அத்தியாயம் 22
எந்த கோபமாக இருந்தாலும் என் அப்பா மீது காட்ட வேண்டாம் என் மீது காட்டுங்கள் நான் தாங்கிக்கிறேன் என்று அவசரப்பட்டு தீரனிடம் வாய்விட்டு விட்டாள் அகமித்ரா..
அந்த ஒரு காரணத்தை மட்டுமே பிடித்துக் கொண்டு தொங்கினான் அவன்.
” அப்படின்னா என்னுடைய கோபத்தை தாங்கும் சக்தி உனக்கு இருக்கு இல்லையா பேபி?? சரி வா அதையும் பார்த்துடலாம்”, என்று கையில் அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு கட்டிலுக்கு சென்றான் அவன்.
” விடுங்க என்னை.. விடுங்க.. நான் சொன்னதுக்கான அர்த்தம் இது கிடையாது.. நீங்க என்ன பேசினாலும் என்ன அடிச்சாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியும் என்பதை தான் நான் அப்படி சொன்னேன் கண்டிப்பா இதை நான் சொல்லல ப்ளீஸ் ப்ளீஸ் என்னை விட்ருங்க.. என்னை விடுங்க தீரன்”
கை கால்களை உதறி அவனிடமிருந்து விடுபட முயன்றாள் அவள்.
முதல் முறை அவன் பெயரை அவள் உச்சரிக்கவும் அவனுக்குள் ஒரு வித சிலிர்ப்பு உண்டானது..!!
” என்னடி செல்லம்.. இப்பதான் சொன்னீங்க உங்களோட கோபத்தை என் மேல காட்டுங்க நான் தாங்கிக்கிறேன் அப்படின்னு.. என்னுடைய கோபத்தை அடிப்பது மூலமாகவோ திட்றது மூலமாகவோ தான் நான் காட்டணும்னு எந்தவித அவசியமும் இல்லையே.. நான் எந்த வழியில் வேண்டுமானாலும் என் கோபத்தை காட்டுவேன் அதை தாங்குவது மட்டும் தான் உன்னுடைய பொறுப்பு.. நீ சொன்ன வாக்கை காப்பாற்றனும் சரியா??”, என்று கூறி வாய்விட்டு சிரித்தான் அவன்.
கண் முன்னே ராட்சச உருவத்தில் பெரிய அரக்கன் பற்கள் தெரிய சிரிப்பது போல அவள் கண்களுக்கு காட்சியளித்தது அவனுடைய உருவம்..!!
பயத்தில் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள் அவள்.
அவளுடைய அனுமதியின்றி தான் ஒவ்வொரு நாளும் அவளை ஆட்கொள்கிறான்..
இன்றும் அதேதான் நிகழ்த்தினான்..
அவள் கத்தி கதறி அழுது கடைசியில் ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போனது..
வேக வேகமாக அவளுடைய ஆடைகளை துகிலுரித்தவன்.. அவசரமாக அவள் மீது படர்ந்தான்.
அங்கும் இங்கும் தலையை அசைத்து மறுப்பாக அவனிடமிருந்து விடுப்பட எண்ணி கொண்டிருந்தவளின் முகத்தை ஒரே கையால் அழுத்தமாக பிடித்தவன் அவளுடைய இதழ்களை கண்ணிமைக்கும் நேரத்தில் ராட்சச வேகத்தில் தீண்டினான் தீரன்..!!
எத்தனையோ சாயம் பூசிய இதழ்களை தீண்டியிருக்கிறான் அவன்.. ஆனால் அதில் இல்லாத ஒரு செழிப்பை, ஈர்ப்பை இவளின் ஆரஞ்சு சுளை உதடுகளில் தான் உணர்ந்தான் தீரன்..
இதழ் காயம் முழுதாக ஆறாத சமயத்தில் மீண்டும் அவளை காயப்படுத்தினான் அவன்.
ரத்தம் வடிய கண்களில் கண்ணீர் கசியப் படுத்திருந்தவளை பார்க்கும்பொழுது அவனுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது..
அது என்ன வருத்தம் என்றால்..
