அத்தியாயம் 11
விதுரனும் மனிஷாவும் பேசிக் கொண்டிருக்க ரஞ்சித் குறுநகை புரிந்த படி பார்த்துக் கொண்டு நின்றான்.
“கவலைப்படாத மனிஷா நீ தான் என்னோட காதலி, உன்னைய யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பிரதிக்ஷாவை டைவர்ஸ் பண்ணிட்டு உன்னைய நான் கல்யாணம் பண்ணிப்பேன். அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு, உன் மனசுல இருக்குற தேவையில்லாத சந்தேகத்தை மாத்திகிட்டு முதல்ல என்னை நம்பு. நீ ஒவ்வொரு தடவையும் என்னை நம்பாமல் கேள்வி கேட்கும் போது எனக்கு கஷ்டமா இருக்கு!” என்று விதுரன் கூறினான்.
“விதுரன் உன்னை நான் நம்பாம இல்லை, நம்பலைனால் இந்நேரம் உன்கிட்ட சண்டை போட்டுட்டு எப்பயோ இங்க இருந்து கிளம்பி இருப்பேன்! உன் மேல நம்பிக்கை இருக்குறனால தான் இன்னும் இங்கே நிற்கிறேன்!” என்று மனிஷா கூற அவளை அழுத்தமாக கட்டிப்பிடித்தான் விதுரன்.
விதுரன் மனிஷாவை காதலிக்க தொடங்கியதிலிருந்து ஒருமுறை கூட மனிஷாவை விதுரன் கட்டிப்பிடித்ததே இல்லை, இன்று விதுரனே அழுத்தமாக மனிஷாவை கட்டி பிடிக்க,மனிஷாவுக்குள் ஏதோ புதுவித நம்பிக்கை பிறந்தது.
விதுரனும் மனிஷாவும் அணைத்து கொண்டு நிற்பதை பார்த்த ரஞ்சித் ‘என்னோட திட்டம் நல்லபடியா வேலை செய்யுது! இனி என்ன செய்யணுமோ அதையெல்லாம் அடுத்தடுத்தது சரியாக செய்யனும்’ என்று தன் மனதில் ரஞ்சித் நினைத்துக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்தார் சரஸ்வதி.
சரஸ்வதி நுழைந்ததை மனிஷா பார்த்து விட மேலும் அழுத்தமாக விதுரனை கட்டிப்பிடித்துக் கொண்டே சரஸ்வதியை பார்த்து நக்கலாக புன்னகைத்தாள் மனிஷா.
விதுரனும் மனிஷாவும் கட்டிப்பிடித்து நிற்பதை பார்த்து, ஒரு கணம் அதிர்ந்தாலும் அவர்களின் மோன நிலையை கலைக்க எண்ணி, “விதுரா” என்று அழைத்தார் சரஸ்வதி. சரஸ்வதியின் குரலை கேட்டு, மனிஷாவை தன்னிலிருந்து பிரித்து ஓரடி தள்ளி வைத்தான் விதுரன்.
இந்த முறை சரஸ்வதி மனிஷாவை பார்த்து நக்கலாக உதடுக்கே வலிக்காமல் ஒரு சிறிய புன்னகையை உதிர்த்தார்.
அதைப் பார்த்த மனிஷாவின் உள்ளம் உழைக்கலனாக கொதிக்க ஆரம்பித்தது. ‘இந்த சரஸ்வதி எப்ப பார்த்தாலும் என் வழியில குறுக்க வராங்க, கல்யாணம் பண்ணுன உடனே விதுரனையும் சரஸ்வதியையும் பிரிக்கிறது தான் என்னோட முதல் வேலை’ என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தாள்.
“சரி விதுரா மணி ஒன்பது ஆயிருச்சு. நீ உன்னோட ரூமுக்கு போ பிரதிக்ஷாவை அனுப்பி வைக்கிறேன், அதுக்கு முன்னாடி உன்னோட மனைவி பிரதிக்ஷானு உன் மனசுல பதிய வை!” என்று சற்று முன் தான் கண்ட காட்சியை கண்முன் நினைத்து பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த ரஞ்சித்தையும் மனிஷாவையும் பார்த்து அழுத்தமாக கூறினார். “அம்மா கண்டிப்பா போய் தான் ஆகணுமா?” என்று தயங்கிக் கொண்டே கேட்டான் விதுரன்.
