சத்யா, பாரதி திருமணம் நல்லபடியாக நடந்தேறியிருக்க, திருமணத்திற்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள், தொழில்துறை சார்ந்தோர்கள் மற்றும் உறவினர்களுடன் புகைப்படங்களை எடுத்து முடித்த மணமக்கள், தனியாகப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்ட பிறகு, உணவருந்தி விட்டு தங்கள் நண்பர்களுடன் வந்தமர்ந்தனர்.
பெரும்பாலான கூட்டம் கலைந்திருக்க, நண்பர்களும் அவர்களது குடும்பத்தினரும், இன்னும் சில உறவினர்களும் மட்டுமே அங்கிருந்தனர். அதில் மிதுன் குடும்பமும், ராஜீவ் குடும்பமும் அடக்கம்.
“என்ன மித்து.. இந்தப் பொண்ணை எங்கேயாவது பார்த்த ஞாபகம் இருக்கா உனக்கு?” ராகுல் யோசனையோடு வினவிட, மிதுன் பதிலேதும் பேசாமல் இருந்தான். நதியாவைப் பற்றிய தகவல்களை இருவரும் அறிந்திருந்த போதிலும், அவளுடைய பெற்றோருக்கு விபத்து நடந்த இடம், நேரம் வேறாக இருந்ததால் அவர்களால் நதியா தான் அந்தப் பெண் என்பதை முன்பு யூகிக்க முடியவில்லை.
நதியாதான் மிதுன் தேடிக்கொண்டிருந்த காதலி என்று இப்போது ஊர்ஜிதம் ஆகிவிட்டது. அவன் மனம் முழுக்க அவள் மேல் காதல் வியாபித்திருந்தாலும், அவனுக்குள் ஏதோ ஒரு சலனம். ‘அவள் தன்னை ஏற்றுக் கொள்வாளா? ஒருவேளை மறுத்துவிட்டால்? அவளின் மேல் ஈர்ப்பு வந்திடக்கூடாதென்று அவளிடம் கோபமாக என்னவெல்லாம் பேசினேன், ஏதேதோ செய்தேன். அவள் என்னை மன்னிப்பாளா?’ தனக்குள்ளே போராடியவன் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான்.
“மித்து.. சரியா முகம் தெரியாத இந்தப் பொண்ணை எப்படி டா கண்டுபிடிக்கிறது?” ராகுல் சற்றுக் கடுப்பான குரலில் கேட்க, “நான் கண்டுபிடிச்சுட்டேன்” என்று மிதுன் சொன்னதும், நிமிர்ந்து கேள்வியாய் அவனைப் பார்த்தவனிடம், ‘இவள்தான்’ என்பதுபோல் நதியாவைக் கண்ணால் சுட்டிக் காட்டினான்.
ராகுல் அந்த வீடியோவையும் நதியாவையும் மீண்டும் மீண்டும் பார்த்தான். ‘இந்தப் பொண்ணை பத்தி மிதுன் ஏற்கனவே தகவல்கள் கேட்டிருந்தானே’ குழப்பத்தோடு அருகில் இருந்த அரவிந்திடம் “அந்தப் பொண்ணு யாரு?” எனக் கேட்க, “மிதுனோட ஒய்ஃப்” என்றான் அரவிந்த்.
ராகுல் அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தவன், “இல்லடா அது மிதுனோட லவ்வர்” என்க, அரவிந்த் இப்போது அதிர்ச்சியானான்.
“என்னடா சொல்ற? அது மிதுனோட ஒய்ஃப், அவன் எப்போ அந்தப் பொண்ணை லவ் பண்ணான்?” என்ற அரவிந்தின் நெற்றியில் படர்ந்திருந்த கேள்வி ரேகைகளைப் பார்த்த ராகுல், “மிதுனுக்கு எப்போடா கல்யாணம் ஆச்சு. சொல்லவே இல்ல” அவனுக்குப் பதில் சொல்லாமல் எதிர்கேள்வி கேட்டான்.
ராகுலும் அரவிந்தும் மாறி மாறித் தங்களுக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ள, இவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியவனோ எழுந்து ஆர்கெஸ்ட்ரா குழுவிற்கு அருகில் சென்று, அவர்களிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
ஸ்பீக்கரில் மிதுன் தனது கம்பீரக் குரலில் தொண்டையைச் செருமும் சத்தம் கேட்டதும், மொத்தக் கூட்டமும் அமைதியாகி அவனைத் திரும்பிப் பார்த்திட, அவனோ கையில் மைக்கோடு நின்றிருந்தான்.
ஓ.. நேத்துக்கூட தூக்கத்தில..
பார்த்தேன் அந்த பூங்குயில..
தூத்துக்குடி முத்தெடுத்து.. கோர்த்துவச்ச மாலை போல..