இப்படி அழுது கொண்டு நம்முடன் இருக்கிறாளே.. என்னைக்காவது சிரிப்போடு சந்தோஷமாக கண்ணடித்துக் கொண்டு ,சொல்லுங்கள் பேபி என்று ஆசையாக என்னுடன் ஒரு முறையாவது பேசி இருக்கிறாளா பழகி இருக்கிறாளா இவள்?? எப்போ பார்த்தாலும் இப்படி கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு அழுவதே இவளுக்கு வேலையாக போய்விட்டது என்கிற வருத்தம் தான் அந்தப் பொல்லா பயலுக்கு இருந்தது..!!
தன்னுடைய முரட்டுத்தனமான நடவடிக்கையால் அவளுடைய மனதை கசக்கி எறிகிறோம் என்கிற எண்ணம் சுத்தமாக அவனுக்கு இல்லையோ என்னவோ.. இது தன்னுடைய பொருள் தனக்கு மட்டும்தான் சொந்தம் என்கிற மனோபாவத்தில் தான் அணுகினான் அவளை..
பொருளுக்கும் உயிருள்ள மனுஷிக்கும் உள்ள வித்தியாசம் அவனுக்கு தெரியாமல் போய்விட்டது..
நான் உன்னை விரும்புகிறேன்.. என்று இதழ் புன்னகையோடு மென்மையாக கூறுவது ஒரு ரகம்..
நான் உன்னை விரும்புகிறேன்.. நீயும் என்னைத்தான் விரும்ப வேண்டும்.. என்பது போல் அடாவடித்தனமாக கூறி ஆட்கொள்ள நினைப்பது இன்னொரு ரகம்..!!
இதில் நம் தீரன் எந்த ரகம் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை..
சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவன் இரண்டாவது ரகம் தான்..!!
தனக்கு ஒரு பொருள் வேண்டுமென்றால் அதை அடித்து பிடித்தாவது தனக்கு சொந்தமாக்கி விடுவான் தீரன்..
அதே வித்தையை இப்பொழுது இவளது விஷயத்திலும் கையாளுகிறான்..
அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்து மெதுவாக அவளுடைய வாசத்தை நுகர்ந்தவன்.. அதற்கு மேல் தாங்க மாட்டாதவனாய் அவள் மேனியெங்கும் முத்த முத்திரைகள் பதித்தான்..
அவனை தடுக்க நினைக்கும் அவளுடைய இரு கைகளையும் அவன் கரங்களால் சிறை பிடித்திருந்தான்..
கையில் கிடைத்திருக்கும் ரோஜா பூ இதழ்களை கசக்கி எரிவது போல அவளின் உடலை கசக்கி பிழிந்தான் அந்த அரக்கன்..
ஐயோ அம்மா என்ற அலறல் அந்த அறையை விட்டு வெளியே கேட்க தொடங்கியது..
வேகமாக தன் மருமகளை இழுத்துக் கொண்டு அறைக்கு சென்ற தன் மகன் என்ன செய்கிறான் இப்படி அலற வைக்கிறான் கதற விடுகிறானே என்று வருந்தினார் வசுந்தரா..
ஆனால் அது தடுக்கும் வழி தான் அவருக்கு தெரியவில்லை..
அப்பாவி பெண்ணை திருமணம் செய்து வைத்தது எப்பேர்ப்பட்ட தவறாகி போனது கடவுளே..
எத்தனை நேர்மையான நல்ல உள்ளம் படைத்தவள் திருமணம் செய்யும் பொழுது தனக்கு இருக்கும் பிரச்சனையை எடுத்துக் கூறி இதன் பிறகும் இந்த திருமணத்தில் உங்களுக்கு சம்மதமா என்று என்னிடம் வந்து வெள்ளந்தியாய் கேள்வி கேட்டாளே..
அப்பொழுதே எனக்கு அவளை மிகவும் பிடித்து போய்விட்டது பெற்றால் தான் பிள்ளையா?? அன்பு காட்டி பழகினாலே போதுமே.. அத்தனை பிள்ளைகளும் நாம் பெற்ற பிள்ளைகள் போல் ஆகிவிடுமே..
அப்படி இருக்க குழந்தை பெற முடியாதது எல்லாம் ஒரு குறையே கிடையாது என்று நினைப்பவர் தான் வசுந்தரா..