“விதுரன் ஏற்கனவே இதைப்பற்றி உன்கிட்ட பேசிட்டேன் திருப்பி திருப்பி என்னை பேச வைக்காத! பிடிவாதம் பிடிக்காத, அப்புறம் நான் சொன்னதை நான் செய்ய வேண்டியது இருக்கும்! போறதுக்கு முன்னாடி அப்பா ஹால்ல உக்காந்து இருக்காரு. அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு போ!” என்று கூறினார் சரஸ்வதி.
இதுக்கு மேல் தான் என்ன சொன்னாலும் சரஸ்வதி கேட்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த விதுரன் எதுவும் சொல்லாமல், ஹாலில் அமர்ந்திருந்த ரஞ்சித்தின் அப்பாவை நோக்கி சென்றான்.
விதுரன் செல்லவும், அந்த இடத்திலிருந்து சரஸ்வதி நகர, ” நீங்க என்ன நினைச்சு இப்படி ஒரு திட்டத்தை போடுறீங்கன்னு எனக்கு தெரியும்! ஆனால் நீங்க நினைச்சது உங்க கனவுல கூட நடக்காது, அதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்!” என்று கோபமாக கூறினான் ரஞ்சித்.
சரஸ்வதி ரஞ்சித்தை பார்த்து சிரித்துக் கொண்டே, ” எதை எப்படி செய்யணும்னு சொல்லிக் கொடுத்து உன்னை வளர்த்த என்கிட்டயே சவால் விடுறியா? நீ நினைச்சது நடக்குதா நான் நினைச்சது நடக்குதான்னு கூடிய சீக்கிரத்துல நீ பாப்ப, உன் மனசுல உள்ள அழுக்கு வன்மம் எல்லாத்தையும் தூர தூக்கி வீசிட்டு என்னோட பையனா சீக்கிரத்துல நீ மாற முயற்சி பண்ணு. ஒருவேளை நீ மாற மாட்டேன்னு பிடிவாதம் பண்ணுனால் நான் உன்னைய மாத்த வேண்டியது இருக்கும்!” என்று கூறிவிட்டு அங்கிருந்து விடை பெற்றார் சரஸ்வதி.
“ரஞ்சித் உங்க அம்மா என்ன சொல்றாங்க எதுவுமே எனக்கு புரியலையே! ஆனால் ஒன்னு மட்டும் புரியுது, விதுரனையும் பிரதிக்ஷாவையும் சேர்ந்து வாழ வைக்காமல் விடமாட்டேன்னு சவாலா சொல்லிட்டு போற மாதிரி இருக்கு!” என்று மனிஷா சொல்ல,
“கரெக்ட் டார்லிங், அவங்க அப்படித்தான் சொல்லிட்டு போறாங்க! இது அம்மாவுக்கும் மகனுக்கும் இடையில நடக்குற ஆட்டம் , இதுல அம்மா ஜெயிக்கிறாங்களா நான் ஜெயிக்கிறேனானு கூடிய சீக்கிரத்துல நீ பாப்ப!” என்று கூறினான் ரஞ்சித்.
“ரஞ்சித் உங்க அம்மா மகன் சண்டையில என் வாழ்க்கையை பணயம் வச்சிராதீங்க. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது! நீ தான் முதல்ல விதுரன காதலிக்கிறேன்னு விதுரன் கிட்ட நடிக்கச் சொல்லி என்னைய கூட்டிட்டு வந்த, நானும் நீ பணம் தரேன்னு சொன்னத ஒத்துக்கிட்டு நடிக்க ஆரம்பிச்சேன்,
இப்ப உண்மையாவே அஞ்சுக்கு பத்துக்கும் நடிச்சுக்கிட்டு வாழ எனக்கு புடிக்கல! விதுரன கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிரணும்னு ஆசைப்பட்டு உன்கிட்ட சொன்னதுக்கு, சரி நீ நெனச்ச மாதிரி எனக்கும் விதுரனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னத நானும் நம்பி இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன். திடீர்னு ஒருத்தி எங்கிருந்தோ வந்து என் கனவுல மண்ணள்ளி போட்டுட்டா, என்னோட ஒரே நம்பிக்கை நீ தான். நீ தான் விதுரன் கூட என்னை சேர்த்து வைக்கணும். விதுரன நான் கல்யாணம் பண்ணினாலும் நம்ம இப்ப எப்படி இருக்கிறோமோ அப்படியே ஒண்ணா இருக்கலாம்!” என்று சிரித்துக் கொண்டே ரஞ்சித்தின் மேல் சாய்ந்தாள் மனிஷா.