வேர்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பார்த்தா..
அவ ஓடிப்போனா உச்சிமலக் காத்தா..
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா..
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா..
வத்திகுச்சி இல்லாமலே
காதல் தீயப் பத்தவப்பா..
தேனாறு பாலாறு
போல வந்தா கண்ணுக்குள்ள..
தேசிய கொடி போல
குத்தி வச்சேன் நெஞ்சுக்குள்ள..
அங்கிருந்த அமைதியைக் கலைத்தவாறு மிதுன் மென்மையாய், கனிவாய், மனம் நிறைந்திருந்த மகிழ்ச்சியுடன், முகத்தில் அரும்பியிருந்த புன்னகையுடன் பாடலைப் பாடிக் கொண்டிருக்க, அவனுடைய நண்பர்களும் குடும்பத்தினரும் திகைத்துப் போய் அவனைப் பார்த்திருக்க, மற்றவர்கள் அவன் பாடலை ரசித்துக் கொண்டிருந்தனர்.
ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி..
ராவோடு ராவாக
அள்ளி வர நாங்க ரெடி..
இசைக்குழுவினர் அவனுக்குப் பின்னணியில் பாட, வசீகரமாய் புன்னகைத்தவன் அந்தப் பாடலைத் தொடர்ந்தான். மிதுனின் கம்பீரமான குரல் இன்று காதலால் இளகியிருந்தது.
கல்லூரி நாட்களில் நிகழ்ந்த காலேஜ் கல்சுரல்ஸ்களில் மிதுனின் பாடல் வழக்கமான ஒன்று. அவன் முறையாக இசையைக் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இசை, பாடல் என்றால் அவனுக்குத் தீராதப் பேரார்வம். அடிக்கடிப் பாடல்கள் கேட்பான். ஏதேனும் பாடலை முணுமுணுத்தபடி இருப்பான். அவனுக்கு நதியாவிடம் ஈர்ப்பு தோன்ற ஒரு காரணமாக இருந்தது இதே இசையும், பாடலும் தான்.
என்னோடுதான் கண்ணாமூச்சி..
என்றும் ஆடும் பட்டாம்பூச்சி..
கட்டாயம் என் காதல் ஆட்சி..
கைகூடும் தென்றல் சாட்சி..
சிந்தனையில் வந்துவந்து போறா.. அவ சந்தனத்தில் செஞ்சு வச்ச தேரா..
என்னுடைய காதலிய
ரொம்ப ரொம்ப பத்திரமா..
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச
வண்ண வண்ணச் சித்திரமா..
வேறொருத்தி வந்து தங்க
எம்மனசு சத்திரமா..
ஆத்தாடி அம்மாடி..
என்ன சொல்ல கட்டழக..
ஆவாரம் பூவாக..
வாய் வெடிச்ச மொட்டழக..
மனமெங்கும் நதியாவை நிறைத்திருந்தவன் காதலோடு பாடிக் கொண்டிருக்க, வியப்பில் ஆழ்ந்திருந்த அவனது நண்பர்களைப் பார்த்தவன், நாக்கை நுனிப்பல்லால் கடித்து அவர்களைப் பார்த்து ஒற்றைக் கண்ணடிக்க, பத்து வருடங்களுக்குப் பிறகு அந்த குறும்புத்தனமான, மகிழ்ச்சியான மிதுனைப் பார்த்த நண்பர்கள் வியப்பின் உச்சத்திற்கே சென்றிருந்தனர்.
மிதுனின் குடும்பத்திற்கு அவனுடைய இந்த அதீத குறும்புத்தனம் புதிதுதான். அண்ணனிடம் அன்பு இருந்தாலும், இதுவரை அதில் கம்பீரத்தையும், கண்டிப்பையும் மட்டுமே பார்த்திருந்த அவனுடைய உடன்பிறப்புகளும், விஷ்ணுவும் இன்று ஆச்சரியமாய் அவனைப் பார்த்தனர்.
நதியா அவனது வசீகரக் குரலில் தன்னை இழந்து மயங்கியிருந்தாள். அந்தப் பாடலில் இருந்த காதலை அவளால் உணர முடிந்தது. ஆனால் அது தனக்கான காதல் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
பிளேஸரில் பதித்திருந்த கற்களின் பிரபலிப்பில் பிரகாசித்த அவனது முகமும், ஸ்டைலாகத் தனது இடது கையைப் பாக்கெட்டில் நுழைத்தபடி, வலது கையில் மைக்கைப் பிடித்தவாறு, இதழெங்கும் புன்னகையை நிரப்பி, விழியெங்கும் அவளை நிரப்பி பாடிக் கொண்டிருந்தவனை, கன்னத்தில் கை வைத்து இமைக்க மறந்து, பார்த்து லயித்திருந்தாள் அவனைப் பாட வைத்தவளான நதியா.