அதனால் தான் என்னவோ அவளை வெகு சுலபமாக மருமகளாக ஏற்றுக் கொண்டார்..
அவளுடைய குணத்திற்கும் அழகிற்கும் தன் மகன் ஏற்றவன்தான் என்கிற பெருமை ஒரு பக்கம் இருந்தாலும் அவனுடைய குணத்தை எண்ணி பார்க்கும் பொழுது அவருக்கு சிறு அச்சம் ஏற்படத்தான் செய்தது ..
என்ன இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு தன் மகன் மாறி விடுவான் இந்த பெண் தன் மகனை மாற்றி விடுவாள் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது அதனால் தான் தைரியமாக திருமணம் செய்து வைத்தார்.
ஆனால் இப்பொழுதெல்லாம் தீரன் நடந்து கொண்டிருக்கும் முறையை பார்த்தால் அவருக்கு அச்சம் அதிகமாகி கொண்டே போனது நாளுக்கு நாள்..!!
மித்ராவின் கதறலை கேட்டவர் கண்கள் மூடி அழ தொடங்கினார்..
” கடவுளே அந்த பிள்ளையை காப்பாற்று என் மகனை திருத்து.. அவன் நல்லவன் தான் ஆனால் கொஞ்சம் முரடன்.. ஆகாத பழக்கவழக்கத்தால் இப்பொழுது சற்று முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொள்கிறான்.. அவனை எப்படியாவது திருத்தி நல்வழிப்படுத்துங்கள் தெய்வமே”, மனமுருக வேண்டிக் கொண்டவர் அங்கிருக்க பிடிக்காமல் தம் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
தீரனின் ஆவேசமான இதழ் முத்தங்களும் அரக்கத்தனமான அணைப்புகளும் அவளை பாடாய் படுத்தியது..!!
அவன் எதிர்பார்த்த உணர்ச்சிகளும் சிணுங்கலும் முனங்கலும் அவளிடமிருந்து ஒருபோதும் வெளிப்படவில்லை..
அதற்கு மாறாக அருவருப்பான முகபாவனைகளும், அழுகையும் தான் வெளிப்பட்டது அவளிடமிருந்து..
அதை பார்க்க பார்க்க அவனுக்கு இன்னும் ஆவேசம் அதிகமாகி அவளை ஆட்கொள்ள துடித்தான்..
ஆனால் ஒரு கட்டத்தில்.. நிதானித்தான் அவன்.
இதற்கு மேல் அவளை ஆட்டி வைத்து எதில் வெற்றிக்கான போகிறாய் தீரன்??
நண்பன் என்கிற பெயரில் அந்த அருணுடன் கூட அவள் சிரித்து பேசுகிறாள்..
அவனிடம் காட்டும் நட்புணர்வும் சிரிப்பும் கூட உன்னிடம் காட்டவில்லையே தீரா..
அந்த அளவிற்கு நீ கேவலமாக போய்விட்டாயே இந்த லட்சணத்தில் அவள் முகத்தில் காதல் உணர்ச்சிகள் வேறு தென்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ??
அதிசயமா என்னவோ அன்னைக்கு நன்றி சொல்லி கொஞ்சம் சிரிக்க பார்த்தா அதையும் உன்னுடைய முரட்டுத்தனத்தால கெடுத்து கிட்ட.. இன்னைக்கு அதே வேலையை தான் பார்த்துகிட்டிருக்கிற தீரா..
அருணுக்கு இருக்கும் உரிமை கூட உனக்கு அவளிடம் இல்லை என்பது தான் நிதர்சனம்.. !!
ஒரு நண்பனாக கூட அவள் உன்னை பார்க்க வில்லை என்பது தான் நிஜம்..!!
அவளிடம் காதலையும் அதை தாண்டிய உணர்ச்சிகளையும் எப்படி நீ எதிர்பார்க்கலாம்??
முதலில் அவளுக்கு நீ ஒரு நல்ல நண்பனாக இருக்க வேண்டும் என்று என்னைக்காவது நினைத்திருக்கிறாயா? குறைந்தபட்சம் ஒரு பாதுகாவலனாகவாவது இருந்திருக்கிறாயா அவளுக்கு..??!!
