அத்தியாயம் 21
மாபெரும் தொழிலதிபராக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆகர்ஷ தீரனின் மனைவி சாதாரண கம்பெனியில் சம்பளத்திற்கு வேலை செய்வதா என்ற கோபத்தில் தன் மனைவியை அத்தனை பேரின் முன்பும் அறைந்து விட்டான் தீரன்..!!
எதிர்பாராத நேரத்தில் தன் கணவன் பொது இடம் என்றும் கூட பார்க்காமல் தன்னிடம் இப்படி நடந்து கொண்டதும் அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை..
லேசாக கண்கள் கலங்க சுற்றும் முற்றும் பார்த்தாள் யாராவது இங்கு நடந்த சம்பவத்தை கவனிக்கிறார்களா என்று..
துரதிர்ஷ்டவசமாக அந்த மொத்த கம்பெனி ஆட்களும் அவர்களை தான் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.. !!
வெட்கம் பிடுங்கி தின்றது மித்ராவுக்கு..!!
” என்னங்க இது தொழிலில் எப்படிப்பட்ட ஆள் நீங்க ??பொது இடம் என்று கூட பார்க்காமல் உங்களுடைய மனைவியை இப்படி கை ஓங்கி அடிக்கிறீர்களே?? இதெல்லாம் நல்லா இருக்கா நீங்க படிச்சவர் தானே?? நாகரிகம் தெரியாதா எதுக்காக இப்ப மித்ராவை அடிச்சீங்க??”, தன் தோழியை அவன் கண் முன்னே அடிக்கவும் கோபம் வந்துவிட்டதோ என்னவோ அருணுக்கு.. உடனே முக தாட்சண்யம் பார்க்காமல் கேள்வி கேட்டு விட்டான்.
” ஏய்.. என்னை கண்ட்ரோல் பண்றதுக்கு நீ யாரு ??என் பொண்டாட்டிடா அவ.. அவளை நான் என்ன வேணா பண்ணுவேன் அதை கேட்க நீ யாருடா உனக்கு என்ன உரிமை இருக்கு?? என்ன தகுதி இருக்கு முதல்ல என்கிட்ட பேசுறதுக்கு.. கைநீட்டி பேசுற வேலை எல்லாம் வச்சுக்காத.. என்ன முறைக்கிற ?? முறைக்க கூடாது.. இந்த தீரன் முன்னாடி யாரும் எதிர்த்து பேசக்கூடாது.. உரைல ஒரு கத்தி தான் இருக்கணும் அது நானா தான் இருக்கணும்.. இங்கு அதிகாரம் பண்றது அடக்கி ஆள்றது எல்லாமே நானாக தான் இருக்கணும்.. என்னை அடக்கி ஆளவோ கேள்வி கேட்கவோ எவனுக்கும் தைரியம் கிடையாது.. அதுக்கெல்லாம் இனிமேல் ஒருத்தன் பிறந்து வளர்ந்து வரணும்.. இன்னொரு தடவை உன்னை மித்ரா கூட பார்த்தேன் அன்னைக்கு தான் உனக்கு கடைசி நாளாக இருக்கும்.. அவ கூட என்னடா உனக்கு பேச்சு?? உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு அவளுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரியுது இல்ல அப்புறம் எதுக்காக அவ கூட சுத்திட்டு இருக்க ??
அன்னைக்கு கோயில்ல பாக்குறேன்.. அப்படி சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?? இன்னொரு தடவை அவளை பார்க்கிறதோ இல்ல பேச ட்ரை பண்ணுவோ நீ முயற்சி பண்ணா அப்புறம் நடக்கிறதே வேற.. இந்த தீரனோட இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டியதா இருக்கும்.. உனக்கு வேற ஏதாவது வேலை வேண்டுமா பணம் வேணுமா கேளு தரேன்.. இதைவிட அதிக சம்பளத்தில் என்னோட கம்பெனில உனக்கு வேலை போட்டு தரேன்.. கார் வேணுமா சொல்லு வாங்கி தரேன்.. ஏன் அழகான பொண்ணு வேணுமா சொல்லு வேற ஏதாவது பொண்ணு பார்த்து கல்யாணம் கூட பண்ணி வைக்கிறேன்.. ஒரு ஃபிரண்ட் போல உன்னை ட்ரீட் பண்றேன் ஆனா…..”, என்றவன் அருகில் நின்று கொண்டிருந்த தன் மனைவி மித்ராவை ஒரு பார்வை பார்த்தவன்..
உடனே அவளை தன் தோளோடு சேர்த்தணைத்து கொண்டு..