இங்கு முதலிரவு அறையில் ருத்ர மூர்த்தியாய் அமர்ந்திருந்தான் விதுரன். காரணம் ஆசீர்வாதம் வாங்க செல்லும்போது ரஞ்சித்தின் அப்பா சொன்ன விஷயம் விதுரனை கோபத்தில் ஆழ்த்தியது.
“இங்க பாரு தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசமாக்கிட்ட, உன்னால ரஞ்சித்தோட கல்யாணமும் நின்னு போச்சு! உன்னால ரெண்டு பேரு பாதிக்கப்பட்டு போய்ட்டாங்க, இனிமேலாவது செஞ்ச தப்ப ஏத்திக்கிட்டு அந்த பொண்ணோட வாழ்வதற்கு வழியை பாரு, இல்ல நான் வாழ மாட்டேன்,! நான் எந்த தப்பும் பண்ணல அந்த பொண்ணுக்கு டைவர்ஸ் கொடுக்க போறேன்னு முட்டாள்தனமா பேசிக்கிட்டு திரியாத! நல்லபடியா அந்த பொண்ணோட சேர்ந்து வாழ்றதுக்கு வழிய பாரு, கூடிய சீக்கிரத்துல மகனோ மகளோ பெத்து குடுத்து எல்லாரையும் சந்தோசப்படுத்து!” என்று கூறியிருந்தார்.
தான் தான் ஏதோ தவறு செய்தது போல் ரஞ்சித்தின் அப்பா சொல்லியதை விதுரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, இதுக்கெல்லாம் காரணம் அவதான் என்று நினைத்து பிரதிக்ஷாவை கொல்லும் வெறியில் அமர்ந்திருந்தான் விதுரன்.
விலை உயர்ந்த பட்டுடுத்தி தலையில் மல்லிகை பூச்சூடி புது பொண்ணுக்கு உரிய நாணத்தோடு உள்ளே நுழைந்தாள் பிரதிக்ஷா.
பிரதிக்ஷா அறைக்குள் வரவும் அங்கு அமர்ந்திருந்த ருத்ரனின் முகத்தை பார்க்க அவள் உள்ளத்தில் கிளி பரவியது. ஆனாலும் தன் பயத்தை வெளியில் காட்டாமல் மெதுவாக எட்டெடுத்து நடந்து விதுரனின் அருகில் சென்று நின்றாள் பிரதிக்ஷா.
சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்த பிரதிக்ஷாவை பார்த்த விதுரன் அலையென ஆர்ப்பரிக்கும் தன் மனதின் கோபத்தை அடக்கி விட்டு அமைதியாக
“பக்கத்துல உட்காரு” என்று விதுரன் கூற அதிர்ந்து போனாள் பிரதிக்ஷா.தன்னை பார்த்தவுடன் கத்துவான் கோபப்படுவான் அறையில் இருக்கும் பொருள்களை எல்லாம் வீசி எறிவான் என்று எதிர்பார்த்து வந்த பிரதிக்ஷாவிற்கு விதுரனின் நடவடிக்கைகள் வித்தியாசமாய் தெரிந்தது.
“என் பக்கத்துல உக்காருன்னு சொன்னேன்! இப்படி நின்னுகிட்டே இருந்தால் என்ன அர்த்தம்?” என்று விதுரன் தன் குரலை சற்று உயர்த்தி கேட்க, பயத்தில் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவன் அருகில் அமர்ந்தாள்.
காரில் வரும்போது தன்னுடைய ஆடை பட்டதுக்கே முகம் சுளித்தவன், தன்னை அவன் அருகில் அமர சொன்னதும் பெண் மனம் சிறகில்லாமல் வானில் பறக்க தொடங்கியது.
அவளின் மனதை நிகழ்காலத்திற்கு கொண்டுவரும் பொருட்டு தனது தொண்டையை லேசாக செருமி, விதுரன் பேச ஆரம்பிக்க அவன் என்ன பேசப் போகிறான் என்று அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் பிரதிக்ஷா.
கதையைப் படித்து விட்டு உங்களுடைய எண்ணங்களை விமர்சனங்களாக எழுத்தில் பதிவேற்றிச் செல்லுங்கள்.
