்கிட்டு இருக்கா, அவன் யாருக்காகவும் எதுக்காகவும் அம்மாவை விட்டுக் கொடுக்க மாட்டான்னு  தெரிஞ்சும் இந்த லூசு ஏன் இப்படி பேசுது! இப்ப இவ பேசி வச்சத வேற சமாளிக்கணுமே’ என்று நினைத்து கொண்டு, ” மனிஷா என்ன பேசிக்கிட்டு இருக்க! அறிவு இருக்கா உனக்கு!” என்று திட்டுவதைப் போல் நடிக்க விதுரன் அமைதியானான்.

“சாரி ரஞ்சித் ஏதோ கோபத்துல இப்படி பேசிட்டேன்” என்று விதுரனை பார்த்தபடியே ரஞ்சித்திடம் மன்னிப்பு கேட்டாள் மனிஷா.

“என்கிட்ட எதுக்கு மன்னிப்பு கேக்குற விதுரன் கிட்ட மன்னிப்பு கேளு! இனிமேலு அம்மாவ பத்தி  தப்பா பேசுறத நிறுத்து, எல்லா நேரமும் நீ பேசுறத கேட்டுட்டு அமைதியா இருக்க மாட்டோம்!” என்று ரஞ்சித் சொல்லிக் கொண்டே  மனிஷாவிடம் கண் காட்ட, மனிஷா பின்னால் திரும்பி நின்ற விதுரணை போய் கட்டிப்பிடித்தாள்.

“சாரி விதுரா  ஏதோ கோபத்துல என்ன பேசணும்னு தெரியாம பேசிட்டேன் சரஸ்வதி அத்தைய பேசணும்ங்கறது என்னோட நோக்கம் இல்லை,  எங்க என் வாழ்க்கை பறிபோயிடும்னு பயத்துல அப்படி பேசிட்டேன் என்னை மன்னிச்சிடு!” என்று கண் கலங்கினாள்  மனிஷா.

மனிஷாவின் கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து விதுரனின் சட்டையை ஈரமாக பின்னால் திரும்பி இருந்தவன் தன் கோபத்தை குறைத்துக் கொண்டு முன்னால் திரும்பி மனிஷாவை பார்த்தான்.

“இங்க பாரு மனிஷா உனக்கு ஏற்கனவே சொன்னது தான் இந்த உலகத்துல நான் எதைனாலும் பொருத்துகிருவேன் ஆனால் சரஸ்வதி அம்மாவ யாரும் பேசினால் நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன். அது ரஞ்சிதா இருந்தாலும் அதனால இனிமேல் இப்படி பேசுறத மறந்திடு, உன்னோட பீலிங்ஸ் எனக்கு புரியுது! ஆனால் நீ ஏன் என்னைய நம்ப மாட்டேங்குறனு  எனக்கு தெரியல!” என்று கண் கலங்கினான் விதுரன்.

“அவங்க பண்ணின ஏற்பாட தடுக்காம இருக்குறதுக்கு காரணம் அவங்கள நோகடிக்க கூடாதுன்னு மட்டும் தான். அதுக்காக அவங்க ஏற்பாடு பண்ணனுன உடனே அவளோட சேர்ந்து வாழ ஆரம்பிச்சிடுவேன்னு நீ நினைக்கிறியா? கண்டிப்பா எந்த சூழ்நிலையிலும் உனக்கு துரோகம் பண்ண மாட்டேன்! முதல்ல என்னைய நம்பு!” என்று விதுரன் கூற

“விதுரா உன்னைய பத்தி எனக்கு நல்லா தெரியும்.கண்டிப்பா என்னைய தவிர எந்த ஒரு பொண்ணையும்  நீ நினைச்சு கூட பார்க்க மாட்டேன்னு, ஆனாலும் இங்க நடக்கிறது எல்லாம் பார்த்தால் எங்க நீ எனக்கு கிடைக்காம போயிருவியான்னு பயமா இருக்கு! அதனாலதான் நான் இப்படி நடந்துக்குறேன். ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்க விதுரா,   நீ என்னைக்கு எனக்கு கிடைக்க மாட்டேன்னு  தோணுதோ அன்னைக்கு என் உடம்புல உயிர் இருக்காது!” என்று கண் கலங்கி அழுக ஆரம்பித்தாள்  மனிஷா.

இங்கு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்து குறுநகை புரிந்தபடி நின்று கொண்டிருந்தான் ரஞ்சித்.

கதையைப் படித்துவிட்டு உங்களுடைய எண்ணங்களை கமெண்ட்களாக எழுத்தில் பதிவேற்றிச் செல்லுங்கள் நண்பர்களே!

 

 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
விரகதாபம் தீருமோ விதுரா?
986 22 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page