ராசாத்தி ராசாத்தி
அட்ரஸ் என்ன கண்டுபிடி..
ராவோடு ராவாக
அள்ளி வர நாங்க ரெடி..
கொஞ்சநாள் பொறு தலைவா..
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா..
கண்ணிரண்டில் போர் தொடுப்பா..
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா..
அவன் பாடலைப் பாடி முடித்திட, அங்கு பெரும் கரகோஷம் எழுந்தது. மிதுனின் நண்பர்கள் கல்லூரி நாட்களின் நினைவில், தங்களுக்குள் பொங்கிய மகிழ்ச்சியில் விசிலே அடித்து ஆர்ப்பரித்தனர்.
பாடலைப் பாடி முடித்தவன், தன்னவள் மீதிருந்த பார்வையை அகற்றாமலே, மைக்கில், “நதிமா.. ஐ லவ் யூ டா! இந்தப் பாட்டு உனக்காகத்தான். நான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்த என்னோட காதலுக்காகத் தான். யூ ஆர் அமேஸிங். லவ் யூ சோ மச்” அவளை ஒட்டுமொத்தமாக தன்னவளாக்கிக் கொள்ளும் எண்ணத்தில் தன் இதயத்துள் பூட்டியிருந்த காதலை அவளிடம் மொழிந்திருந்தான்.
நதியா அதிர்ச்சியில் எழுந்து நிற்க, மற்றவர்களோ அவன் காதலைக் கண்டு அவள் ஆச்சரியத்தில் எழுந்து நிற்கிறாள் என நினைத்துக் கொண்டனர்.
மைக்கை கொடுத்துவிட்டு அவளருகே நடந்து சென்றவன், தன் கை சுண்டுவிரலில் இருந்த மோதிரத்தைக் கழற்றி, காதலோடு அவளது வலக்கரம் பற்றி அவளுடைய மோதிர விரலில் அந்த மோதிரத்தை அணிவித்தபின், அதே விரலில் அவன் இதழை ஒற்றி முத்தமும் தர, அதிர்ச்சியில் உறைந்து விரிந்திருந்த அவள் கண்களில், அவளுக்குள்ளிருந்த காதல் அவளையும் மீறி ஆனந்தக் கண்ணீராக வெளிவந்தது.
யாரும் இப்படி ஒரு நிகழ்வை அங்கு எதிர்பார்த்திடவில்லை. மிதுனே அதை எதிர்பார்க்கவில்லை, மனம் சொல்கின்ற பாதையில் பயணிப்பவனாக அவன் மாறியிருந்தான். தன்னுடைய அண்ணனிடம் இருந்து வாழ்க்கையைக் கற்ற அவனது உடன்பிறப்புகள் இன்று காதலையும் அவனிடமே கற்றுக் கொண்டனர். ‘திருமணமான பின்பும் தன் காதல் மனைவியின் மீது அண்ணனுக்கு இத்தனை காதலா!’ பிரமித்துப் போயினர்.
நதியா மீது அவனுக்கிருந்த காதலை அவன் குடும்பத்தினரும், நண்பர்களும் புரிந்து கொண்டனர். மிதுனின் நண்பர்கள் அவனை இழுத்துச் சென்றிட, அவன் காதல் தந்த மயக்கத்தில் சுற்றம் மறந்து சிலையாய் நின்றிருந்தவளை, வைஷாலி அழைத்துச் சென்று அமர வைத்து ஏதேதோ பேசியபடி இருக்க, அவளின் பார்வையும், எண்ணமும் அவளவனின் மீதே இருந்தது.
அவனுடைய காதலில் திளைத்திருந்தவள் வீட்டிற்குச் சென்று சேரும் வரை, எதுவும் பேசவில்லை. அவள் தான் அவனுடைய காதல் உலகத்தில் சிக்குண்டு போயிருக்கிறாளே, தன்னை மீட்டெடுக்க முடியாமல் தத்தளிக்கிறாள்.
அவள் மனதில் உள்ளதை அறிய முடியாமல் தவித்துப் போயிருந்தான் அவளுடைய காதலன். என்னதான் இருவரின் விழிகளும் ஏற்கனவே காதலைப் பரிமாறியிருந்தாலும், அதை அவளின் செவ்விதழ்கள் வழியே வார்த்தைகளாகக் கேட்டு இன்புற எண்ணம். அவளிடம் காதல் கொண்ட அவன் மனது, அதே காதலுக்காக அவளிடம் ஏங்கி நிற்கிறது.