” இவ எனக்கு சொந்தமானவ.. என்னோட ப்ராப்பர்ட்டி.. எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு. அவ கூட பேச பழக திட்றதுக்கு ஏன் அடிக்கிறதுக்கு கூட எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு.. வேற எவனுக்கும் கிடையாது.. என்னோட வழியில் குறுக்க வராமல் நீ பாட்டுக்கு உன் வேலையை பார்த்துட்டு நல்ல பிள்ளையா இருந்தா உனக்கு நல்லது.. நானும் உனக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன் ஒருவேளை என்னோட வழியில் நீ குறுக்க வரணும்னு நினைச்சா அப்புறம் நீ வாழறதே ரொம்ப கஷ்டம் தம்பி.. நான் சொன்னது உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. மித்ரா என்னுடையவள்.. என்னோட வைஃப்..எனக்கு மட்டுமே சொந்தமானவள்”, என்று கடைசி வரிகளை மட்டும் நன்றாக அழுத்தம் திருத்தமாக கூறியவன்.. திரும்பி தன் மனைவி மித்ராவை ஆழமாக ஒரு பார்வை பார்த்தான்..
நீ எனக்கு மட்டுமே சொந்தம் உன்னை ஒருவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன், பேச்சளவில் கூட.. என்பது போல அவனுடைய பார்வை அவளுக்கு உணர்த்தியது..!!
பைத்தியக்காரனா இவன்?? எதுக்குடா அடிச்சேன்னு கேட்டா என்னென்னமோ சம்பந்தமே இல்லாம பேசுறான்??
அன்னைக்கு கோயிலில் பார்த்துட்டு அவ கிட்ட பிரண்ட்லியா பேசினதுக்கு இந்த பேச்சு பேசுறான்??!!
சரியான சைக்கோவா இருப்பான் போல.. இவன் கூட எப்படித்தான் இவள் வாழ்கிறாளோ தெரியலையே ரொம்ப பாவம்.. சாதாரணமா பேசுறது பழகுறது பக்கத்தில் உட்காருவது கூட பெரிய குத்தமா?? இத போய் ஏதோ கொலை குற்றம் போல ட்ரீட் பண்றானே.. நான் அவள் கூட பேசினதுக்காகவா அவளுக்கு இப்பேர்பட்ட தண்டனை கொடுத்தான்??
ஒரு பையனும் பொண்ணும் பேசினால் அது காதலாக தான் இருக்கணுமா ??ஏன் நட்பாக இருக்க கூடாதா ?? எதுக்காக இந்த சமூகம் எல்லாத்தையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்குது.. அதிலும் இந்த சைக்கோ ரொம்பவே தப்பான கண்ணோட்டத்தில் பாக்குறான்..
இவன் பேச்சே சரி இல்லை சரியான லூசு பய.. இவன் கூட எப்படி வாழ்றா அவசரத்தில் முடிவெடுத்துட்டு இப்ப அவகாசம் எடுத்து அழுதுட்டு இருக்கா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. என்று மனதிற்குள் தன் தோழிக்காக வருத்தப்பட்டு கொண்டான் அருண்.
ஆக மொத்தம் தன் மனைவி மீது அதிகபட்ச உரிமை கொண்டாடலின் பேரில் தவித்துக் கொண்டிருக்கிறான் தீரன் என்பதை நன்றாகவே அருண் புரிந்து கொண்டான்..!!
என்னதான் அமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தானே..??
இப்பொழுது மித்ரா மீது தீரன் வைத்திருக்கும் அன்பும் இவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்கிற பொறாமை குணமும் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருக்கிறது..
அதன் வெளிப்பாடாகத்தான் இன்று நடந்த சம்பவம் !!
ஆனால் எதற்காக தன் கணவன் இப்படி பொது இடம் என்று கூட பாராமல் இப்படி மரியாதை கெட்டத்தனமாக நடந்து கொண்டான் என்று புரியாமல் விழித்தாள் அவள்..
அப்படி என்ன பெரிய பாவம் செய்துவிட்டாள்??
வேலைக்கு வந்தது ஒரு தவறா அப்படியே தவறாகவே இருந்தாலும் வீட்டிற்கு அழைத்துச் சென்று பொறுமையாக எடுத்து கூறக்கூடாதா ??
இப்படி எல்லார் முன்னாடியும் நிக்க வச்சு அடிச்சு அசிங்கப்படுத்தியே ஆகனுமா ?? என்ன பழக்கம் இது?? படிச்சவன் தானே நாகரீகம் கூட தெரியாதா அருண் சொல்ற மாதிரி இவனுக்கு நாகரீகம் சுத்தமா தெரியல முரட்டுத்தனமான ஆசாமியா வளர்ந்திருக்கான் கடவுளே இவன் கூட எப்படி நான் காலம் முழுக்க வாழ போறேன்??
முடியாது முடியாது இவன் கூட காலம் முழுக்க இருக்க முடியாது..
மனுஷன் இருப்பானா இவன் கூட??!!
இவன் பேசுற பேச்சும் நடந்துக்கிற விதமும் சுத்தமா பிடிக்கல ஒரு அரக்கன் போல நடந்துக்கிறான்..
அப்படி என்ன என் மேல கோபம்?? நான் எங்கேயும் போகக்கூடாது.. அவன் சொல்வதை கேட்டுட்டு அவனுக்கு அடிமையா அந்த வீட்டில் அடைந்து கிடக்கணும்னு நினைக்கிறான்.. ஆனா அது மட்டும் நடக்காது என்னை பத்து லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கிட்டதா நினைக்கிறான் போல..