பொது இடம் என்று கூட பாராமல் அவளை அறைந்து அடித்து இழுத்து வந்திருக்கிறாயே..
ஒரு பாதுகாவலன், ஒரு நண்பன் , ஒரு கணவன், ஒரு காதலனாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் செய்யும் காரியமா இது??
ஆனால் நீ அதைத்தான் செய்திருக்கிறாய்??
பிள்ளையை கிள்ளி விட்டுவிட்டு தொட்டிலை ஆட்டினால் அது எப்படி அழுகையை நிப்பாட்டும்..
நீ கிள்ளுவதை நிப்பாட்டு தானாக அழுகை நிற்கும்.., என்றது அவனுடைய மனசாட்சி..!!
உண்மைதான் அருணிடம் பேசும் அளவிற்கு கூட அவள் இவனிடம் பேசுவது கிடையாது..
அவனுக்கு இருக்கும் உரிமை கூட தனக்கு இல்லையோ என்கிற எண்ணத்தை வரவழைத்து அவனுக்கு முதல் முறையாக..
அவளிடம் ஒரு நண்பனாக கூட பழக முடியவில்லை.. அருணுக்கு கிடைக்கும் உரிமை நட்பு கூட நமக்கு கிடைக்கவில்லையே என்கிற ஏக்கத்தை முதல்முறையாக அவன் இதயத்திற்குள் விதைத்தது காலம்..!!
அவள் ஒதுங்கி போக போக.. அவளை நெருங்க வேண்டும் என்கிற எண்ணம் தான் தோன்றுகிறதே ஒழிய.. அவளுடைய நட்பையும் நம்பிக்கையும் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றவில்லையே..
“திருப்தி அடைய வேண்டும் நம் அடிமையாக அவள் வாழ வேண்டும்.. என்னுடைய கடைக்கண் பார்வைக்காக அவள் அசைந்து கொடுக்க வேண்டும் என்று தானே நான் ஆசைப்பட்டேன்.
எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு அவளை யாருகிட்டயும் விட்டுக் கொடுக்க எனக்கு மனசே இல்ல அதனால அவளை இறுக்கமாக என் கை குள்ளையே வச்சுக்கணும்னு ஆசைப்படுறேன்.. பாதுகாக்கிறேன் விரும்புகிறேன் என்ற பெயரில் அவளைக் கைக்குள் வைத்து நசுக்கி கொண்டிருக்கிறேன் என்பதையே இத்தனை நாளாக புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனோ.. அவளிடமிருந்து ஆசையும் அன்பான பார்வையும் எதிர்பார்த்த நான்.
ஒரு முறை கூட அவள் முகத்தில் சிரிப்பை வர வைக்க முயல வில்லையே..??
அப்புறம் எப்படி நான் எதிர்பார்த்த விஷயம் அவளிடமிருந்து வெளிப்படும் என்று நான் ஒரு முறை கூட யோசிக்காமல் போய்விட்டேனே என்கிற எண்ணம் முதல் முறையாக நெற்றி பொட்டில் அறைந்தது போல அவனுக்கு உரைத்தது..!!
ஆவேசமாக அவளை ஆட்கொள்ள துடித்தவன் மனதில் பல வகையான எண்ணங்கள் தோன்றவும்.. மெதுவாக அவள் மீதிருந்து எழுந்தான்.
என்ன அதிசயம்??!!
முழுதாக கசக்கி எறியாமல் விடமாட்டானே.. எப்படி பாதியில் விட்டு விட்டான் மனம் வந்து??, என ஆச்சரியமாக அவனை கண் விழித்து பார்த்தாள் மித்ரா..!!
வழக்கமாக அவன் கண்களில் தென்படும் திமிரும் ஆணவமும் இப்பொழுது காணாமல் போயிருந்தது..
முதல்முறையாக குழப்பமும் சிறு ஏக்கமும் தோன்றியிருந்தது அவன் விழிகளில்..!!
வித்தியாசமான அவனுடைய அந்த முகபாவனையை பார்த்தவள் குழம்பி போனாள்..!!
– தொடரும்..