அறைக்குள் நுழைந்ததும் கதவை செல்ஃப் லாக் செய்தவன், கனவில் மிதந்தபடி மெதுவாய் நடந்து கொண்டிருந்தவளை, அவளது இடையில் கை வைத்து பின்னிருந்து வேகமாக அணைத்திருந்தான். அவனது அணைப்பினில் சுயம் மீண்டவள், அதைத் தொடர்ந்து அவள் முதுகில் அவன் இட்ட முத்தத்தில் உடல் சிலிர்த்தாள்.
அவஸ்தையில் நெளிந்தவளின் காதில், “நதிமா.. ஐ லவ் யூ” என மெல்ல உரைத்தவன், அந்தக் காதிலேயே முத்தமும் வைக்க, அவன் மூச்சுக்காற்றின் வெப்பம் தந்த கூச்சத்தில், அவள் கழுத்தில், முதுகில் இருந்த மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.
அவனது காதல் வேகத்தைத் தாளாதவள், “சார்…” என்று இழுத்திட, இன்னும் வேகமாக அவளைத் திருப்பி அவள் பூவிதழைக் கொய்தான்.
மிதுன் தந்த முத்தத்தில் அவள் உருக ஆரம்பித்திட, அவளிதழை விடுத்து, “யூ ஆர் அமேஸிங்!!” என்றவாறு அவளின் கழுத்தைக் கடித்தான். அவன் தந்த இனிமையான அவஸ்தைகளில் இருந்து தன்னை மீட்டவள், “சா..ர்.. நான் இன்..னும் குளி…க்கல..” என்றவாறு விலக நினைத்திட, அவனோ அவள் மீதிருந்த பிடியை இறுக்கினான்.
“மிதுனா சொல்லு.. மிதுனா சொல்லுடா..” அவனது கண்கள் காதலோடு அவளிடம் இறைஞ்சி நிற்க, அவன் மீதிருந்த காதலையும் மீறி அவளிடம் ஏதோவோர் தயக்கம். “மிதுன்..” என அவள் முடிக்கும்முன் அவளது வார்த்தைகளைத் தன் இதழ்களால் திருடிக் கொண்டான்.
மிதுனுக்கு நதியாவும் அவளது காதலும் வேண்டும். அவள் மனதிலிருக்கும் தயக்கத்தால் தன்னை மறுத்து விடுவாளோ என்கின்ற பயத்தில், அவளுடைய ஆழ்மனதில் இருக்கும் காதலை வெளிக்கொணர நினைத்து அவளிடம் எல்லை மீறினான்.
அவனுடைய இதழ்கள் அவளது மார்பை நோக்கிப் பயணப்பட, அவன் கைகளோ அவள் அந்தரங்க அங்கங்களைத் தீண்டிட, உணர்வுகளோடு போரிட முடியாமல் தோற்றவள், அவனிடமே சரணடைந்தாள்.
அவன் முத்தங்களில் பாகாய் அவள் உருகிட, கண நேரத்தில் அவனுக்கு இடைஞ்சலாக இருந்த அவளது நகைகளை, உடைகளைக் கழற்றி எறிந்து அவளை மொத்தமாய் அள்ளி மெத்தையில் போட்டான்.
மோகன நிலையில் மூழ்கியிருந்த அவளது விழிகளைக் கண்டவன் அதில் மெய்மறந்தான். அவளின் மோகனப்புன்னகையில் தன்னையே தொலைத்தவன், “நதிமா.. யூ ஆர் அமேஸிங். ஐ லவ் யூ!” என்று அவள் காதோரம் மொழிந்து, காதுமடலை கடித்திட்டான்.
அவள் உடைகளுக்குள் பூட்டி வைத்திருந்த அழகை எல்லாம் அவன் கண்களுக்கும், அவனது கை விரல்களுக்கும், இதழ்களுக்கும் விருந்தாக்கியிருந்தான். தனது கைகளின் தினவைத் திரட்டி அவளது அழகை அள்ளிக் கொண்டவன், தன் காதல் நதியவளை மோகத்தில் மூழ்கச் செய்தான்.
இத்தனை நாட்களாக, அவளுடைய மோகத்தில் மூழ்கியிருந்தவனோ, இன்று அதிலிருந்து மீண்டு காதலெனும் நதியினுள் (நதியாவினுள்) மூழ்கி முத்தெடுத்தான்.
அவனுடைய தேகத்தின் கட்டழகிலும், அவன் அள்ளித் தரும் காதலிலும் நெகிழ்ந்திருந்தவள், “மிதுனா.. ஐ லவ் யூ டா!!” எனக் காதலுடன் மொழிந்து, அவள் உடலை மட்டுமல்லாது மனதையும் அவன் வசமிழந்தாள். முதன்முதலாக இருவரின் இதயங்களும் அவர்களின் தேகங்களோடு காதலில் சங்கமித்தன.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