வாங்கின பணத்தை எப்படியாவது இவனுக்கு திருப்பி கொடுத்துட்டு இந்த கொடுமையில் இருந்து சீக்கிரம் விடுபடனும்.. என்று மனதிற்குள் உறுதியாக நினைத்துக் கொண்டாள் மித்ரா..
” உனக்கு வேற தனியா சொல்லனுமா இன்னும் என்ன பார்வை வாடி ..”, என்று கூறி இழுத்துச் சென்றான் அவளை.
காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு அவளை அழைத்து வந்தவன் அறைக்குள் தள்ளி தாழிட்டு விட்டு அவளை தரதரவென்று இழுத்து வந்து சுவரோரமாக நிப்பாட்டினான்..
நெஞ்சு கூடு அதிர தன் கணவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்..!!
அழுத்தமாக அவளுடைய இரு கைகளையும் பிடித்தான்..
அவன் பிடித்த பிடியில் எலும்புகள் அத்தனையும் நொறுங்கி விடுமோ என்ற பயம் அவளுக்கு ஏற்பட்டது..!!
” எத்தனை முறை சொன்னாலும் உனக்கு புரியாதா தமிழ்ல தானே சொல்றேன்.. அவன் கூட பேசாத பழகாத அப்படின்னு எத்தனை முறை சொல்லிருக்கேன் அதை எல்லாம் மீறி மறுபடியும் அவன் கூட பேசுற பழகுற.. அவன் கூட ஒரே இடத்தில் வேலை பார்க்க போற.. நீ வேலைக்கு போறதே தப்பு இதுல அவன் கூட வேற வேலைக்கு போறியா?? என்ன தைரியம்டி உனக்கு ?? என் பேச்சை மதிக்கவே கூடாதுன்னு முடிவுல இருக்கியா?? உங்க அப்பனை காப்பாற்றுவதற்காக பத்து லட்சம் என்கிட்ட கடன் வாங்கினாயே அது மறந்து போச்சா ?? உயிரை காப்பாற்றுவதற்காக பத்து லட்சம் கொடுத்து உதவின எனக்கு.. அந்த உயிரை எடுப்பதற்கு எத்தனை நிமிஷம் ஆகும்னு நினைக்கிற??”, என்று கேட்டு அவளை அதிர்ச்சி அடைய வைத்தான் அந்த அரக்கன்..!!
” ஐயோ.. என்ன சொல்றீங்க ?? தயவு செஞ்சு அப்பாவை எதுவும் பண்ணிடாதீங்க அந்த மாதிரி எதுவும் செஞ்சுடாதீங்க உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன்.. உங்களுக்கு ஏதாவது கோபம் இருந்தால் அதை என்கிட்ட காட்டுங்க அவரை மட்டும் எதுவும் பண்ணிடாதீங்க ப்ளீஸ்”, என்று கை கூப்பி கெஞ்சி கேட்டுக் கொண்டாள் அவள்.
” அப்போ நான் சொன்னது உனக்கு புரிஞ்சுடுச்சுன்னு நினைக்கிறேன்.. புரிஞ்சுதான ஆகணும்.. இல்லனா அதுக்கு நீ கொடுக்க போற விலை உன் அப்பாவுடைய உயிர்.. ஞாபகத்தில் வச்சுக்கோ.. அப்புறம் என்ன சொன்ன?? ஏதாவது கோபம் இருந்தா என்கிட்ட காட்டுங்க அப்பாவை எதுவும் செஞ்சுடாதீங்க அப்படின்னு தானே சொன்ன?? அப்போ என்னோட கோவத்தை உன்கிட்ட காட்டலாமா?? அதை தாங்குவதற்கு நீ தயாரா இருக்கியா மை டியர் பொண்டாட்டி??”, என்று இளக்காரமாக சிரித்துக்கொண்டு ஒரு விரலால் அவளுடைய நெற்றியில் புரண்டு கொண்டிருந்த சுருள் முடியை ஒதுக்கி கொண்டே கேட்டான்.
என்ன?? கோபத்தை காட்டப் போறானா ??கிழிஞ்சது கிருஷ்ணகிரி அப்போ இன்னைக்கு நான் செத்தேனா??
சும்மாவே என்னை போட்டு பாடாய் படுத்துவான் இந்த லட்சணத்தில் என் மீது கோபம் வேற இருக்காம்.. அந்த கோபத்தை என்கிட்ட காட்ட போறானா?? அவன் கோபத்தின் வடிகாலாக மாறப் போகிறேனா இன்று, என மனதிற்குள் தன் நிலையை எண்ணி வருந்தினாள் அந்த பேதை..!!
” ஆர் யூ ஓகே பேபி?? ரெடியா?? என் கோபத்தை தாங்கும் சக்தி உன் உடம்புக்கு இருக்கா இல்லையா என்று இப்பவே செக் பண்ணிடலாம் வா”, என்று விஷமமான ஒரு புன்னகையை உதிர்த்துக் கொண்டே அவளின் கண்களை ஊடுருவினான் அந்த காதல் அரக்கன்..!!
– தொடரும்..
